தாயே நாயேன் நிலைகண்டும்
நாயகியின் மனம் இரங்காதோ ?
அனலில் புழுவென தரை மேல் மீனென
உவமைகல் நூறு கூறிடலாம்.
ஆனால் என் நிலை நீ உணர அவை யேதும் உதவா அறியாயோ?
பட்டேன் பட்டேன் துளிர்க்கவில்லை
எனினும் உன் விழி பனிக்கவில்லை
யாதே செய்வேன் யாகினியே !
மோகினி யோகினி டாகினியே
பாவியர் காற்றும் என் மீது வீசா நிலையை தாராயோ?
ஆவி சோர அம்மா நின் நாமம் தனையே ஜெபித்தேனே
அர்த்த ஜாமம் வரையெல்லாம் ஜகன் மாதா உனை நான் நினைந்தேனே
என் வறுமை தன்னை எரிக்காது என்னை உன் விழி எரிப்பதுவோ?
அம்மா உனை நான் நாடிடினும்
பேடி போலே கிடப்பதுவோ
அணு ஆயுதம் பெற்று ஆண்,பெண்ணை அடியோடொழிக்க எண்ணுகின்றார்.
இதை தடுக்க எண்ணும் என் உயிரை பஞ்சு மிட்டாய் போலே உண்ணுகின்றார்.
ஜனநாயகம் வந்து பலகாலம் ஆகியும் வாரிசு மண்ணாள் இரவும் பகலும் தவிக்கின்றார்.
10 கோடி இளைஞர்களில் ஒருவரேனும் இங்கிலையோ பாரத தேசம் தனை யாள
மனித உயிர்கள் மலிவாகி ,மண்மிசை விழுகுது 100 பிணம்.
மற்றொரு பிணமாய் கிடக்கின்றேன் ..என்று என் குரல் இங்கொலிக்கும்
படைத்தாய் பிறந்தேன். வாழ்கின்றேன்
ஒரு நாள் எனை நீ உயர்த்துவை என்று கயவர் முன்பும் தாழ்கின்றேன்
யாது செய்ய திருவுளமோ..
உனக்கும் வரையனும் திருமுகமோ