Tuesday, November 27, 2007

என்னகங்காரம் சுண்டைக்காய்

அம்மா உனை நான் போற்றிடவே
பாமாலை நூறு சாற்றிடவே
பிறப்பித்தாய் இன்று நானறிந்தேன்
சத்தியம் இதனை அறியாது தறிகெட்டுத்தானே நான் திரிந்தேன்
நீ வறுமை என்னும் வலை வீச வசமாய் நானும் சிக்கிவிட்டேன்
சிக்கிய என்னை சிக்கெடுத்து சிங்/காரமாக நீ பதித்தாய்
தாயே உந்தன் பொற்பாதம்

வேதம் யாவும் வெற்றெனவும், உன்னை மறத்தல் ஒன்றே கூற்றெனவும்
அறிந்திட அலைந்தேன் பலகாதம்
படைப்பின் ரகசியம் உணர்த்தி விட்டாய்
விதியின் கைகளை தளர்த்தி விட்டாய்
ஆயிரம் தந்தாய் அம்மாவே என் வறுமை தன்னை ஒழித்திட்டால்
எல்லா முடிச்சும் சும்மாவே
ஞான மொட்டிதைமலர்வித்தாய்
விழி நீர் தன்னை உலர்வித்தாய்

தாயே நானோர் பாத்திரமே
எனை ஆட்டிவைப்பதுன் சூத்திரமே
பாத்திரம் அறியா பதர்களிடை மணிபோலே கிடக்கும் என்னை அள்ளி சேர்ப்பாய் கலத்தினிலே
மரணம் தவிர மற்றெல்லாம் வாழ்வில் என்றும் சும்மாவே
ஞானம் ஒன்றே தொடர்ந்து வரும்
அருகாய் உயிரில் படர்ந்து வரும்
என் ஞான விளக்கின் ஒளியினையே
அகந்தை புகையது மூடிடினும்
அவமானம் ஒன்றே துடைத்திடுமே
புது சரித்திரம் தன்னை படைத்திடுமே

உன்னை அறிந்தேன் போதுமடி
வரும் பிறவிகள் யாவுக்குமாகுமடி
வாணியாக மனம் நின்று கலைகள் தந்திடும் கலைவாணி
வேதம் அறியா என் மனதில் வேத சாரம் இறைத்தாய் போதுமடி
அம்மா விதியை நான் அறிந்தேன்(முன்)
வினைகள் செய்யும் சதியறிந்தேன்
உன்னருளால் சிறக்கும் வழியறிந்தேன்
ஆதியந்தம் நீயென்ற அடிப்படை தத்துவம் நான்றிந்தேன்
கற்பகம் உந்தன் பொற்பதமே பணியும் பணியை நானறிந்தேன்
உன் திட்டம் தன்னை தானறிந்தேன்

என்னகங்காரம் சுண்டைக்காய்
என் செவிகள் தவிப்பதுன் தண்டைக்காய்
அது சிணுங்கிட சீறிடும் என் கவிதை
சுமக்கும் உனக்கே புது சிவிகை
வலித்தேன்,சலித்தேன் வ்ண்டியிதை
பிழைத்தேன் அம்மா அண்டியுனை