Monday, March 1, 2010

மறுபடி அவள் : தொடர் கதை

முன் கதை சுருக்கம்

என் பேரு முகேஷு வயசு22.டிகிரி முடிச்சுட்டு 'ச்சும்மா' இருந்த நேரம் அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் தன்னோட டூர் பஸ்ஸுக ரெண்டையும் பார்த்துக்க கூப்டாரு. நல்லாவே டெவலப் ஆச்சு. எனக்கு வெளி வேலைல இருக்கிற ஆர்வம் க்ளரிக்கல் வேலைல இல்லாததை பார்த்த ஓனர் மாயாவ எனக்கு உதவியா அப்பாயிண்ட் பண்ணார். 
மாயா என்னைவிட பத்து வயசு பெரியவ. குஷ்பு தனமான ஃபிசிக். ரொட்டீன் உமன் இல்லே வேலைல எமன். அவளுக்கு 4 அக்கா எல்லாரும் மேரீட். அவியளுக்கு கல்யாணம் பண்றதுக்குள்ளாற அப்பா சலிச்சு போயி செத்துப்போயிட்டாரு. மிச்சம் மீதி நிலத்தையும், எஃப்,டிக்களையும் மாயா பேருக்கு வச்சிட்டார். இதனால அக்கா புருசங்க 4 பேரும் இவளை கவுத்து சொத்து பணம் அடிச்சுரலாம்னு பார்க்க இவ டவுனுக்கு ஜூட்.
போது போறதுக்கு நம்ம டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலை. சபார்டினேட்டா வீக் எண்ட்ல மீட் பண்றதுண்டு. நேரு ஸ்ட்ரீட்ல அறையெடுத்து தங்கியிருக்கா. அறைனு சொன்னது அவ தனியா இருக்காங்கற கான்செப்ட்ல . சின்ன வீடுன்னு சொல்லலாம். ( பாக்யராஜ் படத்துல வர்ர வீடில்லங்கண்ணா).
எனக்கு அம்மா 1984லயே டிக்கட்.பாலச்சந்தர் தனமான அப்பா, ரெண்டு அண்ணன் ,ஒரு தம்பி, பொம்பளையிலயே சேர்த்தியில்லாத பாட்டி. ஊர்ல நத்தம், நாடோடி,புறம்போக்கு ,ப்ளாக் டிக்கட் எல்லாத்தோடயும் டச். அப்பப்ப ரீஃபில் பண்ணிக்கிறதுக்காக பலான வீடுகள். ஒரு நாள் ஞா கிழமை மாயாவோட அறைக்கு போறேன். வாயில் நுரை. பக்கத்துல பூச்சி மருந்து பாட்டில்.
 எப்படியோ ஒரு போலி டாக்டர்,அவர் மூலமா கவர்ன்மென்ட் ஹெட் நர்ஸு மூலமா காப்பாத்தி வுட்டாச்சு. என்னம்மா விசயம்னு கேட்டா பழைய காதலனாம். மாயாவோட அப்பா பார்த்த சம்பந்தம் பெண் பார்க்க வர்ரப்பல்லாம் மொட்டை கடிதாசு போட்டு கெடுக்கிறது வேலை. தங்கச்சிக்கு முடியாம இவர் பண்ணமாட்டாராம்.அதுவரை மாயா வாயாம இருக்கனுமாம்.
மாயா மாதிரி கேரக்டர் அவனை எப்படி டைஜஸ்ட் பண்ணிக்கும்.தங்கச்சி கல்யாணத்துக்கு செக் கிழிச்சு கொடுத்து "ஓடிப்போடா"ன்னிருக்கா. அந்த நாய் வெளில போய் " நீ என்னை வச்சிருக்கிறதாவும் என் மேல ஆசைப்பட்டு செக் கொடுத்ததாவும் ஊரெல்லாம் சொல்லுவேன்னு" சொல்ட்டு போக மாயா தற்கொலை முயற்சி.
பாபுரெட்டி ஆட்கள் துணையோட மாயா கிராமத்துக்கு போயி மேற்படி நாயை தூக்க முயற்சி. கிராமத்தாளுங்க எங்களை மரத்துல கட்டி வச்சு செமை காட். மாயா ஜீனும், கார்ட்டூன் போட்ட பஞ்சு மிட்டாய் டீ ஷர்ட் ,சம்மர் கட்டுனு என்னை இம்சிக்க நானும் ஓஞ்சு போன்னு ஈடுகொடுக்க படக்குனு முகத்தை வாரி நெஞ்சுல அணைச்சுக்கிட்டா. நான் பேசாம எங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்கயேன். அந்தாளும் விடோயர்தான்னேன்...இப்ப தொடர்ந்துபடிங்க
இன்றைய கதை:
நான் "மாயா ! எங்கம்மா 1984லயே செத்துட்டாங்க. கவர்ன்மென்ட் எம்ப்ளாயியா இருந்தாலும், ரிலீஸிங்க் அதாரிட்டியா இருந்தாலும் எங்கப்பா ஹானஸ்ட் மேன். பாவம் மாவட்டம் மாவட்டமா தூக்கியடிச்சாங்க. எங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்ந்ததை என்னால பார்க்கவே முடியாம போயிருச்சு. அவரு சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வரவும் எங்கம்மா யூட்ரஸ் கேன்சர் வந்து செத்துப்போகவும் சரியா இருந்தது. பேசாம எங்கப்பாவ கல்யாணம் கட்டிக்கிறியா ' ன்னேன்.

