என்னைப் பொருத்தவரை உயிர் ஒன்றுதான் நிஜம். மொழி , இலக்கியம்,அரசியல் எல்லாம் முக்கியம் தான். ஆனால் மனித உயிர்கள் கொள்ளை போய் கொண்டிருக்கும்போது நாம் உயிர் பிரச்சினைகளை விட்டு இதர பிரச்சினைகள் பற்றி பேசுவது மனிதகுலத்துக்கு நாம் செய்யும் துரோகம் என்பது என் தாழ்மையான கருத்து.
மனித உயிர்களை கொள்ளை கொள்ளும் யுத்தங்கள் (இலங்கை),ராணுவ அடக்கு முறைகள்(பாக்கிஸ்தான்),போலீஸ் என்கவுண்டர்கள்(தமிழகம்,ஆந்திரம்) போலீஸ் அராஜகம் (பீகார்) இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். விபத்து,வரதட்சிணை,பொய்த்துப் போன விவசாயம்,சாதி கலவரம் இப்படி எத்தனை எத்தனையோ மனித உயிர்களை கொள்ளையடித்து கொண்டிருக்கும் காலத்தில் சிந்திக்க தெரிந்தவர்கள் கூட உயிர் பிரச்சினைகளை விட்டு கவைக்குதவாத விசயங்களை விவாதிப்பது உறுத்தலாக இருக்கிறது