Sunday, September 30, 2007

உடலுறவும் -அதீத ஈர்ப்பும்


1.உடலுறவின் மீது மனிதனுக்கு ஏன் இத்தனை ஆர்வம். மனிதர்கள் பல்வேறு போர்வைகளில் செய்வது 2 வேலைகளைத்தான். ஒன்று சாவது, இரண்டு சாகடிப்பது . இது இரண்டுமே உடலுறவில் சாத்தியமாகிறது.

2.ஒவ்வொரு ஆண் பெண்ணிலும் பாதி ஆண், பாதி பெண் தான் உள்ளனர். இந்த பற்றாக்குறை தீருமோ என்ற நப்பாசையில் தான் பெண், ஆணை /ஆண் பெண்ணை நாடுகின்றனர்.

3.உடலுறவின் உச்சக்கட்டம் என்பது நிகழும்போது காலம் நின்று போகிறது. இது மரணத்துக்கான சேம்பிள் பேக் தான். மனிதனுக்கு துன்பத்தை தருவது நகரும் காலம் தான். காலம் நகரும் போது எல்லாம் மாறிவிடுகிறது.மாற்றம் மரணத்துக்கு ஒப்பானது.

4.ஒவ்வொரு மிஷினிலும் ஆன்,ஆப் சுவிட்ச் இருப்பது போலவே ஒவ்வொரு உயிரிலும் தன்னை காத்துக்கொள்ளும் காப்பாற்றிக்கொள்ளும் உணர்வை போலவே தன்னை தான் அழித்துக் கொள்ளும் உணர்ச்சியையும் இயற்கை ஒளித்து வைத்துள்ளது. அந்த உணர்வு உடலுறவுக்கு தூண்டுகிறது..இது உள்ளார்ந்த வகையில் பார்க்கும் போது தவணை முறையிலான தற்கொலைதான்.

அதே நேரம் தான் சாவதை (அழிவதை) எவ்வாறேனும் தடுக்கும் உணர்வும் உடலுறவில் அடங்கியுள்ளது. தன் சாயலில் மற்றொரு உயிரை படைத்தல்.
இவையெல்லாம் தத்துவ,மனோ தத்துவ காரணங்கள்.

யதார்த்தத்தில் பார்க்கும்போது மற்றொரு காரணம் உள்ளது. இந்த பகுதியை இதர வலைதள ஆசிரியர்கள் தூக்கிவிடாதிருந்தால் உங்கள் ஜாதகம் யோக ஜாதகம் தான்.

ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடும்போது யோனியினுள் ஆணுறுப்பு நுழைக்கப் பட்டபிறகு ஆணுக்கு 7 அசைவுகளில் உச்ச நிலை ஏற்பட்டு இந்திரியம் நழுவி விடுகிறது.

பெண்ணுக்கோ 23 முறைகள் அசைக்கப் பட்ட பிறகே உச்ச நிலை ஏற்படுகிறது. இது ஒவ்வொரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் அனுபவத்தில் தெரிந்தே இருக்கும்.

இதை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற கஜினி தனமான ஆசை மனிதனை மீண்டும்,மீண்டும் உடலுறவில் ஈடுபட செய்கிறது.

 மேலோட்டமாக பார்க்கும் போது பிரச்சினைகள் வெவ்வேறாக இருந்தாலும் உடலுறவிலான இந்த பிரச்சினை தான் தம்பதிகளை காவல் நிலையம்,கோர்ட்டு,தற்கொலை,கள்ளக்காதல்,ஓரின காதல்,வரதட்சினை கேட்டு மனைவியை இம்சித்தல் போன்ற நிலைகளுக்கு விரட்டுகிறது.

(உடலுறவில் திருப்தியுறாத மனைவியை கண்ணால் பார்க்காதிருக்க இது ஒரு சாக்கு)

ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன் -3


அம்மாவுக்கு தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடை பெறுகிறது. (இது குறித்து ஏற்கெனவே 2 ஆம் பாகத்தில் சொல்லியுள்ளேன். சுக்கிரன் மிதுன லக்கினத்துக்கு யோககாரகன். இவர் கோண ஸ்தானங்களில் இருந்தால் தான் நல்லது.


அம்மையாரின் ஜாதகத்தில் இவர் கேந்திரம் பெற்றுள்ளார். இவர் சுப பலன் களை தருவதாயின் அவருக்கு காலாகாலத்தில் திருமணமாகியிருக்கும்,மகாலட்சுமி போன்ற மகள் உறுதுணையாக இருந்திருப்பார். வீடுகள் ரெயிடுக்குள்ளாவது,கொடைக்கானல் குற்றச்சாட்டுக்கள், வெளிநாட்டுக் கார் அன்பளிப்பு போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.


எனவேதான் அடித்து சொல்கிறேன்.2006 மார்ச்,9 ஆம் தேதி ஆரம்பமான சுக்கிர புக்தி 2009 மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கும். மற்ற ஜோதிடர்கள் கூறுவது போல் சுக்கிரன் யோகத்தை தருவதாயிருந்தாலும் 2009 மார்ச்சுக்குள் தேர்தல் வந்தால் தானே முதல்வராகமுடியும்.


கலைஞர் ஸ்டாலினை முன்னிலைப் படுத்திவருவதற்கு கட்சி,தொண்டர்கள்,பத்திரிக்கைகள் தரப்பிலிருந்து எதிர்ப்பு ஏதுமில்லை. மேலும் ஸ்டாலினுக்கு பட்டம் கட்டுவதில் ஏனிந்த தாமதம் என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது. எனவே அம்மாவுக்கு நிராசை தான் மிஞ்சப் போகிறது.


ராசிக்கு 11 ல் ஸ்தம்பித்துள்ள செவ்வாய் பலத்தில் ஏதேனும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்க முடியும் அவ்வளவு தான். 2007,நவம்பர் 11 ல் ராசிக்கு 5ல் வ‌ர‌ உள்ள‌ குரு ,ஜ‌ன்ம‌த்தில் உள்ள‌ ச‌னி,கேதுவை மிஞ்சி என்ன‌ செய்துவிட‌முடியும்.


எது எப்ப‌டியானாலும் அம்மையார் //www.nilacharal.com//ல் வெளிவ‌ந்து கொண்டிருக்கும் என‌து ஆய்வு தொட‌ரை ப‌டித்து உரிய‌ ப‌ரிகார‌ங்க‌ள் செய்து கொண்டால், என‌து ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 அம‌ல் ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டும் என்று குர‌ல் கொடுத்தால் நாட்டில் உள்ள‌ 40 கோடி ஏழைம‌க்க‌ள், 10 கோடி வேலை‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ள், 70 கோடி விவ‌சாயிக‌ள் அம்மையாரை பிர‌த‌ம‌ராக‌வே ஆக்கிவிடுவார்க‌ள் என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.


ஜோதிட‌ப்ப‌டி ச‌னி எந்த‌ ராசியில் இருந்தாலும் 4 ராசியின‌ருக்கு அனுகூல‌ ப‌ல‌ன் க‌ளை த‌ருவார். அம்மையார் என் திட்ட‌த்துக்கு குர‌ல் கொடுத்தால் ஜ‌ன‌த்தொகையில் 12ல் 4 பாக‌ம் ம‌க்க‌ளின் கிர‌க‌ப‌ல‌ன் க‌ள் அம்மாவுக்கு கை கொடுக்கும். இது உறுதி
















Saturday, September 29, 2007

ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன்‍-2


5ல் உள்ள கேது, தனித்து நின்ற குரு அம்மையாருக்கு கெட்ட பெயரை தருவதில் நீயா நானா என்று போட்டியிடுகின்றனர். குரு 7 ல் உள்ளார். 7 என்பது கணவனை காட்டுமிடம். குரு தான் நின்ற இடத்தை நசிக்கச் செய்வார் என்பது எளிய விதி. இவர் 7,10 இடங்களுக்கு ஆதிபத்தியம் பெற்றதால் தான் அம்மையாருக்கு கோயில் குளங்கள் மீது அதீத ஈடுபாடு ஏற்பட்டு அவப்பெயரும் ஏற்பட்டது.

லக்னாதிபதியான புதன் (4க்கு அதிபதியும் இவரே/ 4 என்றால் தாய்,வீடு,வாகனம்) 9ஆமிடத்தில் 3க்கு அதிபதியான சூரியனுடன் சேர்ந்துள்ளார். இதனால்தான் அடிக்கடி முகாம் மாற்றும் பழக்கம் உள்ளது. 1+3= அலைச்சல் தான். 3 என்பது தைரியத்தை காட்டுமிடம். இதன் ஆதிபத்தியம் சூரியனுக்கு கிடைத்திருப்பதால் தான் இவரது தன்னம்பிக்கை ஓவராகி அகங்காரமாக காட்சி அளிக்கிறது.


ஒன்பது என்பது வாழ்வில் வழிகாட்டியாக அமையும் குருவைக் காட்டுமிடம். லக்கினாதிபதி புதன் இங்கு அமர்ந்ததால் இவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் வழியில் அதிகாரம் கிடைத்தது. 5,12க்கு அதிபதியான சுக்கிரன் 10ல் உச்சம் பெற்றதைத்தான் எல்லா ஜோதிடர்களும் புகழ்ந்து பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை சுக்கிரன் கேந்திரம் பெற்றதால் தான் அம்மையார் இன்று தனிமரமாக நிற்கிறார்.

ஆடம்பரம்,படாடோபம்,கிலோ கணக்கில் வெள்ளி இதற்கெல்லாம் இந்த சுக்கிரன் தான் தூண்டி விட்டார். சுக்கிரன் கிருக காரகன்,வாகன காரகன். அம்மையாருக்கு சுக்கிரன் யோகம் தருவதாயிருந்தால் ஏன் அவருக்கு வீடு,வாகனம் தொடர்பாகவே தொல்லைகள் வருகின்றன. விளக்குவார்களா ஜோதிடர்கள்?

10ல் உள்ள‌ ராகு ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பான‌வ‌ர்க‌ளின் உற‌வை த‌ருகிறார். அம்மையாருக்கு த‌ற்போது ந‌ட‌ப்ப‌து ராகு த‌சையாகும். இது 1994/8/21 அன்று துவ‌ங்கிய‌து. இத‌ன் முத‌ல் பாதி 21/8/2003 ல் முடிந்துவிட்ட‌து. 6,11 க்கு அதிப‌தியான‌ செவ்வாயின் வீட்டில் ராகு (ப‌த்தில்) நின்றுள்ளார். முத‌ல் 9 வ‌ருட‌ங்க‌ள் ஓர‌ள‌வு ந‌ல்ல‌ ப‌ல‌னை கொடுத்துவிட்ட‌ ராகு த‌ன் இர‌ண்டாம் பாதியில் எந்த‌ அள‌வு ப‌ல‌ன் கொடுப்பார் என்ப‌து ஆராய்ச்சிக்குரிய‌ கேள்வியாகும்.

கோச்சார‌ப்ப‌டி சிம்ம‌த்துக்கு 4ல் உள்ள‌ குரு கொடைக்கான‌ல் குடைச்ச‌லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஜ‌ன்ம‌த்தில் வ‌ந்த‌ ச‌னி அங்குள்ள‌ கேதுவுட‌ன் சேர்ந்து மூன்றாவ‌து அணியிலிருந்து பிரித்துவிட்டார். 2007 ந‌வ‌ம்ப‌ர் 11 க்கு 5ல் வ‌ர‌விருக்கும் குரு ஜ‌ன்ம‌ ச‌னி,ஜ‌ன்ம‌ கேதுவை மீறி என்ன‌ செய்துவிட‌ முடியும்.

அம்மையாருக்கு இப்போதுள்ள‌ ஒரே ஆறுத‌ல் மிதுன‌த்தில் ஸ்த‌ம்பித்துள்ள‌ செவ்வாய்தான். (இது ராசிக்கு 11 ஆமிட‌ம்.செவ்வாய் இங்கு 2008 ஏப்ர‌ல் வ‌ரை த‌ங்குகிறார்)

மொத்த‌த்தில் அம்மையார் இப்போதாவ‌து நிலாச்சார‌லில் வெளிவ‌ரும் என் ப‌ரிகார‌ தொட‌ரை ப‌டித்து பின்ப‌ற்றினால‌ன்றி தேறுவ‌து க‌ஷ்ட‌ம் தான். (அப்ப‌டி போடு அறுவாளை)

குறிப்பு: என் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வு த‌ர்ர‌தாயிருந்தா பார‌த‌ நாட்டின் 40 கோடி த‌ரித்திர‌ நாராய‌ண‌ர்க‌ளும் அம்மாவுக்கு க‌வ‌ச‌மாகி விடுவார்க‌ள். பிறகு நாள் என்செய்யும்? கோள் என்செய்யும்?

ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன்?-1

ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன்?ஆம். கூரியரில் சொன்னேன். நான் சொன்னது நடந்தது. அதற்கு ராமர் கோவிலில் சுண்டல் தருவது போல் ஒரு தேங்க்ஸ் கார்டும் அம்மையாரின் விலாசத்திலிருந்து வரப்பெற்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்திற்கு பெரிய மனிதர்களின் ஆதரவை திரட்ட பார்ப்பனர்கள் பாணியில் என் ஜோதிட ஞானத்தை பயன் படுத்துவது வழக்கம். ஆனால் பப்பு வேகவில்லை.

நான் கூரியரில் சொன்ன ஜோதிடம் பலித்த கதையை சரித்திர நாயகி இதழுக்கு எழுதினேன். அதன் ஆசிரியர் வழக்கு விஷயம் என்னவாகும் என்று கணிக்கச்சொன்னார். கணித்து எழுதி கொடுத்தேன் . அது பிரசுரமுமானது. நான் எழுதியது நடக்கவும் நடந்தது. அம்மையார் பணிக்கரை நம்பினாரே தவிர " பால ஜோதிஷ்ய,வ்ருத்த வைத்ய்" என்ற சுலோகத்தை பின்பற்றவில்லை.

சந்திரபாபு மீதான கொலை முயற்சியை முன் கூட்டி கணித்து என் ஆதர்ஸ புருஷரின் மகளும்,பாபுவின் மனைவியுமான புவனேஸ்வரிக்கு கூரியர் மூலம் தெரிவித்தேன். கலைஞர் தலைமையில் மைனாரிட்டி அரசு அமையும்,ராமதாஸ் கலைஞரை தலையால் தண்ணி குடிக்க வைப்பார் என்று தினகரனுக்கு எழுதினேன். பிரசுரம் தான் ஆகவில்லை.

ஆந்திர மானில அ.இ.அ.தி.மு.க அமைப்பாளர் திரு.பக்கரின் கடிதத்தோடு லாயிட்ஸ் ரோடு அ.தி.மு.க. அலுவலகத்துக்கும் போனேன். கைப்ப‌ண‌ம் செல‌வ‌ழிந்த‌துதான் மிச்ச‌ம். அங்கிருந்த‌வ‌ர்க‌ள் அழுத‌ பிள்ளைக்கு வா.ப‌ழ‌ம் (கெட்ட‌ வார்த்தை இல்லிங்க‌) கொடுத்த‌து போல் பேசினார்க‌ள். எல்லாத்த‌யும் எழுதி கொடுங்க‌ அம்மா கூப்பிடுவாங்க‌..சால்வை போடுவாங்க‌,ப‌ண‌ம் கொடுப்ப‌ங்க‌ என்றெல்லாம் சொன்னார்க‌ள். அம்மா த‌லையில் துண்டு தான் போட்டார்க‌ள். ச‌ரி ஒழிய‌ட்டும்..
இனி அம்மா எதிர்கால‌ம் எப்ப‌டி? பார்ப்போம்.
அம்மா ஜாத‌க‌ம்:மிதுன‌ ல‌க்கின‌ம்,இர‌ண்டில் ச‌னி,மூன்றில் ச‌ந்திர‌ன்,செவ்வாய்,5ல் கேது,6ல்குரு,8ல்சூரிய‌ன்,புத‌ன், ஒன்ப‌தில் சுக்கிர‌ன்,ப‌த்தில் ராகு.

முத‌லில் ந‌ட‌ந்த‌ க‌தையை பார்ப்போம். த‌ன‌,வாக்கு,குடும்ப‌ நேத்திர‌ ஸ்தான‌த்தில் ல‌க்ன‌த்துக்கு 8,9க்கு அதிப‌தியான‌ ச‌னி இருப்ப‌தால் குடும்ப‌ம் என்ப‌து ப‌ணால் ஆகிவிட்ட‌து. வேலைக்கார‌ ப‌ட்டாள‌ம் ம‌ட்டும் உட‌னிருக்கிற‌து.(வேலைக்கார‌ர்க‌ளுக்கு ச‌னி கார‌க‌ன்).வாக்கும் அவ்வ‌ப்போது எல்லை மீறிவிடுகிற‌து..(நான் பாப்ப்பாத்தி தான் )

சோத‌ர‌,தைரிய‌ ஸ்தான‌மான‌ மூன்றில் ச‌ந்திர‌ன் இருந்து கொண்டு அவ்வ‌ப்போது தைரிய‌ம், அவ்வ‌ப்போது கோழைத்த‌ன‌த்தை கொடுக்கிறார். உட‌ன் பிற‌வா ச‌கோதிரியான‌ ச‌சிக‌லாவுட‌னான‌ தொட‌ர்பும் ஏற்ற‌ இறக்க‌த்துட‌ன் தான் தொட‌ர்கிற‌து.

ஐந்தில் கேது காரணமாகவே வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன்(5 ஆமிட‌ம்) விஷ‌ய‌மும் இட‌ம் பெற்ற‌து.
(தொட‌ரும்)




























நல்லதொரு குடும்பம்


நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்றார் கவியரசு (வைரமுத்து இல்லிங்க) என் குடும்பம் மட்டும் நிச்சயமாக பல்கலைகழகம் அல்ல. என் தாத்தா ஒரு டுபாகூர் பார்ட்டி. 3 மாதத்துக்கு மேல் எந்த வியாபாரமும் செய்ததில்லை. கணேஷ் பீடி குடித்துக்கொண்டு, இட்லி சுட்டு பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருன்ந்த என் பாட்டியை மிரட்டிக் கொண்டிருந்தார்.

என் பாட்டி என் ப்ள்ளை தான் எனக்கு மட்டும் தான் என்று அராஜகம் செஇது என் அம்மாவை ஓரங்கட்டிக் கொண்டே இருந்தாள். என் அப்பா வழா வழா,கொழா கொழா சமாச்சாரம். கொள்கைகள் என்னவோ சூப்பர்தான். நியாயம், தர்மம்,கடமை உணர்ச்சி எல்லாம் ஓ.கே. ஆனால் அநியாயத்துக்கு பயந்த சுபாவம். வளைந்து கொடுக்காத காரணத்தால் கண்ட ஊருக்கும் தூக்கியடிக்கப் பட்டு, ஓட்டல் சாப்பாடு, அதிலும் ஒரு கேரியரை இரண்டு வேளைக்கு சாப்பிட்டு அல்ஸர் வாங்கிக்கொண்ட காந்தீயவாதி.