கொஞ்ச நேரம் முறைச்சு பார்த்த மாயா " என்ன உளர்ரே.. உனக்கு அம்மா வேணம் அவ்ளதானே ...வாடா செல்லம் ! என் கன்னுக்குட்டியில்லே"ன்னு என்னை தன் நெஞ்சோட அணைச்சிக்கிட்டா..

ஒரு கணம் பிரபஞ்சமே அம்மாவாகி என்னை அணைச்சிக்கிட்டதாய் ஒரு ஃபீலிங், அந்த அணைப்புக்கோட்டைக்குள்ள இருக்கிற வரை வேறெந்த சக்தியும் என்னை ஒன்னும்..ஒன்னும் பண்ணமுடியாதுன்னு தோணுச்சு. இருந்தாலும் என்னை ஈஸி பண்ணிக்கிட்டேன்.

"மாயா ! இத்தனை நாள் நான் பார்த்த மாயாவ இப்ப நான் பார்க்கலைனு நினைக்கிறேன்.. உனக்காக அடி வாங்கினேன்னு இப்படி பிஹேவ் பண்றியா? நான் அடி வாங்காத ஏரியாவே கிடையாது. பார்க்க கொஞ்சம் சுமாரா வேற இருக்கேனா..எந்த ஏரியாவுக்கு எந்த வேலையா போனாலும் சரி நான் ஏதோ அந்த ஏரியால ஏதோ ஃபிகரை கரெக்ட் பண்றதுக்கு வந்ததா மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு வேணம்னே வம்பிழுப்பானுங்க..ஆரம்பத்துல எனக்கு அசல் விஷயம் தெரியாது. நாமதான் வந்த வம்பை விடறதில்லையே ..மல்லுக்கு நின்னு நல்லா வாங்கி கட்டிக்கிட்டு வருவன். நீ ஒன்னம் ஸ்பெஷல் கேஸ் கிடையாது .டோன்ட் ஃபீல் கில்ட்டி"

