Thursday, September 6, 2007

உங்கள் ப்ளஸ் நம் நாட்டின் எதிர்காலம்

நீங்கள் இந்த வலைப்பூவை படித்தாக வேண்டும் என்பதால் ஒவ்வொரு ராசிக்கும் பலன் சொன்னபடி நாட்டின் எதிர்காலத்தையும் பதிவு செய்கிறேன்.

1.மேஷம்: உங்களுக்கு சனி,கேது ஐந்தில் உள்ளனர். இது புத்தி,புத்திர,பூர்வ புண்யஸ்தானம்.எனவே மறதி,மந்த புத்தி,தவறான முடிவுகளால் தொல்லை ஏற்படும்.பிள்ளைகளுக்கு தொல்லை,அபார்ஷன்,குழந்தையின்மையும் ஏற்படலாம். இது மார்ச் 22 வரை அதிகமாகவும்,பிறகு குறைவாகவும் பாதிக்கும்.அக்டோபர் 28 முதல் குரு 9 க்கு வருவது மிக நல்லது. இதன் பலத்தை வைத்து 1 வருட காலம் சமாளிக்கலாம். எதற்கும் முன் நிற்காது கும்பலில் கோவிந்தா போட்டால் இன்னும் நல்லது.

இந்தியா:

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த தேதி 15/08/1947. இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 6 வரும். இதன் அதிபதி சுக்கிரன். தேதி,மாதம்,ஆண்டு எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 8 வரும். இதற்கு அதிபதி சனி.

நம் நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது 26/01/1950 . இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 8 வரும்.இதற்கு அதிபதி சனி.தேதி,மாதம்,ஆண்டு எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 6 வரும். இதற்கு அதிபதி சுக்கிரன்.

ஆக‌ எண்க‌ணித‌ப்ப‌டி ந‌ம் நாடு சுக்கிர‌ன்,ச‌னி ஆதிக்க‌த்தில் உள்ள‌து. இத‌ற்கான‌ ப‌லா ப‌ல‌ன் கள் என்ன‌? கெட்ட‌ ப‌ல‌ன் க‌ள் ஏற்ப‌ட‌ கார‌ண‌ம் என்ன‌? இத‌ற்கு ப‌ரிகார‌ம் என்ன‌? பிற‌கு பார்ப்போம்.

2.ரிஷ‌ப‌ம்:
த‌ற்போது ச‌னி,கேது 4 ல் உள்ள‌ன‌ர். இது தாய்,வீடு,வாக‌ன‌ம்,க‌ல்வி,உற‌வின‌ர் வ‌கைக‌ளில் தொல்லையை த‌ரும்.அக்டோப‌ர் 28 முத‌ல் குரு 8 க்கு வ‌ர‌வுள்ளார். இது வ‌யிறு,இத‌ய‌ம்,காது தொட‌ர்பான‌ தொல்லைக‌ளை த‌ரும். நெருங்கிய‌ உற‌வின‌ர் சாவு,பிரிவு,ப‌ண‌ ந‌ஷ்ட‌ம்,கோர்ட்டுக்கு செல்ல‌ வேண்டி வ‌ருத‌ல் போன்ற‌வையும் ந‌ட‌க்க‌லாம்.

இந்தியா:
இந்தியா ச‌னி ,சுக்கிர‌ கிர‌க‌ங்க‌ளின் ஆதிக்க‌த்தில் உள்ள‌தாய் கூறினேன். ஜோதிட‌ விதிப்ப‌டி ச‌னியும் சுக்கிர‌னும் ந‌ட்பு கிர‌க‌ங்க‌ளே. ஆன‌ல் ச‌ற்றே ஆழ‌மாக‌ யோசித்தால் இதுவே இந்தியாவின் முன்னேற்ற‌த்தை முட‌க்கியுள்ள‌து என்று ஆணித்த‌ர‌மாக‌ கூற‌லாம். கார‌ண‌ம், ச‌னி ஏழ்மை,ப‌சி,ப‌ட்டினி,தாம‌த‌ம்,கூலிக்கு மார‌டித்த‌ல்,ஏழை ம‌க்க‌ளை இம்சித்து பொருளீட்டுத‌ல்,முதிய‌வ‌ர்க‌ள் அங்க‌ஹீன‌முள்ள்வ‌ர்க‌ளை காட்டும் கிர‌க‌மாகும்.

மிதுனம்:

இது உங்களுக்கு யோக காலம். சனி 3 ல்,குரு 7 ல் வருகின்றனர். கரும்பு தின்ன கூலி கூட கிடைக்கலாம். ஆனால் ஜன்மத்தில் உள்ள செவ்வாய் உங்களை கோபக்காரராக்கி விடலாம். எச்சரிக்கை.

