Friday, November 30, 2012

ராகு கேது பெயர்ச்சி : தனுசு மகரம்

அண்ணே வணக்கம்ணே !

நாலாங்கிளாஸ்லயே எட்டணா விலையில பலான புஸ்தவம் படிச்சு தொலைச்சுட்டதாலயோ என்னமோ இந்த 45 வயசுக்கே அபேத பாவம் , ஸ்தித ப்ரக்ஞத்வம் ,சூன்ய வாதம்னு என்னென்ன இழவோ மனசுல அலையடிக்குது.

கடவுள்,கிரகங்கள் இப்படி எல்லாமே நம்மை கழட்டி விட்டுட்ட மாதிரியே ஒரு ஃபீலிங்.  மைண்ட் ப்ளாங்கா இருக்கிறதால சனங்களோட எண்ணங்கள் எல்லாம் டெலிபதியில வந்து மோதறதை உணரமுடியுது. எது ஆரோடதுன்னு தெரியலின்னாலும் அந்த எண்ணங்களுக்கு ரெஸ்பான்ட் ஆக முடியுது.

மனித குல பிரச்சினைகளுக்கான தீர்வெல்லாம் நமக்குள்ளயே இருக்குன்னு புரிஞ்சாலும் - கை பம்புல தண்ணி இறைக்கிறதுக்கு மிந்தி கனெக்டிவிட்டிக்காக ஒரு செம்பு தண்ணி ஊத்திட்டு அடிக்கிறாப்ல வெளிய இருந்து சில  தீர்வுகளை தந்தே ஆகனும்.

மத்த தேசங்களை பத்தி  நமுக்கு பெருசா தெரியாதுங்ணா. இந்தியாவுலயே - அட ஆந்திராவுலயே -அட சித்தூர் ஜில்லாவுலயே - அட சொன்னா வெட்க கேடு சித்தூர் டவுன்லயே நம்ம கால் படாத பிரதேசங்கள் மஸ்தா கீது.

நாம  ஆராய்ச்சிக்கு எடுத்துக்கிட்டதெல்லாம் ராண்டம்  ஸ்பெசிமன் தான்.இப்பம் சனம் ஃபேஸ் பண்ற பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் வெளிய இருந்தாலும் தீர்வு மட்டும் உள்ளதேன் இருக்குது. அதை வெளிய கொண்டுவர கொஞ்சம் ஸ்தூல பிரச்சினைகளுக்கு தீர்வு தந்தே ஆகனும் பாஸூ..! பிருஷ்டம் எட்டற வரை தூக்கி விட்டுட்டா  அவனே ஏறிருவான்.

வெறுமனே சங்கல்ப்ப பலத்தை வச்சே  ஆப்பரேஷன் இந்தியா 2000  ஐ அமலாக்கிரமுடியும்னு தோனுது. நம்ம அதிஸ்டமோ துரதிஸ்டமோ நம்முது கடக லக்னமாச்சா இன்னைக்கு இருக்கிற வில் நாளைக்கு இருந்து தொலைய மாட்டேங்குது.

அடுத்து இவனுக மேல நமக்கு சுத்தமா நம்பிக்கை கிடையாது ரிப்பேரே பண்ண முடியாத அளவுக்கு அரசு இயந்திரத்தை ரிப்பேர் பண்ணிருவாய்ங்களோன்னு ஒரு பதைப்பு வேற இருக்கு.

சரி சரி இவன் புலம்ப ஆரம்பிச்சுட்டான்யான்னு பக்கத்தை மூடிட்டு போயிரப்போறிங்க. ஒரே ஒரு ஆந்திரா மசாலாவ பார்த்துட்டு உடனே  ராகு கேது பெயர்ச்சி பலனுக்கு போயிரலாம்.

ஆந்திரால எஸ்.சி.எஸ் டி சப் ப்ளான் கொண்டு வந்திருக்காய்ங்க. ரயில்வேக்கு தனி பட்ஜெட் போடறாப்ல . எஸ்.சி.எஸ்.டிக்கு தனி பட்ஜெட் போடப்போறாய்ங்களாம். இது 10 வருசத்துக்கு தொடரும். (இதே அரசு இயந்திரத்தை வச்சுத்தானே செலவழிக்க போறாய்ங்க -பேசாம உலகத்துலயே லஞ்ச ஊழல் ரேட் குறைவா இருக்கிற  ஜப்பான் போன்ற   நாடுகளோட இணைந்து எதையாச்சும் செய்யலாம்)

தனுசு: ( 5-11)

உங்களுக்கு கேது அஞ்சுக்கும் - ராகு 11 க்கும் வர்ராய்ங்க.  கடந்த ஒன்னரை வருசமா 6-12  ல  இருந்ததோட ஒப்பிட்டா இது ரெம்பவே பிரதிகூலம் தான். அஞ்சுங்கறது ரெம்ப சென்சிட்டிவான பாவம். (புத்திபாவம்)

புத்திமான் பலவான்.

KNOWLEDGE IS POWER

இந்த கான்செப்ட்ல ஆயிரத்தெட்டு கொட்டேஷன் எடுத்து விடலாம்.  இப்படியா கொத்த புத்திஸ்தானத்துல கேதுவர்ரச்ச நீங்க வேதாந்தம் , தியானம்,யோகம்னு டைவர்ட் ஆயிட்டா ஓகே. அப்படியல்லாது லவ்ஸ்,கண்ணாலம், பார்ட்டின்னு இருந்திங்கனா ஆப்புதேன்.

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் - மாவு விக்க போனா காத்தடிக்குது கணக்கா கடுப்படிக்கும்.

இது புத்ர ஸ்தானம். உங்க வாரிசுகள் வேதாந்தம் , தியானம்,யோகம்னு டைவர்ட் ஆயிட்டா ஓகே. அப்படியல்லாது லவ்ஸ்,கண்ணாலம், பார்ட்டின்னு இருந்தாங்கனா  நாறிரும்.

தென்னைய பெத்தா இள நீரு
பிள்ளைய பெத்தா கண்ணீருன்னு அவதிபடவேண்டி வரும்.

தோன்றிற்புகழோடு தோன்றுகன்னாய்ங்க. ( நிருபர் பசங்களுக்கு கவர்ல காசு கொடுத்துல்லாம் பெயர் புகழை வாங்க முடியாதுன்னு அந்த காலத்துல நம்பியிருக்காய்ங்க )

இந்த உலகமே பரிசா கிடைக்கிறதா இருந்தாலும் அவப்பேர் தரக்கூடிய வேலைய செய்யமாட்டோம்னு ஒரு பாட்டு கூட இருக்கு.

இப்பல்லாம் 40''x60" மனை கிடைச்சா போறும்.பொஞ்சாதிய விட்டுர்ரதுக்கு ரெடி சனம். கலி முத்திப்போச்சு.

நிற்க .. அஞ்சுல கேது புத்திய மாத்தி, புத்திரர்களோட மோத வச்சு, அடாத செயல் எல்லாம் செய்யவச்சு படாத பாடு படுத்திருவாரு. சாக்கிரதை.

அதே நேரம் இவர் எந்தளவுக்கு ஆப்படிக்கிறாரோ -ஆப்படிச்சு முடிக்கிறாரோ அந்தளவுக்கு 11 ல ராகு ரிலீஃப் கொடுப்பாரு. நல்லது திடீர்னு நடக்கும். ஸ்பெக்குலேஷன்,வின்ட் ஃபால் கெயின்ஸ் இத்யாதிய எதிர்பார்க்கலாம்.

வேறு மொழி பேசுவோர், வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் உதவலாம்.சினிமா,லாட்டரி,வைன்ஸ் ,இம்போர்ட்,எக்ஸ்போர்ட் மாதிரியான ராகு காரகங்கள் அனுகூலம் தரலாம்.

11 ல் சனி ராகு:

2-3 க்கு அதிபதியான சனியோட ராகு சேர்ரதால பணம் திருடு போகலாம்,கொடுத்து ஏமாறலாம். ஃபுட் பாய்சன், மெடிக்கல் ரியாக்சன் நடக்கலாம். விஷ பீதி ஏற்படலாம். வாக்கு தவற நேரலாம்.கொடுத்த வாக்கை நிறைவேற்ற ரெம்பவே லாஸ் ஆக நேரலாம். குடும்பத்துல குழப்பம் வரலாம்.(விதவை பெண்களிடம் - ஓரப்பார்வை பார்க்கும் பெண்களிடம் எச்சரிக்கை ) கண் பார்வை கூட பாதிக்கப்படலாம்.

சகோதரர்கள் நிலை கவலைக்கிடமாகலாம்.ஆனால் இதனாலயே அவிக வழிக்கு வந்து சொத்து பிரச்சினை தீரலாம். அதே சமயம் உங்க கைக்கு வந்ததை எவன்னா லவுட்டிக்கிட்டும் போயிரலாம் டேக் கேர்.

பரிகாரம்:

நீங்களும் உங்க வாரிசும் தினசரி 1 மணி நேரம் - வாரத்துல ஒரு நாள் காவி உடை தரித்து வினாயகர் துர்கையை தியானம் செய்யவும் (அவிக உருவத்தை கற்பனை செய்தா போதும்)

மகரம்:(4-10)
உங்க ராசிக்கு  4 ல் கேதுவும் 10 ல் ராகுவும் வர்ராய்ங்க. தாய்  தினசரி 1 மணி நேரம் - வாரத்துல ஒரு நாள் காவி உடை தரித்து வினாயகர் பூஜை செய்துவந்தால் நோ ப்ராப்ளம். இல்லின்னா உடல் நலம் பாதிக்கலாம் (ஜெனரல் வீக்னெஸ்),வீடு ஒரு ஆசிரமம் போல மாறனும்.இல்லின்னா பிரச்சினை வரலாம். வாகன மேட்டர்ல வாரத்துல ஒரு நாள் சர்ச் அ தர்கா போய்வரவும்.இல்லின்னா அதுலயும் பிரச்சினை வரலாம்.

4 =வித்யா ஸ்தானம் ,கேது = ஆத்ம ஞான காரகன் .ஆகவே ஆன்மீகம் -தியானம் தொடர்பான நூல்களை படிக்கவும். ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அவை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்குது.

பத்தில் ராகு வரும்போது செய்யும் தொழில்ல புதுமைகளை புகுத்தி ஆரம்பத்துல சில சல சலப்புகளை எதிர்கொள்விங்க.

