Wednesday, September 26, 2007

கேதுவுக்கும்,வினாய‌க‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?


ஆந்திர பிரதேசம்,சித்தூர் மாவட்டம் ,ஐராலா மண்டலம் ,கானிப்பாக்கத்தில் ஒரு வினாயகர் கோவில். கோவில் கிணற்றில் உள்ள விக்கிரகம் சுயம்பு மூர்த்தி மட்டுமல்ல. நாளுக்கு நாள் வளர்ந்தும் வருகிறது.(எப்போதும் க‌ர்ப‌ கிருக‌த்தில் த‌ண்ணீர் தேங்கி இருக்கும்)

வேலூரை அடுத்துள்ள சித்தூரிலிருந்து 10 நிமிட பயண தூரத்தில் உள்ளதூரத்தில் உள்ள இந்த வினாயகர் கோவிலின் விசேஷம் என்னவென்றால் இங்கு பொய் சத்தியம் போட முடியாது. போட்டால் கதை காலி. போட்டாலே மட்டுமல்ல பொய் சத்தியம் போடத்தயார் என்று சவால் விட்டாலும் போதும். பார்ட்டி காலி. எங்கள் முன்னாள் முதல்வரின் சகோதரர் கூட இப்படி ஷெட் ஆனவர் தான்.

ந‌வ‌ கிர‌க‌ங்க‌ளில் கேதுவும் ஒருவ‌ர். இவ‌ருக்குரிய‌ க‌ட‌வுள் வினாய‌க‌ர்.கேதுவுக்கும்,வினாய‌க‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? கேது ச‌ந்யாச‌த்தை த‌ருப‌வ‌ர்,த‌ர்க‌ம‌ற்ற‌ த‌டைக‌ளை ஏற்ப‌டுத்துப‌வ‌ர். பிள்ளையார் த‌டைக‌ளை வில‌க்குப‌வ‌ர். பெண்டாட்டி,பிள்ளை கிடையாது (இவையில்லாத‌வ‌ர் ச‌ந்யாசி தானே.)

ஆஞ்ச‌னேய‌ர் கூட‌ பிர‌ம்ம‌ச்சாரிதான். ஆனால் அவ‌ருக்கு ராம‌னுட‌ன் ஆண்டான்/அடிமை உற‌விருந்த‌து. பிள்ளையாருக்கு அப்ப‌டி ஏதும் கிடையாது. சொந்த‌ அப்பாவின் தேர‌ச்சையே பொடி செய்த‌வ‌ர் அல்ல‌வா? (ப‌ட்ட‌ண‌ம் பொடி இல்லிங்க‌)என‌வே கேது கிர‌க‌த்தால் துன்புறுப‌வ‌ர்க‌ள் வினாய‌க‌ரை வ‌ழிப‌ட்டால் ப‌ரிகார‌ம் பெற‌லாம்.