Friday, September 7, 2007

ஓவர் நைட் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு


பாரா கூட பிரிக்க தெரியாத ஆரம்பகாலத்து பதிவு இது. இதை படிச்சு முடிக்கறதுக்குள்ள கண்ணை கட்டிரும்.

அதனால இதன் திருத்தப்பட்ட வடிவத்தை படிக்க இங்கே அழுத்துங்க .இது இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக என்னால் தீட்டப்பட்ட திட்டமாகும். திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றியும் அறியும் முன் என்னைப்பற்றி ஒரு அறிமுகம்


என்னைப்பற்றி அறிய தமிழ் வலையுலகம் காத்திருக்கிறது என்று கூறமாட்டேன். ஆனாலும் இந்தியாவின் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க ஒருவன் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் புதுமையான திட்டம் ஒன்றை தீட்டி , அதன் அமலுக்காக லட்சக் கணக்கில் சொந்தப் பணத்தை செலவழித்து 1986 முதல் உழைத்து வருகிறான் என்றால் ஓரளவாவது ஆர்வம் பிறக்கும் என்று நம்புகிறேன்.
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

( சமீபத்தில் பாலகுமாரனின் இரட்டை வேடத்தை ஆர்குட்டில் வெளிப்படுத்திவிட்டு என்னைப்பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டி வந்துவிட்டது. அதனால் தான் முதலில் நான் யார் என்பதை இதே வலைப் பூவில் சொல்லிவைக்க முடிவு செய்துவிட்டேன்)
சுய‌ அறிமுக‌ம்:
இந்த சுய அறிமுகத்தை ஓஷோவின் கருத்தோடு ஆரம்பிக்கிறேன்.
"சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. "
பொருளாதார அளவிலான உயர்வுக்கே இதுதான் நிலை. அறிவு,ஆக்கம்,ஆய்வு,ஆன்மீகம்,இப்படி சகல துறைகளிலும் உயர்ந்துவிட்டால் உங்களுக்கும் உலகத்துக்கும் இடையில் பெரிய்ய.......இடைவெளி ஏற்பட்டுவிடும். இது உறுதி. என் திட்ட‌த்தின் பெய‌ர் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000. அதாவ‌து 1986 ல் இந்த‌ திட்ட‌த்தை தீட்டும்போது இது 2000 ஆம் ஆண்டுக்குள் அம‌லுக்கு வ‌ந்துவிடும் என்று ஒரு ந‌ம்பிக்கை. அத‌னால் தான் இதில் 2000 என்ற எண் வ‌ருகிற‌து.
திட்ட‌த்தைப் ப‌ற்றி விவ‌ரிக்கும் முன் என் படைப்பு,இல‌க்கிய‌ முய‌ற்சிக‌ள் குறித்து சிறு அறிமுக‌ம்:
என் இலக்கிய உலக பிரவேசம் 1987 ல் என் 20 ஆவது வயதில்தான் ஆரம்பித்தது. முதல் சிறுகதை அந்த நாளில் பெத்த பெயர் கொண்டிருந்த கே.பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் பிரசுரமானது.(முளைச்சு மூணு இலை விடலை) எந்த காலத்திலும் தேவைக்கு அதிகமாக உழைத்து (ஓவர்) நஷ்டப்பட்டிருக்கிறேனே தவிர சோம்பலுக்கு என் விலாசம் தெரியாது.
(நிறைய பேருக்கும் தெரிவதில்லை அடிக்கடி வீடு மாற்றிவிடுவதால்) 1990 வரையில் பிரசுரமான கதைகளின் எண்ணிக்கை 5 தான். பிரசுரித்த பத்திரிக்கைகள்: பாக்யா,கல்கி,வாசுகி,உதயம்,கவிதாசரண். ப‌த்திரிக்கை ஆசிரிய‌ர்க‌ளின் பாராமுக‌த்தினாலும், பிராமண சாதி அபிமானத்தினாலும் என் இல‌க்கிய‌ முய‌ற்சிக‌ள் பெரிய‌ அள‌வில் வெற்றி பெற‌வில்லை. இது எந்த‌ அள‌விற்கு என்னை பாதித்தது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம்:
ஆன்மீகம் மாத இதழில் தேர்வாகி பிரசுரமாகிக் கொண்டிருந்த எனது ஜோதிட ஆய்வு கட்டுரை நான் பிராமணன் அல்ல என்பது தெரிந்ததும் பாதியில் நிறுத்தப் பட்டுவிட்டது.