சனி+ராகு:

சனி உங்களுக்கு லக்ன+தனபாவாதிபதி. இவரோட ராகு சேர்ரதால சனி பலமிழக்கும் வாய்ப்பிருக்கு. எனவே  உடல்,உள்ள நலம் பாதிக்கலாம். (சந்தேக புத்தி சாஸ்தியாயிரும் அல்லது உங்களை சனம் சந்தேகிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க) . பாடி துவைச்சு போட்டாப்லயே இருக்கும். அதே போல பணம் ,பொருள் திருடு போறது,கொடுத்து ஏமாந்துர்ரது,வாக்கு தவறுவது, வாக்கை காப்பாத்த அதிக அளவுல நஷ்டபோறது,குடும்பத்துல குழப்பம் வரலாம்.(விதவை பெண்களிடம் - ஓரப்பார்வை பார்க்கும் பெண்களிடம் எச்சரிக்கை ) கண் பார்வை கூட பாதிக்கப்படலாம்.

பரிகாரம்:
பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வீட்டு ஹாலில் அந்த கால க்யூப் தனமான வால் பேப்பர் அ போஸ்டர் வைக்கவும்.

அடுத்த பதிவுல கும்பம்,மீன ராசிகளுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்களை பார்ப்போம்.

Thursday, November 29, 2012

ராகு கேது பெயர்ச்சி : துலாம் விருச்சிகம்


அண்ணே வணக்கம்ணே !
மேஷம் முதலான 12 ராசிகளுக்கும் 23/12/2012 அன்று  நடக்க விருக்கும் ராகு கேது பெயர்ச்சி பலனை .எழுத ஆரம்பிச்சோம்.

கடந்த பதிவுல சிம்மம் கன்னி ஓவர். இந்த பதிவுல துலாம் விருச்சிக ராசிகளுக்கான ராகு கேது பெயர்ச்சி பலனை  பார்ப்போம்.

6.துலா :(1-7)
லக்னங்கறது உங்க பாடி,மைண்ட், அப்சர்வேஷன்,  ஞா சக்தி,முடிவெடுக்கும் திறன், பொறுமை இப்படி பல விஷயங்களை காட்டும்.

கேது,ராகுன்னா தெரியுமில்லே . நிழல் கிரகங்கள். எனவே உங்க மைண்டை ஒரு நிழல் மறைச்சுரும்.

இந்த ரெண்டு கிரகமும் எங்கன நின்னாலும் அந்த பாவத்தோட காரகத்தை அப்படியே உறிஞ்சி எடுத்துரும். எந்த கிரகத்தோட சேர்ந்தாலும் அந்த கிரகத்தோட பலத்தை ஸ்வாஹா பண்ணிரும்.

ஆக ராகு லக்னத்துல நின்னதால  உங்க பாடி,மைண்ட், அப்சர்வேஷன்,  ஞா சக்தி,முடிவெடுக்கும் திறன் எல்லாம் கோவிந்தா.

ராகு சுதந்திர மனப்போக்கை தருவாரு. ஆனால் நம்ம சமூகம் கிழவாடிகளால, ஹிப்பாக்ரட்டுகளால வழி நடத்தப்படும் சமூகம். ஆகவே சமூகத்துக்கும் நமக்கும் ஒத்துப்போகாத நிலை வரும்.

காதலி,பொஞ்சாதில்லாம் இந்த சமூகத்தோட பிரதி நிதிகள் . இவிகளோடவும் ஒத்துப்போகாத நிலை வரலாம்.

ஜாதகத்துல 1-7 ல் ராகு கேது நிற்பதை  சர்ப்ப தோஷம்ங்கறாய்ங்க. இது ஜாதகரோட உடல் நலம் உள்ள நலத்தை பாதிக்கிறதோட  இன்டர் ஆக்சனை  பாதிக்கிற அமைப்பு. ஆரோடவும் ஒத்துப்போகாது .

பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம்  எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம்  துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை  வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்

கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்

சனி+ராகு:
மேலும் இவர் சனியோட ஜாய்ன் பண்ணிக்கிறாரு. ஏற்கெனவே சொன்னபடி ராகு கேதுக்கள் எந்த கிரகத்தோட சேர்ந்தாலும் அந்த கிரகத்தோட பலத்தை ஸ்வாஹா பண்ணிரும்.  சனி உங்களுக்கு 4-5 க்கு அதிபதி.

ஆகவே தாய்,வீடு,வாகனம்,கல்வி எல்லாமே நொண்டியடிக்கும். அதே போல புத்தி குழப்பம் ஏற்படும், அதிர்ஷ்டத்தை நம்பி செய்யும்  வேலைகள் ஊத்திக்கும். வாரிசுகள் விஷயத்துலயும் நாஸ்தி தான். அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பிருக்கு.

பரிகாரம்:
தாய்,வீடு,வாகனத்தை பிரிந்திருங்கள் . கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். பிள்ளைகளை பிரிந்திருங்கள் .அல்லது டிடாச்டா இருங்க. அவிக மம்மி கிட்ட கண்ட்ரோலை விட்டுருங்க. பெயர்புகழுக்கு ஆசைப்படாதிங்க. கும்பல்ல கோவிந்தா போடுங்க. அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதிங்க.திருமலை வராகஸ்வாமியை தியானம் பண்ணுங்க , துர்கையின் உருவத்தை மனதில்  நிறுத்துங்க.


8.விருச்சிகம்:(6-12)

ஆறுங்கறது சத்ரு ரோக ருணஸ்தானம் . இங்கன கேது நிக்கிறது நல்லது தான். இதனால சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண விமுக்தி (கடன் தீருதல்) ஆகிய நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

அதே நேரம் கடன் தீரனும்னா மொதல்ல கடன் ஏற்படனும் , நோய்  தீரனும்னா  மொதல்ல நோய் ஏற்படனும்ங்கற லாஜிக்கை மறக்காதிங்க.

கடந்த ஒன்னரை  வருசமா அஞ்சுல இருந்த கேது புத்திய குழப்பி -உங்க பயோ கெமிஸ்ட்ரியையே மாத்தி ரத்தத்தை கெடுத்து வச்சிருப்பாரு. அந்த மலினங்கள், ஃபாரின் மேட்டர்லாம் க்ளியர் ஆகனும்னா நோய் வந்தாகனும்.

12ங்கறது நாம செலவழிக்கிற முறையை ,தூக்கம் ,செக்ஸ் இத்யாதிய காட்டும். இங்கன ராகு இருக்கிறதால
ராகுன்னாலே நிழல்ங்கறதால மேற்படி விஷயங்கள்ள சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணவேண்டி வரலாம். ரகசியம் வெளியாகும் போது.......

தூக்கம் கெடலாம் ,வீட்டம்மாவுக்கு எங்கயோ எரிஞ்சதுன்னு வைங்க சோத்துல மண்ணு ,கில்மாவுக்கு ஆப்பு. டேக் கேர்.



பரிகாரம்:
கரிய நிற பில்லோ கவர் ,பெட் ஸ்ப்ரெட் உபயோகிக்கவும்.பெட் ரூம்ல சைனீஸ் ட்ராகன் போஸ்டர் வச்சுக்கங்க. ஒரு விதவை பெண் மலையாள பிட்டு படம் போல வலை வீசலாம் சிக்கிராதிங்க.

ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்

கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்

குறிப்பு:
இதையெல்லாம் பெட் ரூம்லயே செய்ங்க ஸ்ரேஷ்டம்.

சனி+ராகு:
ஏற்கெனவே விரயத்துல உள்ள சனியோட ராகு வந்து  ஜாய்ன் பண்ணிக்கிறாரு. ஏற்கெனவே சொன்னபடி ராகு கேதுக்கள் எந்த கிரகத்தோட சேர்ந்தாலும் அந்த கிரகத்தோட பலத்தை ஸ்வாஹா பண்ணிரும்.  சனி உங்களுக்கு 3-4- க்கு அதிபதி.

ஆகவே சகோதர வர்கத்தின் நிலை கவலைக்கு இடம் தரலாம். உங்களுக்கு சவுண்ட் பாக்ஸ்ல பிரச்சினை வரலாம். சொந்த ஊருலயே நெறய அலைஞ்சு திரிஞ்சு வேலை பார்க்கவேண்டி வரலாம். மனசுல தில்லு சாஸ்தியாகும்.  தாய்,வீடு,வாகனம்,கல்வி எல்லாமே நொண்டியடிக்கும்.

பரிகாரம்:
சகோதரர்கள் விஷயத்துல உதவுங்க. நெல்லது. அதுக்குன்னு ஜாய்ன்ட் ,ஷ்யூரிட்டில்லாம் தராதிங்க. கொடுக்கல் வாங்கல் வச்சுக்காதிங்க. காதுல கண்டதையும் போடாதிங்க. தாய்,வீடு,வாகனத்தை பிரிந்திருங்கள் . கல்வியில் அதிக கவனம் செலுத்தவும்.



Tuesday, November 27, 2012

ஜோதிடர்களுக்கு ஒரு சவால் !

அண்ணே வணக்கம்ணே !
காசு பணம் -காரிய ஜெயம் ரெண்டுக்கும் என்ன வித்யாசம் . இதுல எதுக்கு கிரக பலம் தேவைன்னு இந்த பதிவுல சொல்லப்போறேன்.

இதை அப்ஜெக்ட் பண்ண  முடிஞ்ச  சோசியருங்க அப்ஜெக்ட் பண்ணலாம். (காரண காரியத்தோட) . மேலும் கடேசியில ஒரு சவாலும்  விட்டிருக்கன். இது சோசியர்களுக்கு மட்டுமானதல்ல. சோதிட பிரியர்கள் ,சோதிட மாணவர்களும் ட்ரை பண்ணலாம் . உடுங்க ஜூட்டு .

இந்த பதிவாலே எச்சுமி பாட்டிக்கு கோவம் வந்தாலும் சரி உண்மைய சொல்லிர்ரதா உத்தேசம். அதுக்கு மிந்தி அதெப்படி எச்சுமி ஒனக்கு பாட்டின்னு கேப்பிக சொல்லிர்ரன்.

நாம கலைத்தாயின் இளைய மகன் (யோவ் ! 45 வயசுக்கு இளையமகனான்னு கூவாதிங்க. நான் சொல்றது க்லைத்திறன் & சீனியாரிட்டிய பொருத்து) கலைமகள் ஆரு? பிரம்ம தேவரோட வைஃப். பிரம்மதேவன் ஆரு? லார்ட் விஷ்ணுவோட தொப்புள் கொடியிலருந்து வந்தவரு.(ஆண் கர்பம் தரிக்கிறதெல்லாம் இப்பம் சகஜமாயிருச்சு பாஸு.. ) அவரோட வைஃபுக்கு பிள்ளை நாம.  நமுக்கு  அவரோட அப்பா தாத்தா தானே. அவரோட வைஃபான எச்சுமி பாட்டி தானே.

நம்மில் நெறைய பேருக்கு காசு பணமும் - காரிய ஜெயமும் வேறன்னு உறைக்கறதே இல்லை. மொதல்ல காசு பணம் வந்துரட்டும் பிறவு காரியத்தை நடத்திக்கலாம்னு மயங்கறோம்.மேட்டர் இன்னாடான்னா காசு பணம் வேற காரிய ஜெயம் வேற.

