Monday, November 26, 2007

சிட்டுக் குருவி போலத்தான் சிற்றின்பத்தை துய்க்கையிலே


கணபதி தாள் தொழுது,சண்டியவள் வாள் தொழுது,
என் நிலையை நினைந்த‌ழுது
தாளின்றி, ஒரு கோலின்றி நானெழுதும் மடலிதுவே !
மாலவனும் மண்மிசை மலர்மகளை இழந்த காலை/அவன்
விட்டதொரு கண்ணீரால் நிரம்பியது கடலதுவே
உன்னருள் தானின்றி அவள் மால் மார்பில் சேர்தல் கனவே
இதனால் தானன்றோ பார்ப்பனர் போற்றி நின்றார்
"ல‌க்ஷ்மீப்ர‌தாயை ந‌ம‌ஹ‌ " என்றே !

சிட்டுக் குருவி போலத்தான் சிற்றின்பத்தை துய்க்கையிலே
சிறு நரியெனவே தந்திரம் வளர்த்து
சிர்கெட்டிருந்த நாட்களிலே
அண்ண‌ல் உந்த‌ன் உற‌வை நாடி நாளும் பொழுதும் உனை துதித்தேன்
குருவிர‌ல் தானே தெய்வ‌ம் சுட்டும் /
நீ தெய்வமே என்றாலும்
திக்கொன்றே திருமால் திருவடி என்று குருவாகி சுட்டினையே
என் பால் குருவும் நீயே தெய்வ‌மும் நீயே
கடலெல்லாம் கடந்த கப்பல்
கணவாயில் தவிப்பது போல் இன்றும் தவிக்கின்றேன்

சீதையை பிரிந்து ராமன் அனல் மிசை புழுவென துடித்துத் தான் கிடக்க
சேதிகள் தமை சுமந்தாய் ,சேது தனை சமைத்தாய்
ராமன் நானல்லேன் எனினும் திரு பிரிந்தாள் தெரு நாயாய் மிதிக்கின்றார்

இற‌ந்த‌வ‌ன் போல் கிட‌க்கின்றேன். சிர‌ஞ்சீவி நீ கொண‌ர்வாய்.
பிற‌ தெய்வ‌ம் என‌க்கு செய்ய‌ நானுன‌க்கு செய்தேன் துரோக‌ங்க‌ள்.
ம‌ன்னித்து நீ அருள்வாய்.
ம‌ண்மிசை என் ம‌ருள் அழிப்பாய்.

இன்றே வ‌ருவாய்
எனை புதிதாய் ஈன்று நீ த‌ருவாய்