Wednesday, November 7, 2007

தையல் சொல் கேளேல் !


எத்தனை எத்தனை தீபாவளியோ ? நரகாசுரன் ஒழிந்தது மட்டும் ஒரு முறைதான். கண்ணன் சோர்ந்த போது சத்யபாமா ரதம் செலுத்தினாளாம். இன்றைய சத்யபாமாக்கள் கணவன் சம்பளமும்,கிம்பளமுமாய் வாரி கொட்டினால் அனுபவிக்கத் தயாரே தவிர சஸ்பெண்ட் ஆகி வீட்டுக்கு வந்துவிட்டாலோ, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி வேலை போனாலோ வேலை கொடுத்துவிடுகிறார்கள். (துரோகம் என்பதற்கு தெலுங்கு பிரயோகத்தின் மொழி பெயர்ப்பு இது)

தையல் (பெண்)சொல் கேளேல் என்று சொன்ன அவ்வையாரே தையல் தான் எனும்போது இதை சற்று யோசிக்க வேண்டியதாகிறது. பெண்ணின் உடல் பலவீனமானது. //strong mind in strong body// என்பது தெரிந்ததே..

இயற்கை ஒரு பலவீனத்தை மற்றொரு பலத்தின் மூலம் சமன் செய்கிறது. பெண்ணுக்கு அது ஸ்தூலமான பலவீனத்தையும், தற்காப்பு உணர்வையும்,எதிர்காலம் குறித்த பயத்தையும் தந்துள்ளது. //Too much is always bad// என்பதும் தெரிந்ததே.. மேற்சொன்னவை அதிகரிக்க அதிகரிக்க தந்திரங்கள், சுய நல எண்ணங்கள் பெருகுகின்றன. சற்றே பெண் தன்மை மிகுந்த கணவன் மார்கள் மனைவி மார்களின் பேச்சுக்கு தாளம் போட்டு சமுதாயத்தை சுரண்டி, தம் குடும்பத்திலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலகி பெண்டாட்டி பிள்ளைகளுடனேயே வாழ்ந்துவிட முயன்று அதே பெண்டாட்டி,பிள்ளைகளால் திரஸ்கரிக்கப் பட்டு நாயடி படுகிறார்கள். இவர்களுக்கு ரியலைசேஷன் வருவதற்குள் சூழ்நிலை கைமீறி போய்விடுகிறது.

எனவே தையல் சொல் கேளீர்