எப்படியா கொத்த தரித்திரம் பிடிச்ச ஜாதகத்துக்கும் 365 நாளும் காசு வர்ரதுக்கு ஒரு ஒத்தையடிப்பாதையாச்சும் நிச்சயம் இருக்கு.ஆனால் நாம என்ன பண்றோம்னா நம்ம ரோட்டீனை -ஈகோவை - காப்பாத்திக்கிறதுலயே ஜாதகத்துல உள்ள கிரகபலத்தை எல்லாம் விரயமாக்கிர்ரம்.

நம்ம நண்பர் ஒருத்தரை பத்தி அப்பப்போ ரெஃபர் பண்ணிட்டு இருப்பம். ( அன்மேரீட் -செட்டியார் - ஞா வருதா). பார்ட்டிக்கு  தனுர் லக்னம்.லக்னத்துல சனி .  . சுக்கிரன் உச்சம்..லக்னத்துல சனி இருந்தா சாக்கடை ஓரம் ,லாக்கப், ஜெயிலு, தரித்திரம் எல்லாத்தையும் பார்க்கனும். சுக்கிரன் உச்சம்ங்கறதால லக்சரியா வாழனும். (கில்மா உட்பட)

மொத இன்னிங்ஸ்ல வாழ்வாங்கு வாழ்ந்தப்பயும் கடையத்தான் டெக்கரெட் பண்ணி அனல் காட்டிக்கிட்டிருந்தாரே தவிர  மாடியில் உள்ள பார்ட்டியோட ரெசிடென்ஸ் சனி காரகம் தேன். 

ரெண்டாவது இன்னிங்ஸ்ல பெட் ரூம், கிச்சன், சாமி அலமாரி வரை சுக்கிர காரகமாக்கிக்கிட்டாரு. செட்டியாருக்கு வெள்ளி தெரியும், தங்கம் தெரியும், கல்லு தெரியும், மரத்தை பத்தி தெரியாதே. கார்ப்பென்டர் அவர் வசதிக்கு என்னென்னமோ அகட விகடம்லாம் செய்துக்கிட்டிருந்தாரு. நாம கண்டுக்கிடலை (பிசி ஆச்சே) உதாரணமா ப்ளைவுட்ல சாமி அலமாரி அடிச்சு அதுக்கு பிரைமர்/பெய்ண்டு எதுவும் அடிக்காம வார்னிஷ் அடிச்சு விட்டிருக்காரு. கதவெல்லாம் கீல் உதிர்ந்து தொங்கிக்கிட்டிருக்கு.  ஹாலை டச் பண்றதுக்குள்ள கார்ப்பென்டர் டிக்கெட் போட்டுட்டாரு. ஜாமான் வாங்கினது -கார்ப்பென்டருக்கு கடனா கொடுத்தது எல்லாம் சேர்த்தா பெரிய ரூவா ரெண்டு ஆயிட்டிருந்தது .

பார்ட்டியோட ராசி மீனம் . ( மீனத்தில் சந்திரன் - தனுர் லக்னத்து அஷ்டமாதிபதி ஆரு? சந்திரன் -இவர் உச்சமான சுக்கிரனோட சேர்ந்து 4 ல் )  சுக்கிரன் = லக்சரி சந்திரன் =மரணம்.

போன வருசம் தீபாவளி லெச்சுமி பூஜைக்கு எச்சுமி சிலை செய்யவச்சதுல சிலை செஞ்சவரு டிக்கெட்டு போட்டுட்டாரு.(சந்திரன் அஷ்டமாதிபதிங்கற பாய்ண்டோட சனி = ப்ரேதாத்மாக்களுக்கு காரகர்)

டெக்கரட்ல விடுபட்டு போன ஹால் எப்படி இருக்கும்னா குப்பை பொறுக்கறவிகல்லாம்  ஒரு மெகா செமினாருக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துக்கிட்டு -லக்கேஜோட போனா அந்த  கோச் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். போறச்ச வரச்ச மூட்டைய நகர்த்தி வழி பண்ணிக்கிட்டு வரனும் போகனும்.

போன வருசம் செய்த எச்சுமி சிலை மூளியாகி - ஊனமுற்றோர் ஆசிரம் கணக்கா தயாராயிருச்சு. நண்பர் கோவில்ல வச்சுரலாம். ஆத்துல போட்டுரலாம்னு சொன்னாரு. நாம நமக்கு ஒரு சான்ஸ் கொடுக்க சொல்லி வாங்கிட்டு வந்து என்னென்னமோ தகிடு தத்தம்லாம் பண்ணி ஃபில் அப் தி பளாங்ஸ் எல்லாம் செய்து மறுபடி அதை சிலையாக்கி - ஆர்ட்டிஸ்டை கூட்டி வந்து பெய்ண்டிங் எல்லாம் செய்து நம்ம ஊட்லயே வச்சிருந்தம்.

தீபாவளி பூஜை ஏற்பாடு விசயமா மாடிக்கு போயிருந்தப்பத்தேன் ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்ம் மாதிரி இருந்த ஹாலை பார்த்தோம்.

என்னய்யா இது ரங்க நாதன் தெரு மாதிரி இருக்கு . எலி கிலி செத்து வச்சா தேடவே மாசம் ஆகும் போலன்னு சொன்னம்.

நம்ம வாய் முகூர்த்தம் நெஜமாலுமே ஒரு எலி செத்து வைக்க - அதை கண்டு பிடிச்சு ஒழிச்ச பிறவு  ஹால்ல ஷெல்ஃப் அடிச்சு  மூட்டைகளை அதுக்கு ஷிப்ட் பண்றதா முடிவு பண்ணோம்.

நமுக்கு தேன் ஆணியடிக்க தெரியுமே. செட்டியார் வீட்டு பின்னாடி கொஞ்சம் இடம் வேற வேக்கன்டா இருக்கு.

ஒன்னுக்கு எட்டு ரீப்பர் வாங்கிட்டு வந்து ரெண்டரைக்கு அஞ்சுல ஒரு ஷெல்ஃப் அடிச்சுட்டம்.  தாளி அதை மேலுக்கு தூக்கனுமே .கதவெல்லாம் ரெண்டரை அடி அகலம் கூட இல்லை. என்னங்கடா இதுன்னு நெடுக்க வெட்டி ஒன்னை ரெண்டாக்கிட்டம்.  மறுபடி தூக்கறோம் உச்சி இடிக்குது . மேல் அறை வரை வெட்டி எடுத்து ரெண்டு பெஞ்சாக்கிட்டம்.

ரெண்டு ஷெல்ஃப் -ரெண்டு பெஞ்சை தூக்கி ஹால்ல போட்டு மூட்டை முடிச்சையெல்லாம் சார்ட் அவுட் பண்ணி குப்பைய கழிச்சு எல்லாத்தையும் தூக்கி அடுக்கினதுல ஹாலே லைப்ரரி மாதிரி ஆயிருச்சு.

மொத்தமா என்னடா செலவுன்னு பார்த்தா ரீப்பர் ஒரு ரூ 350 நம்ம அசிஸ்டென்டுக்கு பத்தா ரூ 100 , நெடுக்க வெட்ட மிஷின் வாடகைக்கு எடுத்ததுல ரூ.50 ஆணி ,புஷ், எல் க்ளாம்ப எல்லாம் சேர்த்து ஒரு ரூ.100. ( நம்ம உழைப்பு ? ஆல் ஃப்ரீ - அப்பப்போ செட்டியார் பின்னாடி வந்து டீ  கொடுத்து ஒரு சிகரட் கொடுப்பாரு ) ஆக ரூ.600 செலவுல  ரெண்டு ஷெல்ஃப். ரெண்டு பெஞ்ச்.

செட்டியாருக்கு ஒரே குஜிலி ஆயிருச்சு. நீ இம்மாம் பெரிய வேலை காரன்னா ஒன்னை வச்சே எல்லாத்தையும் முடிச்சுருப்பனேன்னாரு.

அப்பம் நாம சொன்னம்." செட்டியார் ! .. துட்டை  மட்டும் வச்சா வேலை முடிஞ்சுரும்னு  நினைக்காதே. வேலை முடியற நேரம் வந்தா துட்டே இல்லாம கூட வேலை முடிஞ்சுரும். அந்த நேரம் வராத வரைக்கு லெச்சங்க கொட்டினாலும் வேலை  நடக்காது"

உங்க ஜோதிட திறமைக்கு ஒரு சவால் :

அதே செட்டியார் -அதே ஜாதகம் . ஒரு கட்டத்துல ரெண்டு லெச்சம் செலவழிச்சாலும் வேலைக்காகலை . அதே செட்டியார் அதே ஜாதகம் ரூ.600 செலவழிச்சதுல படக்குன்னு வேலை முடியுது. இதெப்படி சாத்தியம்? ஜொல்லுங்க பார்க்கலாம்.










Thursday, November 22, 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்: சிம்மம் ,கன்னி

அண்ணே வணக்கம்ணே !
நேயர் விருப்பம் கணக்கா இந்த ராகு கேது பெயர்ச்சி பலனை தந்துக்கிட்டிருக்கேன். இந்த கோசார பலன்கள் பற்றிய நம்ம கருத்தை தெரிஞ்சுக்க இங்கன அழுத்துங்க.

நேத்திக்கு மிதுனம்,கடக ராசிகளுக்கான பலனை பார்த்தோம். இன்னைக்கு சிம்மம் கன்னி. பதிவுக்கு போறதுக்கு மிந்தி ஒரு வார்த்தை நம்ம சைட்டே ஒரு ஜோதிட கலைக்களஞ்சியம் மாதிரி ஆயிருச்சு. அதனால மொதல்ல சைட்ல ராகு ,கேது,சர்ப்பதோஷம்னு தேடிப்பிடிச்சு பழைய பதிவுகளை படிச்சுருங்க. அப்பத்தேன் ஒரு ஐடியா வரும்.

5.சிம்மம்: (3-9)
கடந்த 1.5 வருசமா 4-10 ல இருந்த ராகு கேது இப்பம்  3-9 க்கு வர்ராய்ங்க. 3ங்கறது தைரிய ஸ்தானம். இங்கன பாப கிரகம் அதுவும் சர்ப்ப கிரகம் வர்ரது நெல்லதுதேன். இதனால தில்லு துரையா மாறிருவிங்க. நேருக்கு நேரா மோதலின்னாலும் உள்ளடியாவது அடிச்சு எதிரியை கிறுகிறுக்க வச்சிருவிங்க. பயணத்துக்கு அஞ்சமாட்டிங்க. சகோதர வர்கத்துல உங்க கை மேல் கையா மாறும். எல்லாம் ஓகே .ஆனால் சவுண்ட் பாக்ஸ் ரிப்பேர் ஆயிர சான்ஸ் இருக்கு.சாக்கிரதை.

