Friday, November 23, 2007

சுக்கிரன் கேது சேர்க்கை

எந்த லக்னமானாலும் சரி மிகுந்த கேட்டை தரும் சேர்க்கை இது. சுக்கிரன் எதிர்பாலினர் மீதான கவர்ச்சி,அவர்களுடனான நட்பு,வீடு,வாகனம்,அறுசுவை உணவு,தூக்கம்,உடலுறவு இப்படி மனிதனுக்கு சுகம் தரும் எல்லா விஷயங்களுக்கும் அதிபதி சுக்கிரன். இவருடன் கேது சேருவது மேற்படி சுகங்களுக்கு தடை ஏற்படுத்துவதோடு இளமையில் இவற்றின் மீது அதீத கவர்ச்சியை ஏற்படுத்தி வாழ்வை சிக்கல்மயமாக்கும் வாய்ப்பு அதிகம். கேது என்பவர் சன்யாசத்தை தரும் கிரகமாவார். எனவே தம்பதிகள் (வேலை நிமித்தமோ அல்லது மன வேறுபாடு காரணமாகவோ) பிரிந்து வாழ நேரலாம். வாழ்வின் பிற்பகுதியில் ஏறக்குறைய சன்யாசியை போல் வாழ வேண்டி வரலாம்.

இதற்கு பரிகாரம்:
கணபதியை தவிர வேறு தெய்வங்களை வழிபடக்கூடாது. இயன்றால் கணபதிய கூட தவிர்த்து விட்டு தியான வழியை மட்டும் பின்பற்றிய படி சன்யாசியை போல் வாழவேண்டும். இதர மத கிரந்தங்களை படித்தல்,தர்கா,சர்ச் செல்லுதலும் நலம் பயக்கும். வீட்டில்,பீரோவில்,பர்ஸில் ட்ராகன் படம் வைத்துக் கொள்ளவும், பாம்பு போன்ற மோதிரம் அணியவும். வைடூரியம் பதித்த மோதிரம் அணியவும். பாம்புகள்,கொள்ளையர்,கடத்தல்காரர்கள்,யோகிகள்,சன்யாசிகள் குறித்த படங்கள் பார்க்கவும்,புத்தகங்கள் படிக்கவும்.

குறிப்பு: இந்த பரிகாரங்கள் செய்தால் மேற்சொன்ன தீயபலன் கள் குறைவதோடுவீடு,வாகனம் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் மறைந்து நல்ல தூக்கம்,அறுசுவை உணவு பெற்று சற்றே நிம்மதியாய் வாழலாம்.