இடையில் ஒரு தடவை தாய் வீட்டுக்கு வந்த விஜிக்கும்,பக்கத்து வீட்டு அழகுவுக்கும் காத்ல் ஏற்பட்டது.அழகுவின் அப்பா பெரிய அதிகாரி வீடு,வாசல் யாவும் உண்டு. இந்த விஷயம் வெளியூரிலிருந்த ஜமுனாவுக்கு தெரிந்து பதறிவிட்டாள். சம்பளமில்லாத வேலைக்காரியாக இருக்கும் விஜி வசதியானவனை கல்யாணம் கட்டிக் கொண்டு போய் விட்டால் வீட்டு வேலைகளை ஜமுனாதானே பார்க்க வேண்டி வரும். எனவே விரைந்து வந்த ஜமுனா கொட்டி முழக்கினாள்,காதலுக்கு குறுக்கே விழுந்து தடுத்தாள். எல்லாவற்றையும் மீறி விஜி/அழகு தம்பதியானார்கள். ஆரம்பத்தில் அழகுவின் உறவுகள் போர் பரணி பாடினாலும் 4 மாதங்களிலேயே எல்லாம் சரியாகிவிட்டது.
காதல் கடிமணம் புரிந்து கொண்டவர்களிடையில் வழக்கமாய் தோன்றும் பூசல்கள் விஜி அழகு தம்பதியிடையிலும் தோன்றின. விஜி 7 ஆம் வகுப்புவரை மட்டும் படித்தவள். அழகுவின் அம்மாவே படித்து பட்டம் வாங்கி டீச்சராக வேலை பார்த்தவள்.திருமண வாழ்க்கை, மனைவி இத்யாதி குறித்த பார்வையே வேறாக இருந்தது. விஜி கனவு கண்ட திருமண வாழ்வில் மீன்,கருவாடு,டி.வி,சினிமா,புதிய உள்பாவாடை தவிர வேறு எதற்கும் இடமில்லாமல் இருந்தது. இந்நிலையில் கசப்புகள் தோன்றுவது சகஜம் தானே. விஜி முட்டாள் தனமாய் தன் மனக்குறைகளை ஜமுனாவிடம் கொட்டினாள். ஜமுனாவுக்கு இது வசதியாக போய்விட்டது. ஏற்கெனவே குழப்பத்தில் இருந்த விஜியை மேலும் குழப்பி அவளை அழகுவிடமிருந்து பிரித்து மீண்டும் சம்பளமில்லாத வேலைக்காரியாக்கி விட்டாள்.
அழகுவை பற்றியும் 4 வரிகள் சொல்லியாக வேண்டும். எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து பார்த்துவிட்டு ,ஆடி முடித்து இறங்கி வந்து இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து வருபவன். ஜமுனாவின் " நாலு நாள் காயப்போட்டா ஃபார்முலாவெல்லாம் எப்படி வேலை செய்யும்.
ஜமுனா "நீ பாரு அழகு வருவான். உன்னை திருப்பியனுப்ப சொல்லி என் காலை பிடிச்சு கெஞ்சுவான். உன்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கற மாதிரி நான் பண்றேன்" என்று ஃபிலிம் காட்டி வந்தாள்.