தெலுங்குல தைர்யே சாஹசே லக்ஷ்மீம்பாய்ங்க. அதாவது தகிரியமும்- சாகசமும் தான் மன்சனுக்கு லெச்சுமின்னு அருத்தம். ஆனால் டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் இல்லியா. இடம் தெரியாம -ஆள் தெரியாம மோதிட்டு சொத்து,சுகத்தை எல்லாம் விட்டு ஸ்டேட் விட்டே ஓடவேண்டி கூடவரலாம் . சிலர் வெளி நாட்டுக்கே கூட போயிரலாம்.

சனி+ராகு:
சனி 6-7 பாவங்களுக்கு அதிபதி. ஆறுக்கதிபதிங்கறதால சகோதர வர்கம் நோய் வாய்ப்படலாம். அவிகளோட உங்களுக்கு வழக்கு வில்லங்கம் ஏற்படலாம். லாவா தேவி நடக்கலாம். அதே சமயம் உங்க  சத்ருக்கள் இருட்டுக்கு போயிருவாய்ங்க. கடன்கள் மீதான ப்ரஷர் குறையலாம். ஏழுக்கதிபதியா சனி  3 க்கு வர்ரது நெல்லதில்லை. இதனால மனைவிக்கு அல்லல் அலைச்சல் அதிகரிக்கும். ராகு காரக நோய்கள் ஏற்படலாம். அவர் உப்பு ஊறுகாய்க்கு ஒதகாத மேட்டர்ல  ரகசியம் காக்க நீங்க சிண்டை பிய்ச்சுக்கலாம்.
பரிகாரம்:
சொத்து,முதலீடு ,சேமிப்பு தொடர்பான டாக்குமென்டுகளை போட்டு வைக்கிற ஃபைல்ல வினாயகர் படத்தை ஒட்டி வைங்க. அல்லது மல்ட்டி கலர் ஃபைல் யூஸ் பண்ணுங்க (க்யூப் கணக்கா) தூர பிரயாணம் செய்யும் போது பிற மத பிரார்த்தனை ஸ்தலங்களுக்கு போய் வழிபடுங்க. மனைவியை பாம்பு வடிவ மோதிரம் அணிந்து துர்கையை வழிபடச்சொல்லுங்க.

6.கன்னி:(2-8)
ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும்  எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம்  எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம்  துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை  வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்
கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்
சனி+ராகு:
சனி 5-6 க்கு அதிபதி. 6க்குஅதிபதியான இவர் 2 ல் நிற்கிறதால கடன் ,வாக்கால் விரோதம், குடும்ப கலகம்,கண் நோய் ஏற்படலாம். அதே நேரம் இவர் அஞ்சுக்கும் அதிபதியா இருக்கிறதால திடீர்னு லாட்டரி தனமா ஒரு தொகை கைக்கு வரலாம். அதே நேரம் கூட ராகு இருக்கிறதால வந்ததும்  தெரியாம போனதும் தெரியாம போயிரலாம். நிராசை, அவமானங்கள்,அவப்பேர்,வாரிசுகள் விஷயத்துல மனோவியாகூலம்,அதிர்ஷ்டத்தை நம்பி செய்யற வேலைகளில் ஆப்பை எதிர்ப்பார்க்கலாம்.

பரிகாரம்:
பிள்ளைகளை பிரிந்திருங்கள் .அல்லது டிடாச்டா இருங்க. அவிக மம்மி கிட்ட கண்ட்ரோலை விட்டுருங்க. பெயர்புகழுக்கு ஆசைப்படாதிங்க. கும்பல்ல கோவிந்தா போடுங்க. அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதிங்க.திருமலை வராகஸ்வாமியை தியானம் பண்ணுங்க , துர்கையின் உருவத்தை மனதில்  நிறுத்துங்க.



Wednesday, November 21, 2012

ராகு கேது பெயர்ச்சி : மிதுனம்,கடகம்

அண்ணே வணக்கம்ணே !
ராகு கேது பெயர்ச்சி பலனை அடிச்சம். ஒடனே நெட் பிடுங்கிக்கிச்சு. டவுன் முழுக்கவே பிரச்சினை. மதியம் பார்த்தா டவுன் வைட் ஓகே. நமக்கு மட்டும் ஆப்பு. என்னடான்னு பார்த்தா ஆஞ்சனேயர்.

புதுசா என்னதான் இருக்கு பார்க்கலாம்னு பொசிஷன்ஸ்ங்கற இ புக்கும் ,ப்ளே பாய் புக் ஒன்னையும் டவுன் லோட் பண்ணினமா ஆஞ்சனேயருக்கு கோபம் வந்துருச்சு போல.

நோக்கம் எதுவா இருந்தாலும் ஆஞ்சனேயர் வேலை கொடுத்துட்டாரு. நேத்து முழுக்க வலது  புஜம் துடிச்சிக்கிட்டே இருந்தது .என்னமோ அற்புதம் நடக்கப்போகுதுன்னு ஜொள்ளு விட்டுக்கிட்டிருந்தம்.பார்த்தா இது நிலைமை.

நேத்திக்கு யூசர் நேம் /பாஸ் வேர்ட் தப்புன்னு வந்தது. இன்னைக்கு ஃபோன் லைன் பிசின்னு வருது. பார்ப்பம். நேத்திக்கு மேஷம்,ரிஷபம் ராசிகளுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன் தந்திருந்தம். இன்னைக்கு மிதுனம் கடகம்.

மேட்டருக்கு போயிரலாமா?

3.மிதுனம்: ( 5ல் ராகு -11 ல் கேது)
நம்ம அனுபவத்தை ஒரு தாட்டி படிச்சுக்ககங்க. நல்லா யோசிச்சு முடிவெடுங்கன்னு சொல்லமாட்டேன். உங்கள் துறைக்கு தொடர்பில்லாத வெல் விஷர் யாரையாவது கன்சல்ட் பண்ணிக்கங்க.  நெல்லது. 11ங்கறது லாப ஸ்தானம். இங்கன கேது இருந்தா ஆன்ம ஞானம் கிடைக்கனும்.ஆன்ம ஞானம் சொம்மா கிடைக்குமா என்ன?

நிராசை, அவமானங்கள்,அவப்பேர்,வாரிசுகள் விஷயத்துல மனோவியாகூலம்,அதிர்ஷ்டத்தை நம்பி செய்யற வெலைகளில் ஆப்புல்லாம் தொடர் கதையாகி இதன் விளைவாக ஆன்மா ஞானம் கிடைக்கும்.

அஞ்சுல ஏற்கெனவே சனி இருக்காருங்கோ.இவர் 8 -9 பாவங்களுக்கு அதிபதி. சனி பெயர்ச்சி காலத்தை ரெண்டா பிரிச்சுக்கிட்டா மொதல் பார்ட்ல அஷ்டமாதிபதியா வேலை செய்வார்.(ஒன்னேகால் வருசம்?) அடுத்த பாதியில பாக்யாதிபதியா வேலை செய்வார்.

முதல் பாதியில அஷ்டமாதிபதியா வேலை செய்ற காலத்துல ரெண்டாவது பாரால சொன்ன மேட்டர் பிச்சு உதறும்.கண்ணை கட்டும் .

ரெண்டாம் பாதியில நவமாதிபதியா வேலை செய்ற காலத்துல மேலிடம் உங்கள் உதவியை நாடும். அப்பா,அப்பாவழி உறவுகளால் ஏற்பட்ட - இருந்த  வில்லங்கம்லாம் தீரும், நஷ்டம் லாபமாகும். அப்பாவழி சொத்து ,உங்க சேமிப்பு ,முதலீடு இத்யாதியெல்லாம் ஏழை பாழைகள், எஸ்.சி, பி.சி குலத்தினர் உதவியால் பன்மடங்கா பெருகும். தூர தேசங்களில் இருந்தெல்லாம் ஆதரவு குவியும்.

ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு உதறல் இருந்துக்கிட்டே இருக்கும். வாழ்க்கை சூதாட்டம் கணக்கா இருக்கும். ( ஜகன் கூட இந்த ராசி தேன். என்னமா பொருந்துது பாருங்க)

சிலருக்கு ராகு சனி சேர்க்கை கால்,ஆசனம்,  நரம்பு தொடர்பான பிரச்சினைகளை கூட தரலாம்.டேக் கேர்.

பரிகாரம்:
பிள்ளைகளை பிரிந்திருங்கள் .அல்லது டிடாச்டா இருங்க. அவிக மம்மி கிட்ட கண்ட்ரோலை விட்டுருங்க. பெயர்புகழுக்கு ஆசைப்படாதிங்க. கும்பல்ல கோவிந்தா போடுங்க. அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதிங்க.திருமலை வராகஸ்வாமியை தியானம் பண்ணுங்க , துர்கையின் உருவத்தை மனதில்  நிறுத்துங்க.

4.கடகம்:
5-11 ல ராகு கேது இருந்ததால வந்த லொள்ளெல்லாம் ரிலீஃப் ஆகும். ( அப்ப நம்ம ஸ்கின் ப்ராப்ளம் கூட ஓவர் தானா)  4-10 ல் ராகு கேது வர்ரது நல்லது தான். ஆனாலும் தாய் வீடு வாகனம் கல்வி இத்யாதி விஷயங்கள்ள சிறு சிறு கலாய்ப்புகள் இருக்கும். செய் தொழில் உத்யோகம் வியாபாரத்துல புதிய ஆட்களால் ,பூனை கண்ணர்களால் பிரச்சினை வரலாம். புதுமைய புகுத்தறேன் பேர்வழி்னு குழப்பியடிப்பிங்க.

7-8 க்கு அதிபதியான சனி 4 ல் ராகுவோட சேர்ராரு. இதனால காதல்,திருமணம்,காதலி,மனைவி விஷயங்கள்ள சஸ்பென்ஸ் / குழப்பம் ஏற்படலாம். அவிகளுக்கு ஃபுட் பாய்சன், மெடிக்கல் ரியாக்சன் எதுனா நடக்கலாம் .டேக் கேர்.  8+ராகு என்ற காம்பினேஷன் உங்க கைப்பொருள் திருடு போகவும் - பிக் பாக்கெட் போகவும் வாய்ப்பிருக்குன்னு சொல்லுது. கண்ட இடத்துல திங்காதிங்க. கண்ட இடத்துல குடிக்காதிங்க ( நான் சொல்றது ப்யூர் ஹெச் டூ ஓ)

பரிகாரம்:
ராகு காலத்துல சோடி போடாதிங்க. நீங்க மட்டுமில்லை உங்க மனைவியும் எதையும் வெளியில திங்காதிங்க குடிக்காதிங்க.

