Thursday, November 8, 2007

கடன் வாங்குவோர்/கொடுப்போர் மனோதத்துவம்

முதலில் கடன் வாங்குவோர் மனோதத்துவம்:

மனிதனில் இருப்பது ஒரே சக்தி. அது காமம். காமத்தின் நோக்கம் படைத்தல், விரிவாக்கம் செய்தல்,பரவுதல். இதெல்லாம் பணமிருந்தால் சாத்தியப்படும் செயல்களாகும். காம சக்திக்கு மற்றொரு நோக்கமும் இருக்கிறது . அது கொல்லுதல் அல்லது கொல்லப்படுதல். இது இரண்டுமே செக்ஸில் சாத்தியமாகிறது. ஆண் விஷயத்தில் எடுத்துக் கொண்டால் விந்து வெளியாகும் வரை கொல்லும் இச்சை நிறைவேறுகிறது. விந்து வெளியான‌ பிற‌கு சாகும் இச்சை நிறைவேறுகிற‌து.

பெண் விஷ‌ய‌த்தில் ஆணுக்கு விந்து வெளியாகும் வ‌ரை இவ‌ளின் கொல்ல‌ப்ப‌டும் இச்சையும், அவ‌னுக்கு விந்து வெளியான‌ பிற‌கு இவ‌ள‌து கொல்லும் இச்சையும் நிறைவேறுகின்ற‌ன‌. இத‌னால் தான் ம‌னித‌னில் உள்ள‌ ஒரே ச‌க்தியான‌ காம‌ச‌க்தி அவ‌னை உட‌லுற‌வுக்கு ஈர்க்கிற‌து. மேலும் காம‌த்தின் மூல‌ம் ப‌டைப்புக்கும் வ‌ழி ஏற்ப‌டுகிற‌து. (இப்போதும் கூட‌ காலை பிடித்த‌ல், கை தூக்கி ச‌ர‌ண‌டைத‌ல், இத்யாதி காரிய‌ங்க‌ளின் பின் இருப்ப‌து பாலுற‌வு சார்ந்த‌ கார‌ண‌ங்க‌ளே. நாம் உப‌யோகிக்கும் ப‌ல‌ பொருட்க‌ள் ஆண்,பெண் உறுப்புக‌ளின் சாய‌லில் இருப்ப‌து த‌ற்செய‌லான‌ ஒன்ற‌ல்ல‌. ம‌னித‌னின் நினைவிலி ம‌ன‌தை ஆளும் செக்ஸின் பிர‌திப‌லிப்பே).

ம‌னித‌ன் நாக‌ரீக‌ம‌டைந்த‌ பிற‌கு உட‌லுற‌வுக்கு மாற்று வ‌டிகால் தேட‌வேண்டிய‌தாகிவிட்ட‌து. அதுதான் ப‌ண‌ம். எவ‌னொருவ‌ன் த‌ன் ஒரே ச‌க்தியான‌ காம‌ ச‌க்தியை உட‌லுற‌வில் முழுவ‌துமாக‌ செல‌வ‌ழிக்க‌ முடியாதிருக்கிறானோ அவ‌னுக்கு தான் ப‌ண‌த்தின் மீது அதீத‌ வெறி இருக்கும். அவ‌னை பொருத்த‌வ‌ரை ப‌ண‌ம் என்ப‌து உட‌லுற‌வுக்கு ஒரு மாற்று தான். (சுய‌ இன்ப‌ம் போல‌)

யார் உட‌லுற‌விலேயே த‌ம் காம‌ ச‌க்தியை செல‌வ‌ழித்து விடும் வாய்ப்பை பெற்றுள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கு ப‌ண‌த்தின் மீது ஆர்வ‌மிருப்ப‌தில்லை. யார் உட‌லுற‌விலேயே முழுதாக‌ செல‌வ‌ழிந்துவிடும‌த்தைனை கு.ப‌. காம‌ச‌க்தியை கொண்டுள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கும் ப‌ண‌த்தின் மீது ஆர்வ‌மிருப்ப‌தில்லை. இவர்கள் தான் கடன் வாங்குகிறார்கள். ஒளித்து,அடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறைக்கு தூண்டுகின்றன. பணம் சம்பாதிக்க வன்முறை அவசியம். வன்முறைக்கு காரணமான நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் இல்லாததால் இவர்களுக்கு பொருளீட்டும் ஆர்வம் இருப்பதில்லை. முக்கியமாய் கொல்லும் இச்சை நிறைவேறி , கொல்லப்படும் இச்சையே மிஞ்சி இருப்பதால் கடன் வாங்குவதன் மூலம் காலனுக்கு அழைப்பு விடுகிறார்கள்.


கடன் கொடுப்போர் மனோதத்துவம்:
இத‌ற்கு மாறாக‌ எவ‌ர் அதீத‌ காம‌ ச‌க்தியை கொண்டிருந்தும், அதை செல்வ‌ழிக்க‌ உட‌லுற‌வுக்கு வாய்ப்பின்றி இருக்கின்ற‌ன‌ரோ அல்லது செக்ஸில் செல‌வழிந்து போகாத அளவுக்கு அமித செக்ஸ் பவர் கொண்டுள்ளனரோ அவ‌ர்க‌ளுக்கு ப‌ண‌த்தின் மீது அதீத‌ ஆர்வ‌ம் ஏற்ப‌டுகிற‌து. அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளை (அதாவ‌து த‌ம் ஈகோவை) கொன்று தான் அந்த‌ ப‌ண‌த்தை ஈட்டுகின்றன‌ர். என‌வே சாகும் இச்சை நிறைவேறி, சாக‌டிக்கும் இச்சை மிச்ச‌மிருக்க‌ மேற்சொன்ன‌ பார்ட்டிக‌ளுக்கு க‌ட‌ன் கொடுத்து அவ‌ர்க‌ளை கொல்லுகின்ற‌ன‌ர்.

"கட‌ன் பட்டார் நெஞ்சம் போல் கல‌ங்கினான் இலங்கை வேந்தன்" என்றார் கம்பர். "ஆன முதலில் அதிகம் செலவானால்.." ,"வரவு எட்டணா செலவு பத்தணா" இதெல்லாம் நீங்கள் அறிந்தவையே.. The things given above are which U don’t know..