Saturday, September 29, 2007

நல்லதொரு குடும்பம்


நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்றார் கவியரசு (வைரமுத்து இல்லிங்க) என் குடும்பம் மட்டும் நிச்சயமாக பல்கலைகழகம் அல்ல. என் தாத்தா ஒரு டுபாகூர் பார்ட்டி. 3 மாதத்துக்கு மேல் எந்த வியாபாரமும் செய்ததில்லை. கணேஷ் பீடி குடித்துக்கொண்டு, இட்லி சுட்டு பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருன்ந்த என் பாட்டியை மிரட்டிக் கொண்டிருந்தார்.

என் பாட்டி என் ப்ள்ளை தான் எனக்கு மட்டும் தான் என்று அராஜகம் செஇது என் அம்மாவை ஓரங்கட்டிக் கொண்டே இருந்தாள். என் அப்பா வழா வழா,கொழா கொழா சமாச்சாரம். கொள்கைகள் என்னவோ சூப்பர்தான். நியாயம், தர்மம்,கடமை உணர்ச்சி எல்லாம் ஓ.கே. ஆனால் அநியாயத்துக்கு பயந்த சுபாவம். வளைந்து கொடுக்காத காரணத்தால் கண்ட ஊருக்கும் தூக்கியடிக்கப் பட்டு, ஓட்டல் சாப்பாடு, அதிலும் ஒரு கேரியரை இரண்டு வேளைக்கு சாப்பிட்டு அல்ஸர் வாங்கிக்கொண்ட காந்தீயவாதி.

எங்களுக்கெல்லாம் (4 மகன் களுக்கு) ஜனதா புடவையில் தான் தீபாவளிக்கு சட்டை தைப்பார். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் எத்கனாவது படிக்கிறடா என்று கேட்பார். 3 மாதத்துக்கு ஒரு தரம் அவர் ஊருக்கு வரும்போது தான் எனக்கு கட்டிங்க்(முடி வெட்டுங்கோவ்) அட்டெண்டரெல்லாம் பெரிய வண்டி மெயின்டெயின் செய்யும் இந்த நாளில் மாவட்ட கருவூல அதிகாரியான என் அப்பா சைக்கிளில் சென்றார் என்றால் நம்ப முடியாது தான்.

என் சித்தப்பாக்கள் கதை வேறு விதம். பெரியவர் ஊரில் உள்ள பெண்ணையெல்லாம் பார்த்து நிராகரித்து கடைசியில் மாட்டினாரய்யா ஒரு கூனி மந்தாரையிடம்.பிள்ளைக்கு கால் ஊனம்,மகள் பிஞ்சில் பழுத்து கலப்பு திருமணம். மனைவி முன் பின் தெரியாத மிலிட்டரி ஆfஈஸர் ஒருவனை நம்பி ஏமாந்து (பணம் மட்டும் தான்) குடும்பத்தை நாசமாக்கிகொண்டிருக்க இவர் தலையனை சைஸில் தெலுங்கு நாவல்கள் படித்துக் கொண்டிருந்தார்.