Monday, November 19, 2012

எம்.எல்.ஏக்களுக்கு பட்லிகளை சப்ளை செய்த எக்ஸ் முதல்வர்

முன்னாள் முதல்வர் ஒருவர் எம்.எல்.ஏக்களுக்கு பட்லிகளை சப்ளை செய்ததாக ஜகன் கட்சி தலைவர் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை முன் வைக்க ஆந்திர அரசியல் களம் பரபரத்து கிடக்கிறது.இந்த குற்றச்சாட்டை ஆரு நம்பறிங்களோ இல்லியோ நான் நம்பறேன்.

1987 கல்லூரி தேர்தல் சமயத்துலயே ஓட்டர்களுக்கு எம்.பியின் சொந்த வீட்டுல நீலப்படம்  காட்டின கட்சி தெலுங்குதேசம் . தெ.தே கட்சி தலைவரும் - முன்னாள் முதல்வருமான சந்திரபாபு மேலதான் இந்த பர பர குற்றச்சாட்டு.

சந்திரபாபுவோட வாழ்க்கைய திரும்பி பார்க்கிறவுகளுக்கு இது எந்தளவுக்கு உண்மைங்கறது புரியும். பாபு வளர்ந்து வரும் இளம் அரசியல் வாதியா இருந்தப்ப தலீவருங்க அஃபிஷியலா தங்களோட வாரிசுகளை பாபுவுக்கு ஃபிக்ஸ் பண்ணி அவரை உபயோகிச்சுக்கப்பார்த்தாய்ங்க. என்.டி.ஆரோட ஆஃபர் லாபகரமா இருந்ததால அவரோட மகளை கண்ணாலம் கட்டிக்கிட்டு மத்த ஆஃபர்களையெல்லாம் ரிஜெக்ட் பண்ணிட்டாரு பாபு. அடடே இப்படி ஒரு மார்கம் இருக்கான்னு ஒரு மார்கமா தயாராயிட்டாரு போல.

அதுசரி. பாபு எப்போ எம்.எல்.ஏக்களுக்கு பட்லிகளை சப்ளை செய்தாருன்னு கேப்பிக.சொல்றேன். இந்த குற்றச்சாட்டை கிளப்பினவரு ஜி.பிரகாஷ் ராவ்னுட்டு முன்னாள் அரசு போக்கு வரத்துக்கழக எம்.டி. (கேபினட் அந்தஸ்துள்ள பதவிங்கோ)

2009 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தெ.தேசம் கட்சியிலருந்து 13 எம்.எல்.ஏக்கள் இதுவரை கட்சி தாவியிருக்காய்ங்க. இதுல மேக்சிமம் ஜகன் கட்சிக்கு போயிருக்காய்ங்க. நேத்து கூட ரெண்டு எம்.எல்.ஏங்க ஜகன் கட்சிக்கு தாவிட்டாய்ங்க.

இதுல பாபுவுக்கு செமை கடுப்பு. எம்.எல்.ஏங்களை சந்தையில மாடு பிடிச்ச கணக்கா விலைக்கு வாங்கறாய்ங்க.அது இதுன்னு பொரிஞ்சு தள்ளிட்டாரு பாபு.

அவரோட குற்றச்சாட்டு பூமராங் மாதிரி ரிவர்ஸ் ஆயிருச்சு. ராம்லால் கவர்னரா இருந்தப்போ என்.டி.ஆர் தலைமையிலான தெ.தே கட்சிக்கு பூரண மெஜாரிட்டி இருந்தும்  பாஸ்கர் ராவை முதல்வரா நியமிச்சுட்டாய்ங்க. பல நிரூபணத்துக்கு நாள் குறிச்சுட்டாய்ங்க.

(இந்த பாஸ்கர் ராவோட மவன் தான் இப்பம் ஆந்திர ஸ்பீக்கர் -ஜீன்ஸ் எப்படி வேலை செய்யுதுன்னு இந்த அப்பா மவன் கதையை படிச்சா போதும்.)

என்.டி.ஆர் எல்லாம் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு. சாமி வேசம் போட்டு போட்டு தனக்கே தெய்வாம்சம் இருக்கிறதா நம்பின எசன்ட்ரிக் என்.டி.ஆர். எம்.எல்.ஏக்களை கோஞ்சாடறது -தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சறதெல்லாம் ஒத்துவராது.

அப்பம் பாபு தான் இந்த வேலையை எடுத்துக்கிட்டு எம்.எல்.ஏக்களை எல்லாம் கர்னாடகாவுக்கு ஓட்டிக்கிட்டு போனாரு. அங்கனதான் மேற்படி பட்லி சமாசாரம் நடந்திருக்கு.ஒரு பிரபல பெண் ப்ரோக்கர் மூலமா - ஸ்பாட்டுக்கே அனுப்பி -பணம் கூட செட்டில் பண்ணாய்ங்களாம். மாதுவே ஓகேன்னா மது,மாமிசம்லாம் ஜூஜுபி.

இந்த அனுபவத்துல பாபுவுக்கு ஒரு ஞானோதயம் ஆனாப்ல இருக்கு. "கொய்யால .. இந்த மேட்டர்ல இவ்ளோ விஷயம் இருக்கா. மாமாவுக்காக பார்த்த டபுள் எம்.ஏ வேலைய நமக்காக பார்த்தா என்னன்னு ஸ்பார்க் ஆயிட்டாப்ல இருக்கு.

லட்சுமி பார்வதி மேட்டர்ல ( தமிழக அரசியல் வரலாற்றுல மணியம்மை கேரக்டர்) பாபு எம்.எல்.ஏக்களை பிரிச்சு - ரெசிடென்சி ஹோட்டல்ல கேம்ப் நடத்தினாரு.

அப்பவும் மாமிசம் - மது -மாது எல்லாம் நடந்திருக்கு. இதுல இன்னொரு ருசிகர மேட்டர் இருக்கு. இந்த குற்றச்சாட்டை வைத்த ஜி.பிரகாஷ் ராவ் அந்த சமயம் தெ.தேசத்துல -சந்திரபாபு கோஷ்டியில இருந்தவரு. இதுவரை பாபுவோ -பாபுவின் சொம்புகளோ இதை மறுக்கலை.


இந்திய அரசியலின் போக்கை நிர்ணயிச்சதே தனிப்பட்ட சில மா மனிதர்களின் செக்ஸ் லைஃப் தானோன்னும் நமக்கு ஒரு சம்சயம் உண்டு. என்னா பண்றது கொஞ்சம் விட்டா களி திங்க வச்சுருவாய்ங்க போல இருக்கே.. நமக்கெதுக்குங்ணா நாம வெளியூரு. அம்பேல் ..




Sunday, November 18, 2012

எதை இழந்தால் எதை பெறலாம்?

அண்ணே வணக்கம்ணே !
எதை இழந்தால் எதை பெறலாம்னு ஒரு மேன்யுவலே தந்துரலாம்.இந்த மென்யுவலுக்கு அடிப்படை என்னனு கேப்பிக. கடைசி பாரா வரை படிச்சிங்கனா தெரிஞ்சுக்கலாம்.

அதை படிச்சும் புரிஞ்சுக்காத பார்ட்டிங்களுக்கு ஒரு சிறுகதைக்கான சுருக்கத்தையும் தந்திருக்கேன். ஆக்சுவலா இன்னைக்கு சூரியனுடனான பேட்டி தொடர்ந்திருக்கனும். நாம முக நூல் நண்பர்களோட பொருளுதவியோட அச்சிட்ட ஸ்ரீ அம்மன் சத நாமாவளி ( கையடக்க பதிப்பு) பிரதிகளை வேலூர் வாழ் தமிழ்மக்களுக்கு இலவசமா வினியோகிக்க களத்தில் இறங்கினமா பழைய ஞா எல்லாம் கூகுள் சர்ச் ரிசல்ட் கணக்கா கொட்டோ கொட்டுன்னு கொட்டிருச்சு.

இந்த ஞாபகங்களை பினாத்தி தொலைக்கலின்னா ராத்தூக்கம் ஃபணால் ஆயிரும். அதனாலதேன் டைவர்ட் ஆயிட்டம்.

சின்ன வயசுல பல் விளக்காம டிஃபன் தின்னதுக்கு அண்ணன் வைய ரிட்டர்ன் டிக்கெட் இல்லாம போனது. நடந்தே திரும்பினது. அப்பம் டிக்கெட்டு ரூ.1.90

அதுக்கும் சின்ன வயசுல அம்மா வழி பணக்கார சொந்தங்களோட வீட்டுக்கு போனது . நினைவு தெரிஞ்ச பிறவு சாதி சங்க பிரமுகனோட 3 நாள் கண்ணாலத்துக்கு போனது. ஏதோ ஒரு கண்ணாலத்துக்கு போயி பாக்யராஜின் மொத படத்தை பார்த்தது ( தந்தன தந்தன தாளம் வரும் .. புதிய வார்ப்புகள்? 1979 ? )

ரஜினி படம் பார்க்க சைக்கிள்ள போயி டிக்கெட் கிடைக்காம டி.ராஜேந்தர் படம் பார்த்தது. இன்னொரு பயணத்துல ஒரு ஷோ கமல் படம் , ஒரு ஷோ ரஜினி படம் பார்த்தது.. மிஸ்டர் பாரத் படத்துல மிஸ்டர்.பாரத் சினிமால காமராஜர் மாதிரி ஒரு கெட்டப்,ராஜீவ் மாதிரி ஒரு கெட்டப்,இவரோட அம்மாவுக்கு இந்திராகாந்தி மாதிரி பில்டப் எல்லாத்தயும் பார்த்ததுல ங்கொய்யால அவனா நீயின்னுட்டு கழண்டுக்கிட்டதும் வேலூர்லதேன்.

அந்த காலத்துல காங்கிரசுன்னா அப்படி ஒரு அலர்ஜி. இடையில ஒய்.எஸ்.ஆர் ங்கர பிம்பம்  காங்கிரசோட அழுகலை மறைத்திருந்ததே தவிர காங்கிரசுன்னா அன்னைக்கும் இன்னைக்கு என்னைக்கும் உவ்வே தான்.

ஒரு தாட்டி நம்ம நண்பரும் -அவரோட பெரியப்பா பையனும் தங்கள் டூ வீலரை மாத்திக்கிட்டாய்ங்க. வீட்ல உள்ளவுக கடும் எதிர்ப்பு தெரிவிக்க மறுபடி மாத்த ஒரு தாட்டி டூ வீலர்ல போயிருக்கம்.( வாணியம்பாடி வரை)

1984 ல் அம்மாவுக்கு கான்சர் வந்து - சி.எம்.சிக்கு  ஷட்டில் பயணங்கள் தனிக்கதை .1992 ல் அதே ரூட்டில் தினசரி 20 சிங்கிள் அடிச்சதும் உண்டு. ப்ரைவேட் பஸ்ல செக்கிங். ஆஃப்டர் ஆல் கண்டக்டரா இருந்த ரஜினியே சூப்பர் ஸ்டாராயிட்டாருன்னா செக்கிங்கா இருக்கிற நாம சூஊஊஊஊஊஊப்பர்  ஸ்டார் ஆகாம போயிருவமான்னு ஒரு நப்பாசை.