சமீபத்தில் சில வெற்றிகள்:
தமிழ்,தெலுங்கு இரண்டிலும் புலி என்ற காரணத்தால் தமிழ் அச்சு ஊடகத்தின் மீதான் வெறுப்புடன் ஆந்திர பிரபா நாளித‌ழில் நிருப‌னாக‌ ப‌ணியாற்றிக் கொண்டிருந்த‌ என‌க்கு தின‌த்த‌ந்தி நாளித‌ழுக்கு நிருப‌ராக‌ ப‌ணிபுரியும் வாய்ப்பு ந‌ண்ப‌ர் ப‌ஞ்சாட்ச‌ர‌ம் மூல‌ம் கிடைத்த‌து. பொருளாதார‌ ரீதியில் நொந்து போயிருந்த‌ என‌க்கு இது ஒரு வ‌ர‌மாக‌வும் த‌மிழ் வெகுஜ‌ன‌ அச்சு ஊட‌க‌த்துக்கு சாப‌மாக‌வும் அமைந்துவிட்ட‌து.
மேலும் தின‌பூமி குழும‌த்தை சேர்ந்த‌ ஜோதிட‌ பூமி என் ஜோதிட‌ ஆய்வு க‌ட்டுரையை தொட‌ராக‌ வெளியிட்டு வ‌ருவ‌தும், நிலாச் சார‌ல் வ‌லை த‌ள‌ம் ம‌ற்றொரு ஜோதிட‌ ஆய்வு க‌ட்டுரையை தொட‌ராக‌ வெளியிட்டு வ‌ருவ‌தும் சோர்ந்து கிடந்த என் மனதில் புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளன.
மேலும் க‌விதை07 என்ற இந்த வ‌லைத‌ள‌த்தை உருவாக்கி , த‌மிழ் யூனி கோடில் என் கருத்துக்களை தட்டச்சி வலைப்பூக்களை பிரசுரிக்க முடிந்திருப்பதும் ஒரு வெற்றி என்றே கருதுகிறேன். விரைவில் வெகுஜன பத்திரிக்கைகளில் இந்த வலை தளத்துக்கு போதுமான விளம்பரம் த‌ர‌வும் முடிவு செய்துள்ளேன்.
இந்த படைப்பாளியின் குரல் வளையை நெறித்த பிரமுகர்கள்:
தன் ரசனையை வளர்த்துக் கொள்ளாமலே இருந்து என் பிற்கால கதைகளை பிரசுரத்துக்கு தேர்வு செய்யாத கே.பாக்யராஜ்,
என் கதைகளை பற்றிய முடிவுகளை அறிவிக்க தபால் செலவுக்கு அனுப்பிய ரூ.10 ஐ பெற்றுக்கொண்டும் முடிவு சொல்லாத ஆனந்த விகடன் ஆசிரியர்.
என் படைப்புகளை சுவற்றிலடித்த பந்தாக திருப்பியனுப்பிய கல்கி ஆசிரியர் பிற பிரபலங்களின் பெயர்கள் மட்டும் இங்கே...விள‌க்க‌ம் ம‌ற்றொரு வ‌லைப்பூவில்.
ப்ரைம் பாயின்ட் சீனிவாசன்,எண்டமூரி வீரேந்திர நாத், ரஜினி காந்த், அவர் மனைவி லதா ரஜினிகாந்த்,ஆர்னிகா நாசர்,வாணியம்பாடி டாக்டர்(?) அக்பர் கௌசர்,எங்கள் முன்னாள் முதல்வர் சந்திரபாபு, இன்னாள் முதல்வர் , உங்கள் 'ஜெ' ,கலைஞர்,நக்கீரன் ஆசிரியர்,பா.ம.க. ராமதாசு,வாழைப்பாடி ,லோக் சபா சபாநாயகர்,திருமலை திருப்பதி தேவத்தானத்தார்,மதுரை மீனாட்சி கோவில் நிர்வாக அலுவலர், சென்னை வானொலி நிலையம், திருப்பதி எப்.எம்,கலியுக நாரதா,சைக்காலஜி டுடே ஆசிரியர்கள், நடிகர் கிருஷ்ணா, ஜனாதிபதிகள்,தலைமை நீதிபதிகள்,மானில முதல்வர்கள்,கவர்னர்கள்,பல நாட்டு பிரதமர்கள்,ஜனாதிபதிகள், என்.டி.ஆர் மகன் அரிகிருஷ்ணா,அவர் மகன் சின்ன என்.டி,ஆர்,லோக்கல் சாக்லெட்டு கம்பெனி,மணிமேகலை பிரசுரம்,லிப்கோ பதிப்பகம், ராஜமன்ட்ரி கொல்லப்பூடி வீராசாமி அன்ட் சன், வேதவியாசர் (புராண பார்ட்டி இல்லிங்கோவ்!)எழுத்தாளர் ராஜேஷ் குமார், இப்படி எத்தனை எத்தனை பிரபலங்கள்..எத்தனை எத்தனை துரோகங்கள்..மொத்தத்தையும் மற்றொரு வலைப்பூவில் காணலாம். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.