இந்தியா:

முட்டிவ‌லியால் அவ‌ஸ்தைப் ப‌ட்ட‌ வாஜ்பாயி,தொண்டு கிழ‌மான‌ பி.வி.ந‌ர‌சிம்ம‌ ராவ்,ஒட்டிய‌ முக‌ம் கொண்ட‌ சோனியா ,எல்லோருமே ச‌னியின் தூதுவ‌ர்க‌ள்தான். இவ‌ர்க‌ளின் தாம‌ஸ‌ புத்தியாலும்,கூலிக்கு மார‌டிக்கும் எண்ண‌த்தாலும் ஏழ்மை அதிக‌ரித்த‌து.
க‌லை உள்ள‌ம் கொண்ட‌ நேரு, இள‌மை தோற்ற‌ம் கொண்ட‌ இந்திரா,ஓவிய‌ரான‌ வி.பி.சிங் எல்லாம் சுக்கிர‌னின் தூதுவ‌ர்க‌ள் . இவ‌ர்க‌ளின் ஆட்சி ச‌னியின் த‌டைக‌ளையும் மிறி ஓர‌ள‌வேனும் ஏழை ம‌க்க‌ளின் உண‌வு,உடை,இருப்பிட‌ம் (சுக்கிர‌னின் ஆதிப‌த்ய‌ம் உள்ள‌) ஆகிய‌ விஷ‌ய‌ங்க‌ளில் அக்க‌றையுட‌ன் ந‌ட‌ந்த‌து.

4.கடகம்:

சனி கேது 2 ல் உள்ளனர். குருவும் 6 க்கு வரப் போகிறார். செவ்வயும் 12 ல் உள்ளார். இது சோதனைக் காலம். "யாகாவாரயினும் வாய் காக்க" என்ற வள்ளுவர் வாக்கை பின்பற்றுங்கள். கண்ணதாசன் சொன்ன "கோபம் பாபம் சண்டாளம்" என்ற வரியை மறந்து விடாதீர்கள்.

இந்தியா:

சுக்கிர‌ன் காத‌ல், சிற்றின்ப‌ங்க‌ளின் மீதான‌ நாட்ட‌த்தை அதிக‌ரிப்ப‌தால் தான் நேருவுக்கும், லேடி மவுண்ட் பேட்ட‌ன் இடையில் காத‌ல், இந்திராவின், ராஜீவின் காத‌ல் திரும‌ண‌ம் ஆகிய‌ன‌ ந‌ட‌ந்த‌தோடு ம‌க்க‌ள் தொகையும் பெரும‌ள‌வில் அதிக‌ரித்து வ‌ருகிற‌து. ம‌த்திய‌ அர‌சாங்க‌ முடிவுக‌ளில் பெண்ணான‌ சோனியாவின் ஆதிக்க‌ம் தொட‌ர்ந்து வ‌ருகிற‌து.
ச‌ரி இத‌ற்கு என்ன‌தான் தீர்வு?
சுக்கிர‌ன் என்றால் கூட்டுற‌வு. ச‌னி என்றால் விவ‌சாய‌ம். கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌ம் அம‌ல் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும்.அதிலும் விவ‌சாய‌ கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு ச‌ம‌மான‌ இட‌ம் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும்.மேலும் பூக்க‌ள்,ப‌ழ‌ங்க‌ள் தொட‌ர்பான‌ உற்ப‌த்தியில் க‌வ‌ன‌ம் செலுத்தினால் ச‌னி,சுக்கிர‌ தொட‌ர்பினால் ஏற்ப‌ட்ட‌ முன்னேற்ற‌ த‌டைக‌ள் வில‌கி சுக்கிர‌னின் ஆதிக்க‌த்திற்குட்ப‌ட்ட‌ உண‌வு,உடை,இருப்பிட‌ம் ஆகிய‌ன‌ எல்லோருக்கும் கிடைக்கும். அதோடு ம‌க்க‌ள் தொகை பெருக்க‌மும் க‌ட்டுப் ப‌டுத்த‌ப்ப‌டும்.இது ஜோதிட‌ ரீதியில் ம‌ட்டும் அல்ல‌ விஞ்ஞான‌ முறைப்ப‌டியும் சாத்திய‌மே. இது எப்ப‌டி ஏற்ப‌டும் என்ப‌தை பின்ன‌ர் விவ‌ரிக்கிறேன்.