திருவேங்கடன் தீந்தமிழ் பாமலர் மாலை இது ஒரு கவிதை தொகுப்பு:
ஏழுமலையானை எண்ணி உருகி,உருகி அவன் அருளமுதை பருகி ,பருகி எழுதியகவிதைகள் அடங்கியதாகும். தேவஸ்தானத்தார் ஒரு முறை திருவேங்கடன் குறித்த படைப்புகள் குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதற்கு அச்சான,அச்சாகாத படைப்புகளை வரவேற்றனர். நான் மேற்சொன்ன கவிதை தொகுதியை அனுப்பி வைத்தேன். அந்த ப்ராஜக்டின் தலைவர் என் படைப்புகளை பெரிதும் பாராட்டியதோடு தி.தி.தேவஸ்தானத்தாரின் நிதி உதவியுடன் அச்சிட முயற்சிக்கும்படி கூறி அதற்கான விண்ணப்பத்தையும் அனுப்பினார். நானும் உடனே விண்ணப்பித்தேன். ஒரு சுபயோக சுபதினத்தில் அறங்காவலர் குழு அதற்கு நிதி உதவி வழங்க அனுமதி தரவில்லை என்ற நல்ல பதில் கிடைத்தது.
பத்திரிக்கை ஆசிரியர்களால்/பெரிய மனிதர்களால் தேர்ந்தெடுக்கவும் படாமல்,திரஸ்கரிக்கவும் படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட என் படைப்புகள்:
மலரவன் என்ற புனைப்பெயரில் என்னால் எழுதப்பட்ட கவிதை தொகுப்புகள்:
1. தீய்ந்து போன தீக்குச்சிகள் 2.நிதர்ஸனங்கள்
சுஜாதாப்ரியன் என்ற புனைப்பெயரில் என்னால் எழுதப்பட்ட குறுநாவல்கள்:
1.ஆபத்தான வளைவுகள் 2.ப்ளட் ரோஸ்