2004 ல் ஒரு விக்டிமுக்காக பஞ்சாயத்து பண்ண ரெகுலர் ட்ரிப் அடிச்சது அது ஒரு கால கட்டம். 2007 ல தினத்தந்தியில நிருபரா குப்பை கொட்டின காலத்துல மாசத்துக்கு ரெண்டு தாட்டியாச்சும் வேலூர் கட்டாயம்.

எப்பயாச்சும் இன்டிரியர் தமிழ் நாடு போயிட்டு வேலூர் திரும்பி வந்தா போதும். சொந்த ஊருக்கு வந்துட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும். 

இடையில ஒரு தடவை மட்டும் நம்ம  பேப்பர் பிரிண்டிங்  (மல்ட்டிகலர்) விஷயமா  போய் வந்தது ஞா வருது. மத்தபடி கடந்த 3 வருடங்களா நோ வேலூர். நோ பயணம். 2011 புத்தக கண்காட்சி , 2012 பதிவர் சந்திப்பு தவிர வேற ஏதும் பயணம் பண்ணதா ஞாபகமில்லை.

ஆக்சுவலா பயணம்னாலே பயங்கர கடுப்பு. மொத காரணம் நாம செயின் ஸ்மோக்கர் .அதுவும் இங்கன புகை பிடிக்க கூடாதுன்னு போர்டை பார்த்தா உடனே பரபரக்கும். புகைக்க வாய்ப்பிருக்கும் இடத்துல நாள் கணக்கா கூட பிடிக்காம இருந்திரலாம் அதுவேற கதை. அல்லாரும் த்ரூ பஸ்ஸுக்கு தவமிருந்தா நாம பிட்டு பிட்டா பயணம் பண்றதும் உண்டு.

ஃப்ளாஷ் பேக் எல்லாம் இருக்கட்டும் போன வேலை என்னாச்சுன்னு கேப்பிக. சொல்றேன்.சிஷ்ய பிள்ளை ஒருத்தனோட பிக் ஷாப்பர்ல 2ஆயிரம் பிரதிகளோட காட்பாடியில லேண்ட் ஆனோம். சிஷ்யன் நம்ம பேப்பரை வினியோகிச்சு ட்ரெய்ன் ஆனவங்கறதால பிரச்சினை இல்லை. கோடு போட்டா ரோட்டே போட்டுருவான்.

காட்பாடி ரவுண்டானாவை பைசல் பண்ணிட்டு ஆட்டோ பிடிச்சு ........ ஷேர் ஆட்டோதேன் (ரூ.10 வாங்கிட்டான் -ஹூம் ..2009 வரை ரூ .5 தேன். எத்தீனி தபா போயிருப்பம்) புது பஸ் ஸ்டாண்டு.பஸ் ஸ்டாண்டுன்னாலே சுஜாதா சொல்ற மாதிரி வர்ஜியா வர்ஜியமில்லாம புஸ்தவங்க தொங்கனும். இங்க என்னடான்னா என்ட்ரன்ஸ்ல இருந்த கடைகளையெல்லாம் சாலை விரிவாக்கம் சாப்டாச்சு போல.விதவிதமான சனத்தை நாம அப்சர்வ் பண்ணிக்கிட்டிருக்க சிஷ்யன் புகுந்து விளையாடிக்கிட்டிருந்தான்.

ஒரு அரை லிட்டர் ஃபேன்டா அவனை சுறு சுறுப்பாக்கிருச்சு. நம்ம ஊர்ல எல்லாம் ரூ.6 க்கு ஃப்ரூட் மிக்சர் தீர்ந்தது கதை. அங்கன இருந்து பின் வழியே வந்து  மறுபடி ஆட்டோ பிடிச்சு  சி.எம்.சி. மார்க்கெட் போன பிற்காடு நடிகைங்க சீரியல்ல வர்ராப்ல பழைய பஸ் ஸ்டாண்டு டவுன் சர்வீஸுக்கு மட்டும்னு ஆயிட்டாப்ல இருக்கு. சொம்மா சொல்ல கூடாது .சனம் அம்முது.

இங்க மட்டும் பெரிய புஸ்தவ கடையே இருந்தது. சொந்த பணத்தோட வந்திருந்தா கடைய காலி பண்ணியிருக்கலாம்.வினியோகம் முடிஞ்ச பிறவு லாங்கு பஜார்,நேத்தாஜி மார்க்கெட் ,ஜுவெல்லரி லைன் எல்லாம் பார்த்துக்கிட்டு தேன் கிளம்பினோம்.மறுபடி புது பஸ் ஸ்டாண்டு . மறுபடி புதிய பயணிகளுக்கு வினியோகம். ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்.

ஆத்தாவுக்கு கடன் சொல்ட்டு ஆத்தா காசுல ஆழம்னு ஒரு புஸ்தவம் வாங்கினேன். அட்டையில மோடி .பக்கமெல்லாம் மோடி மயம்.படிச்சுட்டு சொல்றேன்.

போன திங்கள் கிழமை ( நவம்பர் 12 ) சத்யாங்கற நண்பரும்  நானும்  கார்ல புறப்பட்டோம். . (அவரோட சொந்த கார்) கிரீம்பேட்டையிலயே டயர் பஸ்ட். ஸ்டெப்னி மாத்திக்கிட்டு போனதும் தெரியலை.வந்ததும் தெரியலை.ஹோட்டலுக்கு அலைஞ்சது மட்டும் தேன் ஞா இருக்குது.

வேலூர் டு காட்பாடி பார்த்துக்கிட்டே வந்து - மறுபடி வேலூர் போயி உப்பில்லாத எண்ணெய் இல்லாத ரொட்டியும் - மாசக்கடைசியில பொஞ்சாதி மூஞ்சி மாதிரி தம்தூண்டு. இதுல  படு காரமா சால்னாவும்,பட்டாணியும்  வேற  தின்னம்.   (  பஞ்சாபியாம்)

ஆனால் இன்னைக்கு   ரூ.45 க்கு பை டூ நூடுல்ஸ் (+சிக்கன்) ப்ளெசன்டா  அடிச்சுட்டு ஒரு தம் போட்டதுல ஆத்தா சவாரி பண்ற சிங்கத்தோட கர்ஜனை கேட்டது.

இன்னைக்கு போறச்சயும் வரச்சயும் ஆந்திர அரசு பேருந்து (லொட லொடன்னு சத்தம் கேட்குமே தவிர பாடி  செமை ஸ்ட்ராங்கு  விபத்தே நடந்தாலும் .சாமானியமா சாவு  நடக்காது. பொடி நடையா நடந்து போயி கவுர்மென்டு ஆஸ்பத்திரி பெட்ல படுத்துக்கலாம்.

அன்னைக்கு சல்லுன்னு ஏசி கார். தின்டிக்கு  டிக்கானா இல்லை. இன்னைக்கு ஜஸ்ட் ரூ.22.50 பைசால  ஹெவன்லி ஃபுட்.

என்ன காரணம்?  சுக்கிரன் தான் வாகன காரகன் .அதே சுக்ரன் தான் அறுசுவை உணவுக்கும் காரகன்.

சிறுகதைக்கான சுருக்கம்:

லட்சுமி காந்தன் பரம்பரை பணக்காரர். என்னென்னமோ தொழிற்சாலைகள் . தலை நகரின் வி.ஐ.பி ஏரியாக்கள் ஒவ்வொன்றிலும் கடல் மாதிரி வீடுகள்.  சொம்படித்து நூல் வெளியீட்டு விழாக்களுக்கு ஸ்பான்சர் பண்ணும்படி இன்டென்ட் போடும் எழுத்தாளர்கள் சகவாசத்தால் அவருக்கும் எழுத்தார்வம் வந்துவிட்டது.

மூடு வந்தா  எதையாவது எழுத மட்டும்  நகரின் நாலு மூலையில் கெஸ்ட் ஹவுஸ் வச்சிருக்காரு. அவரிடம் குவிந்திருந்த பைசா  பெரிய எழுத்தாளர்ங்கற சர்ட்டிஃபிகேட்டை பெரிய பெரிய எழுத்தாளர்களிடமிருந்தே கிடைக்க செய்து விட்டது.  எல்லா பரிசுகளும் பெற்று அலுத்து இன்னைக்கு பரிசு வழங்கும் கமிட்டிகளில் இருக்கிறார்.

தங்கப்பேனாவால் தான் எழுதுவார். எத்தனையோ "சேர்க்கைகள்" இருந்தாலும் ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும்  மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கான பள்ளியில் வேலை செய்யும் - திமிர் பிடித்த கவிதாயினி ரசிகா மீது மட்டும் ல.காந்தனுக்கு தீராத மையல்.

மேற்படி தொண்டு  நிறுவனம் அணு உலை எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட மானில அரசு கிடுக்கிப்பிடி  போட
மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் ரோட்டுக்கு வரும் நிலை.

ரசிகா ல.காந்தன் உதவியை நாட -அவர் ரசிகாவின் உதவியை (?) நாட குவிட் ப்ரோக்கோ அடிப்படையில் ரசிகா புதிய சேர்க்கையாக ஒரு கெஸ்ட் ஹவுசில் ஸ்திரவாசம்.

ல.காந்தன்  படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு அகில உலக புகழ் பெற  திட்டமிடுகிறார். யாரோ   நாமகனை அறிமுகப்படுத்த அவனை மொழிபெயர்ப்பு வேலைக்கு அமர்த்துகிறார்.  நாமகனின்  அசலான பெயரை சொன்னால் வம்பு வரும். எனவே அம்பேல். மொத்தத்துல கிராமத்துல இருந்து வந்தவன்.  நினைத்த போது வெளிவரும் சிற்றிதழ்களின் நாயகன்.  அவன் மனைவி  கார்த்திகாவின் குளோனிங் கணக்கா இருப்பாள்.

நாமகன்,கார்த்திகா அவுட் ஹவுசில் இருக்க, ரசிகா கெஸ்ட் ஹவுசில் இருக்க , லட்சுமி காந்தன் முதல் பார்வையிலேயே  உலகப்புகழ் லட்சியத்தை ஒத்தி வைத்துவிட்டு - கார்த்திகா குறித்த கட்டில் கனவுகளில் மிதக்கிறார்.

இதன் முடிவு என்ன ? அந்த முடிவுக்கு ஜோதிட ரீதியிலான காரணங்கள் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்




.

