பல வருடங்களுக்கு முன் தேவி வார இதழில் தங்கள் தெய்வீக மருத்துவம் மாத இதழுக்கு உதவி ஆசிரியர் தேவை என்று விளம்பரம் கொடுத்திருந்தீர்கள். நான் உள்ளூர் தபாலில் அப்ளை செய்திருந்தேன். தாங்கள் பெருந்தன்மையுடன்(?) நேர்முக தேர்வுக்கு அழைப்பு அனுப்பியிருந்தீர்கள். நானும் வாணியம்பாடி வந்தேன். பணியில் சேர்ந்தேன். ஆமை நுழைந்த வீடும் நான் கால் வைத்த இடமும் உருப்படாது என்பது அனுபவம். ஆனால் சற்றே ஆன்மீக ஈடுபாடு வந்த பிறகு உணர்கிறேன். நான் தர்மத்தின் பிரதிநிதி. நான் அடி வைக்கும் இடத்தில் அதர்மம் இருந்தால் அது தூள் தூளாகும். நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு தேவியில் தங்கள் விளம்பர/கட்டுரை கண்டேன். கலைஞரின் வாழ்க்கை வரலாறை வாங்க ஆளில்லை என்பதால் இலவசமாய் தருவதான தங்கள் அறிவிப்பை கண்டேன். நான் வாணியம்பாடியில் இருக்கும்போது நான் கண்ணால் கண்ட காட்சிகளை இந்த வலைப் பூவில் வைத்தால் தனி மனித தாக்குதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் என் வலைப்பூவே தடைக்குள்ளாகலாம் என்பதால் ஒரே ஒரு அறிவுரை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.
"போதும் சார்..!
லிங்கன் சொன்னதை நினைச்சு பாருங்க
"பலரை சிலகாலம்..சிலரை பல காலம்..ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது"