Thursday, September 6, 2007

தமிழுக்கு பெருமை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

தமிழுக்கு பெருமை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
1.இது போன்ற பொறுப்பான விவாதங்கள் ஆர்க்குட் போன்ற தளங்களிலேயே முடிந்து விடாதபடிக்கு எல்லா தளங்களிலும் எதிரொலிக்கச்செய்ய வேண்டும்.2.ஒரு இனத்தை ஒழிக்க முதலில் அதன் மொழியை ஒழிக்க வேண்டும் என்பது பாஸிஸ தத்துவம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.3.மொழி அழியாதிருக்க அது வளைந்து கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நேரிடை பொருளை தரும் வார்த்தை கிடைக்காத பட்சத்தில் வேற்று மொழி வார்த்தையை அப்படியே வரித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெயர்களை அப்படியே உபயோகிக்க வேண்டும்.
4.இலக்கணம் எளிமைப் படுத்தப் படவேண்டும். கம்ப்யூட்டரில் பிழை திருத்தம் செய்ய ஏதுவாக விதிகளை எளிமைப் படுத்த வேண்டும்.
5.முக்கியமாக மொழி சோறு போடும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு,தனியார் நிறுவனங்கள் அதை தம் நிர்வாகத்தில் விரிவாக உபயோகிக்க வேண்டும். அதே நேரம் உலக சமுதாயத்திலிருந்து இனம் துண்டிக்கப்பட்டு விடக் கூடாது.(இதர மானிலங்கள், நாடுகளுடனான் தொடர்புக்கு கச்சிதமான மொழி பெயர்ப்பு மென் பொருளை தயாரித்தாக வேண்டும். தமிழன், தமிழ் நிறுவனம் தமிழர்களுடன் தொடர்பு கொள்கையில் தமிழை ம‌ட்டுமே தொட‌ர்பு மொழியாக‌ உப‌யோகிக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பொறுக்கி என்ற‌ பெய‌ர் த‌மிழ் பெய‌ர் என்ப‌த‌ற்காக‌ ஒரு திரைப்ப‌ட‌த்துக்கே வ‌ரி வில‌க்கு வ‌ழ‌ங்கும் போது த‌மிழை தொட‌ர்பு மொழியாக‌ கொண்ட‌ நிறுவ‌ன‌த்துக்கு த‌ருவ‌தில் த‌வ‌றே இல்லை.
6.ஐந்தில் வ‌ளையாத‌து ஐம்ப‌தில் வ‌ளையாது..என‌வே ம‌ழ‌லைய‌ர் வ‌குப்பிலிருந்தே த‌மிழ் க‌ட்டாய‌மாக்க‌ப் ப‌ட‌ வேண்டும். மொழி என்ப‌து வாழ்க்கைப் போராட்ட‌த்தில் ஒரு ஆயுத‌மாக‌,உண‌வைப் பெற்றுத்த‌ரும் தூண்டிலாக‌ செய‌லாற்றும் சூழ‌ல் அர‌சு நிர்வாக‌ம்,நிதி அமைப்புக‌ள், வியாபார‌ம், ச‌மூக‌ம்,அர‌சிய‌லில் ஏற்ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும்.
7.த‌மிழில் நாளிதுவ‌ரை எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌டைப்புக‌ள் அனைத்திலும் தேடி ப‌டிப்ப‌த‌ற்கான‌ டேட்டா பேஸ் ஒன்று ஏற்ப‌டுத்த‌ வேண்டும்.
8.த‌மிழில் உள்ள‌ ஞான‌ செல்வ‌த்தை உட‌ல் ந‌ல‌ம்,நிதி நிர்வாக‌ம்,நீதி நிர்வாக‌ம், இப்ப‌டி த‌லைப்பு வாரியாக‌ தேடி,ப‌டித்து ம‌கிழ‌வும் வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும்.
9.இத‌ற்காக‌ குளோப‌ல் டெண்ட‌ர் அழைத்து அர‌சு சாரா அமைப்பு ஒன்றை ஏற்ப‌டுத்த‌ வேண்டும். மழலையர் முதல் முதியவர் ஈறாக தமிழ் போதனை,நூல் அச்சிடுதல்,பத்திரிக்கை வெளியிடுதல் ,நூல் நிலைய‌ங்களின் நிர்வாகம் போன்றவற்றை , அத‌ன் பொறுப்பில் விடலாம். இத‌ற்கான‌ நிதியாதார‌த்தை ப‌ல‌ வ‌கைக‌ளில் ஏற்ப‌டுத்த‌லாம். (உ.ம் ) த‌னித் த‌மிழை காற்றில் விட்டு ச‌க‌ட்டு மேனிக்கு க‌ல‌ப்ப‌ட‌ம் செய்யும் பெரிய‌ ம‌னித‌ர்க‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,அர‌சுத் துறைக‌ள்,த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள்,க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு அப‌ராத‌ம் விதிப்ப‌த‌ன் மூல‌ம்
10.குறிப்பிட்ட‌ கால‌த்துக்கு அர‌சு விள‌ம்ப‌ர‌ங்க‌ளை இத‌ர‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளியிட‌ சுய‌த‌டை விதித்துக் கொண்டு முன்ன‌ர் கூறிய‌ அர‌சு சாரா நிர்வாக‌த்தின் கீழ் வெளிவ‌ரும் ப‌த்திரிக்கையில் ம‌ட்டும் வெளியிட்டாலே போதும். அந்த‌ ப‌த்திரிக்கையை சில‌ கால‌த்திற்கு அர‌சு ப‌ள்ளிக‌ள்,ரேஷ‌ன் க‌டைக‌ள் மூல‌ம் இல‌வ‌ச‌மாக‌ வினியோகிக்க‌ வேண்டும்.வேண்டு மானால் ஒவ்வொரு வார‌மும் ஒவ்வொரு பிர‌ப‌ல‌த்தைக் கொண்டே அதை வெளியிட்டாலும் ந‌ல்ல‌தே..