Saturday, November 17, 2012

நவகிரகங்களுடன் ஒரு பேட்டி: சூரியன் 2

நான்:
வணக்கம் பாஸ் !

சூரி:
மறுபடி நீயேவா? நான் லக்னத்துல நின்னா சொந்தத்துக்கு செய்ற வேலை உருப்படாது..பிரதிபலன் கிடைக்காதுன்னு சொல்றாய்ங்களே ..ஏன்னு முந்தா  நேத்து  ஒரு கேள்வி கேட்டிருந்தே அதுக்கான பதிலை இப்ப சொல்றேன்..

நான்:
சொல்லுங்க பாஸ்.

சூரி:
கிழக்குல உதிச்சு மேற்குல மறையறேன். சிக் லீவ், இயர்ன்ட் லீவ்,காஷுவல் லீவ் ,ஃபெஸ்டிவல் லீவ் எதுவும் கிடையாது. ஒரு நாள் கூட லீவு எடுக்கிறதில்லை. கிரகண சமயத்துல கூட  நான் உதிச்சுர்ரன். அதுக்கப்பாறம் தான் ராகு வந்து என்னை மறைக்கிறாரு. ஆனால் இதுக்கெல்லாம் ஒரு பைசான்னா ஒரு பைசா கூட ரெம்யூனரேஷன் கிடையாது.

மேலும் என்னால் உங்களுக்கெல்லாம் ஒளி கிடைக்குது. வெப்பம் கிடைக்குது. சந்திரனுக்கு ஒளி கிடைக்குது. எனக்கு என்ன கிடைக்குது? பல ஆயிரம் வருசங்களா எரிஞ்சுக்கிட்டிருக்கிறதால எனக்குள்ள இருக்கிற சப்ஸ்டன்ஸ் குறைஞ்சுக்கிட்டே வருது. ஒரு நாள் இல்லை ஒரு நாள் கற்பூரம் கணக்கா "குளிர" வேண்டியதுதான்.  மேலும் என்னை விட்டு விலகி இருக்கிறவுகளுக்கு தான் லாபமே தவிர என்னை நெருங்கி வந்தா பஸ்மம்.

நேத்தே சொன்னாப்ல எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்.லக்னத்துல  நான் உள்ள ஜாதகன் அவனும் ஒரு குட்டி சூரியன் தான்.

அவன் மன்சங்கறதால அவனுக்கு இந்த பூமியில்  வாழ பிரதிபலன் தேவைப்படுது -ஆனால் கிடைக்காது, அவனை மக்கள் நெருங்கி வந்தாதான் சமூக வாழ்வு சோபிக்கும். நெருங்கி வரலின்னா தனிமையில தவிக்கனும்.

நான்:
பாஸ் ! நீங்க பேச பேச எனக்குள்ள இன்னொரு பாய்ண்டும் ஸ்பார்க் ஆகுது .சொல்லவா?

சூரியன்;
சொல்லுப்பா..

நான்:
நீங்களா உலகத்தையே தட்டி எழுப்பறவரு. மன்ச ஜன்மம்னா - கொஞ்சமாச்சும் ரிலாக்ஸேஷன் இருக்கனும். நீங்க லக்னத்துல நின்னா அவனுக்கு செரியான தூக்கம் கூட இருக்காது.  மறு நாள் ஒத்தை தலைவலி மலச்சிக்கல்,முதுகுவலின்னு அவதிப்படுவான் . இந்த கடுப்புல எல்லாரையும் கடுப்படிச்சு அல்லாத்துக்கும் விரோதமாயிருவான் ..அப்டித்தானே.

சூரியன்:
ஓரளவுக்கு லைனை பிடிச்சிருக்கே .. இன்னம் கொஞ்சம் தம் கட்டு .

நான்:
ராத்திரி நேரத்துல எல்லாமே மச மசன்னு இருக்கும். சுமாரான குட்டி கூட சூப்பர் குட்டியா தெரிவா.தூக்கத்துல அறிவாளியும் ஒன்னுதான் . முட்டாளும் ஒன்னுதான்.ஆனால் நீங்க உதிச்ச பிறவு ? எல்லாமே பளிச் ஆயிருது. லக்னத்துல நீங்க நின்னா.. அந்த ஜாதகனும் ஒரு குட்டி சூரியனா மாறி முட்டாளை முட்டாள்னும் -குரூபியை குரூபின்னும் டிக்ளேர் பண்ணுவான். எந்த முட்டாள் தன்னை முட்டாள்னு சொன்னா ஏத்துக்குவான்?   இதனால எல்லாருமா சேர்ந்து ஆப்படிச்சுருவாய்ங்க. கரீட்டா தலை?

சூரியன்:
ம்...ம்.. அடுத்த கேள்விக்கு போ..

நான்:
வந்துட்டன் துரை ! உங்களை ஆத்மகாரகன்னு சொல்றாய்ங்களே ..அது எப்டி?

சூரியன்:
என்னோட இடம் எது?

நான் :
உச்சி

சூரியன்:
மனித உடலின் உச்சி எது?

நான்:
உச்சந்தலை

சூரியன்:
ராஜயோகம் உச்சியில எந்த சக்கரம் இருக்கிறதா சொல்லுது?

நான்:
சஹஸ்ராரம்

சூரியன்:
குண்டலி சஹஸ்ராரத்தை தொட்டாத்தானே மனிதன் தான் ஆத்ம சொரூபங்கறதை அனுபவபூர்வமா தெரிஞ்சுக்கறான். அதனாலதேன் என்னை ஆத்மகாரகன்னு சொல்லியிருக்காய்ங்க.  நான் எப்படி எல்லாத்து மேலயும்  சமமா என் கிரணங்களை வீசுறனோ அப்படி  ஆத்ம சொரூபனா உள்ளவன் அபேத பாவத்தோட எல்லாரையும் சமமா பார்ப்பான்.  

மனிதன் தன்னை ஆத்ம ரூபமா உணரும் வரைக்கும் அவன் வாழ்க்கைக்கு வேறு எதுவோ மையபுள்ளியா இருக்கும். அவன் தன்னை ஆத்ம ரூபமா உணர்ந்துட்டான்னா பால் வீதிக்கு நான் எப்படி   கேந்திரமா  இருக்கேனோ அப்படி அவன் தன் வாழ்க்கைக்கு தானே கேந்திரமா மாறிர்ரான்.

மத்த கிரகங்கள் தான் என்னை நெருங்குவதும் விலகுவதுமா இருக்குமே தவிர நான் மட்டும் என் நிலையில நிலையா இருப்பேன்.

நான்:
பாஸ்.. ஆத்ம ரூபமா உணர்ந்த பிறகு மனிதன் அடையக்கூடிய நிலையை ஜஸ்ட் தன் ஈகோ காரணமா கூட அடையறானே..

சூரியன்:
ஈகோங்கறது பிரமை. பிரமை எப்பயாச்சும் உடைஞ்சுரும்.

நான்:
ஆக ஈகோவுக்கும் நீங்கதேன்.ஆத்மாவுக்கும் நீங்கதேன். அதெப்படி பாஸு? ரெண்டு நிலையையும் நீங்களே தர்ரதா சொல்றிங்க. எப்போ எந்த நிலையை தர்ரிங்க?

சூரியன்:
நான் ஜாதகத்துல முழு பலம் பெற்றிருந்தா ஆத்ம காரகனா வேலை செய்றேன். அரைகுறையா பலம் பெற்றிருந்தா தன்னம்பிக்கைய தரேன். பலம் இழந்திருந்தா ஈகோவை தரேன்.

நான்:
சூப்பர் தலைவா..இந்த வித்யாசத்தை மண்டைக்கு ஏத்தவே 24 மணி நேரம் பிடிக்கும் போல. இன்று போய் நாளை வரேன்..

சூரியன்:

அப்படியே ஆகட்டும் வா.





Thursday, November 15, 2012

நவகிரகங்களுடன் ஒரு பேட்டி

நான்:
வணக்கம்  சூரியன் சார் !

சூரியன்:
வணக்கம். கேள்விகளை எழுதி கொடுத்துருங்களேன்.. பதிலை ஃபேக்ஸ் பண்ண சொல்றேன்

நான்:
பாஸ் ! நீங்க ஒன்னை சொல்ல  நான் ஒன்னை எழுதி சொதப்பிருவன்னு பயப்படறிங்க போல.. உங்களுக்கு அந்த கவலையே வேணாம். ஏன்னா நம்ம மைண்ட் ப்ளாங்கா இருக்கு.

சூரியன்:
இல்லைப்பா.. நான் தான் செல்ஃப் - ஈகோவுக்கெல்லாம் காரகன். நீ இவ்ள கிட்டே வந்திருக்க.  என் ஸ்டேட்மென்டை  உன் ஈகோவும் செல்ஃபும்  நிச்சயம் கர்ரப்ட் ஆக்கிரும்.

நான்:
தலை ! உங்களுக்கு அந்த கவலையே வேணாம்.  நம்ம அடிப்படை கொள்கை மனிதம். அதுக்கு விரோதமா எதுனா இருந்தா அதை அவுட் ஆஃப் ஃபோக்கஸ்ல வச்சு எக்சிபிட் பண்ணுவமே தவிர மத்தபடி எந்த மேனிப்புலேஷனும் இருக்காது.

சூரியன்:
சரிப்பா.. உன் கேள்விகளை கேளு

நான்:
பிரம்மங்காருவோட வாழ்க்கை வரலாறை என்.,டி.ஆர் சினிமாவா எடுத்தாரு.அதுல தீண்டாமைய கண்டிச்சு பிரம்மங்காரு பாடறாப்ல ஒரு பாட்டு வரும்.அந்த பாட்டுல  "ஜகதின வெலிகே சூர்ய சந்த்ருலு நீ கூடான வெலகனன்டாரா"ன்னுட்டு ஒரு வரி வரும். ( இந்த உலகில் ஒளிரும் சூரிய சந்திரர்கள் உங்க சேரில ஒளிர மாட்டாங்கிறாய்ங்களா)

ஆக பாரபட்சமில்லாம எல்லா உயிர்கள், பொருட்கள் மேலயும் உங்க கதிர்கள் விழுது இல்லியா. அப்பாறம் ஏன் மக்கள் உங்க காரகங்களை சமமா அனுபவிக்க முடியாம போயிருது?

சூரியன்:
மழைத்துளி எல்லா இடத்துலயும் விழுது.ஆனால் வாய் திறந்து கிடக்கிற சிப்பியில விழுந்தப்ப தானே முத்தா மாறுது.

நான்:
அது சரி..உங்க கதிரொளி என்ரிச் ஆகாட்டி போகுது. நெகட்டிவ் ரிசல்ட் ஏன் கொடுக்குது?

