வாணீ ! கலை வாணீ ! என் நாவில் வா நீ!
தேன் தமிழ் தந்தது போதும், தேள் தமிழ் தா நீ
(ஈங்கிவர்) முழுக்கக் கொட்டி கவிழ்ப்பதற்குள்
கொட்டி பார்த்திடனும் அழிவைத் தடுக்க முயன்றிடனும்
பகுத்தறிவு பகலவனாம் ஈ.வெ.ரா தொகுத்தவர் தந்த கருத்தினையே கருவில் அழிக்க பார்க்கின்றார்.
காதல் பேசி இவர் நின்றார். பின்
பெண்ணுக்கு சாமரம் வீசி நின்றார்.
இன்றோ பார்ப்பனர் மனம் நொந்தால் வான் மழை பொழியாதென்று வேதம் கூறுகின்றார்.
வேடம் கலைகின்றார்.
புராண புருடாக்கள் புழுத்துப் போனதென்று
புதிதாய் இட்டு கட்டுகின்றார்
நோயென தொற்றுகின்றார்.
தாயே நீ உண்டு
நான் நின் அருள் தேன் உண்டு மயங்கிய பொழுதுண்டு
என் நாவில் நில்லடி நீ சத்தியம் சொல்லடி நீ