எங்களுக்கெல்லாம் (4 மகன் களுக்கு) ஜனதா புடவையில் தான் தீபாவளிக்கு சட்டை தைப்பார். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் எத்கனாவது படிக்கிறடா என்று கேட்பார். 3 மாதத்துக்கு ஒரு தரம் அவர் ஊருக்கு வரும்போது தான் எனக்கு கட்டிங்க்(முடி வெட்டுங்கோவ்) அட்டெண்டரெல்லாம் பெரிய வண்டி மெயின்டெயின் செய்யும் இந்த நாளில் மாவட்ட கருவூல அதிகாரியான என் அப்பா சைக்கிளில் சென்றார் என்றால் நம்ப முடியாது தான்.

என் சித்தப்பாக்கள் கதை வேறு விதம். பெரியவர் ஊரில் உள்ள பெண்ணையெல்லாம் பார்த்து நிராகரித்து கடைசியில் மாட்டினாரய்யா ஒரு கூனி மந்தாரையிடம்.பிள்ளைக்கு கால் ஊனம்,மகள் பிஞ்சில் பழுத்து கலப்பு திருமணம். மனைவி முன் பின் தெரியாத மிலிட்டரி ஆfஈஸர் ஒருவனை நம்பி ஏமாந்து (பணம் மட்டும் தான்) குடும்பத்தை நாசமாக்கிகொண்டிருக்க இவர் தலையனை சைஸில் தெலுங்கு நாவல்கள் படித்துக் கொண்டிருந்தார்.

ஆராய்ச்சியின் இடைக்கால முடிவு

நான் பிராமணன் அல்லன். இன்றுவரை ஜோதிடம்,வாஸ்து போன்றவைகளை ஆராய்ந்து வருகிறேன். என்னை நாடி வருவோருக்கு "இது என் ஆராய்ச்சியின் இடைக்கால முடிவு" என்று குறிப்பிட்டே ஆலோசனை வழங்குகிறேன்.
தெருக்குத்து என்ற ஒரே ஒரு அம்சத்தைப் பற்றி மட்டும் கூறி என் கருத்தை முடிக்கிறேன். தெருக்குத்து என்றால் கட்டிடத்தின் நேர் எதிரில் சாலை இருப்பதாகும். இது தீமை தரும் என்பது வாஸ்து.
ஒருவன் மற்றொருவனை கொல்ல விரட்டி வருகிறான் என்று வைய்யுங்கள். அவன் நேர் எதிரில் உள்ள நம் வீட்டுக்குள் தான் நுழைவான். அட ஒரு லாரி ப்ரேக் ஃபெயில் ஆகி அந்த சாலையில் வந்தால் அது நம் வீட்டுக்குள் தான் நுழையும்.

இந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.

ஜோதிடம் குறித்த என் கருத்துக்களை மேலும் அறிய:
www.tamilvasam.blogspot.com

வெகுஜன பத்திரிக்கைகளின் யுகம் முடிந்துவிட்டது

வெகுஜன பத்திரிக்கைகளின் யுகம் முடிந்துவிட்டது, இதையறியாது அதன் எஜமானர்களும்,ஆசிரியர்களும் அவற்றை இழுத்து மூடாது,குறுக்கு வழிகளில் ஆதாயம் தேடி பம்மாத்து செய்து வருகிறார்கள். விஷுவல் மீடியாவுடன் போட்டியிட வேண்டும் என்ற தவிப்பில் பக்கங்களை வண்ண,வண்ண ஆபாச படங்களைக் கொண்டு நிரப்பி, கவைக்குதவாத எஃப் டி.வி கலாச்சாரத்தையும் பரப்பிவருகிறார்கள்.

ஓரளவு யோசிக்கும் திறன் படைத்த வாசகர்கள் யாவரும் வலைதளங்களுக்கு தாவி விட்ட இந்த சந்தர்ப்பத்தில் கூட மேற்படி பிரகஸ்பதிகள் யதார்த்தத்தை உணர்வதாயில்லை. அட ஆயிரம் டி.வி சேனல்கள் இருக்கட்டுமே..நீங்கள் வாசகனுக்கு உபயோகமானதை தந்தால் அவன் ஏன் வாங்கி படிக்காமலிருக்க போகிறான்.

அதைவிடுத்து அந்த காலம் மாதிரியே சூத்திரர்கள் பணத்தில் தமது ரகசிய அஜெண்டாக்களை நிறைவேற்றிக் கொள்ள பார்த்ததால் தான் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விசு, எஸ்.வி.சேகர்,சோ,சுப்ரமணியம் சுவாமி போன்ற பிராமணோத்தமர்களின் சாதனைகளை(?) அறிய இங்கே எவனும் காத்திருக்கவில்லை.

விள‌ம்ப‌ர‌ங்க‌ளின் த‌ய‌வில் கால‌ம் த‌ள்ள‌, த‌ம‌து மான‌ம்,ம‌ரியாதைக‌ளை த‌ள்ளிவைத்துவிட்டு நாக்குத் தள்ள‌ ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தைவிட‌ இழுத்து மூடுவ‌தே மேல்.

இனியாவ‌து த‌ம்மை மாற்றிக் கொண்டு வாச‌க‌ர்க‌ளுக்கும்,அவ‌ர்க‌ள‌து க‌ருத்துக்க‌ளுக்கும்,தேவைக‌ளுக்கும் ஏற்ப‌ விஷ‌ய‌தான‌ம்(?) செய்ய‌ப் பார்ப்ப‌து ந‌ல்ல‌து. இப்போதும் திருந்தாவிட்டால், காரிய‌ம் கை மீறிப் போன‌ பிற‌கு வ‌ருந்துவ‌தை த‌விர‌ வேறேதும் செய்ய‌ முடியாது

துள்ளி வருகுது பிரளயம்?

ஆண்டொன்று சென்றால் வயதொன்று கூடும்..மரணம் நெருங்கி வரும். என் இறுதி சித்தாந்தம் இதுவே..இந்த உலகத்தில் எல்லாம் பொய். மரணம் ஒன்றுதான் நிஜம். மரணம் என்னை விழுங்க வருவதற்குள் நான் கண்ட நிஜத்தை நிர்பயமாக அறிவிக்க வேண்டும்.

ம‌ர‌ண‌ம் காத்திருப்ப‌தை அறியாத‌, அறிந்தும் ம‌ற‌ந்து போன‌ கார‌ண‌த்தால் தான் இந்த‌ உல‌க‌த்தில் ப‌சியும்,சுர‌ண்ட‌லும் தொட‌ர்கின்ற‌ன‌. இதோ பிர‌ள‌ய‌ம் நெருங்கி வ‌ருகிற‌து. பிர‌ள‌ய‌ம் விழுங்க‌ வ‌ருகிற‌து. இதை அறியாத‌ அமெரிக்கா இந்தியாவின் சுயாதிகார‌த்தை விழுங்க‌ வ‌ருகிற‌து. உல‌க‌ அர‌சு ஏற்ப‌டுவ‌து நிச்ச‌ய‌ம். குறை ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளால் இய‌ற்கையை வெல்ல‌ முடியாது. மனித உயிர்களை பிர‌ள‌ய‌ம் விழுங்கினாலும் ப‌ர‌வாயில்லை. இவ‌ர்க‌ளின் நிர்வாக‌ சீர்கேடுக‌ள் விழுங்க‌ப் போகின்ற‌ன‌.

பிர‌ள‌ய‌த்தின் விளைவுக‌ளை க‌ட்டுப் ப‌டுத்த:

1.அமெரிக்கா த‌ன் எதேச்ச‌திகார‌ப் போக்கை மாற்றிக் கொண்டு த‌ன்னால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ நாடுக‌ளிட‌ம் ம‌ன்னிப்பு கேட்டு , புன‌ர் நிர்மாண‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு நிதி ஒதுக்கி த‌ர‌வேண்டும்
2.சர்ச்சைக்கு இடமான நிலப்பகுதிகளை ஐ.நா வின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். தீவிரவாத அமைப்புகளிடம் ஐ.நா.பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்டவேண்டும்.
3.இந்தியா போன்ற விவசாய நாடுகள் தம் பாதுகாப்பு செலவுகளுக்கு மங்களம் பாடி நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தி கூட்டுறவுப் பண்ணை விவசாயத்தை அமல் செய்ய வேண்டும்.
4.எல்லா நாடுக‌ளிலும் எல்லா அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் இணைந்து தேசீய‌ அர‌சாங்க‌த்தை ஏற்ப‌டுத்த‌ வேண்டும்.
5.உல‌க‌ அர‌சை ஏற்ப‌டுத்தி பிர‌ம்ம‌ங்காருவின் கால‌ ஞான‌ம், நேஸ்ட்ரோடாம‌ஸின் தி செஞ்சுரீஸ், வேத‌ வியாச‌ரின் ப‌விஷ்ய‌ புராண‌ம் போன்ற‌ நூல்க‌ளை ஆய்வு செய்து பிர‌ள‌ய‌ம் ஏற்ப‌ட‌ உள்ள‌ பிர‌தேச‌ங்க‌ளை முன் கூட்டி அடையாள‌ம் க‌ண்டு ம‌க்க‌ளை அப்புற‌ப்ப‌டுத்த‌ வேண்டும்.
6.அணுச‌க்தி,அணு ஆயுத‌ங்க‌ளுக்கு ம‌ங்க‌ள‌ம் பாட‌ வேண்டும்.
7.சுற்றுபுற‌ சூழ‌ல் சீர்கேட்டை போர்கால‌ அடிப்ப‌டையில் சீர்திருத்த‌ வேண்டும்.
8.வார‌த்திற்கு ஒரு நாளை இய‌ற்கைக்கு திரும்பும் நாளாக‌ அறிவித்து எல்லா வாக‌ன‌ங்க‌ள்,தொழிற்சாலைக‌ளுக்கும் ஓய்வு அறிவிக்க‌ வேண்டும்
























Friday, September 28, 2007

பலியாடு

தாயே..நான் வித்யாசமானவன்.உன் விதியை அதன் கதியை கற்கும் மாண‌வன்இவர்கள் சாதாரண்மானவர்கள்தமக்கு எல்லாம் வேண்டும்ஆனால்அவற்றைப் பெற தாம்எதையும் இழக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பார்கள்.நான் வித்யாசமானவன்இதோ முப்பத்து முக்கோடி தெய்வங்களும் கூடிப் பேசிஎன்னை காரிருளில் ஆழ்த்தினாலும்தாமே சூரிய சந்திரர்களாகி ஒளியை உமிழும் என் கண்களைப்பார்..அவற்றிற்கு இந்த சக்தி எப்படி வந்தது தெரியுமா?அவை என் விரோதிகளுக்காகவும் கசிந்தன..குறுக்கு வழிகளை, பசப்பு வரிகளைபார்க்க மறுத்தன.அகிலத்தின்மிசை நடக்கும்சகல அநியாயங்களையும்கண்டுமூடிக்கொண்ட பலகோடி விழிகளைபின்பற்ற மறுத்தன‌.ஜீரோ வாட்ஸானாலும்,மெழுகு வ‌ர்த்தியானாலும்ந‌ள்ளிர‌வு வ‌ரை இவ்வுல‌க‌த்து ஏழ்மையையும்சுர‌ண்ட‌லையும் ஒழிக்க‌ வ‌ரைப‌ட‌ம் த‌யாரித்த‌ன‌.அத‌னாலேயே தாமே சூரிய சந்திரர்களாகிஒளியை உமிழ்கின்ற‌ன‌.இப்போது பார் என் கண்களை..ப‌றித்துக்கொள் இவ‌ற்றை!அமுத‌ம் சேவித்து உன் ர‌த்த‌த்தில் ச‌ர்க்க‌ரை அதிக‌ரித்துஉன் பார்வை ப‌ழுதுப‌ட்டு விட்ட‌தால் இவ‌ற்றை நீ பொருத்திக் கொள் என்று கூற‌மாட்டேன்.இவ‌ற்றை இழ‌க்க‌ நான் முன்வ‌ந்த‌து உன‌க்கு என் பார்வையை த‌ருவ‌த‌ற்காக‌ அ‌ல்ல‌..இழ‌ந்தால்தானே பெற‌முடியும்..நான் பெற‌விரும்புவ‌து ஒன்றே .அது மாநில‌ம் ப‌ய‌னுற‌ வாழ்த‌ல்என் மூளை, அதில் மின்னும் சிந்த‌னைக‌ளைஏதேனும் ஒரு வ‌ழியில்என் ம‌க்க‌ளுக்கு ப‌கிரும் ஒரு வ‌ழிஇவையிர‌ண்டை மீத‌ம் வைத்துநீ என்னை வ‌த‌ம் செய்தாலும் ச‌ம்ம‌த‌மே..அம்மா..நான் உன் ம‌க‌வ‌ல்லவா!உன் பிடிவாத‌த்தில் ச‌ற்றேனும் என‌க்கும் உண்ட‌ல்ல‌வா?நான் ப‌டைக்க‌ எண்ணும் புதிய‌ உல‌க‌ம்உன் பிரளய கால நிக‌ழ்ச்சி நிர‌லுட‌ன்முர‌ண்ப‌டுவ‌தால‌ல்ல‌வா?ச‌ர‌ண் புகுந்த‌ என்னை ம‌ண்ணை க‌வ்வ‌ வைக்கிறாய்.புரிகிற‌து..அத‌னால்தான் நான் க‌ட்டி எழுப்பும்ஒவ்வொரு கோட்டையும் ச‌ரிகிற‌து.ச‌ரிந்தால் என்ன‌ என் முய‌ற்சி நிற்க‌வா போகிற‌து.ப‌லி கொடுக்க‌ப் போகும் ஆட்டுக்குமாலை போடுவ‌து எம் வ‌ழ‌க்க‌ம்.அந்த‌ மாலையாக‌ வேணும்அனும‌திக்க‌க் கூடாதா நான் க‌ன‌வு காணும்ப‌சி சுர‌ண்ட‌ல‌ற்ற‌ உல‌க‌த்தை?ஓம் ச‌க்தி!

2008 ல் பிரளயம்?

பிரம்மங்காருவை தமிழ் நாட்டிற்கு பிரம்மங்காருதென்னிந்திய நாஸ்ட்ரோடாமஸ் என்று ஒரே வரியில் அறிமுகம் செய்து இந்த வலைப்பூவை சமர்ப்பிக்கிறேன்.பிரம்மங்காரு என்றால் ஆந்திரத்தில் தெரியாதவர்கள் கிடையாது. இவர் கி.பி.1900 முதல் கி.பி 2008 வரை உலகத்தில் நடக்கக் கூடிய சம்பவங்களை கால ஞானம் என்ற பெயரில் எழுதி வைத்துள்ளார். இன்றைக்கு 489 வருடங்களுக்கு முன்பு பிறந்த பிரம்மங்காரு எழுதிய எதிர்கால சம்பவங்கள் அனைத்தும் யதார்த்ததிலும் நடந்து வருகின்றன.அந்த காலத்திலேயே பெண்ணடிமை,ஜாதி மத பேதங்கள்,பிராமணர்களின் சாதி செறுக்கு,போன்றவற்றிற்கு எதிராய் போராடியவர். ஒரு முகமதியனை சீடனாக ஏற்று " பிரம்மத்துக்கு மிஞ்சிய குருவில்லை சித்தய்யாவை (முகமதிய சீடர்) மிஞ்சிய சீடனில்லை என்ற சொலவடைக்கே காரணமானர்.கலஞானத்தின் சாரம் :கி.பி.1900-முதல் 2008 க்குள் உலகத்தின் 7-இல் 6 பாகம் அழிந்து, ஒரு பாகம் மட்டுமே மிஞ்சும். அவர் தன் கணிப்புகளை தமிழ்/தெலுங்கு வருடங்களின் அடிப்படையில் எழுதியுள்ளதால் 2008-இல் வரக்கூடிய உகாதிக்குள் இது நிகழலாம் என்று தோன்றுகிறது.என் கருத்து:வெறும் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே இது பொன்ற கணிப்புகளை கூற முடியும். ஜோதிடத்தில் வெறும் 1 சதVஇதம் கூட அறியாத நனே கடக சனியால் சுனாமி ஏற்படும் என்று கணித்து துன்டு பிரசுரம் வெளியிட்டேன். (சுனாமி என்ற வார்த்தை எனக்கு அப்போது தெரியாததால் கடர்கரையில் வாழும் மக்கள் வரலாறு காணாத பாதிப்புக் குள்ளாவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்)ஈதிப்படியிருக்க மாபெரும் யோகியான பிரம்மங்காரு எதிரகால சம்பவங்களை மனிதர்களின் பெயர்கள் உட்பட எழுதிவைத்ததில் ஆச்சரியமே கிடையாது.2007,செப்டம்பர் 5 முதல் செவ்வ்வய் மிதுனத்தில் ஸ்தம்பிக்கிறார். சிம்ம சனி தன் 10 ஆம் பார்வையாக செவ்வயை பார்க்கிறார். இந்த நிலை 2008 ஏப்ரல் வரை தொடர்கிறது. கடக சனி கடற்கரையில் பாதிப்பை கொடுத்தார் என்றால், சிம்ம சனி தலைவர்களுக்கு, மலை பிரதேசங்களுக்கு பெரும் பாதிப்பை தரலம். மிதுனம் என்பது ஆண்,பெண் உறவை உடலுறவை காட்டுமிடம் இதனால் செக்ஸ் குற்றங்கள் அதிகரிக்கலம். மரணங்கள் தம்பதிகளுக்கே அதிகம் நேரலம்.(அதற்குள்ளாகவாவது என் ஆப்பரேஷன் இந்தியா அமலானால் விபச்சாரத்துக்கு சட்டப் பாதுகாப்பு கொடுத்து விடலாம்.)பாலவின் ரசிகர்களுக்குபாலவின் ரசிகர்களுக்கு இது ஒரு ஆயுதமாகிவிடப் போகிறது. ஆகா சித்தூர் முருகேசன் இரட்டை வேடம் போடுகிறார். ஒரு பக்கம் புட்டபர்த்தி சாயி பாபா,சன்கராச்சரிகளை கின்டலடித்த படி மறுபக்கம் தான் ஒரு சாமியாரை வெளிச்சம் போடுகிறார் என்றும் தம் குழுவில் கூறிக்கொள்ளலாம். வாழ்க..வளர்க. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை தூக்கி எறிந்து விட்டு, சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆளுங்கட்சி டெக்னிக் இது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. பிரம்மங்காரு பற்றி நான் கேள்விப் பட்ட விஷயங்களை வைத்தோ, படித்த விஷயங்களை வைத்தொ நான் இந்த வலைப் பூவை எழுதவில்லை என்பது வரைக்கும் சொல்லி கச்சேரி மற்றொறு சந்தர்ப்பத்தில் தொடரும் என்று சொல்லி இதனை முடிக்கிறேன்.

க‌லைஞ‌ரே! ப‌த‌வியை தூக்கி எறியுங்க‌ள்.

கலைஞரை யார்தான் விமர்சிப்பதென்ற விவஸ்தையே இல்லாது போய்விட்டது.பார்ப்பணீயத்தின் கொடுமைகளை அனுபவித்து மறந்தவர்கள், அல்லது அனுபவிக்காதவர்கள் வேண்டுமானால் கலைஞரை விமர்சிக்கலாம். பெரியார் வந்து இறைவன் இல்லை, இல்லவே இல்லை இறைவனை கற்பித்தவன் முட்டாள் என்று அறிவிக்காதிருந்தால் இந்து மதத்தின் சகல சாதியாரும் பார்ப்பனர்களுக்கு படியளந்த படி, அடி பணிந்தபடிதான் இன்றும் வாழ்ந்திருக்க வேண்டும். ஒரு இறைவன் பெயரால் எத்தனையோ அட்டூழியங்கள் செய்த கும்பலின் கொட்டத்தை அடக்க அந்த இறைவனே இல்லை என்பதே சரியான வியூகம் என்று பெரியாருக்கு உணர்த்தியதும் அந்த இறைவனே என்று நான் நம்புகிறேன்.

ஒரு பெரியார் மட்டும் தமிழகத்தில் தோன்றாதிருந்திருந்தால் பார்ப்பனரல்லாதோர் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பெரியாரின் வழி வந்த அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும். பார்ப்பனரை எதிர்க்க மாட்டோம் பார்ப்பனீயத்தை மட்டும்எதிர்ப்போம்,என்று இறங்கி வந்தார்.

இதன் விளைவு என்னவாயிற்று? திராவிட வரலாறு தடம் புரண்டது. எம்.ஜி.ஆர் பகிரங்கமாக மூகாம்பிகை கோவிலுக்கு போக ஆரம்பித்தார்.(கோவிலுக்குப் போவதை நான் விமர்சிக்கவில்லை, கோவிலுக்கு போனால் இறைவன் இருக்கிறானோ இல்லையோ பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்/அவர்கள் பிடியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் சிக்கிவிட்டால் கோவிந்தாதான்) அவர் வழிவந்த ஜெயலலிதா நான் பாப்பாத்தி தான் என்று சட்ட மன்றத்திலேயே அறிவித்தார்.

க‌லைஞ‌ர் மீது எத்த‌னையோ குற்ற‌ச்சாட்டுக்க‌ள் இருக்க‌லாம். இருக்கிறானோ இல்லையோ தெரியாத‌ ராம‌னுக்காக ,நம் கண் முன்னே த‌மிழுக்கு‌,த‌மிழ் ம‌க்க‌ளுக்கு, த‌மிழ் நாட்டிற்கு ,த‌மிழ் இல‌க்கிய‌த்திற்கு,திரையுல‌க‌த்திற்கு,பெரிய‌ ப‌ங்க‌ளித்த‌ அவ‌ரை நாக்கை வெட்டுவோம்,த‌லையை எடுப்போம் என்று வ‌ட‌வ‌ர் கொக்க‌ரிக்கும்போது அமைதி காக்கும் நிலைக்கு த‌மிழ‌க‌ம் வ‌ந்திருப்ப‌து ந‌ன்றி கெட்ட‌த்த‌ன‌ம்.

க‌லைஞ‌ருக்கும் இப்போது ஓர‌ள‌வு ய‌தார்த்த‌ம் தெரிய‌வ‌ந்திருக்க‌லாம். இதுவே ந‌ல்ல‌ த‌ருண‌ம். க‌லைஞ‌ரே! உட‌னே முத‌ல்வ‌ர் ப‌த‌வியை தூக்கி எறியுங்க‌ள். மிச்ச‌ம் மீதியுள்ள‌ பார்ப்ப‌ணீய‌த்தின் விஷ‌ வேர்க‌ளை கெல்லி எறியுங்க‌ள். இல்லாவிட்டால் ச‌ரித்திர‌ம் உங்க‌ளை ம‌ன்னிக்காது

Thursday, September 27, 2007

நிறுவனங்களுக்கு பெயர் சூட்டுதல்

நிறுவனங்களுக்கு பெயர் சூட்டுதல்முதலில் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஜாதகங்களை பார்க்க வேண்டும். அந்த நிறுவனம் செய்யவிருக்கும் தொழிலுக்கு காரக கிரகம் எது என்று பார்க்க வேண்டும். அந்த கிரகம் எந்த பங்குதாரரின் ஜாதகத்தில் சுப பலத்துடன் உள்ளது என்று பார்க்க வேண்டும்.
அந்த கிரகத்தின் தொடர்புள்ள பெயரை தேர்வு செய்து,குறிப்பிட்ட பங்குதாரருக்கு அதிர்ஷ்ட எண்ணில் அமையும்படி சீர் செய்ய வேன்டும். அந்த பெயரில் //sad,ash,loss//போன்ற அசுப வார்த்தைகள் வராது பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக "ம்" என்ற எழுத்து வருமாறு செய்ய வேண்டும். ஒரு எழுத்தோடு "ம்" சேரும்போது அது பீஜாட்சரமாகி விடுகிறது.

முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த ஜாதகத்தை லீடிங் ஜாதகமாக தேர்வு செய்தோமோ அவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். அவர் ஜாதகத்தில் சுபபலமாக உள்ள காரக கிரகத்துக்கு சம்பந்தமான எண்,திசை,தேதி,கிழமை,நட்சத்திரங்களை அறிந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Wednesday, September 26, 2007

கேதுவுக்கும்,வினாய‌க‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?


ஆந்திர பிரதேசம்,சித்தூர் மாவட்டம் ,ஐராலா மண்டலம் ,கானிப்பாக்கத்தில் ஒரு வினாயகர் கோவில். கோவில் கிணற்றில் உள்ள விக்கிரகம் சுயம்பு மூர்த்தி மட்டுமல்ல. நாளுக்கு நாள் வளர்ந்தும் வருகிறது.(எப்போதும் க‌ர்ப‌ கிருக‌த்தில் த‌ண்ணீர் தேங்கி இருக்கும்)

வேலூரை அடுத்துள்ள சித்தூரிலிருந்து 10 நிமிட பயண தூரத்தில் உள்ளதூரத்தில் உள்ள இந்த வினாயகர் கோவிலின் விசேஷம் என்னவென்றால் இங்கு பொய் சத்தியம் போட முடியாது. போட்டால் கதை காலி. போட்டாலே மட்டுமல்ல பொய் சத்தியம் போடத்தயார் என்று சவால் விட்டாலும் போதும். பார்ட்டி காலி. எங்கள் முன்னாள் முதல்வரின் சகோதரர் கூட இப்படி ஷெட் ஆனவர் தான்.

ந‌வ‌ கிர‌க‌ங்க‌ளில் கேதுவும் ஒருவ‌ர். இவ‌ருக்குரிய‌ க‌ட‌வுள் வினாய‌க‌ர்.கேதுவுக்கும்,வினாய‌க‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? கேது ச‌ந்யாச‌த்தை த‌ருப‌வ‌ர்,த‌ர்க‌ம‌ற்ற‌ த‌டைக‌ளை ஏற்ப‌டுத்துப‌வ‌ர். பிள்ளையார் த‌டைக‌ளை வில‌க்குப‌வ‌ர். பெண்டாட்டி,பிள்ளை கிடையாது (இவையில்லாத‌வ‌ர் ச‌ந்யாசி தானே.)

ஆஞ்ச‌னேய‌ர் கூட‌ பிர‌ம்ம‌ச்சாரிதான். ஆனால் அவ‌ருக்கு ராம‌னுட‌ன் ஆண்டான்/அடிமை உற‌விருந்த‌து. பிள்ளையாருக்கு அப்ப‌டி ஏதும் கிடையாது. சொந்த‌ அப்பாவின் தேர‌ச்சையே பொடி செய்த‌வ‌ர் அல்ல‌வா? (ப‌ட்ட‌ண‌ம் பொடி இல்லிங்க‌)என‌வே கேது கிர‌க‌த்தால் துன்புறுப‌வ‌ர்க‌ள் வினாய‌க‌ரை வ‌ழிப‌ட்டால் ப‌ரிகார‌ம் பெற‌லாம்.

Tuesday, September 25, 2007

அள்ளி அணைத்து எடுத்து

ஒவ்வொரு முறை அவள் என்னை கீழே தள்ளிய போதும்அள்ளி அணைத்து எடுத்துமிருக்கிறாள்..தன் ஆணைப்படி என் மேல் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கும் கோளுக்கு எதிராகவும் வாளெடுக்காத ஜனநாயக வாதி அவள்கோள் என்னை சிறைப்படுத்தினாலும் ஜாமீனில் தான் என்னை நழுவும் மீனாக்கி மகிழ்கிறாள் அந்த மீனாட்சியாவும் அவளாட்சியாக இருக்க என்னில் ஏது தளர்ச்சிநான் பூஜ்ஜியம் .யாவும் அவள் ராஜ்ஜியம்அம்மையவள் என்னை பொம்மையாக்கி விளையாடும்போதுசற்றே பங்கப் பட்டால் தான் என்ன?

நான் பெருமைப் படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்க்கிறேன். மூன்றாம் வகுப்பு முதலே தமிழ் சங்கத்தில் பேச்சாளனாக அங்கீகாரம். 5ஆம் வகுப்பில் தமிழ் சங்க துணைத்தலைவன். 6 முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு. 8,9,10 வகுப்புகளில் ஆங்கிலம்,அறிவியல்,சமூகவியல் நோட்சுகளை டிக்டேட் செய்யும் சட்டாம்பிள்ளை உத்தியோகம். காலை 8.30 முதல் பள்ளி ஆரம்பமாகும் வரை என் ராஜ்ஜியம். ஆசிரியர்களைப் போலவே தலைமை ஆசிரியரின் அறையில் நுழைந்து சாக்பீசு எடுத்துக் கொண்டுதான் வகுப்பறைக்குள் நுழைவேன். இன்டர் இரண்டாம் ஆண்டில் பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு. தமிழ் மாணவர் சங்கத்தலைவன் என்ற முறையில் வாரியாரை கூட்டத்திற்கு அழைக்கச் சென்றது. இன்டர் இரண்டாம் ஆண்டில் கல்லூரி ஆண்டு மலரில் முதல் கவிதை பிரசுரம்.(பெண்ணையும்,நிலவையும் ஒப்பிட்டு ஒரு நாள் ஓய்வு,மூன்று நாள் ஓய்வு என்று எழுதிய வில்லங்க கவிதைங்க) டிகிரி படிக்கையிலேயே நான் எழுதிய கவிதைகளுக்கு தமிழ் விரிவுரையாளர் மணி அவர்களின் பாராட்டு. டிகிரி 3 ஆம் ஆண்டில் புதுசு,நவதா என்ற பெயரில் சிற்றிதழ்கள் பிரசுரம்.

Monday, September 24, 2007

பார்ட் பார்ட்டாய் கழட்டி








அரசு இயந்திரத்தை பார்ட் பார்ட்டாய் கழட்டி கிருஷ்ணாயிலில் ஊற வைக்காது எந்த திட்டம் தீட்டினாலும் பலன் பூஜ்ஜியம்தான்.


நாட்டில் உள்ள எல்லா அரசு ஊழியர்களையும் மருத்துவ,உடல் நல,மன நல,பொருளாதார,சமூக,அரசியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த பரிசோதனையை முழுக்க முழுக்க இயந்திரங்களை கொண்டே செய்ய வேண்டும். பணியாற்ற தகுதியற்ற ஆட்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.


இளைய தலைமுறைக்கு வாய்ப்பு தரவேண்டும். இந்த பிராஸஸ் முடிவதற்குள் அரசு நிர்வாக விதிகளை எளிமைப் படுத்த வேண்டும். ரூட் லெவல் டெஸிஷனுக்கு வாய்ப்பளிக்கும் நிர்வாகம் நடக்க வழி செய்ய வேண்டும். 100 சதவீதம் கணிணிமயமாக்கி, ஒரு குக்கிராமத்தில் தலையாரிக்கு கொடுத்த மெமோவும், அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் கூட ஆன் லைனில் வைக்கப்பட வேண்டும்.


போலி கவுரவம், ஜால்ரா,கோள் சொல்லி, சாதி அபிமானம், ஊர்காரன் என்ற அபிமானம்,எதுவும் அரசு நிர்வாகத்தை சீர் குலைக்காத படி எவன்,என்று,எந்த சீட்டில் வேலை செய்வான் என்று தெரியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.


அரசு ஊழியன் கடன் வாங்கவோ,லஞ்சம் வாங்கவோ அவசியமில்லாத அளவுக்கு அரசு அவனையும், அவன் குடும்பத்தையும் தத்தெடுத்து காப்பாற்ற வேண்டும். லஞ்சம் வாங்கினான் என்று நிரூபணமானால் கருணை காட்டாது வாழ்நாள் முழுக்க சிறையில் வைக்க வேண்டும்.

தமிழ்நாடும் தமிழும் உருப்பட

கலைஞர் கண்ட கண்ட கட்சி அலுவலகத்துக்கெல்லாம் போவதைவிட தமது அருமை நண்பர் எம்.ஜி.ஆர் கண்ட அ.தி.மு.க கட்சி அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். ஜெயலலிதாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி தி.மு.க ,அதிமுக இணைப்புக்கு தாம் தயார் என்று கூறவேண்டும்.

உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகு தொண்டர்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் கட்சித்தலைவராகவும்,எம்.எல்.ஏ.க்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர் முதல்வராகவும் இருக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

அதுவரை தாம் முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சியின் தற்காலிக தலைவராக இருக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும். நிரந்தர முதல்வர் தேர்வு செய்யப்படும் வரை இருவரும் ஒப்புக் கொள்ளும் ஒருவர் முதல்வராக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜெயலலிதா திராவிட பராம்பரியத்துக்கு எதிரான அடிப்படைவாத கொள்கைகளை கை விடுவதாக அறிவிக்க வேண்டும். பொதுசெயல்திட்டம் ஒன்றை வகுத்து செயல்பட வேண்டும்.

காவிரி,சேலம் கோட்டம்,ராமர் பாலம் வெங்காயம் எதுவாக இருந்தாலும் தமிழக நலம் காக்க செயல்படவேண்டும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் திராவிட இயக்கங்கள் பிளவு பட்டிருப்பதால் கலைஞரின் நாக்கை அறுப்போம்,தலையை எடுப்போம் என்ற நிலை வந்த பிறகும் பங்காளி சண்டை தொடர்வது வெட்கக்கேடானது

உயிர் உடம்பு வளர்த்து, ஷுகர் வாங்கி,

பரசுராமன்... தாய் கற்பிழந்தாள் என்று, தந்தையின் ஆணைக்கிணங்க தாயின் தலையை வெட்டி, தந்தையின் வரத்தால் அவளை உயிர்ப்பித்த பரசுராமன் அல்ல‌ .

சர்வர் கணவனுக்குப் பெற்று, சித்தூர் மார்க்கெட் கழிவு நீர் கால்வாய் கரையில் மக்காச்சோளம் விற்று வளர்த்த அம்மாவை காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்டில் அடித்து வீழ்த்தியவன். சீட்டாட்டம்,குடி,அதற்கான பணத்துக்கு எதை வேணா விற்றல்,வைத்தல்,வேர்வை பிடிக்காது , இஸ்திரி கலையாது வாழ வேணும். இப்படியே உயிர் உடம்பு வளர்த்து, ஷுகர் வாங்கி, அவன் மாமன் பாஷையில் சொன்னால் ஆசனத்தில் சிகரட் சூடு வாங்கியவன் இந்த பரசுராமன்.

மனைவியும்,மகள்களும் ஊதுவத்தி செய்து சம்பாதித்த பணத்தில் சும்மா தின்று சுற்றிவர விரும்பாது அஞ்சறை டப்பாக்களில் இருந்து அம்பது, நூறு சுட்டு சித்தூர் வந்து மாமன் பிடியிலிருந்து தாய்வீட்டை மீட்க பாடுபட்டவன் இந்த பரசுராமன்.

பரசுவின் தாய்க்கு சொந்த தம்பி ராமலிங்கம்.காட்பாடியில் ஈ.ஓ. பரசுவின் சொந்த தங்கையைத்தான் ராமலிங்கம் கட்டினார். பரசுவின் தாய்க்கு கேன்ஸர். ரா.லி வைத்தியம் பார்த்தார். பிணத்தை எடுத்துப் போட்டார். காரியம் செய்தார். சித்தூர் வீட்டை செலவு செய்து ரிப்பேர் பார்த்து வாடகைக்கு விட்டார்.

பரசுவின் தாய் ..பெயர் தஞ்சம்மாள். அந்த அம்மாள் தன்மானம் மிக்கவர் என்று கேள்வி. தம்பி காசில் கட்டை வேவதா என்று நினத்தாரோ? மகன் வைத்து வாழமாட்டான்,பேத்திகளை ரோட்டில் தான் விடுவான் என்று பயந்தாரோ? பேத்திகளை குழந்தையில்லாத தன் தம்பியே கரையேற்றிவிடுவார் என்று விரும்பினாரோ?

சித்தூர் வீட்டை தன் தம்பி ரா.லி. மனைவி (அதாவது தன் மகள்) பெயருக்கு உயில் எழுதிவைத்து செத்தார். இந்த வீட்டில் தான் நவபாரத சிற்பியான நான் குடியுள்ளேன்.

எனக்கும் பரசுவுக்கும் 20 வயது வித்யாசம். மூஞ்சி..முகம் கூட தெரியாது..ஆனால் நாந்தான் குடியுள்ளேன்..அது எப்படி? இதை நான் விவரிக்கப் போவது சுயதம்பட்டம் அடிக்கவல்ல..

ஹ்யூமன் பிஹேவியர்,ஹ்யூமன் ஸைக்காலஜி,டைம் ஃபேக்டர் இப்படி பல சித்தாந்தங்களை இதில் சம்பவங்களினூடே விவரிக்கப் போகிறேன்.
கதை ஒரு சாக்கு ..சொல்ல வந்த விஷயம்தான் முக்கியம். என்ன நீங்க ரெடியா?















