Saturday, September 15, 2007

சனிப்பெயர்ச்சி -- பொதுவிதி


சனிப்பெயர்ச்சி என்றால் சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதாகும். கடந்த 2007,ஆகஸ்ட் 5 ஆம் தேதி சனி கடகத்திலிருந்து,சிம்மத்துக்கு மாறினார்.


சனி அவரவர் ராசிக்கு 3,6,10,11 ராசிகளில் இருந்தால் நன்மையை தருவார் என்பது பொதுவிதி.தற்போது சனி வந்து அமர்ந்துள்ள சிம்மம் மிதுனத்துக்கு 3 ஆமிடம். மீனத்துக்கு 6 ஆமிடம். விருச்சிகத்துக்கு 10 ஆமிடம். துலாவுக்கு 11 ஆமிடமாகும். ஆக சிம்ம சனி பொதுவிதிப்படி மிதுனம்,மீனம்,விருச்சிகம், துலா, ராசியினருக்கு நன்மை தரும் நிலயில் உள்ளார். மற்ற ராசியினருக்கு தீமை செய்யு நிலையில் உள்ளார் என்று கொள்கை அளவில்(?) கூறலாம்.


ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது இது மிக மிக தவறானதாகும்.
பொது விதி எனும்போதே சிறப்பு விதியும் இருப்பதாகத்தான் பொருள்.சிறப்பு விதியின் படி பார்க்கும் போது பலன் தலை கீழாய் மாறவும் வாய்ப்புள்ளது.
சனிப் பெயர்ச்சி பலன்கள் என்றதுமே ஒவ்வொரு ராசிக்கும் தனி தனியாக பலன் எழுதிவிடுவது தான் வழக்கமாக உள்ளது. அப்படி எழுதும்போது ஒவ்வொரு வாசகரும் 12 ல் ஒரு பாகத்தை மற்றுமே படிக்கிறார். மற்ற 11 பாகங்களை அலட்சியப்படுத்திவிடுகிறார்.


ஆகவே அனைவரும் சனி குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பொதுவில் சொல்லி விட்டு பிறகு வேண்டுமானால் ராசி வாரியாக பலன்களைப் பார்ப்போம்.