Thursday, November 15, 2007

கலைஞருக்கு ஒரு பகிரங்க கடிதம்

இத்தனை வருடங்கள் ஒரு சாதாரண அரசியல்வாதியாகவே வாழ்ந்து விட்டீர்கள். உங்களுக்கு சமமான பெயர், புகழ்,தகுதி பெற்றவர்கள் எல்லாம் மறைந்து விட்டனர். உங்கள் இடமே மட்டுமல்லாது தங்கள் மகன் ஸ்டாலினின் இடமும் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இனி சர்வைவல் ப்ராப்ளம் என்பது உங்களுக்கில்லை. எதிரியைவிட ஒரு நாள் அதிகம் வாழ்ந்துவிட்டாலும் அது தான் வெற்றி. அந்த வகையில் பார்த்தால் எப்போதோ வென்று விட்டீர்கள். இனி சரித்திரத்தில் ஒரு இடத்தை வெல்ல நீங்கள் ஏன் முயலக்கூடாது.

நதிகளை இணைக்க சோனியா அம்மையாருடன் பேசி வரும் தாங்கள் என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் தொலைநோக்கு தன்மையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

(திட்டத்தின் முக்கிய அம்சங்கள)
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அணைத்தையும் அதற்கு உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

இந்த திட்டத்துக்கு ஜெயலலிதா அம்மையாரின் ஆதரவைப் பெற அவர்களுக்கு ஜாதகம் எல்லாம் கணித்து பலன் எழுதி அனுப்பியவன் நான். என் கணிப்பு நிஜமானதும்,அதற்கு அம்மையார் தேங்க்ஸ் கார்டு அனுப்பியதும் உண்மை.(அதையிம் ஸ்கான் செய்து என் வலைப்பூவில் வைத்துள்ளேன்.(கவிதை07)

தங்கள் நீண்ட‌ வாழ்வில் எத்தனையோ நல்லது,கெட்டதுகளை பார்த்திருப்பீர்கள். அரசு அலுவலகங்களில் வைக்கப் படும் பிரதமர்களின் படம் மாறும். காந்தியடிகளின் படம் மாறாது.

காந்தியடிகளின் படத்தோடு தங்கள் படமும் நிரந்தரமாக இருக்க இந்த திட்டத்தை பற்றி சோனியா அம்மையாருக்கு கூறுங்கள்.

(ரகசியம்: தினகரன் இதழ் கடந்த சட்டம‌ன்ற தேர்தல்கள் குறித்த ஜோதிட கணிப்புகளை வெளியிட்ட போது..தங்கள் தலைமையில் மைனாரிட்டி அரசு அமையும் என்றும் ராமதாசு தாங்கொணாத குடைச்சல் கொடுப்பார் என்றும் உறுதியாக கணித்து கூரியர் மூலம் கடிதம் அனுப்பினேன். ஆனால் தினகரன் என் கணிப்பை வெளியிடவில்லை. இன்னும் என்னிடம் நான் அனுப்பிய குரியர் தபாலுக்கான ரசீது உள்ளது)