Sunday, September 23, 2007

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்


பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வ‌ழ‌ங்குவ‌தால் ஏற்ப‌ட‌க்கூடிய‌ ந‌ன்மைக‌ளை பார்ப்போம்.உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்களே வ‌ன்முறையாக‌ வெடிக்கின்ற‌ன‌. ம‌னித‌ர்க‌ள் ப‌ல்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டு வேலைக‌ளைத்தான்.1.சாத‌ல் 2.சாகசடித்த‌ல்


இவை இர‌ண்டுமே செக்ஸில் சாத்திய‌மாவ‌தால்தான் செக்ஸ் மீது ம‌னித‌ குல‌த்திற்கு இத்த‌னை ஆர்வ‌ம். செக்ஸை அடைய மனிதர்கள் எதற்கும் துணிகிறார்கள். காமாதுராணாம் ந சிக்கு ந லஜ்ஜா /ஆசை வெட்கமறிவதில்லை. மனிதனை நீ மிருகம் என்று ருசுப் படுத்துவது உயிர்பயமும்,பசியும்,செக்ஸும் தான். மனிதன் மிருகமாகிவிட்டால் அவனை சமுதாயம் கட்டுப் படுத்த முடியாது.


ம‌னித‌ருக்குள் இருப்ப‌து ஒரே ச‌க்தி. அது பாலிய‌ல் ச‌க்தி. பாலிய‌ல் ச‌க்தியே ப‌டைப்பு ச‌க்தியாக‌வும்,வ‌ன்முறையாக‌வும்,

ப‌ண‌,அதிகார‌ வெறியாக‌வும்,யோக‌ச‌க்தியாக‌வும் வெளிப்ப‌டுகிற‌து. ம‌னித‌ர்க‌ள் எது செய்தாலும் அதை தூண்டுவ‌து செக்ஸ்தான். அத‌ன் பின் இருப்ப‌து செக்ஸ்தான். ப‌ண‌ம்,புக‌ழ்,ஒழுக்க‌ம்,துற‌வு,தியாக‌ம் எத‌ன் பின்னும் இருப்ப‌து செக்ஸ்தான்.ஆணுறை க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌ இந்த‌ யுக‌த்தில் கூட இளைஞர்களும்,யுவதியரும் ம‌டிச‌ஞ்சிக‌ளாக‌ இருக்க‌ வேண்டும் என்று எதிர்ப்பார்ப்ப‌தும், ந‌ம்புவ‌தும் ப‌த்தாம்ப‌ச‌லித்த‌ன‌ம். என‌வே பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்கிவிட்டால் செக்ஸ் என்ப‌தை மிக எளிதாக மாண‌வ‌,மாண‌விய‌ர் க‌ட‌ந்துவ‌ந்துவிடுவார்க‌ள்.பெரியவர்கள் ஹிப்பாக்ர‌ட்டுக‌ளாய் வாழ்ந்து இளைய‌த‌லைமுறையை ப‌லி கொண்ட‌து போதும். இப்போதாவ‌து ய‌தார்த்த‌வாதிக‌ளாகி நேர்மையுடன் சிந்திப்போம். 40 வ‌ய‌துவ‌ரை இளைய‌ த‌லைமுறையை செக்ஸ் த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ங்க‌திக‌ளை யோசிக்க‌விடாம‌ல் செய்த‌து போதும். இனியாவ‌து புதிய‌ இளைய‌ பார‌த‌த்தை ப‌டைப்போம்

Saturday, September 22, 2007

கலைஞர் கலைஞர் தான் !


கலைஞர் கலைஞர் தான் !கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்பது போல் என்னதான் மஞ்சள் துண்டு போட்டாலும், என்.டி.ஆரே கண்டு கொள்ளாத புட்டபர்த்தி சாயிபாபாவுக்கு அதிதி பூஜை (அதாங்க ..விருந்தோம்புதல்)செய்தாலும் ராமாயணம் ஒரு கற்பனை காவியம், ராமன் ஒரு காவியத்தலைவன் என்ற தன் கருத்துக்கு இன்னும் கட்டுப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது.


அனும‌ன் ராம‌னின் க‌ணையாழியோடு, ஆகாய‌ வ‌ழிப் ப‌ய‌ண‌த்தில் உள்ளார். அப்போது அக‌ஸ்திய‌ர் அனும‌னை த‌ங்கி செல்லும்ப‌டி அழைக்கிறார். அனும‌னோ ராம‌ காரிய‌ம் என்று ம‌றுக்கிறார். அக‌ஸ்திய‌ர் அனும‌ன் கையிலிருந்த‌ க‌ணையாழியை வாங்கி த‌ம் க‌ம‌ண்ட‌ல‌த்தில் போட்டுவிட்டு "சாப்டு" போக‌ சொல்ல‌, வேறு வ‌ழியில்லாத‌ அனும‌ன் சாப்பிட்டு விட்டு க‌ணையாழியை கேட்கிறார். க‌ம‌ண்ட‌ல‌த்திலிருந்து எடுத்துக் கொள்ளும்ப‌டி கூறுகிறார் அக‌ஸ்திய‌ர்.


அனும‌ன் க‌ம‌ண்ட‌ல‌த்தில் கைவிட‌ ப‌ல்லாயிர‌ம் க‌ணையாழிக‌ள். அனும‌ன் கார‌ண‌ம் கேட்க‌..இது தொட‌ர்க‌தைய‌ப்பா..எத்த‌னை ராம‌ர்க‌ள், எத்த‌னை க‌ணையாழிக‌ள் என்று சொல்கிறார் அக‌ஸ்திய‌ர்.


இதில் இப்போது பிர‌ஸ்தாபிக்க‌ப்ப‌டும் ராம‌ர் பால‌ம் எந்த‌ ராம‌னால் எந்த‌ யுக‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌தோ..யார் அறிவார் ப‌ராப‌ர‌மே!


தெய்வ‌ம் என்றால் அது தெய்வ‌ம்/வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்ப‌து க‌ண்ண‌தாச‌ன் வாக்கு. க‌ல்லைக் க‌ண்டால் நாயைக் காணோம் க‌தை தான் இதுவும். ராம‌ன் வாழ்ந்தான் என்ப‌து நிஜ‌ம் தான். இன்றும் ராம‌னின் சூட்சும‌ வ‌டிவ‌ம் வாழ்கிறது வழி காட்டுகிறது என்ப‌தும் நிஜ‌ம்தான். அத‌ற்காக‌ க‌லைஞ‌ர் தாம் உண‌ராத‌தை, த‌ன் புல‌ன்க‌ளுக்கு த‌ட்டுப் ப‌டாத‌தை எப்ப‌டி ஏற்பார். அவ‌ர் தாம் உண‌ர்ந்த‌தை உண‌ர்ந்த‌ப‌டி பேசுகிறார். அவ‌ர் கோண‌த்தில் அவ‌ர் சொல்வ‌து நிஜ‌ம்.


நாஸ்திக‌ரான‌ க‌லைஞ‌ரே ..ம‌க்க‌ள் ந‌ல‌ம் நாடி சேது கால்வாய் திட்ட‌ அம‌லுக்கு முய‌ற்சி செய்யும்போது ஆஸ்திக‌ர்க‌ள் ம‌க்க‌ள் ந‌ல‌ம் ம‌ற‌ந்து அத‌ற்கு த‌டை போடுவ‌துதான் நாஸ்திக‌ம். ஈஸ்வ‌ரோ ம‌னுஷ்ய‌ ரூப்பேணா/ மான‌வ‌ சேவா மாத‌வ‌ சேவா / இதையெல்லாம் ம‌ற‌ந்து த‌லையெடுப்போம், நாக்கை அறுப்போம் என்று பேசும் அரை,குறைக‌ள் தான் ராம‌னை அவ‌மான‌ப்ப‌டுத்துகிறார்க‌ள்

என்னத்தை எழுத

எழுதப்பட்டதை படித்து கருத்து சொல்ல 10 பேர் கூட இல்லாத நிலையில் என்னத்தை எழுத என்ற சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இத்தனைக்கும் வாசகனுக்கு என்ன தேவை, அதை எப்படி தரவேண்டும் என்று முழுக்க அறிந்தவன் நான். வாசகனுக்கு முக்கியத்தேவை சாதல் அல்லது சாகடித்தல். அது செக்ஸில் சாத்தியம்,பணத்தால் சாத்தியம். இவை இரண்டும் கிடைக்காத போதோ முழுக்க கிடைத்துவிட்டபோதோ ஆன்மீகம் தேவை. சாதல் என்பது ஆன்மீகத்தில் தான் 100 சதவீதம் சாத்தியம். அது தியானத்தில் தான் சாத்தியம். அலகு குத்திக் கொள்ளுதல் , மண்சோறு,விரதம் எல்லாமேஅவலை நினைத்து உரலை இடித்த கதைதான். எண்ணங்களை கொல்லும்போதுதான் மனிதன் மொத்தமாக சாகிறான்.செக்ஸில் உச்சக் கட்டத்தின் போது ஒரு சில வினாடி காலம் நின்று செத்ததைப் போல் உணர்கிறான் தட்ஸ் ஆல்

ராமர் பாலம்








ராமர் பாலத்தைப் பற்றிய விவாதங்கள் இப்போதக்கு அடங்குவதாக இல்லை. பிரம்மங்காரு எழுதிய காலஞானம் நூலின் படி உலகமே ஏழில் ஆறு பாகம் அழிந்து ஒரு பாகம் தான் மிச்சமாகப் போகிறது. இதில் ராமர் பாலம் என்ன? செங்கோட்டை என்ன?


நாட்டில் பற்றியெறியும் பிரச்சினகள் பலப்பல இருக்க ராமர் பாலத்தைப் பற்றி வாய் கிழிய பேசி வருகிறார்கள். பக்தி,பூஜை,ஆன்மீகம் எல்லாம் காலைக் கடன் கழிப்பதைப் போன்றவை. இவற்றை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


தனிப்பட்ட வாழ்விலன்றி பொதுவாழ்வு,சமூக வாழ்வு என்று வரும்போது மனிதனை மய்யமாக வைத்து சிந்திக்க வேண்டும். நான் ராம பக்தன் தான். ராமன் ஒரு முறை அல்ல பல்லாயிரம் முறை பிறந்தான் வாழ்ந்தான் என்று நம்புகிறேன். அது என் தனிப் பட்ட நம்பிக்கை. நம்பிக்கைக்கு கை கால்கள் இருப்பதில்லை. கேவலம் ஒரு நம்பிக்கைக் காரணமாய் ஒரு வளர்ச்சிப் பணியை தடுப்பது முட்டாள் தனம்.


கலைஞர் மஞ்சள் துண்டு,புட்டபர்த்தி மாயைகளிலிருந்து வெளி வந்து இத்தனை தைரியமாக பேசுகிறார் என்றால் தமிழகமே சந்தோஷப் படவேண்டும்.


சிவன் சந்திரனை தலையி தரித்துள்ளார் என்பது புராணம் ரஷ்யா,அமெரிக்காகாரர்கள் சந்திரனை தம் காலால் மிதித்த போது இந்த ஆஷாடபூதிகள் எந்த மசூதியை உடைக்க போயிருந்தார்கள்? இந்து மத நம்பிக்கைகளின் படி பார்த்தால் வியாதி என்பது தெய்வ கோபத்தால் விளைவது. மருத்துவ மனைகள் அனைத்தையும் இழுத்து மூடிவிடவும் ஒரு போராட்டம் செவார்களா?

இந்து மத நம்பிக்கைப் படி பார்த்தால் விருந்தாளிக்கு மனைவியை படுக்க வைக்க வேண்டும். குழந்தை இல்லை என்றால் பிராமணர்களுக்கு கூட்டி கொடுக்க வேண்டும். என்னங்கடா தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை.
கலைஞர் அவர் தளத்தில் யோசித்து ராமன் கற்பனை என்று சொல்கிறார். சொல்லிவிட்டு போகட்டும்.


ராமன் எந்த தளத்தில் இயங்குகிறான் என்பது தெரிந்தால் ராமனுடன் இதை பற்றி பேசி சிரியுங்கள். அதை விட்டு தலைக்கு விலை வைப்பதும், நாக்கை அறுப்போம் என்பது ராமன் பாணியல்ல ..ராவணன் பாணி கூட அல்ல..




Friday, September 21, 2007

உண்மைகள் 100

1.எதுவுமே 100 சதவீதம் உண்மையுமல்ல, 100 சதவீதம் பொய்யுமல்ல. இந்த நூலின் தலைப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். உண்மைகள் 100 தானா ? இல்லை. ஆனால் இந்த நூலைப் பொறுத்தவரை 100 உண்மைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
2.ஒரு விஷயத்தை இது உண்மையாக இருக்குமோ என்ற ஆர்வத்தில் அணுகுவதை விட இது பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் அணுகி ஆராய்வது நல்லது.
3. உணர்ச்சி என்பது குருட்டுத் தனமானது. உண்மை, ஞான கண்களுக்கே கண்ணாமூச்சி காட்டும். கண்களே அற்ற உணர்ச்சி வழியே உண்மைகளை பார்ப்பதும்,கேட்பதும்,சொல்வதும் குருட்டுத் தனமாகத்தான் முடியும். (உ.ம்) ராமர் பாலம்
4.உண்மை என்பது வலியை,வேதனையை,துக்கத்தை தருவதாகும். எனவே எவரும் உண்மையை விரும்புவதில்லை. எனவேதான் உண்மைக்கு இந்த உலகத்தில் இடமில்லை. மனிதன் சுகத்தை தேடுபவன். சுகம் நம்மை பலவீனப் படுத்துகிறது. உண்மையில் சுகம் கிடைக்காது. எனவேதான் எல்லோரும் பொய்யிலேயே வாழ்ந்து முடிகிறார்கள் . எனவேதான் எல்லோரும் பலவீனர்களாக இருக்கிறார்கள்.
5.மனிதன் ஒரு மிருகம். அவனை மிருகமாக எண்ணி டீல் செய்தால் வெற்றி நிச்சயம். நம் அரசியல் சாசனம் மனிதர்களை மனிதர்களாக கருதி எழுதப்பட்டது. அதனால் தான் சுத‌ந்திர‌ம‌டைந்து அரை நூற்றாண்டு முடிந்தும் ப‌சியையும்,சுர‌ண்ட‌லையும் ஒழிக்க‌ முடிய‌வில்லை. காவ‌ல் துறை ஒரு பிர‌ச்சினையை டீல் செய்யும்போது குறைந்த‌ ப‌ட்ச‌ம் அந்த‌ நேர‌த்திற்காவ‌து வெற்றி கிடைக்கிற‌து, கார‌ண‌ம் அது ம‌னித‌ர்க‌ளை மிருக‌ங்க‌ளாக‌ க‌ருதி செய‌ல்ப‌டுகிற‌து. காவ‌ல் துறையில் உள்ள‌வ‌ர்க‌ளும் அதிக‌ ச‌த‌வீத‌ம் மிருக‌ங்க‌ளே.
6.ம‌னித‌ன் உண்மைக‌ளை பார்க்க‌ ம‌றுக்கிறான். நாம் பார்க்க‌ ம‌றுத்தாலும் உண்மை ம‌றைந்து போவ‌தில்லை. அது நெருப்பை போன்ற‌து. ம‌னித‌ உட‌ல் என்ப‌து உண்மையான‌து. அத‌ன் ப‌சி உண்மையான‌து. வ‌யிற்றுப் ப‌சி,உட‌ல் ப‌சி யாவும் உண்மையான‌வை. ம‌னித‌ன் அதை ம‌றுக்கிறான். அது அவ‌னை எரிக்கிற‌து.
7.அட‌க்கிவைக்க‌ப் பட்ட‌ செக்ஸ் உண‌ர்வுக‌ளே வ‌ன்முறையாக‌வும்,ப‌ண‌த்தின் மீது ,அதிகார‌த்தின் மீது வெறியாக‌வும் வெளிப்ப‌டுகின்ற‌ன‌. ஒரு ம‌னித‌ன் செக்ஸை ஒழுங்காக‌ அனுப‌விக்க‌ க‌ற்றுக் கொண்டால் அவ‌ன் ம‌னித‌னாகிறான். இல்லாவிடில் ம‌னித‌ வ‌டிவிலான‌ மிருக‌மாக‌ மாறுகிறான்.ம‌னித‌ வ‌டிவிலான மிருக‌ம் எப்போது வெளிப்ப‌டும் என்ப‌தை யாரும் ஊகித்து சொல்ல‌ முடியாது

