Saturday, September 29, 2007

துள்ளி வருகுது பிரளயம்?

ஆண்டொன்று சென்றால் வயதொன்று கூடும்..மரணம் நெருங்கி வரும். என் இறுதி சித்தாந்தம் இதுவே..இந்த உலகத்தில் எல்லாம் பொய். மரணம் ஒன்றுதான் நிஜம். மரணம் என்னை விழுங்க வருவதற்குள் நான் கண்ட நிஜத்தை நிர்பயமாக அறிவிக்க வேண்டும்.

ம‌ர‌ண‌ம் காத்திருப்ப‌தை அறியாத‌, அறிந்தும் ம‌ற‌ந்து போன‌ கார‌ண‌த்தால் தான் இந்த‌ உல‌க‌த்தில் ப‌சியும்,சுர‌ண்ட‌லும் தொட‌ர்கின்ற‌ன‌. இதோ பிர‌ள‌ய‌ம் நெருங்கி வ‌ருகிற‌து. பிர‌ள‌ய‌ம் விழுங்க‌ வ‌ருகிற‌து. இதை அறியாத‌ அமெரிக்கா இந்தியாவின் சுயாதிகார‌த்தை விழுங்க‌ வ‌ருகிற‌து. உல‌க‌ அர‌சு ஏற்ப‌டுவ‌து நிச்ச‌ய‌ம். குறை ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளால் இய‌ற்கையை வெல்ல‌ முடியாது. மனித உயிர்களை பிர‌ள‌ய‌ம் விழுங்கினாலும் ப‌ர‌வாயில்லை. இவ‌ர்க‌ளின் நிர்வாக‌ சீர்கேடுக‌ள் விழுங்க‌ப் போகின்ற‌ன‌.

பிர‌ள‌ய‌த்தின் விளைவுக‌ளை க‌ட்டுப் ப‌டுத்த:

1.அமெரிக்கா த‌ன் எதேச்ச‌திகார‌ப் போக்கை மாற்றிக் கொண்டு த‌ன்னால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ நாடுக‌ளிட‌ம் ம‌ன்னிப்பு கேட்டு , புன‌ர் நிர்மாண‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு நிதி ஒதுக்கி த‌ர‌வேண்டும்
2.சர்ச்சைக்கு இடமான நிலப்பகுதிகளை ஐ.நா வின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். தீவிரவாத அமைப்புகளிடம் ஐ.நா.பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்டவேண்டும்.
3.இந்தியா போன்ற விவசாய நாடுகள் தம் பாதுகாப்பு செலவுகளுக்கு மங்களம் பாடி நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தி கூட்டுறவுப் பண்ணை விவசாயத்தை அமல் செய்ய வேண்டும்.
4.எல்லா நாடுக‌ளிலும் எல்லா அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் இணைந்து தேசீய‌ அர‌சாங்க‌த்தை ஏற்ப‌டுத்த‌ வேண்டும்.
5.உல‌க‌ அர‌சை ஏற்ப‌டுத்தி பிர‌ம்ம‌ங்காருவின் கால‌ ஞான‌ம், நேஸ்ட்ரோடாம‌ஸின் தி செஞ்சுரீஸ், வேத‌ வியாச‌ரின் ப‌விஷ்ய‌ புராண‌ம் போன்ற‌ நூல்க‌ளை ஆய்வு செய்து பிர‌ள‌ய‌ம் ஏற்ப‌ட‌ உள்ள‌ பிர‌தேச‌ங்க‌ளை முன் கூட்டி அடையாள‌ம் க‌ண்டு ம‌க்க‌ளை அப்புற‌ப்ப‌டுத்த‌ வேண்டும்.
6.அணுச‌க்தி,அணு ஆயுத‌ங்க‌ளுக்கு ம‌ங்க‌ள‌ம் பாட‌ வேண்டும்.
7.சுற்றுபுற‌ சூழ‌ல் சீர்கேட்டை போர்கால‌ அடிப்ப‌டையில் சீர்திருத்த‌ வேண்டும்.
8.வார‌த்திற்கு ஒரு நாளை இய‌ற்கைக்கு திரும்பும் நாளாக‌ அறிவித்து எல்லா வாக‌ன‌ங்க‌ள்,தொழிற்சாலைக‌ளுக்கும் ஓய்வு அறிவிக்க‌ வேண்டும்