Tuesday, November 6, 2007

நான் ஒரு கட்டியங்காரன் ..

இது ஒன்றும் புதிதல்ல
யாவும் எனக்கு எதிராகி
காரணம் புதிராகி
நான் மலைப்பது புதிதல்ல ..

வெறுமனே உண்டு கழிக்கும்
மாமிசங்கள் இதை உணராதிருக்கலாம்.
அனுதினம் இறையருளின் ஜெட் கேட்டகிரி பாதுகாப்பில்
வாழும் என் மனம் இதை உணர முடிகிறது.

எனக்கு இவர்களோடு எவ்வித பந்தமும் இல்லை.

இங்கு எதுவும் எனக்கு சொந்தமுமில்லை.

நான் ஒரு கட்டியங்காரன் ..
அழிவின் வருகையை கூறவந்தேன்
என் அக‌ங்கார‌ம் திருப்தியுறுவ‌தற்காக
புதிய இந்தியாவுக்காக ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா என்று
க‌தை பண்ண‌ வைத்திருக்கும்
இறைய‌ருளின் வியூக‌த்தை
அறியாத‌ முட்டாளில்லை நான்..

என‌க்கு எதுவுமே முக்கிய‌மில்லை.
என் இறையோடு முறை கேடான
உற‌வேனும் தொட‌ர‌ வேண்டும்.
இது ஒன்றுதான் முக்கிய‌ம்.

இது கைவ‌ருமோ என்றுதான்
இந்த‌ நாத்திக‌ர்க‌ளின் ந‌ல‌ம் நாடி
உழைத்து வ‌ருகிறேன்.
இவ‌ர்க‌ளுக்காக‌ தெய்வீக‌த்தையும்
எதிர்த்து போராடுவ‌தாக‌
பிலிம் காட்டி வ‌ருகிறேன்
எது கைவ‌ரின் ம‌ற்றேதும் தேவையில்லையோ
அதையே பெற்றுவிட்டேன்..
இனி எதை இழ‌க்க‌வும் நான் த‌யார்.


ம‌ர‌ண‌ம் என்ன‌ க‌ஸ்ட‌ம்ஸ் அதிகாரியா கடத்தல் பொருளை
ஆச‌ன‌த்தில் செருகிக் கொண்டால் ஏமாந்து போக‌..

இங்கிருந்து என்னுட‌ன் வ‌ர‌விருப்ப‌து நின‌வுக‌ள் ஒன்றே..
அது போதும் என்னை வ‌ழி ந‌ட‌த்த‌..

ஐ யாம் வெரி க்ளிய‌ர் அப‌வுட் மை கான்ஷ‌ஸ்..
என்னில் எவ்வித‌ குற்ற‌ம‌ன‌ப்பான்மையுமில்லை..

என் நாட்டில் அடுத்த‌ வேளை
சோற்றுக்கு க‌தியில்லாது கிட‌க்கும்
த‌ரித்திர‌ நாராய‌ண‌ர்க‌ளுக்காக‌
ஞான‌வில்லை நாணேற்றி யுத்த‌ க‌ள‌த்தில்
நிற்கும் தற்கொலை ப‌டை வீர‌ன் நான்.

நானே என‌து சைன்ய‌ம்.
வெறும‌னே என் ச‌ங்க‌ல்ப‌ ப‌ல‌த்தால்
நான் சாதித்த‌வை எத்த‌னையோ
என் இறைவ‌னை மிர‌ட்டியும் கூட‌
பார்க்கும‌த்த‌னை நெருக்க‌ம் வ‌ள‌ர்த்த‌வ‌ன் நான்.
என் "வில் " உச்ச‌த்தில் இருக்கும்போது நானே
இறைவ‌னோ என்ற‌ ம‌ய‌க்க‌த்தை கூட‌
எதிர்கொண்ட‌வ‌ன் நான்.

இந்த‌ இடைவெளிக‌ள் யாவும் என்னை என‌க்கு
புரிய‌ வைக்க‌த்தான் என்ப‌து என‌க்கு தெரியும்..

வேலும் ம‌யிலும் துணை ..ஆம் த‌ணிகை முருக‌ன்
துணை நிற்கிறானோ இல்லையோ
என் த‌ந்தையின் ஆசி க‌டைசி புக‌லாக‌ என்னை காக்கிற‌து.

முப்ப‌து முக்கோடி தெய்வ‌ங்க‌ள், ராம‌ன்,அனும‌ன்,
க‌ண‌ப‌தி,அல்லா (முஸ்லீம்க‌ள்),ச‌த்திய‌ம்,
(என்.எஸ்.ச‌த்யா)/பௌத்த‌ம் (அஷோக்)
எல்லாமே கைவிட்ட‌ பிற‌கும் என்னை காத்த‌து
வேலும் ம‌யிலுமே/அத‌ற்கு கார‌ண‌ம்
என் த‌ந்தையின் தார்மீக‌ வாழ்வு , அவ‌ருடைய‌ ஆன்மாவின் ஆசி