ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்
"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாத" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்துவிடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு,வாகனத்துக்கு கனவு காணக்கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு,வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது,ஹவுஸிங்க ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.
ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது புத்தி,புத்திர ஸ்தானம். டேபுள் வர்க்,பேப்பர் வர்க்கில் ஈடுபடக்கூடாது. அதிர்ஷ்டத்தை நம்பி எந்த செயலிலும் இறங்க கூடாது.சொந்த யோசனையுடன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போனதே வழி என்று செயல் படக்கூடாது."தென்னைய பெத்தா/பிள்ளைய பெத்தா கண்ணீரு!" என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறு" என்று உணர்ந்து வாழவேண்டும். பிள்ளைகள் மேல் பற்றை வளர்த்துக்கொள்ள கூடாது.
ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மனைவியை காட்டுமிடம். வீதி வரை மனைவி என்ற கண்ணதாசனின் தத்துவபாடல் வரி. இறப்புக்கு பின் நம்முடன் வரப்போவது இப்பிறவியின் நினைவுகளே. எனவே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வாழவேண்டும். மற்ற உறவுகள் எல்லாம் பிறப்பிலேயே அமைந்துவிடுகின்றன. ஆனால் கணவன்/மனைவி என்ற உறவு விசயத்தில் மட்டும் நமக்கு இறைவன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தருகிறான். எனவே 7 ஆம் பாவம் கெட்டிருப்பின் அழகு,கவர்ச்சி,வசதி,கல்வி,குறைவாக உள்ளவரை வாழ்க்கைத்துணையாக தேர்வு செய்து கொள்வது நல்லது.
ஒவ்வொரு ஆணும் உலக அழகியே மனைவியாக வரவேண்டும் என்று துடிக்கிறான்.
ஒவ்வொரு பெண்ணும் மன்மதனே தன் கணவனாக வரவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவம் கெட்டுள்ள ஆண்,பெண்ணுக்கு அவர்கள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும்போது அது நரகமாக மாறிவிடுகிறது. அதே நேரம் 7 ஆம் பாவம் கெட்டிருந்தாலும் அழகு,கவர்ச்சி,வசதி,கல்வி,குறைவாக உள்ளவரை வாழ்க்கைத்துணையாக ஏற்று ஒற்றுமையுடன் வாழ்ந்துவருவதை காணமுடிகிறது.
9ஆம் பாவம் கெட்டிருந்தால்:
சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தொழில் ,வியாபாரம் செய்யவோ முனையக்கூடாது.