"முகேஷ்! என் கிட்டே தங்கச்சி கல்யாணத்துக்குன்னு ஒரு லட்ச ரூபா செக் வாங்கிட்டு போனானே .. மாயா என்னை வச்சிருக்கா ..என் மேல ஆசைப்பட்டு செக் கொடுத்தான்னு ஊரெல்லாம் சொல்லப்போறதா சொன்னானே அவனுக்கு வயசு 28 .. எவளோ என்னமோனு கூட தெரியாம ஜஸ்ட் நான் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணினேன்னு உ.வசப்பட்டு பெரிய பிஸ்தா மாதிரி டான் கிட்டே எல்லாம் பேசி,ஆள் படைய கூப்பிட்டுக்கிட்டு போய் அடி வாங்கிட்டு வந்து நின்னயே உன் வயசு 22. இந்த ஆறு வருஷத்துல என்னாச்சு ? எதிர்காலத்துல நீ கூட அப்படி மாறிடுவயோனு ஒரு பயம் வந்துருச்சு. உன்ல இருந்த அந்த ஃப்ரெஷ்னெஸை , கள்ளம்,கபடமில்லாத,மனசுல கணக்கில்லாத தன்மைய நீ கூட இழந்துருவயோனு எனக்கு பயம் வந்துருச்சு..அதனாலதான் உன்னை என் குட்டித்தம்பியா இறுக்கி என் கூடவே வச்சிக்கிடனும்னு ஒரு எண்ணம் வந்தது. நீ அந்த ஜீனும்,பஞ்சுமிட்டாய் பனியனும், சம்மர் கட்டுமா வந்து நின்னயா காலாகாலத்துல எனக்கும் ஒரு கல்யாணமாகியிருந்தா, நான் ஒரு ஆண்குழந்தைய பெத்திருந்தா அது இப்படி வளர்ந்து நின்னிருக்குமேனு ஒரு எண்ணம் மின்னல் மாதிரி வெட்டுச்சு "

"பைத்தியம் ! பைத்தியம்! வயசுக்கும் ,புத்திக்கும் சம்பந்தமே கிடையாது. கலைஞர் 60 வயசுல ஒரு கவிதை வரி எழுதினாரு - இரு பந்து ஆட ஒரு பந்து ஆடும் பாவையர்- தெலுங்குல வேட்டூரினு ஒரு பாடலாசிரியர் இருக்காரு அவரு 55 வயசுல தான் முதல் பாட்டை எழுதினாரு. இன்னைக்கும் அஞ்சு வயசு பையன்லருந்து அறுபது வயசு கிழவாடி வரைக்கும் அவர் எழுதின பாடல் வரிகளை முணுமுணுக்கிறாங்க "

"ஹும்.. தத்துவம் சொல்ல வந்தா கூட பலான சமாச்சாரம் தவிர வேற ஏதும் ஸ்ட்ரைக் ஆகாதே"

" சரி தெலுங்கு கவிஞர் ஸ்ரீ ஸ்ரீ புரட்சிகரமா கவிதைகள் எழுதிக்கிட்டிருந்த சமயம் ஃப்ரெண்ட்ஸ் பேதிக்கு குடுக்கிறாங்க. பார்த்துப்பா தூக்கி உள்ள போட்ர போறாங்கனு. அப்போ அவர் என்ன சொன்னாரு தெரியுமா? அட போய்யா.. ஜெயில்ல வச்சா சோத்து பிரச்சினை தீரப்போகுது, தூக்குல போட்டுட்டா வாழ்க்கை பிரச்சினையே தீர போகுது அவ்ளதானேனாரு. அப்போ அவருக்கு என்ன வயசுங்கறே"

"என்னமோ முகேஷ் .. கொஞ்சமா பானிக் ஆயிட்டேன் போல "

"பானிக்குமில்லே.. ஒரு இழவுமில்லே..உண்மையான பொம்பளையா நடந்துக்கிட்டே..ஒரு பெண் குழந்தை பிறக்கும்போதே தாயாத்தான் பிறக்குது. தாயாத்தான் உணருது.. தாயா இருக்கத்தான் விரும்புது . உடலுறவுல கூட தன் பார்ட்னரை குழந்தையாக்கி தன் கருப்பைக்குள்ள பத்திரப்படுத்திக்கத்தான் துடிக்குது

ஆர்காசம் தான் நோக்கம்னா நூத்துக்கு எண்பது ஆம்பளை இந்த விஷயத்துல டம்மி பீசு"

"ஏய் என்ன இது என்னென்னமோ பேசறே.. இதெல்லாம் எங்கனாச்சும் படிச்சதா?"