Thursday, September 20, 2007

கங்கை காவிரி இணைப்புக்கு நூதன திட்டம்

ஆந்திரமானிலம், சித்தூர் மாவட்டம் , சித்தூரை சேர்ந்தவர் முருகேஷன். இவர் கங்கை காவிரி இணைப்புக்குஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் நூதன திட்டம் ஒன்றை தீட்டி, அதன் அமலுக்காக 1997 முதல் பல வகைகளில் போராடி வருகிறார். ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட‌த்தின் முக்கிய‌ அம்ச‌ங்க‌ள் வ‌ருமாறு:.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல் ,.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல், நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்,.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
லோக்சபா ஸ்பீக்கர் அலுவலகம்:முருகேசன் இந்த திட்டத்தின் 200 பிரதிகளை 11.6.1998 ஆம் தேதி, பதிவு தபால் மூலம் அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினார்.. அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினார் .பல மாதங்கள் வரை பதிலில்லை.அப்போது தம் தொகுதி எம்.பி.யான ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாக முருகேசன் ஒரு இன்லண்டு லெட்டர் எழுதினார்சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு முருகேச‌ன் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது."நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை"-என்பது அதன் சாரம். உடனே முருகேசன் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினார்.மீண்டும் சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் முருகேசனுக்கு கடிதம் போட்டனர். அதன் சாரம்:நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினார். அதற்கும் பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ச‌லாணை அனுப்பினார். நாளிதுவரை திட்ட பிரதிகள் எம்.பி.க்களுக்கு வினியோகிக்கப் படவில்லை. இன்றுவரை முருகேசன் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம்:
அப்போதைய‌ ஆந்திர‌ முத‌ல்வ‌ர் தெ.தேசம் கட்சித் தலைவரான ச‌ந்திர‌பாபு.தெ.தேச‌ம் க‌ட்சியை சேர்ந்த‌ பால‌யோகிதான் லோக்ச‌பா ச‌பாநாய‌க‌ர். என‌வே முருகேச‌ன் இது விஷ‌ய‌மாக‌ தொட‌ர்ந்து முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு கூரிய‌ர்,ப‌திவு த‌பால் மூல‌ம் க‌டித‌ங்க‌ளும்,த‌ந்தி,இ மெயில்க‌ளும், அனுப்பி வ‌ந்தார். 2002 வ‌ரை முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்திலிருந்து எந்த‌ ப‌திலும் இல்லை.யூஸ‌ர் சார்ஜ்:அப்போது முத‌ல்வ‌ர் அரசு நிறுவனங்களில் யூஸ‌ர் சார்ஜ் முறையை அம‌ல் ப‌டுத்தி வ‌ந்தார்.உ.ம். அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ரூ.2 செலுத்த‌வேண்டும். இதை ம‌ன‌தில் வைத்து,முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு ரூ. 10 எம்.ஓ. மூல‌ம் அனுப்பிவைத்தார். அது முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு டெலிவ‌ரியும் ஆன‌து(?).நுக‌ர்வோர் ம‌ன்ற‌ம்:முருகேச‌ன் சித்தூர் நுக‌ர்வோர் ம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்தார். இந்த‌ செய்தி தெலுங்கு தின‌ச‌ரிக‌ளில் வெளிவ‌ந்த‌தைய‌டுத்து "த‌ங்க‌ள் ஆலோச‌னைக‌ளை உரிய‌ வ‌கையில் ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்கிறோம் என்று முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம் ஒரு க‌டித‌ம் போட்டு கை க‌ழுவி கொண்ட‌து.
தற்போதைய முதல்வர்:
சிறிது காலத்திலேயே சந்திரபாபு மீது அலிப்பிரி கொலைமுயற்சி ந‌ட்ந்தது. இடைத்தேர்தல் நடந்தது. ராஜசேகர ரெட்டி முதல்வரானார். இவர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போது, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி முருகேசனின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் போட்டிருந்த‌து. இந்நிலையில் முதல்வராகிவிட்ட ஒய்.எஸ்.ஆருக்கு முருகேசன் ஃபாக்ஸ்,தபால்,கூரியர்,தந்திகள் மூலம் நினைவூட்டு கடிதங்கள் அனுப்பி வந்தார். பதில் தான் கிடைக்கவில்லை.
சாகும்வரை உண்ணாவிரதம்:
2004 அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் முருகேசன் தம் இல்லத்திலேயே சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினார்.வருவாய்த்துறை,சி.ஐ,டி அதிகாரிகள் முருகேசனை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.உண்ணாவிரதம் தொடர்ந்தது. 11 ஆம் நாள் டூ டவுன் எஸ்.ஐ வ‌ந்தார். அவரது செல் போனில் எஸ்.பி முருகேசனுடன் பேசினார். தாம் அனுப்பும் வாராந்திர அறிக்கையில் முருகேசன் உண்ணாவிரதம் குறித்தும் எழுதியுள்ளதாகவும்,முதல்வர் நிச்சயம் ரெஸ்பாண்ட் ஆவார் என்றும் உறுதி கூறினார். இதையடுத்து முருகேசன் தம் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
தகவலறியும் சட்டம்:
முருகேசன் தகவல் அறியும் சட்டப்படியாவது தமது திட்டம் குறித்த அரசின் முடிவை அறிந்து கொள்ள முயற்சி செய்தார். சட்ட நிபந்தனைப் படி மாதங்கள் வீணானதுதான் மிச்சம்.
தகவல் அறியும் சட்டப்படி தனது திட்டத்தைப் பற்றிய மாநில அரசின் கருத்தை கேட்டு மாவட்ட தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தார். பதிலில்லை. கட்டணமாக இணைக்கப் பட்டிருந்த அஞ்சலாணை மட்டும் திரும்பி வந்தது. மாநில தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தார் பதிலில்லை. மாநில தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தார் பதிலில்லை.மத்திய தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தார். பதில் கிடைத்தது. என்ன பதில் தெரியுமா?
மாநில‌ ஆணைய‌த்திற்கும்,ம‌த்திய‌ ஆணைய‌த்திற்கும் உள்ள‌ அதிகார‌ வ‌ர‌ம்பு ஒன்றே என்ப‌தால் மாநில‌ ஆணைய‌த்தின் மேல் ம‌த்திய‌ ஆணைய‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ முடியாதாம்.

Monday, September 17, 2007

கிரகங்களை எளிதில் புரிந்து






மனிதர்களை விட கிரகங்களை எளிதில் புரிந்து கொள்ளலாம் ..
ஆம். என் ராசி சிம்மம்.லக்னம் கடகம். இரண்டுக்கும் ராகு,கேது சரியில்லை. 16 ஆம் தேதி கானிப்பாக்கம் வினாயகர் கோவில் விளம்பரத்தை சற்றே அக்கறையுடன் டிசைன் செய்து ப்ரூஃப் பார்த்ததாலோ என்னவோ..பரிகாரமாகி இன்று மீண்டும் ஒரு புது வித்தையை அறிந்து கொண்டேன். அதாவது யூனிகோடில் தட்டியதை மைக்ரோசாஃப்ட் ஃப்ரண்ட் பேஜில் எடிட் செய்தேன்.
மொத்தத்தில் பிள்ளையார் அருள் செய்ய முடிவெடுத்து விட்டார். பெரியாரும் வினாயகரும் என்ற வலைப் பூவை உள்ளிட்ட போதே வேலை துவங்கி விட்டது போலும். பிறகு ஒருதரம் வெட்டியாய் கானிப்பாக்கம் போய்வந்தேன் (மனைவியுடன்)/மறுநாள் விளம்பர மேலாளர் வரும் நிலையில் குற்ற உணர்ச்சி காரணமாய் போனேன்.(கடமை உணர்ச்சி என்றும் கூறலாம்.)
நள்ளிரவு மயூரி நெட்டில் தாமு சதுர்த்தி வாழ்த்து டிசைன் செய்யும்போது டெக்னிகலாய் உதவினேன். கையில் ரூ.3,000 இருந்தும் கடமை முக்கியம் என்று தந்தி விளம்பரத்துக்காய் மனைவியை அனுப்பினேன். குருட்டு நாய்க்கு ஏதோ அகப்பட்டது போல் ரிலீஸ் ஆர்டர் வாங்கி வந்துவிட்டாள். இன்று மூல நட்சத்திரம். நாறியிருக்க வேண்டும்..பிள்ளையாருக்கு சேவை செய்த காரணத்தால் தப்பி பிழைத்தேன்.
ஓம் க‌ம் க‌ணப்தே ந‌ம‌ஹ‌!

Sunday, September 16, 2007

சனிக்கு கடவுள் கொடுத்துள்ள போர்ட் ஃபோலியோ


க‌டவுள் ஒரு பிரதமர் தமது மந்திரிகளுக்கு துறைகளை பிரித்து தருவது போல் உலகப் பொருட்கள் மீதான அதிகாரத்தை நவகிரகங்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார். (ஒரு பேச்சுக்கு நவகிரகங்கள் என்கிறோமே தவிர கிரகங்கள் 7 தான். ராகு,கேது கிரகத்தில் சேர்த்தியில்லை)


தமது ஒன்பது மந்திரிகளில் ஒருவரான சனிக்கு கடவுள் கொடுத்துள்ள போர்ட் ஃபோலியோவை பார்ப்போம்.


( ஏன் என்றால் சனி என்ற மந்திரி தங்களுக்கு வேண்டப் பட்டவராக மாறும்போது தம் துறைகளில் தானே உங்களுக்கு உதவ முடியும்)
சனி மனித உடலில் கால்கள்,நரம்பு,ஆசன துவாரங்களுக்கு அதிபராவார். (சனி பிடித்தால்/பிடிப்பதற்கு 6 மாதம் முன்பாகவே மலச்சிக்கல் ஆரம்பித்து விடுவது இதனால் தான் போலும்)


கருங்கல்,கிரானைட் தொழில், விவசாயம்,எருமைகள், எண்ணை வித்துக்கள்,கருப்பான பொருட்கள், கை,உடல்,துணிகளை அழுக்காக்கும் பொருட்கள்,தூசு , துர்நாற்றம் கிளப்பும் பொருட்கள்,செகண்ட் ஹேண்ட் பொருட்கள்.உடைந்த,குறையுள்ள பொருட்கள், செகண்ட் குவாலிடி பொருட்கள்,முதுமை, வெள்ளை முடி, வளைந்த முதுகு,முகத்தில் சுருக்கம், முடி உதிர்தல், முகத்தில் எண்ணை வடிதல்,எதிர்ப்பாலினரால் தொல்லை,அடிமைத்தொழில்,கிழிந்த ஆடைகள் அணிந்தவர்கள்,யூனிஃபார்ம் அணிந்த உத்யோகஸ்தர்கள், மரணம் தொடர்பான தொழில்கள்( காப்பீடு,அமரர் ஊர்தி) ,சிறைப்படுதல்,அவமானம்,தாமதம்,பி.சி,எஸ்.சி வகுப்பினர் இவற்றிற்கெல்லாம் சனியே அதிபதி.


பிறரை துன்புறுத்தி லாபம் பார்க்கும் தொழில்களும் சனி ஆதிக்கத்தின் கீழ் வருகின்றன.

Saturday, September 15, 2007

சுவாமி நித்யானந்தா


சுவாமி நித்யானந்தா கருப்போ சிவப்போ யான் அறியேன். எனக்கு தமிழ் அச்சு ஊடகத்தின் மீதான நம்பிக்கை நசிந்து பல காலமாயிற்று. இருந்தாலும் தமிழகத்தின் பிரபல வார இதழ்களில் ஒன்று மேற்படி சாமியாரின் உபதேச தொடரை வெளியிடுகிறது..மற்றொரு இதழோ அவர் திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புக்கு முயன்றதாக புலனாய்வு கட்டுரை வெளியிடுகிறது.



தமிழன் பற்றிய இந்த பத்திரிக்கைகளின் அபிப்ராயம் தான் என்ன? சாமியாரின் உபதேச தொடரை வெளியிடும் பத்திரிக்கையில் ஆக்கிரமிப்பு குறித்த வாசனை கூட இல்லை. பத்திரிக்கை தர்மத்தை கடைபிடிக்காத காரணத்தால் தமிழ் பத்திரிக்கை உலகம் நாறிப்போய் கிடப்பது நிஜம் தான் . அதற்காக இப்படியா?


என் கேள்வி:
சாமியாரின் உபதேச தொடர் ஸ்பான்சர்டு ஃபீச்சரா? அல்லது கேட்டு பிரசுரிக்கும் விஷயமா? ஸ்பான்சர்டு ஃபீச்சர் என்னும் பட்சத்தில் அது கிடைக்காத எரிச்சலில் தான் மற்றொரு பத்திரிக்கை ஆக்கிரமிப்பு விஷயத்தை கையில் எடுத்ததா? ஸ்பான்சர்டு ஃபீச்சர் என்பதால் தான் ஆக்கிரமிப்பு படலத்தை கண்டும் காணாது உபதேச தொடர் தொடர்கிறதா?கேட்டு பிரசுரிக்கும் விஷயம் என்றால் ஒரு ஆக்கிரமிப்பாளரின் தொடரை , அவர் ஆக்கிரமிப்பாளர் என்ற குற்றச்சாட்டுகள் வெளிவந்த பிறகும் தொடர வேண்டுமா?


என்னங்கடா இது தமிழ் பத்திரிக்கை இயலுக்கு வந்த சோதனை?

சனிப்பெயர்ச்சி -- பொதுவிதி


சனிப்பெயர்ச்சி என்றால் சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதாகும். கடந்த 2007,ஆகஸ்ட் 5 ஆம் தேதி சனி கடகத்திலிருந்து,சிம்மத்துக்கு மாறினார்.


சனி அவரவர் ராசிக்கு 3,6,10,11 ராசிகளில் இருந்தால் நன்மையை தருவார் என்பது பொதுவிதி.தற்போது சனி வந்து அமர்ந்துள்ள சிம்மம் மிதுனத்துக்கு 3 ஆமிடம். மீனத்துக்கு 6 ஆமிடம். விருச்சிகத்துக்கு 10 ஆமிடம். துலாவுக்கு 11 ஆமிடமாகும். ஆக சிம்ம சனி பொதுவிதிப்படி மிதுனம்,மீனம்,விருச்சிகம், துலா, ராசியினருக்கு நன்மை தரும் நிலயில் உள்ளார். மற்ற ராசியினருக்கு தீமை செய்யு நிலையில் உள்ளார் என்று கொள்கை அளவில்(?) கூறலாம்.


ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது இது மிக மிக தவறானதாகும்.
பொது விதி எனும்போதே சிறப்பு விதியும் இருப்பதாகத்தான் பொருள்.சிறப்பு விதியின் படி பார்க்கும் போது பலன் தலை கீழாய் மாறவும் வாய்ப்புள்ளது.
சனிப் பெயர்ச்சி பலன்கள் என்றதுமே ஒவ்வொரு ராசிக்கும் தனி தனியாக பலன் எழுதிவிடுவது தான் வழக்கமாக உள்ளது. அப்படி எழுதும்போது ஒவ்வொரு வாசகரும் 12 ல் ஒரு பாகத்தை மற்றுமே படிக்கிறார். மற்ற 11 பாகங்களை அலட்சியப்படுத்திவிடுகிறார்.


ஆகவே அனைவரும் சனி குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பொதுவில் சொல்லி விட்டு பிறகு வேண்டுமானால் ராசி வாரியாக பலன்களைப் பார்ப்போம்.
































Friday, September 14, 2007

கட்டிடக் கலை


தினத்தந்தியில் வெளியான 3 செ.மீ விளம்பரத்தைப் பார்த்து ஆர்வத்துடன் இந்த தமிழ் வாசம் வலைப்பூவை பார்க்கும் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தர முடிவு செய்துள்ளேன்.
ஆம்..யாரைப் பார்த்துப் பேச மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டுமோ, அந்த ஜோதிட , கட்டிடக் கலை நிபுணரைத் தங்களுக்கு அறிமுகம் செய்வதோடு அவரது அனுமதியின் பேரில் அவரது நூலை இந்த வலைப் பூவில் வைக்கிறேன்.
அவரது முழுப் பெயர் வெங்கடமுனி நாயுடு. அவர் ஏற்கெனவே கே.வி.முனி என்ற பெயரில் "கட்டிடக் கலை ஒரு அறிமுகம்" என்ற நூல் வழியாக தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவரே என்றாலும் அவரை என் வழியில் அறிமுகம் செய்கிறேன்.
சாதாரண அரைக்கை வெள்ளைச் சட்டை, நாலு முழ வேட்டி, பெண்மை மிளிரும் நடை,தயக்கம் மிகுந்த பேச்சு, அடிக்கடி கண்களை மூடிக்கொள்ளும் மேனரிசம் (இது அவரது பொறுமை பரீட்சிக்கப் படும்போது வெளிப்படுவதாய் ஒரு சம்சயம்.
எனக்கு ஜோதிடம் தெரியுமே தவிர ,நான் என்னை ஒரு ஜோதிடனாக உணர்ந்ததே இல்லை. அதனால் தான் புலமைக் காய்ச்சல் ஏதுமின்றி மற்றொரு ஜோதிடரை வாயார புகழ முடிகிறது.
ஒருமுறை மதியம் அவர் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். (அங்கு வரும் மக்களை,அவர்களது நடவடிக்கைகள்,முக பாவனைகளை அப்சர்வ் செய்வது எனக்கு மிக சுவாரஸ்யமான பொழுது போக்கு).
யாரோ, ஏதோ தங்க நகை தவறிப்போனதைப் பற்றி கேட்கிறார்கள். நாயுடு தன் முகத்தில் பிரதானமாக காட்சி அளிக்கும் மூக்கை தடவியபடி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதாவது நகை இருக்கும் இடத்தை படம் வரைந்து பாகங்கள் குறித்துக் கொண்டிருக்கிறார்.
நான் என்னாடா இது பார்ட்டி மை போட்டு பார்த்த கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறது என்று கோணலாக சிரித்துக் கொண்டது நிஜம்.
மாலை ஏதோ வேலையாய் மீண்டும் அவர் அலுவலகத்துக்கு சென்றேன். நகை காணாமல் போனது பற்றி மதியம் கேட்டுக்கொண்டிருந்தவர்களே மீண்டும் ஆஜர். நகை கைல வச்சிருக்காங்க !
இதற்கு மேல் அவரைப் பற்றி என்ன சொல்ல..?

இனி க‌ட்டிட‌க் க‌லை ப‌ற்றிய‌ என் க‌ருத்து:
யுத்த‌ கைதிக‌ளிட‌மிருந்து உண்மைக‌ளை வ‌ர‌வ‌ழைக்க‌ குறுகிய கூரை,குறுகிய பரப்பளவு கொண்ட‌‌ அறைக‌ளில் அடைத்து வைப்பார்க‌ளாம். கைதிக‌ள் ஒருசில‌ தின‌ங்க‌ளிலேயே உண்மையை க‌க்கி விடுவார்க‌ளாம்.
சில‌ வீடுக‌ளுக்கு சென்றால் இன்னும் கொஞ்ச‌ நேர‌ம் இருக்க‌லாமா என்று தோன்றும், சில‌ வீடுக‌ளுக்குச் சென்றால் எப்ப‌டா வெளிய‌ வ‌ருவோம் என்றிருக்கும்.

1997 ல் நான் ஒரு குடிசையில் குடியிருந்தேன். என் ந‌ண்ப‌ரான‌ பால்கார‌ர் "சுவாமி..! ச‌ர்ரியான‌ (அச்சுப் பிழை இல்லை) இட‌த்தை பிடிச்சிருக்கிங்க‌ ..ப‌க்க‌த்து வீட்டுக்கார‌னுக்கு நீங்க‌ க‌ட‌ன் கொடுக்க‌ப் போறிங்க" என்றார்.
நான் ப‌ட‌க்கென்று அவ‌ர் வாயை பொத்தி "பிழைப்ப‌ கெடுத்துருவிங்க‌ போலிருக்கே..இந்த குடிசை இருக்கிறதுஅவன் அண்ண்னோட‌ இட‌ம். இந்த‌ குடிசை த‌ம்பிக்கார‌ன் தான் வீடுக‌ட்டும்போது சிமெண்டு மூட்டை அடுக்க‌ போட்ட‌ ஷெட்..த‌ம்பிக் கார‌ன் த‌ய‌வுல‌ இங்க‌ குடியிருக்கேன். ஆள‌ விடுப்பா என்று பார்ஸ‌ல் செய்தேன்.

ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள்..இல்லாவிட்டால் உங்க‌ள் விருப்பம். ஒரே ஆறு மாத‌த்தில் ப‌.வீ. கார‌னுக்கு ரூ.35,000/ க‌ட‌ன் கொடுத்தேன். பெரிய‌வ‌ர்க‌ள் இட‌ம்,பொருள்,ஏவ‌ல் என்றார்க‌ளே..அது வாஸ்துவை ப‌ற்றித்தானோ என்ன‌வோ!

