Thursday, September 20, 2007

கங்கை காவிரி இணைப்புக்கு நூதன திட்டம்

ஆந்திரமானிலம், சித்தூர் மாவட்டம் , சித்தூரை சேர்ந்தவர் முருகேஷன். இவர் கங்கை காவிரி இணைப்புக்குஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் நூதன திட்டம் ஒன்றை தீட்டி, அதன் அமலுக்காக 1997 முதல் பல வகைகளில் போராடி வருகிறார். ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட‌த்தின் முக்கிய‌ அம்ச‌ங்க‌ள் வ‌ருமாறு:.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல் ,.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல், நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்,.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
லோக்சபா ஸ்பீக்கர் அலுவலகம்:முருகேசன் இந்த திட்டத்தின் 200 பிரதிகளை 11.6.1998 ஆம் தேதி, பதிவு தபால் மூலம் அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினார்.. அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினார் .பல மாதங்கள் வரை பதிலில்லை.அப்போது தம் தொகுதி எம்.பி.யான ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாக முருகேசன் ஒரு இன்லண்டு லெட்டர் எழுதினார்சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு முருகேச‌ன் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது."நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை"-என்பது அதன் சாரம். உடனே முருகேசன் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினார்.மீண்டும் சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் முருகேசனுக்கு கடிதம் போட்டனர். அதன் சாரம்:நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினார். அதற்கும் பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ச‌லாணை அனுப்பினார். நாளிதுவரை திட்ட பிரதிகள் எம்.பி.க்களுக்கு வினியோகிக்கப் படவில்லை. இன்றுவரை முருகேசன் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம்:
அப்போதைய‌ ஆந்திர‌ முத‌ல்வ‌ர் தெ.தேசம் கட்சித் தலைவரான ச‌ந்திர‌பாபு.தெ.தேச‌ம் க‌ட்சியை சேர்ந்த‌ பால‌யோகிதான் லோக்ச‌பா ச‌பாநாய‌க‌ர். என‌வே முருகேச‌ன் இது விஷ‌ய‌மாக‌ தொட‌ர்ந்து முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு கூரிய‌ர்,ப‌திவு த‌பால் மூல‌ம் க‌டித‌ங்க‌ளும்,த‌ந்தி,இ மெயில்க‌ளும், அனுப்பி வ‌ந்தார். 2002 வ‌ரை முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்திலிருந்து எந்த‌ ப‌திலும் இல்லை.யூஸ‌ர் சார்ஜ்:அப்போது முத‌ல்வ‌ர் அரசு நிறுவனங்களில் யூஸ‌ர் சார்ஜ் முறையை அம‌ல் ப‌டுத்தி வ‌ந்தார்.உ.ம். அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ரூ.2 செலுத்த‌வேண்டும். இதை ம‌ன‌தில் வைத்து,முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு ரூ. 10 எம்.ஓ. மூல‌ம் அனுப்பிவைத்தார். அது முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு டெலிவ‌ரியும் ஆன‌து(?).நுக‌ர்வோர் ம‌ன்ற‌ம்:முருகேச‌ன் சித்தூர் நுக‌ர்வோர் ம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்தார். இந்த‌ செய்தி தெலுங்கு தின‌ச‌ரிக‌ளில் வெளிவ‌ந்த‌தைய‌டுத்து "த‌ங்க‌ள் ஆலோச‌னைக‌ளை உரிய‌ வ‌கையில் ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்கிறோம் என்று முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம் ஒரு க‌டித‌ம் போட்டு கை க‌ழுவி கொண்ட‌து.
தற்போதைய முதல்வர்:
சிறிது காலத்திலேயே சந்திரபாபு மீது அலிப்பிரி கொலைமுயற்சி ந‌ட்ந்தது. இடைத்தேர்தல் நடந்தது. ராஜசேகர ரெட்டி முதல்வரானார். இவர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போது, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி முருகேசனின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் போட்டிருந்த‌து. இந்நிலையில் முதல்வராகிவிட்ட ஒய்.எஸ்.ஆருக்கு முருகேசன் ஃபாக்ஸ்,தபால்,கூரியர்,தந்திகள் மூலம் நினைவூட்டு கடிதங்கள் அனுப்பி வந்தார். பதில் தான் கிடைக்கவில்லை.
சாகும்வரை உண்ணாவிரதம்:
2004 அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் முருகேசன் தம் இல்லத்திலேயே சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினார்.வருவாய்த்துறை,சி.ஐ,டி அதிகாரிகள் முருகேசனை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.உண்ணாவிரதம் தொடர்ந்தது. 11 ஆம் நாள் டூ டவுன் எஸ்.ஐ வ‌ந்தார். அவரது செல் போனில் எஸ்.பி முருகேசனுடன் பேசினார். தாம் அனுப்பும் வாராந்திர அறிக்கையில் முருகேசன் உண்ணாவிரதம் குறித்தும் எழுதியுள்ளதாகவும்,முதல்வர் நிச்சயம் ரெஸ்பாண்ட் ஆவார் என்றும் உறுதி கூறினார். இதையடுத்து முருகேசன் தம் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
தகவலறியும் சட்டம்:
முருகேசன் தகவல் அறியும் சட்டப்படியாவது தமது திட்டம் குறித்த அரசின் முடிவை அறிந்து கொள்ள முயற்சி செய்தார். சட்ட நிபந்தனைப் படி மாதங்கள் வீணானதுதான் மிச்சம்.
தகவல் அறியும் சட்டப்படி தனது திட்டத்தைப் பற்றிய மாநில அரசின் கருத்தை கேட்டு மாவட்ட தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தார். பதிலில்லை. கட்டணமாக இணைக்கப் பட்டிருந்த அஞ்சலாணை மட்டும் திரும்பி வந்தது. மாநில தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தார் பதிலில்லை. மாநில தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தார் பதிலில்லை.மத்திய தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தார். பதில் கிடைத்தது. என்ன பதில் தெரியுமா?
மாநில‌ ஆணைய‌த்திற்கும்,ம‌த்திய‌ ஆணைய‌த்திற்கும் உள்ள‌ அதிகார‌ வ‌ர‌ம்பு ஒன்றே என்ப‌தால் மாநில‌ ஆணைய‌த்தின் மேல் ம‌த்திய‌ ஆணைய‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ முடியாதாம்.