"படிச்சதெல்லாம் கரெக்டுன்னும் சொல்லமுடியாது.. அதே சமயம் படிச்சதெல்லாம் ராங்குன்னும் சொல்ல முடியாது. இதெல்லாம் நான் படிச்சு வாழ்க்கைல அப்சர்வ் பண்ணி எனக்கு நான் ப்ரூஃப் பண்ணிக்கிட்ட விஷயம் தான்'

" நீ சொல்றது தப்போன்னு தோணுது.. நான் கூட ஏதோ உ.வசப்பட்டு ஒரு கணம் அப்படி நடந்துக்கிட்டேனே தவிர என்னை நான் ஒரு தாயா உணர்ந்ததே இல்லை"

"உன்னை நீ தாயா உணர்ந்துட்டா ..எவனையும் காதலிக்க முடியாது, உடலுறவுக்கும் வாய்ப்பிருக்காது. நீ உண்மையான தாயா மாற முடியாது..அதனாலதான் பெண் தன்னை வெறும் பெண்ணாவே எக்சிபிட் பண்ண துடிக்கிறா..ஆனாலும் இயற்கை குணம் சடக்குனு வெளிப்பட்டுருது.. மேலும் இந்த ஆணாதிக்க சமூகம் பெண்ணை போகப்பொருளாத்தான் பார்க்குது. அவளுக்குள்ள இருக்கிற தாய் வெளிப்பட்டுட்டா அவளை வணங்கத்தான் முடியுமே தவிர பக்கத்துல படுத்துக்க முடியாது."

"ஓகே நீ சொல்றது லாஜிக்கலாதான் இருக்கு. அதே நேரம் ஆண் குழந்தை தன்னை எப்படி உணருது?"

"முதல்ல பெண் குழந்தையோட கதைக்கு ஃபினிஷிங் டச் குடுத்துர்ரன்.. பெண் குழந்தைகள் ரெண்டு விதம். மெச்சூர்ட் பேபி தன்னை பை பெர்த் தாயா உணரும். ஆனால் சில பெண் குழந்தைகள் ஜெனட்டிக் காரணங்களால் அன் மெச்சூர்டா இருந்து தன்னை குழந்தையாவே உணரும். இவிக தான் கிழக்கட்டைங்க ஆன பிறகும் குழந்தைங்க மாதிரி கொஞ்சி கொஞ்சி பேசுவாங்க.. இவிக தான் வயசு வித்யாசம் அதிகமா உள்ள ஆண்களை விரும்புவாங்க. சம வயசு இருக்கிற மாப்பிள்ளை அமைஞ்சா சின்னவயசுல தங்க அப்பனை எப்படி இம்சை பண்ணாங்களோ அந்த மாதிரி இம்சை பண்ணுவாக"

"முகேஷ் ! உண்மைய சொல்லு இதெல்லாம் நீ ராத்திரியோட ராத்திரியா பை ஹார்ட் பண்ணிட்டு வந்த மாதிரி இருக்கு"

"பார்த்தயா.. உருக்கண்டு எள்ளாமை வேண்டும்னு வள்ளுவர் சொன்னாரே .. என்னோட லீன்பாடி,அரும்பு மீசை இதெல்லாம் மறந்துரு. இந்த படைப்பே என் மூலமா தன் ரகசியங்களை வெளிப்படுத்துதுன்னு நினைச்சுக்க.. ஒவ்வொரு மனிதமனமும் ஒரு பாற்கடல் மாதிரி . அதை நல்ல எண்ணங்கள் என்ற தேவர்களும், கெட்ட எண்ணங்கள் என்ற ராட்சதர்களும் சேர்ந்து கடைவாங்க. முதல்ல விஷம் ப்ரொட்யூஸ் ஆகும். அதுக்கு பயந்து ஓடிராம தொடர்ந்து கடைஞ்சா அமுதம் வெளிப்படும். புஸ்தக படிப்புங்கறது மத்து மாதிரி , அதை பத்தின யோசனை கயிறு மாதிரி"

"டே டே என்னடா இது தத்துவமா அள்ளி விடறே. கண்ணா ! இதுக்கெல்லாம் அதுக்கேத்த வயசு வரும் .அப்போ பார்த்துக்கலாம்.. தற்சமயத்துக்கு ஒரு தம் போடு"

சிகரட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரம் நாளைக்கு ஆஃபீஸ்ல செய்யவேண்டிய வேலைகள் இத்யாதி பத்தி பேசிட்டு பேசிக்கிட்டே ப்ரிப்பேர் பண்ண டிஃபனை சாப்டுட்டு வீட்டுக்கு புறப்பட்டேன்.

