ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன்?ஆம். கூரியரில் சொன்னேன். நான் சொன்னது நடந்தது. அதற்கு ராமர் கோவிலில் சுண்டல் தருவது போல் ஒரு தேங்க்ஸ் கார்டும் அம்மையாரின் விலாசத்திலிருந்து வரப்பெற்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்திற்கு பெரிய மனிதர்களின் ஆதரவை திரட்ட பார்ப்பனர்கள் பாணியில் என் ஜோதிட ஞானத்தை பயன் படுத்துவது வழக்கம். ஆனால் பப்பு வேகவில்லை.
நான் கூரியரில் சொன்ன ஜோதிடம் பலித்த கதையை சரித்திர நாயகி இதழுக்கு எழுதினேன். அதன் ஆசிரியர் வழக்கு விஷயம் என்னவாகும் என்று கணிக்கச்சொன்னார். கணித்து எழுதி கொடுத்தேன் . அது பிரசுரமுமானது. நான் எழுதியது நடக்கவும் நடந்தது. அம்மையார் பணிக்கரை நம்பினாரே தவிர " பால ஜோதிஷ்ய,வ்ருத்த வைத்ய்" என்ற சுலோகத்தை பின்பற்றவில்லை.
சந்திரபாபு மீதான கொலை முயற்சியை முன் கூட்டி கணித்து என் ஆதர்ஸ புருஷரின் மகளும்,பாபுவின் மனைவியுமான புவனேஸ்வரிக்கு கூரியர் மூலம் தெரிவித்தேன். கலைஞர் தலைமையில் மைனாரிட்டி அரசு அமையும்,ராமதாஸ் கலைஞரை தலையால் தண்ணி குடிக்க வைப்பார் என்று தினகரனுக்கு எழுதினேன். பிரசுரம் தான் ஆகவில்லை.
ஆந்திர மானில அ.இ.அ.தி.மு.க அமைப்பாளர் திரு.பக்கரின் கடிதத்தோடு லாயிட்ஸ் ரோடு அ.தி.மு.க. அலுவலகத்துக்கும் போனேன். கைப்பணம் செலவழிந்ததுதான் மிச்சம். அங்கிருந்தவர்கள் அழுத பிள்ளைக்கு வா.பழம் (கெட்ட வார்த்தை இல்லிங்க) கொடுத்தது போல் பேசினார்கள். எல்லாத்தயும் எழுதி கொடுங்க அம்மா கூப்பிடுவாங்க..சால்வை போடுவாங்க,பணம் கொடுப்பங்க என்றெல்லாம் சொன்னார்கள். அம்மா தலையில் துண்டு தான் போட்டார்கள். சரி ஒழியட்டும்..
இனி அம்மா எதிர்காலம் எப்படி? பார்ப்போம்.
அம்மா ஜாதகம்:மிதுன லக்கினம்,இரண்டில் சனி,மூன்றில் சந்திரன்,செவ்வாய்,5ல் கேது,6ல்குரு,8ல்சூரியன்,புதன், ஒன்பதில் சுக்கிரன்,பத்தில் ராகு.
அம்மா ஜாதகம்:மிதுன லக்கினம்,இரண்டில் சனி,மூன்றில் சந்திரன்,செவ்வாய்,5ல் கேது,6ல்குரு,8ல்சூரியன்,புதன், ஒன்பதில் சுக்கிரன்,பத்தில் ராகு.
முதலில் நடந்த கதையை பார்ப்போம். தன,வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானத்தில் லக்னத்துக்கு 8,9க்கு அதிபதியான சனி இருப்பதால் குடும்பம் என்பது பணால் ஆகிவிட்டது. வேலைக்கார பட்டாளம் மட்டும் உடனிருக்கிறது.(வேலைக்காரர்களுக்கு சனி காரகன்).வாக்கும் அவ்வப்போது எல்லை மீறிவிடுகிறது..(நான் பாப்ப்பாத்தி தான் )
சோதர,தைரிய ஸ்தானமான மூன்றில் சந்திரன் இருந்து கொண்டு அவ்வப்போது தைரியம், அவ்வப்போது கோழைத்தனத்தை கொடுக்கிறார். உடன் பிறவா சகோதிரியான சசிகலாவுடனான தொடர்பும் ஏற்ற இறக்கத்துடன் தான் தொடர்கிறது.
ஐந்தில் கேது காரணமாகவே வளர்ப்பு மகன்(5 ஆமிடம்) விஷயமும் இடம் பெற்றது.
(தொடரும்)