நாம் ஏவ‌லை ந‌ம்பி ம‌ந்திர‌க்கார‌ர்க‌ளின் பின்னே சுற்றுகிறோம் . அல்ல‌து பொருள் தேடி பாலைவ‌ன‌த்தில் ஒட்ட‌க‌ சாணி அள்ளுகிறோம்.
இது க‌ட்டிட‌க்க‌லை (அ) வாஸ்துவின் ம‌கிமை.(என் ஜோதிட நிபுணத்துவம் குறித்த அவர் கருத்தை பின்னொரு சமயம் பார்ப்போம்.)
அவ‌ர‌து முக‌வ‌ரி:
திரு. கே.வி.முனி, க‌ல்லேரி கிராம‌ம்,காந்தி ந‌க‌ர் அஞ்ச‌ல்,குடியாத்த‌ம் தாலுக்கா, வ‌ட‌ ஆற்காடு மாவ‌ட்ட‌ம், த‌மிழ் நாடு

குரு,சனி பெயர்ச்சி பலன் (மேஷ‌ம் முத‌ல் மீன‌ம் வ‌ரை உள்ள‌ 12 ராசிக‌ளுக்கும்)


தங்கள் ராசிக்கான குரு,சனி பெயர்ச்சி பலனை அறிந்து கொள்ள இந்த தமிழ் வாசம் வலைப் பூவில் லாக் இன் செய்த உங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி.

குரு,சனி பெயர்ச்சி பலன் எல்லாம் ஜோதிடவியலில் ஏ,பி,சி,டி மாதிரி. ஜாதகம் இல்லாதவர்கள் இந்த ராசி பலன் பார்த்துக் கொண்டாலும் அதை புரிந்து கொள்ளலாம். ஜாதகம் உள்ளவர்களும் தேடி,தேடி படிப்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரே ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு குரு, சனி பெயர்ச்சி பலன் பற்றி பார்க்கலாம்.நீங்கள் உங்களுக்கு ஜாதகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி..உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நன்மை செய்யும் நிலையில் உள்ளனவா? தீமை செய்யும் நிலையில் உள்ளனவா? என்பதை தெரிந்து கொண்டு தீமை செய்யும் நிலையில் உள்ள கிரகங்களின் தீமை குறைய பரிகாரங்கள் செய்துகொண்டால்தான் இந்த ராசி,குரு,சனி பெயர்ச்சி பலன் களில் கூறியுள்ள பலன் களை முழுமையாக அடைய முடியும்.

இதற்கு தாங்கள் கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யுங்கள்!
http://www.nilacharal.com

மேற்கண்ட‌ வலை தளத்தில் நான் எழுதியுள்ள "நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள்" என்ற தொடரை படித்து முடியுங்கள்.

இந்த‌ க‌ம்ப்யூட்ட‌ர் இத்யாதியில் ப‌யிற்சி இல்லாத‌ த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஜோதிட‌ பூமியில் ஆக‌ஸ்ட் முத‌ல் வ‌ளிவ‌ரும் என் தொட‌ரை ப‌டிக்க‌ச் சொல்லுங்க‌ள்.அதற்குள் விரிவான குரு,சனி பெயர்ச்சி பலன் களை தமிழ் வாசம் வலைப் பூவில் உள்ளிட்டு விடுகிறேன்..அதுவரை காத்திருக்கும் பொறுமை இல்லாதவர்கள் த‌பால் மூல‌ம் தொட‌ர்பு கொள்ள‌ என் முக‌வ‌ரி:
சித்தூர்.எஸ்.முருகேஷ‌ன்,தினத்தந்தி நிருப‌ர்‍,7/85,பாணாலா தெரு,சித்தூர் (ஆ.பி) 517001செல்: 9397036815மெயில்:s_murugesan_67@yahoo.com

Wednesday, September 12, 2007

கல்கியின் தலையங்கம்








இந்த வார கல்கியின் தலையங்கம் கூறும் பிரதான் அம்சங்கள்என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் :


1.இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்திய முஸ்லீம்கள் கண்டிப்பதில்லைஅதாவ‌து ம‌றைமுக‌மாக‌ ஆத‌ரிக்கிறார்க‌ள்.
2.ஐத‌ராபாதில் உள்ள‌ முஸ்லீம் வீடுக‌ளில் போலீஸ் துறை தேடுத‌ல் வேட்டை ந‌ட‌த்த‌ முடியாத‌ நிலை இருக்கிற‌து
3.ம‌த்திய‌ மாநில‌ அர‌சுக‌ள் முஸ்லீம் ஆத‌ர‌வுப் போக்கை க‌டை பிடிக்கின்ற‌ன‌
4.இத‌னால் இந்துத்வா ச‌க்திக‌ளுக்கு ஆத‌ர‌வு பெருகும்
5.இந்தியா இந்து நாடாக‌ மாறும் . அப்போது முஸ்லீம்க‌ள் இப்போதுள்ள‌ உரிமைக‌ள் அனைத்தையும் இழ‌ந்து விடுவார்க‌ள்.
6.இந்தியாவில் இந்துத்வ‌ ச‌க்திக‌ள் ப‌ல‌ம் பெறுவ‌தை,இந்தியா இந்து நாடாக‌ மாறுவ‌தை த‌டுக்க‌வேனும் முஸ்லீம்க‌ள் தீவிர‌வாத‌த்தை க‌ண்டிக்க‌ வேண்டும்


க‌ல்கிக்கு என் கேள்விக‌ள்:


1.ம‌னித‌ நேய‌த்திற்கும்,ச‌கோத‌ர‌த்துவ‌த்துக்கும் பெய‌ர் பெற்ற‌ இஸ்லாம் மார்க‌த்தை பின்ப‌ற்றும் எந்த முஸ்லீமும் (க‌வ‌னிக்க‌: பாக்கிஸ்தான் முஸ்லீம் உட்ப‌ட‌) தீவிர‌வாத‌த்தை க‌ண்டிக்கிறான்.


அந்த‌ க‌ண்ட‌ன‌ம் அச்சு ஊட‌க‌த்தின் குறுகிய‌,வியாபார‌ போக்கினால் வெளிச்ச‌த்துக்கு வ‌ருவ‌தில்லை. மானில‌ முத‌ல்வ‌ர்க‌ளே த‌ங்க‌ள் அறிக்கை முழுமையாக‌ வெளிவ‌ராது என்ற‌ ந‌ம்பிக்கையில்(?) அர‌சு செல‌வில் விள‌ம்ப‌ர‌ம் வெளியிட‌ வேண்டியுள்ள‌து. அச்சில் வ‌ராத‌தெல்லாம் சொல்ல‌ப்ப‌ட‌வில்லை என்று நின‌த்துக் கொண்டால் அத‌ற்குப் பெய‌ர்: கிண‌ற்றுத் த‌வ‌ளைத்த‌ன‌ம்.


2.ஐத‌ராபாதில் தேடுத‌ல் வேட்டை ந‌ட‌த்த‌முடியாத‌ நிலை:ந‌ம் நாட்டில் ஜ‌ன‌த்தொகையில் 15 சத‌வீத‌ம் உள்ள‌ முஸ்லீம்க‌ளில் 75 ச‌த‌வீத‌ம் பேர் ஏழ்மையில் வாடுகிறார்க‌ள். அர‌ச‌ன் வீட்டு முட்டை ஏழை வீட்டு அம்மி க‌ல்லை உடைக்கும் என்ப‌து க‌ல்கி அறியாத‌ ஒன்ற‌ல்ல‌..


போலீஸ் தேடுத‌ல் வேட்டை ந‌ட‌த்த‌ முடிவு செய்து விட்டால் ச‌ங்க‌ர‌ ம‌ட‌மும் ஒன்றுதான்,க‌ல்கி அலுவ‌ல‌க‌மும் ஒன்றுதான். தேடுத‌ல் வேட்டையின் உண்மை பொருள் என்ன‌ என்ப‌து "அவாள் ஆத்து" பெண்க‌ளுக்குத் தான் தெரியாது க‌ல்கிக்குமா தெரியாது.


தெரிந்தும் முஸ்லீம் வீடுக‌ளில் தேடுத‌ல் வேட்டை ந‌ட‌க்க‌ வேண்டும் என்று கோருவ‌தும், ந‌ட‌க்க‌வில்லை என்று வ‌ருந்துவ‌தும் க‌ல்கியின் குரூர‌ ஆசையைத் தான் காட்டுகிற‌து.


3.ம‌த்திய, மானில‌ அர‌சுக‌ள் முஸ்லீம் ஆத‌ர‌வு போக்கைய‌ல்ல‌ , ந‌டுநிலைப் போக்கை க‌டை பிடித்திருந்தாலும் இது போன்ற‌ வ‌க்கிர‌ம் பிடித்த‌,ம‌த‌க் க‌ல‌வ‌ர‌த்தை தூண்டும்,தேச‌ ஒற்றுமையை பாதிக்கும் த‌லைய‌ங்க‌ம் எழுதிய‌த‌ற்கு க‌ல்கியின் ஆர்.என்.ஐ நெம்ப‌ர் ப‌றிக்க‌ப் ப‌ட்டிருக்கும்.


ம‌த்திய‌ ,மாநில‌ அர‌சுக‌ளின் போக்கு முஸ்லீம் ஆத‌ர‌வு போக்க‌ல்ல‌ ..வாக்கு வ‌ங்கி அர‌சிய‌ல் போக்காகும். முஸ்லீம் என்ப‌வ‌ன் எந்த‌ துறையை எடுத்துக் கொண்டாலும் அடிம‌ட்ட‌த்தில்தான் இருக்கிறான். த‌ப்பி தவ‌றி மேல் ம‌ட்ட‌த்திற்குள் நுழைந்து விட்டால் அவ‌ன் தான் முஸ்லீம் என்ப‌தையே ம‌ற‌ந்துவிட‌ வேண்டும் . இல்லாவிட்டால் க‌ல்தா தான். இது உண்மை நிலை.


இந்திய‌ முஸ்லீம்க‌ள் அல்ல‌, அல்லாவே க‌ண்டித்தாலும் தீவிர‌ வாத‌ம் நிற்க‌ப்போவ‌தில்லை..தேன் கூட்டை க‌லைத்து விட்டு "கொட்டுதே கொட்டுதே" என்று அல‌றி என்ன‌ ப‌ய‌ன். க‌லைஞ‌ர் சொல்லிய‌தைப் போல் "எரிவ‌தை பிடுங்கினால் கொதிப்ப‌து அட‌ங்கும்". ஏன்..அமெரிக்கா ஈராக்கிலிருந்து தன் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்று தலையங்கம் தீட்டலாமே!பொய் குற்றம் சாட்டி போர் தொடுத்து ஈராக்கை சுடுகாட்டாக்கியதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீட்டலாமே தலையங்கம்.


அதை விட்டு விட்டு இந்துத்வா ச‌க்திக‌ள் ப‌ல‌ம் பெறுவ‌தையும், இந்தியா இந்து நாடாக‌ மாறுவ‌தையும் த‌டுக்க‌ க‌ல்கி ஒன்றும் மென‌க்கெட்டு உப‌தேச‌ங்க‌ளை அள்ளிவிட‌ வேண்டாம்.


இந்தியா புண்ணிய‌ பூமி..ச‌ங்க‌ர‌ ம‌ட‌த்துக்கும்,ச‌ங்க‌ர‌ ம‌ட‌த்துக்கு வால் பிடிக்கும் சோம்பேறி ம‌ட‌த்துக்கும் வேண்டுமானால் ம‌த‌ங்க‌ளுக்கிடையில் வித்யாச‌ங்க‌ள் இருக்க‌லாம். இந்து ராஜ்ஜிய‌த்துக்கு ர‌க‌சிய‌ க‌ன‌வுக‌ள் காணும் அரிப்பு இருக்க‌லாம்.


இந்த‌ புண்ணிய‌ பூமியில் சூக்கும‌ வ‌டிவில் திரியும் புனித‌ர்க‌ளின் ஆன்மாக்க‌ள் இந்தியா ஒரு ம‌த‌ சார்ப‌ற்ற‌ நாடாக தொட‌ர்வ‌தைத் தான் விரும்பும் என்ப‌தில் என‌க்கு எந்த‌ ச‌ந்தேக‌மும் கிடையாது.






























பெண்கள் வீட்டின் கண்களா? புண்களா?


இது ஏதோ சினிமா டைட்டில் சாயலில் இருக்கிறதே என்று தோன்றினால் உங்கள் ஞாபகசக்திக்கு ஜே!


பெண்கள் வீட்டின் கண்கள்:


என் அம்மா அந்த காலத்திலேயே படித்து டீச்சராகவும் வேலைப் பார்த்தவள். மணியக்காரரின் மகள். என் அம்மாவுக்கான சீர் வரிசைகள் வந்து இறங்கியதை இன்றைக்கும் கதை கதையாக சொல்ல ஆளிருக்கிறது.


என் அப்பாவைப் பெற்ற‌ தாத்தா எல்லா வியாபார‌ங்க‌ளையும் 6 மாத‌ங்க‌ளுக்கு அதிக‌மில்லாம‌ல் செய்துப் பார்த்து விட்ட‌ பார்ட்டி. பாட்டி இட்டிலி சுட்டுத்தான் என் அப்பாவை ப‌டிக்க‌ வைத்தாளாம். ம‌ணிய‌க்கார‌ரின் ம‌க‌ள்,இட்டிலி க‌டைக் காரியின் ம‌க‌ளை ம‌ண‌ந்த‌து எப்ப‌டி என்று நாளிது வ‌ரை தெரியாது.


1967 முத‌ல் 1984 வ‌ரை பார்த்திருக்கிறேன், எழுத்தாள‌ன் என்ற‌ ஹோதாவில் ர‌க‌சிய‌மாக‌ விசாரித்துமிருக்கிறேன்..ஒரே ஒரு மி.கி. அதிருப்தியை கூட‌ வெளியிட்ட‌தில்லை. என் பாட்டியின் அக்காள் மகனின் ('குடி' மகன்) தெரு நடையிலான‌ மூத்திரத்தைக் கூட கழுவித் தள்ளியிருக்கிறாள். மைத்துன‌ர்க‌ள்,நாத்த‌னார் க‌ல்யாண‌ங்க‌ளுக்கெல்லாம் என் அப்பா வாரிவிட்ட‌ போதெல்லாம் ஒரு பேச்சு கூட‌ த‌டை சொன்ன‌தில்லை.
மைத்துன‌ர்க‌ள் த‌னிக்குடித்த‌ன‌ம் போனார்க‌ளே த‌விர‌ என் அம்மா என்ன‌வோ அதே வீட்டில் வாழ்ந்து செத்தாள்.


என் அப்பாவின் பெரிய‌ப்பா ம‌க‌ன் வ‌ந்தாலும் எங்க‌ள் வீட்டில் தான் த‌ங்க‌ல். ஆர‌ணி நில‌ த‌க‌ராறு விஷ‌ய‌மாக‌ ஆண்டு க‌ண‌க்கில் லாட்ஜு வைத்திய‌ர் போல் வ‌ந்து போய் கொண்டிருந்தார். க‌டைசியில் கோர்ட்டு கேஸ் ஜெயித்து என் அப்பாவின் ப‌ங்கு வ‌ந்த‌ போது த‌ன் த‌ங்கைக்குத் தான் தாரை வார்த்தார்.இப்ப‌டி எத்த‌னை எத்த‌னை இல‌வ‌ச‌ சேவைக‌ள். இவ்வ‌ள‌வுக்கு பின்னும் பெய‌ர் என்ன‌வோ கிடைக்காது.


என் அப்பா தாய் சொல்லைத் தட்டாத‌ த‌ன‌ய‌ன். என் பாட்டி ச‌ரியான‌ அர‌சிய‌ல் வாதி. இன்னும் கேட்க‌ வேண்டுமா? வாட‌கை வீடு சொந்த‌ வீடான‌து.ம‌ழையில் இடிந்து வீழ்ந்த‌து. ஒரு மாவ‌ட்ட‌ க‌ருவூல‌ அதிகாரியின் வீடு ம‌ழைக்கு இடிந்து வீழ்ந்த‌து இந்திய‌ ச‌ரித்திர‌த்திலேயே முத‌லும் க‌டைசியும் இதுவாக‌த்தானிருக்க‌ வேண்டும். என் அப்பாவின் நேர்மை அப்ப‌டிப் ப‌ட்ட‌து.


இடிந்த‌ வீட்டுக்கு கோழிப் ப‌ண்ணைக்கு கூட‌ போட‌ த‌ய‌ங்கும் லைட் ரூஃப் போட்டு சாத‌னை ப‌டைத்தார் என் த‌ந்தை. சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து வீடு க‌ட்ட‌ ஆர‌ம்பித்தார். அது ஒரு கூத்து. சுவ‌ரை(ம‌ண்) இடிக்க‌க் கூடாது,ப்ளான் மாத்த‌க்கூடாது என்று ஆயிர‌த்தெட்டு நிப‌ந்த‌னைக‌ள். சிமெண்டு த்ராய்க‌ள் போட்டு,அத‌ன் மேல் சிமெண்டு ப‌ல‌கைக‌ள் போட்டு க‌ட்டினார். ஒரே நாளில் கூரை போட்ட‌ கின்ன‌ஸ் சாத‌னையும் என் அப்பாவுக்கே சொந்த‌மான‌து.


இதில் என் அம்மாவின் மார்பில் க‌ட்டி கிள‌ம்பி, நான் அது கேன்ஸ‌ராக‌ இருக்க‌லாம் என்று கூறி வில்ல‌னான‌தும்,க‌ருப்பையிலான‌ கேன்ஸ‌ர்,வ‌யிற்றுக்கு ப‌ர‌வி ப‌ரிதாப‌மாக‌ செத்த‌தும் த‌னிப்ப‌ட்ட‌ சோக‌ங்க‌ள்.


இப்ப‌டிப் ப‌ட்ட‌ பெண்க‌ளை க‌ண்க‌ள் என்று ஜ‌ல்லிய‌டிக்க‌ மாட்டேன். இவ‌ர்க‌ள் ச‌ற்றே சுய‌ந‌ல‌ம் க‌ற்று,வ‌யிற்றில் புண் (வேளா வேளைக்கு சாப்பிடாது),சைன‌ஸ் (த‌லையை துவ‌ட்ட‌ கூட‌ நேர‌மில்லாது) போன்ற‌வ‌ற்றை த‌விர்த்தால் க‌ண்க‌ள் என்று ஒப்புக்கொள்வேன்.
(பெண்க‌ள் வீட்டின் புண்க‌ள் வாத‌ம் ம‌ற்றொரு ச‌ந்த‌ர்ப்ப‌த்தில்)













தெய்வீக சக்தியின் லீலை

ஒவ்வொரு உயிருக்கும் பின்னால் ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. அதை உணர்வதும்,வளர்த்துக் கொள்வதும் சிலருக்கே சாத்தியமாகிறது.அந்த சிலரில் நானும் ஒருவன் என்று மிகுந்த தயக்கங்களுக்கு பிறகு தான் சொல்ல முடிகிறது.