நாட்டைப் ப‌ற்றி நான் சிந்திக்க‌ கார‌ண‌ம்:
அரசு ஊழியர் வயிற்றில் பிறந்தேன் .அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தேன். அன்று அரசு இலவசமாக வழங்கிய குடிநீரில் *குளித்தேன். (அரசுக்கு பணம் ஏது? ஒரு ஏழை இன்று 50 காசு தீப்பெட்டி வாங்கினால் அதில் 10 காசு எக்சைஸ் வரி அரசுக்கு போகிறது.) அந்த வினை தீரத் தான் /அரசுக்கு நான் பட்ட கடனை தீர்க்கத்தான் புதிய இந்தியாவை உருவாக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தீட்டி கடந்த 10 வருடங்களாய் லட்ச கணக்கான ரூபாய்களை செலவழித்து வருகிறேன்.
பணமுதலைகளுக்கு வரி ஏய்ப்புக்கு உதவ சட்ட,கணித புலிகளான ஆடிட்டர்கள் உள்ளனர். பாவம் இந்த ஏழைகளின் நிலைதான் என்ன? வினை செய்தால் தான் காசு வரும்,அந்த காசுடன் வினையும் வரும். அந்த காசு போனால்தான் வினை போகும். இது என் அனுபவம்.
அனுப‌வ‌ம்:
என் நண்பன் ஒருவன் நான் அறிமுகம் செய்த முதியவரை ஏமாற்றினான். அந்த வயதில் அது என்ன ஏது என்பது தெரியாது. பிறகு அதே நண்பனுக்கு 900 ரூபாய் சம்பளத்துக்கு நான் இந்தி ஆசிரியனாக வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது.
அதிலும் 300 ரூபாய் குவார்ட்டர்ஸ் வாடகை, 100 ரூபாய் கரண்டு பில் போக ரூ.500 கைக்கு வரும். ஆனால் பாருங்கள் வினையின் வலிமை. அவன் என்னை குடி வைத்த வீடு அவன் அப்பா கட்டியது.அவருக்கு காலில் புண். அங்கு குடி போன சில நாட்களில் எனக்கும் காலில் புண் வந்து விட்டது.
இந்த ரகசியம் தெரியாது பணம்,பணம்,பணம் என்று ஜனம் அலைகிறது. வினை தீர்க்க‌,க‌ட‌ன் தீர்க்க‌ வேண்டி நோய்க்கோ,ரெயிடுக்கோ,த‌ண்ட‌னைக்கோ ஆளாக‌ வேண்டி வ‌ந்தால் ம‌ட்டும் புல‌ம்புகிற‌து. மனிதத் தன்மை வாய்ந்த மனிதர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையில் ஒருங்கிணைப்பு இல்லை.
அவரவர் ஒவ்வொரு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே பிரச்சினையின் விளைவுகளே..
நாட்டின் ஒரே பிரச்சினை ஏழ்மை தான்:
ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள்.முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.த‌னிம‌னித‌ வ‌ருவாய் என்றால் என்ன‌?தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்.(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில்.
அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு :உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைத்தால் தான் உய‌ர்ந்து வ‌ரும் தேசீய‌ வ‌ருமான‌த்தில் உண்மையான‌ ப‌ங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகித‌ப்ப‌ங்கு தான்.
உற்ப‌த்தி கார‌ணிக‌ள்:உற்ப‌த்தி கார‌ணிக‌ள் 4. அவை நில‌ம்,கூலி,முத‌லீடு,நிர்வாக‌ம் ஆகிய‌ன‌வாகும். நாட்டில் ஆதிகால‌ம் முத‌ல் நில‌விய‌ சாதி அமைப்பினால் ச‌மூக‌த்தின் மெஜாரிட்டி ம‌க்க‌ள் வாழ்க்கைக்கு ஆதாரமான க‌ல்வி கிடைக்காது கூலிக‌ளாக‌வே வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் நில‌மோ.முத‌லீடோ,நிர்வாக‌த்தில் ப‌ங்கெடுக்கும் வாய்ப்போ த‌குதியோ இல்லை.
நில‌த்தை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு வாட‌கை,முத‌லீடு வைத்த‌வ‌னுக்கு வ‌ட்டி,நிர்வாக‌ம் செய்த‌வ‌னுக்கு லாப‌ம் கிடைக்கும்.வெறும் உட‌லுழைப்பை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு என்ன‌ கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால‌ பாதுகாப்போ,ஸ்கில்லோ,க‌ல்வியோ இல்லாத‌ வ‌னுக்கு என்ன‌த்தை..கூலி கிடைக்கும்? தேசீய‌வ‌ருமான‌த்தில் எந்த அளவுக்கு ப‌ங்கு கிடைக்கும்?
