தினத்தந்தியில் வெளியான 3 செ.மீ விளம்பரத்தைப் பார்த்து ஆர்வத்துடன் இந்த தமிழ் வாசம் வலைப்பூவை பார்க்கும் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தர முடிவு செய்துள்ளேன்.
ஆம்..யாரைப் பார்த்துப் பேச மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டுமோ, அந்த ஜோதிட , கட்டிடக் கலை நிபுணரைத் தங்களுக்கு அறிமுகம் செய்வதோடு அவரது அனுமதியின் பேரில் அவரது நூலை இந்த வலைப் பூவில் வைக்கிறேன்.
அவரது முழுப் பெயர் வெங்கடமுனி நாயுடு. அவர் ஏற்கெனவே கே.வி.முனி என்ற பெயரில் "கட்டிடக் கலை ஒரு அறிமுகம்" என்ற நூல் வழியாக தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவரே என்றாலும் அவரை என் வழியில் அறிமுகம் செய்கிறேன்.
சாதாரண அரைக்கை வெள்ளைச் சட்டை, நாலு முழ வேட்டி, பெண்மை மிளிரும் நடை,தயக்கம் மிகுந்த பேச்சு, அடிக்கடி கண்களை மூடிக்கொள்ளும் மேனரிசம் (இது அவரது பொறுமை பரீட்சிக்கப் படும்போது வெளிப்படுவதாய் ஒரு சம்சயம்.
எனக்கு ஜோதிடம் தெரியுமே தவிர ,நான் என்னை ஒரு ஜோதிடனாக உணர்ந்ததே இல்லை. அதனால் தான் புலமைக் காய்ச்சல் ஏதுமின்றி மற்றொரு ஜோதிடரை வாயார புகழ முடிகிறது.
ஒருமுறை மதியம் அவர் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். (அங்கு வரும் மக்களை,அவர்களது நடவடிக்கைகள்,முக பாவனைகளை அப்சர்வ் செய்வது எனக்கு மிக சுவாரஸ்யமான பொழுது போக்கு).
யாரோ, ஏதோ தங்க நகை தவறிப்போனதைப் பற்றி கேட்கிறார்கள். நாயுடு தன் முகத்தில் பிரதானமாக காட்சி அளிக்கும் மூக்கை தடவியபடி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதாவது நகை இருக்கும் இடத்தை படம் வரைந்து பாகங்கள் குறித்துக் கொண்டிருக்கிறார்.
நான் என்னாடா இது பார்ட்டி மை போட்டு பார்த்த கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறது என்று கோணலாக சிரித்துக் கொண்டது நிஜம்.
மாலை ஏதோ வேலையாய் மீண்டும் அவர் அலுவலகத்துக்கு சென்றேன். நகை காணாமல் போனது பற்றி மதியம் கேட்டுக்கொண்டிருந்தவர்களே மீண்டும் ஆஜர். நகை கைல வச்சிருக்காங்க !
இதற்கு மேல் அவரைப் பற்றி என்ன சொல்ல..?
இனி கட்டிடக் கலை பற்றிய என் கருத்து:
யுத்த கைதிகளிடமிருந்து உண்மைகளை வரவழைக்க குறுகிய கூரை,குறுகிய பரப்பளவு கொண்ட அறைகளில் அடைத்து வைப்பார்களாம். கைதிகள் ஒருசில தினங்களிலேயே உண்மையை கக்கி விடுவார்களாம்.
சில வீடுகளுக்கு சென்றால் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமா என்று தோன்றும், சில வீடுகளுக்குச் சென்றால் எப்படா வெளிய வருவோம் என்றிருக்கும்.
1997 ல் நான் ஒரு குடிசையில் குடியிருந்தேன். என் நண்பரான பால்காரர் "சுவாமி..! சர்ரியான (அச்சுப் பிழை இல்லை) இடத்தை பிடிச்சிருக்கிங்க ..பக்கத்து வீட்டுக்காரனுக்கு நீங்க கடன் கொடுக்கப் போறிங்க" என்றார்.
நான் படக்கென்று அவர் வாயை பொத்தி "பிழைப்ப கெடுத்துருவிங்க போலிருக்கே..இந்த குடிசை இருக்கிறதுஅவன் அண்ண்னோட இடம். இந்த குடிசை தம்பிக்காரன் தான் வீடுகட்டும்போது சிமெண்டு மூட்டை அடுக்க போட்ட ஷெட்..தம்பிக் காரன் தயவுல இங்க குடியிருக்கேன். ஆள விடுப்பா என்று பார்ஸல் செய்தேன்.
நம்பினால் நம்புங்கள்..இல்லாவிட்டால் உங்கள் விருப்பம். ஒரே ஆறு மாதத்தில் ப.வீ. காரனுக்கு ரூ.35,000/ கடன் கொடுத்தேன். பெரியவர்கள் இடம்,பொருள்,ஏவல் என்றார்களே..அது வாஸ்துவை பற்றித்தானோ என்னவோ!
நாம் ஏவலை நம்பி மந்திரக்காரர்களின் பின்னே சுற்றுகிறோம் . அல்லது பொருள் தேடி பாலைவனத்தில் ஒட்டக சாணி அள்ளுகிறோம்.
இது கட்டிடக்கலை (அ) வாஸ்துவின் மகிமை.(என் ஜோதிட நிபுணத்துவம் குறித்த அவர் கருத்தை பின்னொரு சமயம் பார்ப்போம்.)
அவரது முகவரி:
திரு. கே.வி.முனி, கல்லேரி கிராமம்,காந்தி நகர் அஞ்சல்,குடியாத்தம் தாலுக்கா, வட ஆற்காடு மாவட்டம், தமிழ் நாடு