ஸ்வ புக்தி அ சுய புக்தி:
ஒரு தசை முழுக்க முழுக்க நற்பலன் தருவதாயின் அதன் சுய புக்தி (முதல் புக்தி ) பலன் தரக்கூடாது. அதே நேரம் ஒரு தசை முழுக்க முழுக்க கெடுக்க வேண்டுமேயானால் தன் சுய புக்தியில் (முதல் புக்தி) யோக பலனை தரவேண்டும்.
சனி தரும் சொத்து:
அடகில் உள்ள சொத்து/விவகாரத்தில் உள்ள சொத்து நொடித்து போன ஃபேக்டரி.
பாவகிரகம் லக்னாதிபதியானால்:
லக்னாதிபதி என்பவர் ஒரு ஜாதகத்துக்கு தாய் மாதிரி. புலியே ஆனாலும் தன் குட்டிக்கு தாயாகவே இருப்பதை போல் சனி பாபகிரகம் என்றாலும் உங்க ஜாதகத்துக்கு லக்னாதிபதி என்பதால் நல்லதை செய்யவேண்டும்
கிரகங்களின் இயல்பு:
நாங்க எந்த அளவுக்கு வலிமையா இருக்கோமோ அந்த அளவுக்கு தீயபலனை குறைச்சு, நற்பலனை கூட்டி கொடுப்போம். அதேமாதிரி எந்த அளவுக்கு வீக்காகறமோ அந்த அளவுக்கு தீய பலனை கூட்டி ,நற்பலனை குறைச்சு கொடுப்போம்.
சுபர் ,அசுபர்:
கிரகங்கள்ள சுபர் பாபர்னு பிரிக்க ரெண்டு மெத்தட் இருக்கு. ஒன்னு நைசர்கிக்கம். அதாவது பை நேச்சர். இதன் படி
சூரியன், தேய் பிறை சந்திரன், செவ், ராகு, சனி,கேது, பிற பாவிகளோடு சேர்ந்த புதன்லாம் பாவிகள்
வளர் பிறை சந்திரன், குரு, பாவிகளோடு சேராத புதன், சுக்கிரன் இவிகல்லாம் சுபர்கள்
லக்னாத் சுபத்வ பாபத்வம்:
ஒவ்வொர் லக்னத்துக்கும் தனிப்பட்டு பாவர் ,சுபர் உண்டு. இது எல்லா பஞ்சாங்கத்துலயும் உண்டு. முக்கியமா ஆற்காடு வே.சீதாராமய்யர் பஞ்சாங்க்ததுல இருக்கும். ஒரு ஓட்டு ஓட்டிருங்க
சனி தசை
யாருக்கு அவர் வாழ் நாளில் சனி தசை முழுக்க ( 19 வ) நடைபெறுகிறதோ அவருக்கு மறுபிறவி கிடையாது என்று நம்பிக்கை உள்ளது. நல்லதோ கெட்டதோ முழுக்க முழுக்க அனுபவித்துவிடுவார்கள் என்பதால் இந்த நம்பிக்கை
ஒரே கிரகத்துக்கு ரெண்டுவித ஆதிபத்யம்:
ஒரே கிரகத்துக்கு ரெண்டுவித ஆதிபத்யம் ஏற்படும் போது அது முதல் பாதியில் (ஆயுளில்/ தன் தசையில்) தீமையையும் அடுத்த பாதியில் நன்மையையும் செய்கிறது