Wednesday, September 12, 2007

தெய்வீக சக்தியின் லீலை

ஒவ்வொரு உயிருக்கும் பின்னால் ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. அதை உணர்வதும்,வளர்த்துக் கொள்வதும் சிலருக்கே சாத்தியமாகிறது.அந்த சிலரில் நானும் ஒருவன் என்று மிகுந்த தயக்கங்களுக்கு பிறகு தான் சொல்ல முடிகிறது.

காரணம் சில சந்தர்ப்பங்களில் அந்த சக்தி என்னை சம்பூர்ணமாக கை விட்டுவிடுவதே. அந்த தெய்வீக சக்திக்கு சில சம்பவங்களை உதாரணம் காட்டுகிறேன்.

அசோக் என் இளைய நண்பர்களுள் ஒருவன். குடும்ப சொத்தான லாட்ஜு ஒன்றை நிர்வகித்து வருகிறான். அதில் சினிமா தியேட்டர் கவுண்டர் அளவில் ஒரு அறை உண்டு. அதில் காலாவதியான நாற்றம் பிடித்த மெத்தைகள்,தலையனைகளை போட்டு வைப்பது வழக்கம். அதில் என்னை பிராக்டீசு (ஜோதிட ஆலொசனை)செய்து கொள்ளும்படி கோரி வந்தான். நானும் ஒரு பலவீன கணத்தில் ஒப்பி ஆரம்பித்து விட்டேன்.


என் வாழ்க்கையில் தொடர்கதையான அவமானங்கள் ஆரம்பித்து விட்டன. நாம் நமக்கு கெட்டது செய்பவனுக்கு தொடர்ந்து நல்லதையே செய்துவந்தால் இறைவன் அவனுக்கு கெட்டவனாகி விடுகிறான் என்பது என் நம்பிக்கை,அனுபவம். முத்தாய்ப்பாக அவன் தந்தை அறையை காலி செய்து விடும்படி கூறிவிட்டார். அசோக்கும் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை.

ஞானிகள் நாயை போன்றவர்கள்போன்றவர்கள் என்று இன்று ஒரு தகவலில் கேட்டதாய் ஞாபகம். நாயை அடித்துக் கொண்டே இருந்தாலும் மறுபடி மறுபடி தேடி வருமாம் , ஒரேயடியாய் அடித்து விரட்டி விட்டால் மறுபடி அந்த பக்கம் திரும்பாதாம்.நான் ஞானியல்லாவிட்டாலும் ஞானியாக நடிப்பவன்.(நடிப்பும் ஒரு நாள் நிஜமாகிவிடும் வாரியார் சொன்ன சலவை தொழிலாளி கதை போல) நான் விலகி விட்டேன்.

சில தினங்களிலேயே அசோக்கின் 50 ஆயிரம் ரூபாய் வண்டியும்,அதை ஒட்டிச் சென்றவனும் காலி. இப்போதும் நான் அசோக்கையோ ,அவன் தந்தையையோ நீங்கள் வெ.பாக்கு கொடுத்து அழைத்து ,துப்பி அனுப்பியது நியாயமில்லை என்று கூறவில்லை.நியாயமா என்றும் கேட்கவில்லை.

நான் என்னவோ வாழ்வில் முதல் முறையாய் கு.பட்சம் உலகத்தின் பார்வையில் கவுரவமான வேலை பெற்று மாதம் ரூ.3000 சம்பளமும் பெற்று வாழ்ந்து கொண்டுதானிருக்கிறேன். இது தெய்வீக சக்தியின் வேலை என்று நம்புகிறேன்.

(இதில் அசோக் தந்தைக்கு ஒரு இழவும் நஷ்டமில்லை. இதிலிருந்து நான் அறிந்து கொண்ட ரகசியம் பாவம் செய்பவனை விட அதை தடுக்காதவனுக்குத் தான் உடனடி லாட்டரி போல் தண்டனை கிடைக்கும் என்பதே)

மற்றொரு சம்பவம் நேற்று நடந்தது

சத்யா என் நண்பன். நாராயணன் அவன் தம்பி. சத்யா ஊரில் இல்லை. நான் சத்யாவுக்கு போன் போட்டு காசு கடன் கேட்டேன். அவன் தம்பிக்கு போன்ல சொல்றேன் வாங்கிக்க என்றான். நாராயணன் (வேண்டுமென்றே செய்தான் என்றும் சொல்ல முடியாது) 20 நிமிடம் தாமதமாக கொடுத்தான். மதியம் இது நடந்தது,

மாலையே திருப்பதி ரயில்வே போலீசு வந்து 23 கிராம் ரிகவரி செய்து கொண்டு போனது. (பாவம் அவன் எந்த திருட்டு நகையும் வாங்கவில்லை). 45 கிராம் டிமாண்டு செய்தவர்களை 23 கிராமுக்கு ஒப்புகொள்ளச் செய்தது நான் தான். இதுவும் அந்த தெய்வீக சக்தியின் லீலை என்றே நம்புகிறேன்.