மறு நாள் ஆஃபீஸ் வந்து உட்கார்ந்ததும் போன் . ஓனர்தான் பேசினார். "யப்பா முக்கேஷு! உங்க ஓனரம்மா மெடிக்கல் செக்கப்புக்கு மெட் ராஸ் அப்போலோ போகனும். கூட போய் வர்ரியா"ன்னார்."என்ன பிரச்சினைன்னா "கர்பப்பைல கான்சரா இருக்குமோனு லோக்கல் டாக்டர் சந்தேகப்படறாருப்பா"ன்னாரு.

" நேர்ல வரேன்"னிட்டு மாயாவுக்கு சொல்ட்டு ஓனர் வீட்டுக்கு போனேன். ஓனருக்கு பாவம் பி.பி,.ஷுகரு,பைல்ஸ் எல்லாம் உண்டு. வயசாகுதுங்களே. ஓனர் பையன் கேஷ் வாங்கி கல்லால போட்டு கணக்கு வச்சிக்கத்தான் லாயக்கு.

"கர்பப்பைல கான்சருன்னு எந்த டாக்டரும் சந்தேகப்படமாட்டான் சார். பயாப்சி பண்ணா ஒரு நிமிசத்துல தெரிஞ்சு போற விஷயம். கன்ஃபார்முன்னுதான் அர்த்தம். பேசாம கர்பப்பைய நீக்கிர்ரது பெஸ்ட். எங்கப்பா இப்படிதான் செகண்ட் ஒப்பீனியன் ,மயிரு ஒப்பீனியன்னு எங்கம்மாவ தாரவாத்துட்டார்"ன்னு நிதானமா சொன்னேன்.

"அப்ப எப்படிரா கூட ஒரு பொம்பள இருந்தா நல்லது. இந்த பொம்பள சொந்தக்காரவுக ஒருத்தரையும் கிட்டே சேர்க்காம வாழ்ந்துட்டா இப்ப வான்னா எவள் வருவா" ன்னிட்டு ஃபீல் பண்ணாரு. நீங்க நம்ம ஆஃபீஸ்ல உக்கார்ந்து பார்த்துக்கறா மாதிரியிருந்தா மாயாவும் நானும் மெட்ராஸ் போறோம்"னேன்.

"டே டே..அவ இருக்கப்பட்டவடா.. அவள் அப்பன் பெரிய லேண்ட் லார்டு..இவ ஏதோ போது போகாம வேலைக்கு வரா"ன்னிட்டு பதறினார். கேட்டுப்பார்க்கலாம் சார். வந்தா சரி வரலேண்ணா அவள் ஆஃபீஸ பார்த்துக்கட்டும். நான் வேற யாராச்சும் பொம்பளைய பிக்கப் பண்றே"ன்னேன்.

ஓனர் சிரிச்சிக்கிட்டே என்னடா பாஷ இது.. சரி சரி போன் போட்டு கேளுன்னாரு. ஓனர் வீட்லருந்தே போன் போட்டேன். மாயாவுக்கு விஷயத்தை சொன்னேன். "சரி"ன்னா. ஓனர் காலண்டர் பார்த்து சரி ராகு காலம் கழிச்சு புறப்பட்டுரலாம் .. நீ போய் மாயாவை அனுப்பி ரெடியா இருக்க சொல்லு போறப்ப பிக்கப் பண்ணிக்க"ன்னாரு

ஓனர் "பிக்கப்"ங்கற வார்த்தைய சிரிச்சிக்கிட்டே சொல்லிட்டு பார்த்துரா மெட்ராஸ் சிட்டி அங்கன ஒழுங்கா இருக்கனும்.. அப்பறம் நான் உங்கப்பனுக்கு பதில் சொல்ற மாதிரி பண்ணிராதேன்னாரு.

ஆஃபீஸ் போனேன்." மாயா ! நீ கிளம்பு ரெண்டு மூணு நாள் தங்கற மாதிரி பாக் பண்ணிக்கிட்டு ரெடியா இரு நான் கார்ல வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்"னேன். " அதுக்கு அவள் "ஏய்.. என்னை பத்தி என்னதான் நினைச்சிருக்கே.. ஓனர் வீட்ல இருந்து போன் பண்றே.."ன்னு சீறினாள்.

(தொடரும்)