இந்த வார கல்கியின் தலையங்கம் கூறும் பிரதான் அம்சங்கள்என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் : 1.இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்திய முஸ்லீம்கள் கண்டிப்பதில்லைஅதாவது மறைமுகமாக ஆதரிக்கிறார்கள். 2.ஐதராபாதில் உள்ள முஸ்லீம் வீடுகளில் போலீஸ் துறை தேடுதல் வேட்டை நடத்த முடியாத நிலை இருக்கிறது 3.மத்திய மாநில அரசுகள் முஸ்லீம் ஆதரவுப் போக்கை கடை பிடிக்கின்றன 4.இதனால் இந்துத்வா சக்திகளுக்கு ஆதரவு பெருகும் 5.இந்தியா இந்து நாடாக மாறும் . அப்போது முஸ்லீம்கள் இப்போதுள்ள உரிமைகள் அனைத்தையும் இழந்து விடுவார்கள். 6.இந்தியாவில் இந்துத்வ சக்திகள் பலம் பெறுவதை,இந்தியா இந்து நாடாக மாறுவதை தடுக்கவேனும் முஸ்லீம்கள் தீவிரவாதத்தை கண்டிக்க வேண்டும் கல்கிக்கு என் கேள்விகள்: 1.மனித நேயத்திற்கும்,சகோதரத்துவத்துக்கும் பெயர் பெற்ற இஸ்லாம் மார்கத்தை பின்பற்றும் எந்த முஸ்லீமும் (கவனிக்க: பாக்கிஸ்தான் முஸ்லீம் உட்பட) தீவிரவாதத்தை கண்டிக்கிறான். அந்த கண்டனம் அச்சு ஊடகத்தின் குறுகிய,வியாபார போக்கினால் வெளிச்சத்துக்கு வருவதில்லை. மானில முதல்வர்களே தங்கள் அறிக்கை முழுமையாக வெளிவராது என்ற நம்பிக்கையில்(?) அரசு செலவில் விளம்பரம் வெளியிட வேண்டியுள்ளது. அச்சில் வராததெல்லாம் சொல்லப்படவில்லை என்று நினத்துக் கொண்டால் அதற்குப் பெயர்: கிணற்றுத் தவளைத்தனம். 2.ஐதராபாதில் தேடுதல் வேட்டை நடத்தமுடியாத நிலை:நம் நாட்டில் ஜனத்தொகையில் 15 சதவீதம் உள்ள முஸ்லீம்களில் 75 சதவீதம் பேர் ஏழ்மையில் வாடுகிறார்கள். அரசன் வீட்டு முட்டை ஏழை வீட்டு அம்மி கல்லை உடைக்கும் என்பது கல்கி அறியாத ஒன்றல்ல.. போலீஸ் தேடுதல் வேட்டை நடத்த முடிவு செய்து விட்டால் சங்கர மடமும் ஒன்றுதான்,கல்கி அலுவலகமும் ஒன்றுதான். தேடுதல் வேட்டையின் உண்மை பொருள் என்ன என்பது "அவாள் ஆத்து" பெண்களுக்குத் தான் தெரியாது கல்கிக்குமா தெரியாது. தெரிந்தும் முஸ்லீம் வீடுகளில் தேடுதல் வேட்டை நடக்க வேண்டும் என்று கோருவதும், நடக்கவில்லை என்று வருந்துவதும் கல்கியின் குரூர ஆசையைத் தான் காட்டுகிறது. 3.மத்திய, மானில அரசுகள் முஸ்லீம் ஆதரவு போக்கையல்ல , நடுநிலைப் போக்கை கடை பிடித்திருந்தாலும் இது போன்ற வக்கிரம் பிடித்த,மதக் கலவரத்தை தூண்டும்,தேச ஒற்றுமையை பாதிக்கும் தலையங்கம் எழுதியதற்கு கல்கியின் ஆர்.என்.ஐ நெம்பர் பறிக்கப் பட்டிருக்கும். மத்திய ,மாநில அரசுகளின் போக்கு முஸ்லீம் ஆதரவு போக்கல்ல ..வாக்கு வங்கி அரசியல் போக்காகும். முஸ்லீம் என்பவன் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அடிமட்டத்தில்தான் இருக்கிறான். தப்பி தவறி மேல் மட்டத்திற்குள் நுழைந்து விட்டால் அவன் தான் முஸ்லீம் என்பதையே மறந்துவிட வேண்டும் . இல்லாவிட்டால் கல்தா தான். இது உண்மை நிலை. இந்திய முஸ்லீம்கள் அல்ல, அல்லாவே கண்டித்தாலும் தீவிர வாதம் நிற்கப்போவதில்லை..தேன் கூட்டை கலைத்து விட்டு "கொட்டுதே கொட்டுதே" என்று அலறி என்ன பயன். கலைஞர் சொல்லியதைப் போல் "எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்". ஏன்..அமெரிக்கா ஈராக்கிலிருந்து தன் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்று தலையங்கம் தீட்டலாமே!பொய் குற்றம் சாட்டி போர் தொடுத்து ஈராக்கை சுடுகாட்டாக்கியதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீட்டலாமே தலையங்கம். அதை விட்டு விட்டு இந்துத்வா சக்திகள் பலம் பெறுவதையும், இந்தியா இந்து நாடாக மாறுவதையும் தடுக்க கல்கி ஒன்றும் மெனக்கெட்டு உபதேசங்களை அள்ளிவிட வேண்டாம். இந்தியா புண்ணிய பூமி..சங்கர மடத்துக்கும்,சங்கர மடத்துக்கு வால் பிடிக்கும் சோம்பேறி மடத்துக்கும் வேண்டுமானால் மதங்களுக்கிடையில் வித்யாசங்கள் இருக்கலாம். இந்து ராஜ்ஜியத்துக்கு ரகசிய கனவுகள் காணும் அரிப்பு இருக்கலாம். இந்த புண்ணிய பூமியில் சூக்கும வடிவில் திரியும் புனிதர்களின் ஆன்மாக்கள் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடாக தொடர்வதைத் தான் விரும்பும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. |