நம் தாத்தாக்களையும் பெற்றவள். ..மகோதரி(மகா/பெரிய,உதரம்/வயிறு)
ஆனால் கிழவிகளாகவே பிறக்கும் எந்த பேத்தியை விடவும் இளையவள்
அவளை அன்னை என்று அகிலம் கூறும். நான் கூறுவேன் அவள் ஒரு சதிகாரி.
ஆம் ..
முகிலுக்கு நீர் தந்தவள்/அகிலுக்கு மணம் தந்தவள்.
என்னை சரணடைந்தால் நானுன் கை பொம்மை என்ற சத்தியத்தை இத்தனை சாவகாசமாகவா உணர்த்துவது.
அவள் யார்? கண்டவர் விண்டிலர்/விண்டவர் கண்டிலர்
ஏனய்யா ஊத்தறிங்க..என் வாழ்விலான நேற்றையும் இன்றையும் பாருங்கள்
அவற்றிற்கிடையிலான வித்யாசமே அவள் இருப்புக்கு சாட்சி.
அவள் காலடியோசை என் செவிகளுக்கெட்டாமல் இருக்கலாம்.
இப்புவிமிசை என்னை நடத்துவதே அவள் தானே !
அவள் வளையோசை எனக்கு கேட்காதிருக்கலாம் ..இன்னுமவள் என்னை முழுமையாக மீட்காதிருக்கலாம்.
அதற்காக அந்த மாயக்கரத்தாளின் இருப்பை மறுக்க முடியுமா?
எத்தனை எத்தனை வடிவங்கள். தன் மீது பூசப்பட்ட பார்ப்பணர்களின் சுயநல களிம்புகளையெல்லாம் மீறி ஒவ்வொன்றும் ஜொலிப்பதை காண ஆயிரம் கண் வேண்டும். அதையும் அவளிடம் தான் இரவல் பெற வேண்டும்.