ஒவ்வொரு முறை அவள் என்னை கீழே தள்ளிய போதும்அள்ளி அணைத்து எடுத்துமிருக்கிறாள்..தன் ஆணைப்படி என் மேல் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கும் கோளுக்கு எதிராகவும் வாளெடுக்காத ஜனநாயக வாதி அவள்கோள் என்னை சிறைப்படுத்தினாலும் ஜாமீனில் தான் என்னை நழுவும் மீனாக்கி மகிழ்கிறாள் அந்த மீனாட்சியாவும் அவளாட்சியாக இருக்க என்னில் ஏது தளர்ச்சிநான் பூஜ்ஜியம் .யாவும் அவள் ராஜ்ஜியம்அம்மையவள் என்னை பொம்மையாக்கி விளையாடும்போதுசற்றே பங்கப் பட்டால் தான் என்ன? நான் பெருமைப் படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்க்கிறேன். மூன்றாம் வகுப்பு முதலே தமிழ் சங்கத்தில் பேச்சாளனாக அங்கீகாரம். 5ஆம் வகுப்பில் தமிழ் சங்க துணைத்தலைவன். 6 முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு. 8,9,10 வகுப்புகளில் ஆங்கிலம்,அறிவியல்,சமூகவியல் நோட்சுகளை டிக்டேட் செய்யும் சட்டாம்பிள்ளை உத்தியோகம். காலை 8.30 முதல் பள்ளி ஆரம்பமாகும் வரை என் ராஜ்ஜியம். ஆசிரியர்களைப் போலவே தலைமை ஆசிரியரின் அறையில் நுழைந்து சாக்பீசு எடுத்துக் கொண்டுதான் வகுப்பறைக்குள் நுழைவேன். இன்டர் இரண்டாம் ஆண்டில் பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு. தமிழ் மாணவர் சங்கத்தலைவன் என்ற முறையில் வாரியாரை கூட்டத்திற்கு அழைக்கச் சென்றது. இன்டர் இரண்டாம் ஆண்டில் கல்லூரி ஆண்டு மலரில் முதல் கவிதை பிரசுரம்.(பெண்ணையும்,நிலவையும் ஒப்பிட்டு ஒரு நாள் ஓய்வு,மூன்று நாள் ஓய்வு என்று எழுதிய வில்லங்க கவிதைங்க) டிகிரி படிக்கையிலேயே நான் எழுதிய கவிதைகளுக்கு தமிழ் விரிவுரையாளர் மணி அவர்களின் பாராட்டு. டிகிரி 3 ஆம் ஆண்டில் புதுசு,நவதா என்ற பெயரில் சிற்றிதழ்கள் பிரசுரம். |