Monday, September 24, 2007

தமிழ்நாடும் தமிழும் உருப்பட

கலைஞர் கண்ட கண்ட கட்சி அலுவலகத்துக்கெல்லாம் போவதைவிட தமது அருமை நண்பர் எம்.ஜி.ஆர் கண்ட அ.தி.மு.க கட்சி அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். ஜெயலலிதாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி தி.மு.க ,அதிமுக இணைப்புக்கு தாம் தயார் என்று கூறவேண்டும்.

உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகு தொண்டர்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் கட்சித்தலைவராகவும்,எம்.எல்.ஏ.க்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர் முதல்வராகவும் இருக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

அதுவரை தாம் முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சியின் தற்காலிக தலைவராக இருக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும். நிரந்தர முதல்வர் தேர்வு செய்யப்படும் வரை இருவரும் ஒப்புக் கொள்ளும் ஒருவர் முதல்வராக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜெயலலிதா திராவிட பராம்பரியத்துக்கு எதிரான அடிப்படைவாத கொள்கைகளை கை விடுவதாக அறிவிக்க வேண்டும். பொதுசெயல்திட்டம் ஒன்றை வகுத்து செயல்பட வேண்டும்.

காவிரி,சேலம் கோட்டம்,ராமர் பாலம் வெங்காயம் எதுவாக இருந்தாலும் தமிழக நலம் காக்க செயல்படவேண்டும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் திராவிட இயக்கங்கள் பிளவு பட்டிருப்பதால் கலைஞரின் நாக்கை அறுப்போம்,தலையை எடுப்போம் என்ற நிலை வந்த பிறகும் பங்காளி சண்டை தொடர்வது வெட்கக்கேடானது