Friday, September 28, 2007

க‌லைஞ‌ரே! ப‌த‌வியை தூக்கி எறியுங்க‌ள்.

கலைஞரை யார்தான் விமர்சிப்பதென்ற விவஸ்தையே இல்லாது போய்விட்டது.பார்ப்பணீயத்தின் கொடுமைகளை அனுபவித்து மறந்தவர்கள், அல்லது அனுபவிக்காதவர்கள் வேண்டுமானால் கலைஞரை விமர்சிக்கலாம். பெரியார் வந்து இறைவன் இல்லை, இல்லவே இல்லை இறைவனை கற்பித்தவன் முட்டாள் என்று அறிவிக்காதிருந்தால் இந்து மதத்தின் சகல சாதியாரும் பார்ப்பனர்களுக்கு படியளந்த படி, அடி பணிந்தபடிதான் இன்றும் வாழ்ந்திருக்க வேண்டும். ஒரு இறைவன் பெயரால் எத்தனையோ அட்டூழியங்கள் செய்த கும்பலின் கொட்டத்தை அடக்க அந்த இறைவனே இல்லை என்பதே சரியான வியூகம் என்று பெரியாருக்கு உணர்த்தியதும் அந்த இறைவனே என்று நான் நம்புகிறேன்.

ஒரு பெரியார் மட்டும் தமிழகத்தில் தோன்றாதிருந்திருந்தால் பார்ப்பனரல்லாதோர் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பெரியாரின் வழி வந்த அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும். பார்ப்பனரை எதிர்க்க மாட்டோம் பார்ப்பனீயத்தை மட்டும்எதிர்ப்போம்,என்று இறங்கி வந்தார்.

இதன் விளைவு என்னவாயிற்று? திராவிட வரலாறு தடம் புரண்டது. எம்.ஜி.ஆர் பகிரங்கமாக மூகாம்பிகை கோவிலுக்கு போக ஆரம்பித்தார்.(கோவிலுக்குப் போவதை நான் விமர்சிக்கவில்லை, கோவிலுக்கு போனால் இறைவன் இருக்கிறானோ இல்லையோ பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்/அவர்கள் பிடியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் சிக்கிவிட்டால் கோவிந்தாதான்) அவர் வழிவந்த ஜெயலலிதா நான் பாப்பாத்தி தான் என்று சட்ட மன்றத்திலேயே அறிவித்தார்.

க‌லைஞ‌ர் மீது எத்த‌னையோ குற்ற‌ச்சாட்டுக்க‌ள் இருக்க‌லாம். இருக்கிறானோ இல்லையோ தெரியாத‌ ராம‌னுக்காக ,நம் கண் முன்னே த‌மிழுக்கு‌,த‌மிழ் ம‌க்க‌ளுக்கு, த‌மிழ் நாட்டிற்கு ,த‌மிழ் இல‌க்கிய‌த்திற்கு,திரையுல‌க‌த்திற்கு,பெரிய‌ ப‌ங்க‌ளித்த‌ அவ‌ரை நாக்கை வெட்டுவோம்,த‌லையை எடுப்போம் என்று வ‌ட‌வ‌ர் கொக்க‌ரிக்கும்போது அமைதி காக்கும் நிலைக்கு த‌மிழ‌க‌ம் வ‌ந்திருப்ப‌து ந‌ன்றி கெட்ட‌த்த‌ன‌ம்.

க‌லைஞ‌ருக்கும் இப்போது ஓர‌ள‌வு ய‌தார்த்த‌ம் தெரிய‌வ‌ந்திருக்க‌லாம். இதுவே ந‌ல்ல‌ த‌ருண‌ம். க‌லைஞ‌ரே! உட‌னே முத‌ல்வ‌ர் ப‌த‌வியை தூக்கி எறியுங்க‌ள். மிச்ச‌ம் மீதியுள்ள‌ பார்ப்ப‌ணீய‌த்தின் விஷ‌ வேர்க‌ளை கெல்லி எறியுங்க‌ள். இல்லாவிட்டால் ச‌ரித்திர‌ம் உங்க‌ளை ம‌ன்னிக்காது