காரணம் சில சந்தர்ப்பங்களில் அந்த சக்தி என்னை சம்பூர்ணமாக கை விட்டுவிடுவதே. அந்த தெய்வீக சக்திக்கு சில சம்பவங்களை உதாரணம் காட்டுகிறேன்.

அசோக் என் இளைய நண்பர்களுள் ஒருவன். குடும்ப சொத்தான லாட்ஜு ஒன்றை நிர்வகித்து வருகிறான். அதில் சினிமா தியேட்டர் கவுண்டர் அளவில் ஒரு அறை உண்டு. அதில் காலாவதியான நாற்றம் பிடித்த மெத்தைகள்,தலையனைகளை போட்டு வைப்பது வழக்கம். அதில் என்னை பிராக்டீசு (ஜோதிட ஆலொசனை)செய்து கொள்ளும்படி கோரி வந்தான். நானும் ஒரு பலவீன கணத்தில் ஒப்பி ஆரம்பித்து விட்டேன்.


என் வாழ்க்கையில் தொடர்கதையான அவமானங்கள் ஆரம்பித்து விட்டன. நாம் நமக்கு கெட்டது செய்பவனுக்கு தொடர்ந்து நல்லதையே செய்துவந்தால் இறைவன் அவனுக்கு கெட்டவனாகி விடுகிறான் என்பது என் நம்பிக்கை,அனுபவம். முத்தாய்ப்பாக அவன் தந்தை அறையை காலி செய்து விடும்படி கூறிவிட்டார். அசோக்கும் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை.

ஞானிகள் நாயை போன்றவர்கள்போன்றவர்கள் என்று இன்று ஒரு தகவலில் கேட்டதாய் ஞாபகம். நாயை அடித்துக் கொண்டே இருந்தாலும் மறுபடி மறுபடி தேடி வருமாம் , ஒரேயடியாய் அடித்து விரட்டி விட்டால் மறுபடி அந்த பக்கம் திரும்பாதாம்.நான் ஞானியல்லாவிட்டாலும் ஞானியாக நடிப்பவன்.(நடிப்பும் ஒரு நாள் நிஜமாகிவிடும் வாரியார் சொன்ன சலவை தொழிலாளி கதை போல) நான் விலகி விட்டேன்.

சில தினங்களிலேயே அசோக்கின் 50 ஆயிரம் ரூபாய் வண்டியும்,அதை ஒட்டிச் சென்றவனும் காலி. இப்போதும் நான் அசோக்கையோ ,அவன் தந்தையையோ நீங்கள் வெ.பாக்கு கொடுத்து அழைத்து ,துப்பி அனுப்பியது நியாயமில்லை என்று கூறவில்லை.நியாயமா என்றும் கேட்கவில்லை.

நான் என்னவோ வாழ்வில் முதல் முறையாய் கு.பட்சம் உலகத்தின் பார்வையில் கவுரவமான வேலை பெற்று மாதம் ரூ.3000 சம்பளமும் பெற்று வாழ்ந்து கொண்டுதானிருக்கிறேன். இது தெய்வீக சக்தியின் வேலை என்று நம்புகிறேன்.

(இதில் அசோக் தந்தைக்கு ஒரு இழவும் நஷ்டமில்லை. இதிலிருந்து நான் அறிந்து கொண்ட ரகசியம் பாவம் செய்பவனை விட அதை தடுக்காதவனுக்குத் தான் உடனடி லாட்டரி போல் தண்டனை கிடைக்கும் என்பதே)

மற்றொரு சம்பவம் நேற்று நடந்தது

சத்யா என் நண்பன். நாராயணன் அவன் தம்பி. சத்யா ஊரில் இல்லை. நான் சத்யாவுக்கு போன் போட்டு காசு கடன் கேட்டேன். அவன் தம்பிக்கு போன்ல சொல்றேன் வாங்கிக்க என்றான். நாராயணன் (வேண்டுமென்றே செய்தான் என்றும் சொல்ல முடியாது) 20 நிமிடம் தாமதமாக கொடுத்தான். மதியம் இது நடந்தது,

மாலையே திருப்பதி ரயில்வே போலீசு வந்து 23 கிராம் ரிகவரி செய்து கொண்டு போனது. (பாவம் அவன் எந்த திருட்டு நகையும் வாங்கவில்லை). 45 கிராம் டிமாண்டு செய்தவர்களை 23 கிராமுக்கு ஒப்புகொள்ளச் செய்தது நான் தான். இதுவும் அந்த தெய்வீக சக்தியின் லீலை என்றே நம்புகிறேன்.

இங்கு பொய் சத்தியம் போட முடியாது

ஆந்திர பிரதேசம்,சித்தூர் மாவட்டம் ,ஐராலா மண்டலம் ,கானிப்பாக்கத்தில் ஒரு வினாயகர் கோவில். கோவிலில் உள்ள விக்கிரகம் சுயம்பு மூர்த்தி மட்டுமல்ல. நாளுக்கு நாள் வளர்ந்தும் வருகிறது.வேலூரை அடுத்துள்ள சித்தூரிலிருந்து 10 நிமிட பயண தூரத்தில் உள்ளதூரத்தில் உள்ள இந்த வினாயகர் கோவிலின் விசேஷம் என்னவென்றால் இங்கு பொய் சத்தியம் போட முடியாது. போட்டால் கதை காலி. போட்டாலே மட்டுமல்ல பொய் சத்தியம் போடத்தயார் என்று சவால் விட்டாலும் போதும். எங்கள் முன்னாள் முதல்வரின் சகோதரர் முதல் இன்றைய முன்னாள் எம்.எல்.ஏ சி.கே.பாபு வரை பல கூறலாம்.

ப‌லி கொடுக்க‌ப் போகும் ஆட்டுக்கு

தாயே..நான் வித்யாசமானவன்.
உன் விதியை அதன் கதியை கற்கும் மாண‌வன்
இவர்கள் சாதாரண்மானவர்கள்
தமக்கு எல்லாம் வேண்டும்
ஆனால்அவற்றைப் பெற தாம்
எதையும் இழக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பார்கள்.

நான் வித்யாசமானவன்
இதோ முப்பத்து முக்கோடி தெய்வங்களும் கூடிப் பேசி
என்னை காரிருளில் ஆழ்த்தினாலும்
தாமே சூரிய சந்திரர்களாகி ஒளியை உமிழும் என் கண்களைப்பார்..அவற்றிற்கு இந்த சக்தி எப்படி வந்தது தெரியுமா?

அவை என் விரோதிகளுக்காகவும் கசிந்தன..
குறுக்கு வழிகளை, பசப்பு வரிகளை
பார்க்க மறுத்தன.
அகிலத்தின்மிசை நடக்கும்
சகல அநியாயங்களையும்
கண்டுமூடிக்கொண்ட பலகோடி விழிகளை
பின்பற்ற மறுத்தன‌.
ஜீரோ வாட்ஸானாலும்,மெழுகு வ‌ர்த்தியானாலும்
ந‌ள்ளிர‌வு வ‌ரை இவ்வுல‌க‌த்து ஏழ்மையையும்
சுர‌ண்ட‌லையும் ஒழிக்க‌ வ‌ரைப‌ட‌ம் த‌யாரித்த‌ன‌.
அத‌னாலேயே தாமே சூரிய சந்திரர்களாகி
ஒளியை உமிழ்கின்ற‌ன‌.
இப்போது பார் என் கண்களை..

ப‌றித்துக்கொள் இவ‌ற்றை!

அமுத‌ம் சேவித்து உன் ர‌த்த‌த்தில் ச‌ர்க்க‌ரை அதிக‌ரித்துஉன் பார்வை ப‌ழுதுப‌ட்டு விட்ட‌தால் இவ‌ற்றை நீ பொருத்திக் கொள் என்று கூற‌மாட்டேன்.

இவ‌ற்றை இழ‌க்க‌ நான் முன்வ‌ந்த‌து உன‌க்கு என் பார்வையை த‌ருவ‌த‌ற்காக‌ அ‌ல்ல‌..இழ‌ந்தால்தானே பெற‌முடியும்..
நான் பெற‌விரும்புவ‌து ஒன்றே .
அது மாநில‌ம் ப‌ய‌னுற‌ வாழ்த‌ல்

என் மூளை, அதில் மின்னும் சிந்த‌னைக‌ளை
ஏதேனும் ஒரு வ‌ழியில்
என் ம‌க்க‌ளுக்கு ப‌கிரும் ஒரு வ‌ழி
இவையிர‌ண்டை மீத‌ம் வைத்து
நீ என்னை வ‌த‌ம் செய்தாலும் ச‌ம்ம‌த‌மே..

அம்மா..
நான் உன் ம‌க‌வ‌ல்லவா!
உன் பிடிவாத‌த்தில் ச‌ற்றேனும் என‌க்கும் உண்ட‌ல்ல‌வா?

நான் ப‌டைக்க‌ எண்ணும் புதிய‌ உல‌க‌ம்
உன் பிரளய கால நிக‌ழ்ச்சி நிர‌லுட‌ன்
முர‌ண்ப‌டுவ‌தால‌ல்ல‌வா?
ச‌ர‌ண் புகுந்த‌ என்னை ம‌ண்ணை க‌வ்வ‌ வைக்கிறாய்.
புரிகிற‌து..
அத‌னால்தான் நான் க‌ட்டி எழுப்பும்
ஒவ்வொரு கோட்டையும் ச‌ரிகிற‌து.

ச‌ரிந்தால் என்ன‌ என் முய‌ற்சி நிற்க‌வா போகிற‌து.
ப‌லி கொடுக்க‌ப் போகும் ஆட்டுக்கு
மாலை போடுவ‌து எம் வ‌ழ‌க்க‌ம்.
அந்த‌ மாலையாக‌ வேணும்
அனும‌திக்க‌க் கூடாதா நான் க‌ன‌வு காணும்
ப‌சி சுர‌ண்ட‌ல‌ற்ற‌ உல‌க‌த்தை?

ஓம் ச‌க்தி!























Sunday, September 9, 2007

க‌ண்ணால் பார்ப்ப‌தும் பொய்.


க‌ண்ணால் பார்ப்ப‌தும் பொய்..காதால் கேட்ப‌தும் பொய் என்பார்க‌ள். நான் ஒரு ந‌ண்ப‌னுக்கு நெட்டிலிருந்து எஸ்.எம்.எஸ் அனுப்புகிறேன்..அவ‌ன் உன் ச‌க‌வாச‌மே வேண்டாம் ஆளை விடு என்று Offline messege// அனுப்புகிறான். உட‌னே நான் உ.வ‌.ப்ப‌ட்டு மேற்ப‌டி வ‌லைப்பூவை எழுதி வைக்கிறேன்.
ம‌று நாள் ம‌ற்றொரு ந‌ண்ப‌ன்.."நாம‌ நின‌ச்ச‌து ச‌ரியாப் போச்சுப்பா அந்த‌ பொம்ப‌ள‌ ம‌றுப‌டி இவ‌னுக்கு SMS// அனுப்பினாப்பா? நான் ப‌க்க‌த்துல‌ இருந்த‌தால‌ உன் ச‌க‌வாச‌மே வேண்டாம் ஆளை விடு என்று Offline messege//அனுப்ப‌ வ‌ச்சிட்டேன் என்று கூறுகிறான். ஏதோ கெட்ட‌ நேர‌த்தில் ந‌ல்ல நேர‌ம் அன்று மேற்ப‌டி Offline messege//ஐ நான் ப‌டிக்கும் முன்பாக‌வே அவ‌ன் லாக் அவுட் செய்து விட்டான். பார்த்திங்க‌ளா..பெரிய‌வ‌ங்க‌ சொன்னா பெரும‌ள் சொன்ன‌ மாதிரி..இப்போ அன்னைக்கு நான் உ.வ.பட்டு எழுதிய வலைப்பூவை படிங்க..
1986 இல் தெருவில் சரண் புகுந்த காதல் ஜோடியில் பெண்ணை வீடு புகுந்து அனுபவித்துவிடவேண்டும் என்று ஒரு நண்பன் கூறிய தினம் முதல் நான் எந்த மனிதனையும் மனிதனாக மதிப்பதில்லை. மனிதன் என்பவன் தெய்வமாவது பிறகு..அவனை மனிதனாகவே தொடரச் செய்வதே முக்கியம். அதற்கு மனிதனின் மூளை,உடலுக்கு தொடர்ந்து வேலை தரப்பட வேண்டும்..இல்லையேல் அவன் மிருகமாவதை தடுக்க முடியாது. இது இன்று எடுத்த முடிவல்ல. 21 வருடங்களுக்கு முன்பு எடுத்த முடிவு. அதற்குத்தான் 10 கோடி வாலிபருடன் சிறப்பு ராணுவம், நதி நீர் இணைப்பு.
நிற்க..ஒரு நண்பன்(?) எனக்கு தகவல் கொடுத்திருந்தான். என்னை தொடர்பு கொள்வதாயில்லையாம்..நானும் கொள்ள கூடாதாம். இத்தனைக்கும் விஷயம் என்ன தெரியுமா?அவன் ஒரு திருமணமான பிராமண பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தான். ஆரம்பம் முதல் இது தகாது என்று சொல்லி வந்தவன் நான். 15 தினங்களுக்கு முன் அந்த பெண்ணின் தகப்பன் போலீஸில் புகார் கொடுத்து விட்டான்.(அவளுக்கு எத்தனை காதலர்கள் என்ற கணக்கு இன்னும் முடியவில்லை. கணவர்கள் மட்டும் 2)காவலர்கள் நண்பனை வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நான் எஸ்.ஐ. யிடம் பேசிப் பார்த்து நேரில் சென்றால் தினத்தந்தி பாணியில் அடி உதை கிடைக்குமே தவிர வழக்கு எதுவும் இராது என்று உறுதி கூறி ஸ்டேஷŒனுக்கு கூப்பிட்டேன். புஷ்,முஷாரப் ரேஞ்சில் சிபாரிசு பிடிப்பதில் நான் கைந்து தினங்கள் கடத்தி விட்டான். எஸ்.ஐ என்னை அழைத்து "உனக்கு அவ்ளோ ஸீனில்லை நீ கழண்டுக்கப்பா " என்று கூறிவிட்டார்.பிறகு எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல், வேறு வழியில்லாமல் போலீஸில் சரணடைந்து விட்டான். எல்லாம் முடிந்து 3 நாட்கŒள் கழித்து வெளி வந்த பிறகு நண்பர் கொடுத்ததுதான் மேற்சொன்ன தகவல்.இவன் போலீஸில் சரண் அடைந்த தகவல் தெரிந்து அவன் வீட்டுக்கு சென்று அவன் அம்மாவை கூப்பிட்டேன்..நீங்க வாங்க..உங்களுக்கு துணையா வர்ராப்ல நான் நுழைஞ்சி என் முயற்சி எதோ நான் செய்யறேன் என்று சொன்னேன். பெற்ற மனம் பித்தாம்..இடியட்ஸ்! அந்தம்மா சுத்தமா கழண்டுகிட்டாங்க..அம்மாவே கழண்டுகிட்ட பிறகு..நான் வலிய,தனிய போய் எஸ்.ஐ முன்னாடி கைகட்டி நிற்க நான் என்ன இ.வாயனா? இவன் என்ன துரியோதனன் நானென்ன கர்ணனா?

அள்ளி அணைத்து


ஒவ்வொரு முறை அவள் என்னை கீழே தள்ளிய போதும்அள்ளி அணைத்து எடுத்துமிருக்கிறாள்..தன் ஆணைப்படி என் மேல் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கும் கோளுக்கு எதிராகவும் வாளெடுக்காத ஜனநாயக வாதி அவள்கோள் என்னை சிறைப்படுத்தினாலும் ஜாமீனில் தான் என்னை நழுவும் மீனாக்கி மகிழ்கிறாள் அந்த மீனாட்சி


யாவும் அவளாட்சியாக இருக்க என்னில் ஏது தளர்ச்சிநான் பூஜ்ஜியம் .யாவும் அவள் ராஜ்ஜியம்அம்மையவள் என்னை பொம்மையாக்கி விளையாடும்போதுசற்றே பங்கப் பட்டால் தான் என்ன?
ஒவ்வொரு ந‌தியும் புனித‌மாக‌த்தான் புற‌ப்ப‌டுகிற‌து.வ‌ழியில் தான் முத‌ல் பிண‌ம் போட‌ப்ப‌டுகிறதுஒவ்வொரு சாத‌னையாள‌னும்ச‌மூக‌ நீதிக்கு க‌ட்ட‌ப்ப‌ட்ட ச‌மாதியின்பிள‌விலிருந்து தான் புற‌ப்ப‌டுகிறான்.ச‌ற்றே காற்றும்,நீரும்,க‌திரும் கிட்டிய‌தும்உண்ட‌ ம‌ய‌க்க‌த்தில் ச‌ளைக்கிறான்.பின் .........ச‌முதாய‌த்தை உண்ண‌ ஆர‌ம்பிக்கிறான்.அத‌னால் தான்என் அன்னை ப‌ட்டினியிலேயே வைத்துத‌ன் ல‌ட்சிய‌த்தை நிறைவேற்றிக் கொள்கிறாள்.
எவ‌ன், எத‌ற்கு உழைத்தாலும் அத‌னால் நிறைவேறுவ‌து அவ‌ள் ல‌ட்சியம் தானே!

லலிதா டீச்சர் & All that


நான் பெருமைப் படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்க்கிறேன். மூன்றாம் வகுப்பு முதலே தமிழ் சங்கத்தில் பேச்சாளனாக அங்கீகாரம். ஏறக்குறைய என் அம்மாவைப் போன்ற சரீர வாகு கொண்ட லலிதா டீச்சர், 5ஆம் வகுப்பில் தமிழ் சங்க துணைத்தலைவன். 6 முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு.


பிறகு 8,9,10 வகுப்புகளில் ஆங்கிலம்,அறிவியல்,சமூகவியல் நோட்சுகளை டிக்டேட் செய்யும் சட்டாம்பிள்ளை உத்தியோகம். காலை 8.30 முதல் பள்ளி ஆரம்பமாகும் வரை என் ராஜ்ஜியம். ஆசிரியர்களைப் போலவே தலைமை ஆசிரியரின் அறையில் நுழைந்து சாக்பீசு எடுத்துக் கொண்டுதான் வகுப்பறைக்குள் நுழைவேன்.


