
அரசு இயந்திரத்தை பார்ட் பார்ட்டாய் கழட்டி கிருஷ்ணாயிலில் ஊற வைக்காது எந்த திட்டம் தீட்டினாலும் பலன் பூஜ்ஜியம்தான். நாட்டில் உள்ள எல்லா அரசு ஊழியர்களையும் மருத்துவ,உடல் நல,மன நல,பொருளாதார,சமூக,அரசியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த பரிசோதனையை முழுக்க முழுக்க இயந்திரங்களை கொண்டே செய்ய வேண்டும். பணியாற்ற தகுதியற்ற ஆட்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இளைய தலைமுறைக்கு வாய்ப்பு தரவேண்டும். இந்த பிராஸஸ் முடிவதற்குள் அரசு நிர்வாக விதிகளை எளிமைப் படுத்த வேண்டும். ரூட் லெவல் டெஸிஷனுக்கு வாய்ப்பளிக்கும் நிர்வாகம் நடக்க வழி செய்ய வேண்டும். 100 சதவீதம் கணிணிமயமாக்கி, ஒரு குக்கிராமத்தில் தலையாரிக்கு கொடுத்த மெமோவும், அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் கூட ஆன் லைனில் வைக்கப்பட வேண்டும். போலி கவுரவம், ஜால்ரா,கோள் சொல்லி, சாதி அபிமானம், ஊர்காரன் என்ற அபிமானம்,எதுவும் அரசு நிர்வாகத்தை சீர் குலைக்காத படி எவன்,என்று,எந்த சீட்டில் வேலை செய்வான் என்று தெரியாத நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு ஊழியன் கடன் வாங்கவோ,லஞ்சம் வாங்கவோ அவசியமில்லாத அளவுக்கு அரசு அவனையும், அவன் குடும்பத்தையும் தத்தெடுத்து காப்பாற்ற வேண்டும். லஞ்சம் வாங்கினான் என்று நிரூபணமானால் கருணை காட்டாது வாழ்நாள் முழுக்க சிறையில் வைக்க வேண்டும். |