சரோஜா தேவி(பழம் பெரும் நடிகை அல்ல) கதைகள் படிக்காத தமிழ் இளைஞனே இருக்க முடியாது. நிச்சயமாக ஒரு ஆண் தான் அவற்றை எழுதியிருக்கவேண்டும். இப்போதும் வெளிவருகிறதா தெரியவில்லை. சுஜாதா கூட சரோஜா தேவி நாவல் களை பற்றி குறிப்பிட்டுள்ளார். நானும் படித்திருக்கிறேன். இப்போது என் வயது 41. என் டீனேஜில் படித்த பருவகாலம் முதலான பலான இதழ்கள் இப்போது வெளிவருகின்றனவா தெரியவில்லை. இது போன்ற புத்தகங்களை வெளியிடுபவர்கள்,வாங்கி விற்பவர்கள்,படிப்பவர்களின் சைக்காலஜி என்னவென்று யாரேனும் ஆராயலாம். சுவாரஸ்யமாக இருக்கும். நிற்க..மனைவியரின் சைக்காலஜி பற்றி யாரேனும் எழுதலாமே.சரோஜா தேவி கதைகளை ஒன்றுமில்லாது செய்துவிடுமத்தனை சரக்கு இந்து புராணங்களில் உள்ளது.
அகலிகையை இந்திரன் கெடுத்ததால் அவன் உடலெங்கும் யோனியாகிவிட்டதாக புராணத்தில் வருகிறது. யோனி என்பது பொதுப்பெயர். இதற்கு "குறி " என்று பொருள். ஜோதிடத்தில் கூட திருமணப்பொருத்தங்களில் ஆண் யோனி,பெண் யோனி என்று வருவதை இதற்கு ஆதாரமாக கொள்ளலாம். இந்திரன் உடலெங்கும் யோனியாகி விட்டது என்றால் அது ஆண் யோனியாகவும் இருக்கலாம்.பெண் யோனியாகவும் இருக்கலாம். பால் வினை நோய்களில் "படர் தொடை வாழை" என்று ஒரு நோய் உண்டு. (ஆதாரம்:கந்தர் சஷ்டி கவசம்) இதற்கு தொடையில் வாழைக்காயை போல் வரும் கட்டி என்று பொருள். அதாவது ஆண் குறியை போன்ற வடிவத்திலான கட்டி. எனவே அகலிகையை கெடுத்த (உடலுறவு கொண்ட) இந்திரனுக்கு படர் தொடை வாழை எனப்படும் பால் வினை நோய் ஏற்பட்டதாக புராணம் கூறுகிறது.
எனக்கொரு சந்தேகம். அகலிகைக்கு இந்த வியாதி எப்படி ஏற்பட்டது? ஒரு வேளை கணவர் கௌதம முனிவரிடமிருந்து தொற்றியதா? பௌராணிகர்கள் இந்த அபிஷ்டுவின் சந்தேகத்தை தீர்த்து வைக்க கடவது.
புராணங்களை பாக்கெட் நாவல்களில் அளித்து வரும் பக்கெட் சாம்பார் பாலா இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்.