1982 ல் பள்ளியின் கடைசி வேலை நாளன்று மாணவிகள் க்யூவில் நின்று என்னிடம் ஆட்டோக்ராப் வாங்கியதை இன்று நினத்தால் கனவாகத்தான் தோன்றுகிறது. இன்டர் இரண்டாம் ஆண்டில் பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு. தமிழ் மாணவர் சங்கத்தலைவன் என்ற முறையில் வாரியாரை கூட்டத்திற்கு அழைக்கச் சென்றது. இன்டர் இரண்டாம் ஆண்டில் கல்லூரி ஆண்டு மலரில் முதல் கவிதை பிரசுரம்.(பெண்ணையும்,நிலவையும் ஒப்பிட்டு ஒரு நாள் ஓய்வு,மூன்று நாள் ஓய்வு என்று எழுதிய வில்லங்க கவிதைங்க)


டிகிரி படிக்கையிலேயே நான் எழுதிய கவிதைகளுக்கு தமிழ் விரிவுரையாளர் மணி அவர்களின் பாராட்டு. டிகிரி 3 ஆம் ஆண்டில் புதுசு,நவதா என்ற பெயரில் சிற்றிதழ்கள் பிரசுரம்.








Friday, September 7, 2007

ஓவர் நைட் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு


பாரா கூட பிரிக்க தெரியாத ஆரம்பகாலத்து பதிவு இது. இதை படிச்சு முடிக்கறதுக்குள்ள கண்ணை கட்டிரும்.

அதனால இதன் திருத்தப்பட்ட வடிவத்தை படிக்க இங்கே அழுத்துங்க .இது இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக என்னால் தீட்டப்பட்ட திட்டமாகும். திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றியும் அறியும் முன் என்னைப்பற்றி ஒரு அறிமுகம்


என்னைப்பற்றி அறிய தமிழ் வலையுலகம் காத்திருக்கிறது என்று கூறமாட்டேன். ஆனாலும் இந்தியாவின் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க ஒருவன் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் புதுமையான திட்டம் ஒன்றை தீட்டி , அதன் அமலுக்காக லட்சக் கணக்கில் சொந்தப் பணத்தை செலவழித்து 1986 முதல் உழைத்து வருகிறான் என்றால் ஓரளவாவது ஆர்வம் பிறக்கும் என்று நம்புகிறேன்.
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

( சமீபத்தில் பாலகுமாரனின் இரட்டை வேடத்தை ஆர்குட்டில் வெளிப்படுத்திவிட்டு என்னைப்பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டி வந்துவிட்டது. அதனால் தான் முதலில் நான் யார் என்பதை இதே வலைப் பூவில் சொல்லிவைக்க முடிவு செய்துவிட்டேன்)
சுய‌ அறிமுக‌ம்:
இந்த சுய அறிமுகத்தை ஓஷோவின் கருத்தோடு ஆரம்பிக்கிறேன்.
"சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. "
பொருளாதார அளவிலான உயர்வுக்கே இதுதான் நிலை. அறிவு,ஆக்கம்,ஆய்வு,ஆன்மீகம்,இப்படி சகல துறைகளிலும் உயர்ந்துவிட்டால் உங்களுக்கும் உலகத்துக்கும் இடையில் பெரிய்ய.......இடைவெளி ஏற்பட்டுவிடும். இது உறுதி. என் திட்ட‌த்தின் பெய‌ர் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000. அதாவ‌து 1986 ல் இந்த‌ திட்ட‌த்தை தீட்டும்போது இது 2000 ஆம் ஆண்டுக்குள் அம‌லுக்கு வ‌ந்துவிடும் என்று ஒரு ந‌ம்பிக்கை. அத‌னால் தான் இதில் 2000 என்ற எண் வ‌ருகிற‌து.
திட்ட‌த்தைப் ப‌ற்றி விவ‌ரிக்கும் முன் என் படைப்பு,இல‌க்கிய‌ முய‌ற்சிக‌ள் குறித்து சிறு அறிமுக‌ம்:
என் இலக்கிய உலக பிரவேசம் 1987 ல் என் 20 ஆவது வயதில்தான் ஆரம்பித்தது. முதல் சிறுகதை அந்த நாளில் பெத்த பெயர் கொண்டிருந்த கே.பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் பிரசுரமானது.(முளைச்சு மூணு இலை விடலை) எந்த காலத்திலும் தேவைக்கு அதிகமாக உழைத்து (ஓவர்) நஷ்டப்பட்டிருக்கிறேனே தவிர சோம்பலுக்கு என் விலாசம் தெரியாது.
(நிறைய பேருக்கும் தெரிவதில்லை அடிக்கடி வீடு மாற்றிவிடுவதால்) 1990 வரையில் பிரசுரமான கதைகளின் எண்ணிக்கை 5 தான். பிரசுரித்த பத்திரிக்கைகள்: பாக்யா,கல்கி,வாசுகி,உதயம்,கவிதாசரண். ப‌த்திரிக்கை ஆசிரிய‌ர்க‌ளின் பாராமுக‌த்தினாலும், பிராமண சாதி அபிமானத்தினாலும் என் இல‌க்கிய‌ முய‌ற்சிக‌ள் பெரிய‌ அள‌வில் வெற்றி பெற‌வில்லை. இது எந்த‌ அள‌விற்கு என்னை பாதித்தது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம்:
ஆன்மீகம் மாத இதழில் தேர்வாகி பிரசுரமாகிக் கொண்டிருந்த எனது ஜோதிட ஆய்வு கட்டுரை நான் பிராமணன் அல்ல என்பது தெரிந்ததும் பாதியில் நிறுத்தப் பட்டுவிட்டது.
சமீபத்தில் சில வெற்றிகள்:
தமிழ்,தெலுங்கு இரண்டிலும் புலி என்ற காரணத்தால் தமிழ் அச்சு ஊடகத்தின் மீதான் வெறுப்புடன் ஆந்திர பிரபா நாளித‌ழில் நிருப‌னாக‌ ப‌ணியாற்றிக் கொண்டிருந்த‌ என‌க்கு தின‌த்த‌ந்தி நாளித‌ழுக்கு நிருப‌ராக‌ ப‌ணிபுரியும் வாய்ப்பு ந‌ண்ப‌ர் ப‌ஞ்சாட்ச‌ர‌ம் மூல‌ம் கிடைத்த‌து. பொருளாதார‌ ரீதியில் நொந்து போயிருந்த‌ என‌க்கு இது ஒரு வ‌ர‌மாக‌வும் த‌மிழ் வெகுஜ‌ன‌ அச்சு ஊட‌க‌த்துக்கு சாப‌மாக‌வும் அமைந்துவிட்ட‌து.
மேலும் தின‌பூமி குழும‌த்தை சேர்ந்த‌ ஜோதிட‌ பூமி என் ஜோதிட‌ ஆய்வு க‌ட்டுரையை தொட‌ராக‌ வெளியிட்டு வ‌ருவ‌தும், நிலாச் சார‌ல் வ‌லை த‌ள‌ம் ம‌ற்றொரு ஜோதிட‌ ஆய்வு க‌ட்டுரையை தொட‌ராக‌ வெளியிட்டு வ‌ருவ‌தும் சோர்ந்து கிடந்த என் மனதில் புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளன.
மேலும் க‌விதை07 என்ற இந்த வ‌லைத‌ள‌த்தை உருவாக்கி , த‌மிழ் யூனி கோடில் என் கருத்துக்களை தட்டச்சி வலைப்பூக்களை பிரசுரிக்க முடிந்திருப்பதும் ஒரு வெற்றி என்றே கருதுகிறேன். விரைவில் வெகுஜன பத்திரிக்கைகளில் இந்த வலை தளத்துக்கு போதுமான விளம்பரம் த‌ர‌வும் முடிவு செய்துள்ளேன்.
இந்த படைப்பாளியின் குரல் வளையை நெறித்த பிரமுகர்கள்:
தன் ரசனையை வளர்த்துக் கொள்ளாமலே இருந்து என் பிற்கால கதைகளை பிரசுரத்துக்கு தேர்வு செய்யாத கே.பாக்யராஜ்,
என் கதைகளை பற்றிய முடிவுகளை அறிவிக்க தபால் செலவுக்கு அனுப்பிய ரூ.10 ஐ பெற்றுக்கொண்டும் முடிவு சொல்லாத ஆனந்த விகடன் ஆசிரியர்.
என் படைப்புகளை சுவற்றிலடித்த பந்தாக திருப்பியனுப்பிய கல்கி ஆசிரியர் பிற பிரபலங்களின் பெயர்கள் மட்டும் இங்கே...விள‌க்க‌ம் ம‌ற்றொரு வ‌லைப்பூவில்.
ப்ரைம் பாயின்ட் சீனிவாசன்,எண்டமூரி வீரேந்திர நாத், ரஜினி காந்த், அவர் மனைவி லதா ரஜினிகாந்த்,ஆர்னிகா நாசர்,வாணியம்பாடி டாக்டர்(?) அக்பர் கௌசர்,எங்கள் முன்னாள் முதல்வர் சந்திரபாபு, இன்னாள் முதல்வர் , உங்கள் 'ஜெ' ,கலைஞர்,நக்கீரன் ஆசிரியர்,பா.ம.க. ராமதாசு,வாழைப்பாடி ,லோக் சபா சபாநாயகர்,திருமலை திருப்பதி தேவத்தானத்தார்,மதுரை மீனாட்சி கோவில் நிர்வாக அலுவலர், சென்னை வானொலி நிலையம், திருப்பதி எப்.எம்,கலியுக நாரதா,சைக்காலஜி டுடே ஆசிரியர்கள், நடிகர் கிருஷ்ணா, ஜனாதிபதிகள்,தலைமை நீதிபதிகள்,மானில முதல்வர்கள்,கவர்னர்கள்,பல நாட்டு பிரதமர்கள்,ஜனாதிபதிகள், என்.டி.ஆர் மகன் அரிகிருஷ்ணா,அவர் மகன் சின்ன என்.டி,ஆர்,லோக்கல் சாக்லெட்டு கம்பெனி,மணிமேகலை பிரசுரம்,லிப்கோ பதிப்பகம், ராஜமன்ட்ரி கொல்லப்பூடி வீராசாமி அன்ட் சன், வேதவியாசர் (புராண பார்ட்டி இல்லிங்கோவ்!)எழுத்தாளர் ராஜேஷ் குமார், இப்படி எத்தனை எத்தனை பிரபலங்கள்..எத்தனை எத்தனை துரோகங்கள்..மொத்தத்தையும் மற்றொரு வலைப்பூவில் காணலாம். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.
நாட்டைப் ப‌ற்றி நான் சிந்திக்க‌ கார‌ண‌ம்:
அரசு ஊழியர் வயிற்றில் பிறந்தேன் .அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தேன். அன்று அரசு இலவசமாக வழங்கிய குடிநீரில் *குளித்தேன். (அரசுக்கு பணம் ஏது? ஒரு ஏழை இன்று 50 காசு தீப்பெட்டி வாங்கினால் அதில் 10 காசு எக்சைஸ் வரி அரசுக்கு போகிறது.) அந்த வினை தீரத் தான் /அரசுக்கு நான் பட்ட கடனை தீர்க்கத்தான் புதிய இந்தியாவை உருவாக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தீட்டி கடந்த 10 வருடங்களாய் லட்ச கணக்கான ரூபாய்களை செலவழித்து வருகிறேன்.
பணமுதலைகளுக்கு வரி ஏய்ப்புக்கு உதவ சட்ட,கணித புலிகளான ஆடிட்டர்கள் உள்ளனர். பாவம் இந்த ஏழைகளின் நிலைதான் என்ன? வினை செய்தால் தான் காசு வரும்,அந்த காசுடன் வினையும் வரும். அந்த காசு போனால்தான் வினை போகும். இது என் அனுபவம்.
அனுப‌வ‌ம்:
என் நண்பன் ஒருவன் நான் அறிமுகம் செய்த முதியவரை ஏமாற்றினான். அந்த வயதில் அது என்ன ஏது என்பது தெரியாது. பிறகு அதே நண்பனுக்கு 900 ரூபாய் சம்பளத்துக்கு நான் இந்தி ஆசிரியனாக வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது.
அதிலும் 300 ரூபாய் குவார்ட்டர்ஸ் வாடகை, 100 ரூபாய் கரண்டு பில் போக ரூ.500 கைக்கு வரும். ஆனால் பாருங்கள் வினையின் வலிமை. அவன் என்னை குடி வைத்த வீடு அவன் அப்பா கட்டியது.அவருக்கு காலில் புண். அங்கு குடி போன சில நாட்களில் எனக்கும் காலில் புண் வந்து விட்டது.
இந்த ரகசியம் தெரியாது பணம்,பணம்,பணம் என்று ஜனம் அலைகிறது. வினை தீர்க்க‌,க‌ட‌ன் தீர்க்க‌ வேண்டி நோய்க்கோ,ரெயிடுக்கோ,த‌ண்ட‌னைக்கோ ஆளாக‌ வேண்டி வ‌ந்தால் ம‌ட்டும் புல‌ம்புகிற‌து. மனிதத் தன்மை வாய்ந்த மனிதர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையில் ஒருங்கிணைப்பு இல்லை.
அவரவர் ஒவ்வொரு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே பிரச்சினையின் விளைவுகளே..
நாட்டின் ஒரே பிரச்சினை ஏழ்மை தான்:
ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள்.முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.த‌னிம‌னித‌ வ‌ருவாய் என்றால் என்ன‌?தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்.(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில்.
அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு :உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைத்தால் தான் உய‌ர்ந்து வ‌ரும் தேசீய‌ வ‌ருமான‌த்தில் உண்மையான‌ ப‌ங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகித‌ப்ப‌ங்கு தான்.
உற்ப‌த்தி கார‌ணிக‌ள்:உற்ப‌த்தி கார‌ணிக‌ள் 4. அவை நில‌ம்,கூலி,முத‌லீடு,நிர்வாக‌ம் ஆகிய‌ன‌வாகும். நாட்டில் ஆதிகால‌ம் முத‌ல் நில‌விய‌ சாதி அமைப்பினால் ச‌மூக‌த்தின் மெஜாரிட்டி ம‌க்க‌ள் வாழ்க்கைக்கு ஆதாரமான க‌ல்வி கிடைக்காது கூலிக‌ளாக‌வே வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் நில‌மோ.முத‌லீடோ,நிர்வாக‌த்தில் ப‌ங்கெடுக்கும் வாய்ப்போ த‌குதியோ இல்லை.
நில‌த்தை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு வாட‌கை,முத‌லீடு வைத்த‌வ‌னுக்கு வ‌ட்டி,நிர்வாக‌ம் செய்த‌வ‌னுக்கு லாப‌ம் கிடைக்கும்.வெறும் உட‌லுழைப்பை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு என்ன‌ கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால‌ பாதுகாப்போ,ஸ்கில்லோ,க‌ல்வியோ இல்லாத‌ வ‌னுக்கு என்ன‌த்தை..கூலி கிடைக்கும்? தேசீய‌வ‌ருமான‌த்தில் எந்த அளவுக்கு ப‌ங்கு கிடைக்கும்?
இரு வர்கங்கள் /உற்ப‌த்தி கார‌ணிக‌ள் :
நாட்டில் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாய் நில‌வி வ‌ரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி‌ ம‌க்கள் அட‌ங்கிய‌ வ‌ர்க‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மாக‌ உள்ள‌து. உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் நில‌ம்,முத‌லீடு,நிர்வாக‌ம் மூன்றுமே ஆளும் வ‌ர்க‌த்தின் கையில் சிக்கி உள்ள‌து. ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மோ வெறும் கூலிப் ப‌ட்டாள‌மாக‌ நலிந்து வ‌ருகிற‌து.
நில‌ப்ப‌ங்கீடு:
உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் முக்கிய‌மான‌தான‌ நில‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌த்தின் கைக‌ளுக்கு மாற்ற‌ப் ப‌ட‌ வேண்டும். இது நேரிடையாக‌ அம‌ல் செய்ய‌ப் ப‌ட்டால் நாட்டில் ர‌த்த‌ வெள்ள‌ம் ஓடும். இதை த‌விர்க்க‌ விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ள் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, நாட்டில் உள்ள‌ விவ‌சாய‌ நில‌ங்க‌ள் மேற்ப‌டி விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ளுக்கு நீண்ட‌ கால‌ குத்த‌கை அடிப்ப‌டையில் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவ‌சாய‌ம் அம‌ல் ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும். இந்த‌ புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" இன்றைய ஆட்சி முறையிலான பிர‌த‌ம‌ருக்கு கிடையாது.
நேரிடை ஜ‌ன‌நாய‌க‌ம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் தேர்வான பிரதமருக்கே மேற்டொன்ன புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" உண்டு. பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவ்ய் பெருமளவு குறையும்.
க‌ங்கை காவேரி இணைப்பு:
இந்திய விவசாய நாடு. எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.
நில‌ங்க‌ள் விவ‌சாயிக‌ளின் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளுக்கு குத்த‌கைக்கு த‌ர‌ப் ப‌ட்டாலும் நீர் பாச‌னப்பற்றாக்குறை பிர‌ச்சினை ச‌ங்க‌த்தின் குர‌ல் வ‌ளையை நெறித்துவிடும் என்ப‌தால் இத‌ற்கு நிர‌ந்த‌ர‌த்தீர்வாக முதல் கட்டமாக ‌ க‌ங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ள‌ப் ப‌ட‌வேண்டும். பின் ப‌டிப் ப‌டியாக‌ எல்லா ந‌திக‌ளும் இணைக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.
ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம்:
ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம் ஒன்று அமைக்க‌ப் ப‌ட‌வேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. என்னதான் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்திருந்தாலும் ரயில்வே துறை கலாசி வேலைக்கு இஞ்ஜினீயர்கள் அப்ளை செய்யும் நிலை மாறவில்லை. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.
சிகப்பு நாடாசிகப்பு நாடாத்தனத்தின் கொடுமையை அறிந்தவன்,அதனால் கொடூரமாக பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் இந்த வலைப்பூவை வலை மேயர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் எல்ல பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினேன். இதன் 200 பிரதிகளை அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினேன்.(பதிவு தபால் மூலம் தான்). அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினேன்.(11/6/98) .பல மாதங்கள் வரை பதிலில்லை. அந்த சமயம் என்.டி.ஆர்.ரசிகன் என்ற வகையில் தெலுகு தேசம் சார்பாக பூத் ஏஜண்ட்டாக உட்கார்ந்ததற்கான அடையாள அட்டை என்னிடம் இருந்தது. அதை இணைத்து எங்கள் தொகுதி எம்.பி.ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாகஒரு இன்லண்டு லெட்டர் போட்டேன்.அவர் சபாநாயகர் அலுவலகத்தில் விசாரித்திருப்பார் போல.சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு நான் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது."நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை"-என்பது அதன் சாரம். நான் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினேன். மீண்டு சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் ஒரு கடிதம் போட்டனர். அதன் சாரம்:நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினேன். பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ஜலாணை கூட அனுப்பிவிட்டேன். நாளிதுவரை ஒரு இழவும் நடக்கவில்லை. நானும் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக் கொண்டேதானிருக்கிறேன். சிகப்பு நாடாத்தனம் என்றால் இது தான் .