Saturday, September 29, 2007

வெகுஜன பத்திரிக்கைகளின் யுகம் முடிந்துவிட்டது

வெகுஜன பத்திரிக்கைகளின் யுகம் முடிந்துவிட்டது, இதையறியாது அதன் எஜமானர்களும்,ஆசிரியர்களும் அவற்றை இழுத்து மூடாது,குறுக்கு வழிகளில் ஆதாயம் தேடி பம்மாத்து செய்து வருகிறார்கள். விஷுவல் மீடியாவுடன் போட்டியிட வேண்டும் என்ற தவிப்பில் பக்கங்களை வண்ண,வண்ண ஆபாச படங்களைக் கொண்டு நிரப்பி, கவைக்குதவாத எஃப் டி.வி கலாச்சாரத்தையும் பரப்பிவருகிறார்கள்.

ஓரளவு யோசிக்கும் திறன் படைத்த வாசகர்கள் யாவரும் வலைதளங்களுக்கு தாவி விட்ட இந்த சந்தர்ப்பத்தில் கூட மேற்படி பிரகஸ்பதிகள் யதார்த்தத்தை உணர்வதாயில்லை. அட ஆயிரம் டி.வி சேனல்கள் இருக்கட்டுமே..நீங்கள் வாசகனுக்கு உபயோகமானதை தந்தால் அவன் ஏன் வாங்கி படிக்காமலிருக்க போகிறான்.

அதைவிடுத்து அந்த காலம் மாதிரியே சூத்திரர்கள் பணத்தில் தமது ரகசிய அஜெண்டாக்களை நிறைவேற்றிக் கொள்ள பார்த்ததால் தான் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விசு, எஸ்.வி.சேகர்,சோ,சுப்ரமணியம் சுவாமி போன்ற பிராமணோத்தமர்களின் சாதனைகளை(?) அறிய இங்கே எவனும் காத்திருக்கவில்லை.

விள‌ம்ப‌ர‌ங்க‌ளின் த‌ய‌வில் கால‌ம் த‌ள்ள‌, த‌ம‌து மான‌ம்,ம‌ரியாதைக‌ளை த‌ள்ளிவைத்துவிட்டு நாக்குத் தள்ள‌ ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தைவிட‌ இழுத்து மூடுவ‌தே மேல்.

இனியாவ‌து த‌ம்மை மாற்றிக் கொண்டு வாச‌க‌ர்க‌ளுக்கும்,அவ‌ர்க‌ள‌து க‌ருத்துக்க‌ளுக்கும்,தேவைக‌ளுக்கும் ஏற்ப‌ விஷ‌ய‌தான‌ம்(?) செய்ய‌ப் பார்ப்ப‌து ந‌ல்ல‌து. இப்போதும் திருந்தாவிட்டால், காரிய‌ம் கை மீறிப் போன‌ பிற‌கு வ‌ருந்துவ‌தை த‌விர‌ வேறேதும் செய்ய‌ முடியாது