பொருளாதாரத்துக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனால் உண்மை நிலை இதற்கு மாறாகவே உள்ளது. ஒரு தந்தை தன் மகளுக்கு மணம் முடிக்கிறார். இதற்கு தன் சேமிப்பையெல்லாம் துடைத்து ஆங்காங்கே கடன்,உடன் வாங்கி திருமணம் செய்கிறார். இங்கே அவர் மகளின் திருமண வாழ்வு சுமுகமாக நடக்க ஆரம்பித்து விட்டால் பிரச்சினை இல்லை. குடும்ப வாழ்வென்ன இழவு.. அவர்களிடையே உடலுறவு என்பது இயல்பானதாக இருந்து விட்டால் பிரச்சினை இல்லை. அவ்வாறன்றி அதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டால்..
1.அவருக்கு உடலுறவு என்றால் என்னவென்றே தெரியவில்லை
2.பார்த்ததுமே எல்லாம் முடிஞ்சி போகுது
3.அவர் மீசை மட்டும் தான் வச்சிருக்கார்
என்றெல்லாம் அந்த பெண் குறை சொல்லி தாய் வீட்டுக்கு வந்துவிட முடியாது. காரணம் தெரிந்ததே..நம் சம்பிரதாயம்,கலாச்சாரம்,பெண்ணின் அடக்கம் கழுதை முட்டை என்று ஆயிரம்.
தன் மனக்குறை இது என்று வெளியில் சொல்ல முடியாத நிலையில் அந்த பெண் அந்த குடும்பத்தில் பிரச்சினைகளை க்ரியேட் செய்ய ஆரம்பித்து விடுகிறாள்.
ஆணின் கதை வேறு. அவனுக்கு அந்த விஷயத்தில் மனைவி சரிப்பட்டு வரவில்லை என்றால் நிறைந்த சபையில் உடைத்து சொல்லி விடுகிறான். ஒருவேளை இவனால் அவளை திருப்திப் படுத்த முடியாத நிலை இருந்தால் அதை மட்டும் வாயால் சொல்ல் முடியாது வேறு வகையில் பிரச்சினைகளை உருவாக்கி அவளை தாய் வீட்டுக்கு அனுப்பி விட முயல்கிறான். இவன் தான் பெரிய ஆண்பிள்ளை சிங்கம் ,மதன காமராஜன் என்ற நினைப்புடன் முதலிரவு அறைக்குள் நுழைகிறான். ஏதோ காரணத்தால் தோற்று போய்விட்டால் அவள் முகத்தை மறுநாள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதை எப்படி சபையில் வைத்து சொல்வது..
இந்த நிலையில் தான் என் அம்மாவை மதிக்கிறதில்லே..
கல்யாணத்துக்கு போட்ட நகை எடை குறைவா இருக்கு
மெத்தை தரலை,கட்டில் தரலை எல்லாம் சபையில் வைக்கப்பட்டு கதை காவல் நிலையத்துக்கோ, குடும்ப கோர்ட்டுக்கோ செல்கிறது.
சரி திருமணத்துக்கு அவள் தந்தை வாங்கிய கடன் என்னாகும்? வட்டி கூட கட்டமுடியாத நிலை , கேட்கவும் முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. பணம் என்பது ரத்தம் மாதிரி சுற்றி வரவேண்டும். அது தேங்கினால் என்னாகும்? பொருளாதார வளர்ச்சி மண்ணாகும்.