சமகாலர்களே!
என் வார்த்தைகளின் பால் பாராமுகம் தொடரும்
உமக்கு என் இறுதி திருமுகம் இது
இனி நான் மட்டுமல்ல என் பேனாவும்
உங்களுக்காக குனிவதாயில்லை
நான் உரக்க சொல்லும் உண்மைகளை உரசிப்பார்க்கும்
துணிச்சல் உமக்கிருந்தால்
உம் உடைகளை உறித்துப் பாருங்கள்..
உமக்கும் மற்றெந்த மிருகத்துக்கும் வித்யாசமிருக்கிறதா என்று.
தொடர்ந்து போர்த்தப்பட்ட துணிகள்
உம் உரோமங்களை சற்றே குறைத்திருக்கலாம்.
டைனிங் டேபிளிலேயே கிடைத்து விட்ட உணவு
உங்கள் மோப்பத்திறனை சற்று குறைத்திருக்கலாம்.
பெற்றேர் ஏற்பாடு செய்யும் செக்ஸ் உறவு உங்களிலான
இணை தேடும் திறனை குறைத்திருக்கலாம்.
அதற்காக நீங்கள் மனிதர்கள் என்ற முடிவுக்கு வந்ததால்தான்
மனிதம் இம்மண்மிசை மண்ணாகிவிட்டது.
உம்மை நீங்கள் மிருகங்களாய் ஒப்புக்கொண்டாலன்றி
நீங்கள் என்றைக்கும் மனிதர்களாக முடியாது.
நோயை அங்கீகரித்தாலன்றி சிகிச்சை சிக்கலாகிவிடும்.
உம் மலச்சிக்கலுக்கே மட்டுமல்ல
மனச்சிக்கல்களுக்கும் ஒரே காரணம்தான்
நீங்கள் மிருகங்கள் என்பதை மறுத்து
மனிதர்களாய் மாறுவேடம் போடுவதுதான்.
உங்களில் இருக்கும் மிருகத்தின் உடற்பசி,உடலுறவு பசியை மறுத்து
23.59 நிமிடம் மனிதராய் வேடமிட்டு ஒரு நிமிடத்தில் மிருகமாகி
தமிழ் நாளிதழில் செய்தியாகிறீர்கள்.