இரு வர்கங்கள் /உற்ப‌த்தி கார‌ணிக‌ள் :
நாட்டில் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாய் நில‌வி வ‌ரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி‌ ம‌க்கள் அட‌ங்கிய‌ வ‌ர்க‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மாக‌ உள்ள‌து. உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் நில‌ம்,முத‌லீடு,நிர்வாக‌ம் மூன்றுமே ஆளும் வ‌ர்க‌த்தின் கையில் சிக்கி உள்ள‌து. ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மோ வெறும் கூலிப் ப‌ட்டாள‌மாக‌ நலிந்து வ‌ருகிற‌து.
நில‌ப்ப‌ங்கீடு:
உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் முக்கிய‌மான‌தான‌ நில‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌த்தின் கைக‌ளுக்கு மாற்ற‌ப் ப‌ட‌ வேண்டும். இது நேரிடையாக‌ அம‌ல் செய்ய‌ப் ப‌ட்டால் நாட்டில் ர‌த்த‌ வெள்ள‌ம் ஓடும். இதை த‌விர்க்க‌ விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ள் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, நாட்டில் உள்ள‌ விவ‌சாய‌ நில‌ங்க‌ள் மேற்ப‌டி விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ளுக்கு நீண்ட‌ கால‌ குத்த‌கை அடிப்ப‌டையில் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவ‌சாய‌ம் அம‌ல் ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும். இந்த‌ புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" இன்றைய ஆட்சி முறையிலான பிர‌த‌ம‌ருக்கு கிடையாது.
நேரிடை ஜ‌ன‌நாய‌க‌ம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் தேர்வான பிரதமருக்கே மேற்டொன்ன புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" உண்டு. பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவ்ய் பெருமளவு குறையும்.
க‌ங்கை காவேரி இணைப்பு:
இந்திய விவசாய நாடு. எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.
நில‌ங்க‌ள் விவ‌சாயிக‌ளின் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளுக்கு குத்த‌கைக்கு த‌ர‌ப் ப‌ட்டாலும் நீர் பாச‌னப்பற்றாக்குறை பிர‌ச்சினை ச‌ங்க‌த்தின் குர‌ல் வ‌ளையை நெறித்துவிடும் என்ப‌தால் இத‌ற்கு நிர‌ந்த‌ர‌த்தீர்வாக முதல் கட்டமாக ‌ க‌ங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ள‌ப் ப‌ட‌வேண்டும். பின் ப‌டிப் ப‌டியாக‌ எல்லா ந‌திக‌ளும் இணைக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.
ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம்:
ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம் ஒன்று அமைக்க‌ப் ப‌ட‌வேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. என்னதான் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்திருந்தாலும் ரயில்வே துறை கலாசி வேலைக்கு இஞ்ஜினீயர்கள் அப்ளை செய்யும் நிலை மாறவில்லை. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.
சிகப்பு நாடாசிகப்பு நாடாத்தனத்தின் கொடுமையை அறிந்தவன்,அதனால் கொடூரமாக பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் இந்த வலைப்பூவை வலை மேயர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் எல்ல பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினேன். இதன் 200 பிரதிகளை அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினேன்.(பதிவு தபால் மூலம் தான்). அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினேன்.(11/6/98) .பல மாதங்கள் வரை பதிலில்லை. அந்த சமயம் என்.டி.ஆர்.ரசிகன் என்ற வகையில் தெலுகு தேசம் சார்பாக பூத் ஏஜண்ட்டாக உட்கார்ந்ததற்கான அடையாள அட்டை என்னிடம் இருந்தது. அதை இணைத்து எங்கள் தொகுதி எம்.பி.ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாகஒரு இன்லண்டு லெட்டர் போட்டேன்.அவர் சபாநாயகர் அலுவலகத்தில் விசாரித்திருப்பார் போல.சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு நான் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது."நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை"-என்பது அதன் சாரம். நான் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினேன். மீண்டு சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் ஒரு கடிதம் போட்டனர். அதன் சாரம்:நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினேன். பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ஜலாணை கூட அனுப்பிவிட்டேன். நாளிதுவரை ஒரு இழவும் நடக்கவில்லை. நானும் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக் கொண்டேதானிருக்கிறேன். சிகப்பு நாடாத்தனம் என்றால் இது தான் .
Post a Comment