சூரியன்:
கண்ணா .. மொட்டை மாடியில சின்டெக்ஸ் டேங்க் வைக்கிறிங்க இல்லை. அதை கவிழ்த்து போட்டா என்ன ஆகும்? அப்போ சிரபுஞ்சி கணக்கா அடை மழை பொழிந்தாலும் டேங்கு ரொம்புமா?

நான்:
ரொம்பாட்டி போகுதுங்ணா.. நெகட்டிவ் ரிசல்ட்டு ஏன் வருது? இதான் நம்ம கேள்வி.

சூரியன்:
காந்தியும் -அவரோட நண்பர் ஒருத்தருமா ரெண்டு பேர் அரிச்சந்திரா நாடகம் பார்க்க போனாய்ங்க. காந்தி உண்மையையே பேசனுங்கற மெசேஜை ஆக்செப்ட் பண்ணி இன்ஸ்பைர் ஆயிட்டாரு. காந்தியோட நண்பர் "ஆத்திர அவசரத்துக்கு பொஞ்சாதியை அடகு வைக்கலாம்"ங்கற மெசேஜை ரிசீவ் பண்ணிக்கிட்டாரு.

நாடகம் ஒன்னுதான். கிராஸ்ப் பண்ணிக்கிட்டது ரெண்டுவித மெசேஜ். அட என் ஒளியையே எடுத்துக்கயேன். சோலார் பானல் மேல விழுந்தா சோலார் பவர் .  இதுவே கோல்ட் ஸ்டோரேஜ்ல வைக்கவேண்டிய மெடிசின் மேல விழுந்தா?

நான்:
பல்பு இப்பம் எரியுது..அடுத்த கேள்வி..உங்க ஒளியில விட்டமின்ஸ் இருக்குங்கறாய்ங்க. சுண்ணாம்பு சக்திங்கறாய்ங்க ( கால்ஷியம்) . எங்க விஞ்ஞானிகளும் இதை கன்ஃபர்ம் பண்ணியிருக்காய்ங்க.இது ஓகே.

நீங்க ஜாதகத்துல நெல்ல பொசிஷன்ல இருந்தா தலைமை குணங்கள் வரும்ங்கறாய்ங்க.. அதெப்படி சாத்தியமாகுது?

சூரியன்:
எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட். நான் நெல்ல பொசிஷன்ல இருந்தா அந்த ஜாதகன் நானா மாறிர்ரான். நான் ஆரு? கிரகக்கூட்டத்தின் தலைவன். அதனால அவனுக்கும் தலைமை குணங்கள் வருது.

நான்:
போங்க பாஸ் .. நீங்க சொம்மா லாஜிக் சொல்ட்டு கழண்டுக்கலாம்னு பார்க்கிறிங்க. நான் கேட்கிறது ப்ராசஸ், தலைமைகுணங்கள் ஜாதகன்ல வர்ரதுக்குண்டான ப்ராசஸ் எப்படி ஆரம்பிக்குது?

சூரியன்:
கொய்யால உன் லக்னத்துல நின்னாலும் நின்னேன். இப்டி நோண்டி நுங்கெடுக்கிறியே.. நாளைக்கு வா பேசிக்கலாம்

நான்:
லக்னத்துல சூரியன் நின்னா சொந்தத்துக்கு செய்ற வேலை எதுவும் உருப்படாதுன்னு ஒரு பலன் சொல்றாய்ங்களே.. இது எப்படி ஒர்க் அவுட் ஆகுது?

சூரியன்:
ஸ்.. என்னை ரெம்ப சூடேத்தறே.. நாளைக்கு சொல்றேன்..

நான்:
ஓகே பாஸ்..   உங்க சூட்டுல காதுல லேசா புகை வராப்ல இருக்கு.  அப்டியே ஆகட்டும் .சீ யு டுமாரோ..

Tuesday, November 13, 2012

சார்மினார்: மற்றொரு பாப்ரி மஸ்ஜித் ஆகிறதா?

சார்மினார் ? இன்றைக்கு ஒரு சரித்திரம் மட்டுமே. ஹைதராபாதில் உள்ள ஒரு புராதன கட்டிடம் மட்டுமே. ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட் வசம் உள்ள கட்டிடம் மட்டுமே.ஆனால்  ஹைதராபாத் ப்ளேக் அபாயத்தில் இருந்து தப்பியதை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்ட மசூதி என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

இரண்டாவது மாடியில்  நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில்  தொழுவதற்கான வசதி கொண்ட  மசூதி .. கிரவுண்ட் ஃப்ளோரில் வஜூ செய்வதற்கான வசதியுடன் கட்டப்பட்டது. மசூதியின் தரை அச்சு அசலான கார்ப்பெட் போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். இந்த கட்டிடம் ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட் வசம் சென்றபின் தொழுகை நடப்பதில்லை.

ஊர் இரண்டு பட்டால் தானே கொண்டாட்டம்.முதலில் பாக்யலட்சுமி கோவில் ஒன்று முளைத்தது. ( பார்க்க படம்) சமீபத்தில் கோவில் நிர்வாகத்தினர் இதனை விரிவாக்கம் செய்ய முனைந்தனர். கோர்ட்டு கூட இதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.ஐ.எம் கட்சி எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்துத்தான் எம்.ஐ.எம் கட்சி மானிலத்தை ஆளும்  காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இப்போது  சரித்திர சின்னங்களாக அறிவிக்கப்பட்ட மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதிக்கவேண்டும் என்ற சச்சார் கமிட்டி சிபாரிசை அமலாக்க சொல்லி எம்.ஐ.எம் கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது.

பாக்யலட்சுமி கோவில் விரிவாக்கம்  நடப்பதால் அந்த பகுதியில் வாழும்  ஏழை இந்துக்களுக்கு புதிதாக  என்ன கிடைத்துவிடப்போகிறது?  மிஞ்சிப்போனால் இன்னொரு அய்யருக்கு பிழைப்பு கிடைக்கலாம்.

அல்லது மசூதியில் தொழுகை நடத்த அனுமதிப்பதால் அந்த பகுதியில் வசிக்கும் ஏழை முஸ்லீம்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது?

நிலத்தில் கால் பாவாத சமாசாரங்களை விட்டு எப்போதுதான் நம்ம தலைவர்கள் ப்ராக்டிக்கலாய் யோசிப்பார்களோ?

சாதி சங்க தலைவர்களுக்கு நான் ஏற்கெனவே ஒரு பதிவில் சொன்னதையே இப்போது மதவாத கட்சிகளுக்கும் சொல்கிறேன்.

மதவாதிகட்சிகள்  முதலில் தங்கள் மதத்தை சேர்ந்த எந்த பெண்ணும் ஏழ்மை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்று என்று  நெஞ்சு நிமித்தி சொல்லும்  நிலையை கொண்டு வர பாடுபடவேண்டும். அதுக்கப்புறம் மசூதி -கோவில் என்று இறங்கலாம்.

Saturday, November 10, 2012

நிருபரை காரேற்றி கொல்ல பார்த்த ரஜினி

அண்ணே வணக்கம்ணே !

ஒரு காலத்துல ஜரிதா,அபின் ,புட்டின்னு எப்படி எப்படியோ இருந்த ரஜினி இப்பம் ஞானி ஆயிட்டாரு. யோகி ஆயிட்டாருன்னு ஊத்தி விடறாய்ங்க.

பழைய ரஜினி ஒன்னும் ஆவியாகி வெளியேறிரலை. அதே குக்கர்ல இருக்காரு.சந்தர்ப்பம் சரியில்லை. அடங்கி கிடக்காரு.

மறுபடி ஆர்.எம்.வீரப்பனுக்கு ஒரு வாழ்வு வந்துட்டாலோ அ மோகன் பாபு ஜகன் கட்சியில சேர்ந்து மினிஸ்டர் ஆயிட்டாலோ பழைய ரஜினி வெளிய வருவாரு.

இப்பம்   நடக்கலை.அடங்கி கிடக்காரு.  ஒரு சமயம் ரஜினியோட தங்கை சென்னை வர - அவிகளோட ரஜினி கார்ல போக ஆரோ நிருபர் கிசு கிசு எழுதிட்டாராம்.அதுக்கு ரஜினி என்ன பண்ணாரு தெரீமா அந்த நிருபர் பிளாட்ஃபாரத்துல நடந்து போறச்ச .............................பதிவோட .தலைப்பை பாருங்க.

இது ரஜினியை பற்றிய பதிவல்ல. கேப்டன்.ஒன்லி கேப்டனை பற்றிய பதிவு. கேப்டனுக்கு ஒரு ஓப்பன் லெட்டர் கூட எளுதியிருக்கன்.

விசயகாந்த் படிக்கிறாரோ இல்லியோ நீங்களாச்சும் படிச்சுருங்கண்ணே.

கேப்டனை நானே பல தடவை வாரியவன் தான். விமர்சித்தவன் தான். அதே நேரம் அவரோட ப்ளஸ் என்னன்னும் சொல்ல தயங்கினதில்லை. வரன் வரன்னு பம்மாத்து பண்ற ரஜினியை விட 1000 மடங்கு பெட்டர் சாய்ஸு கேப்டன்.

இன்னைக்கு நான் அவருக்கு எழுதியிருக்கிற பகிரங்க கடிதத்தை வச்சு அவர் மேல நான் முன் வச்ச விமர்சனங்களை எல்லாம் வாபஸ் வாங்கிட்டதா அருத்தமில்லை. அதெல்லாம் ஸ்டில் அலைவ்.

அதே நேரம் ஒரு மன்சனை போட்டு இத்தீனி பேரு லந்து பண்ணா கடுப்பாயிருது. அதனாலதேன் கேப்டனுக்கு இந்த பகிரங்க கடிதம்.

கேப்டன் விஜய்காந்த் அவர்களுக்கு,

அம்மாவோட கூட்டு போட்டிங்க. இது புட்டுக்கும்னு மின்னாலயே தெரியும் போல. அதான் அந்த மகராசியோட சேர்ந்து பிரசாரம் செய்றதை கூட தவிர்த்துட்டிங்க. உங்க முன் சாக்கிரதைக்கு ஹேட்ஸ் ஆஃப்.

ரஜினியை போல ஆதி சக்தி ,சக்தி மசாலான்னு சொம்படிக்காம இருந்திங்க பாருங்க. அங்கதான் கேப்டனா நிக்கிறிங்க.

உங்களை கேப்டன்னு சொல்றதை கூட நக்கலடிக்க சனம் இருக்கு. ஒவ்வொரு வார்த்தைக்கும் -அதுவும் பெயரா  அ பேரோட சேர்ந்து   அ பேருக்கு பதிலா ஒலிக்கிற வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்.

ஒரு கொளந்தைய ராசான்னு மனசார ஒரு தாய் கூப்டு கொஞ்சிக்கிட்டிருந்தா அவன் இளையராசாவா மாறலின்னாலும் ஆ.இராசா ஆக மாட்டான்.

எம்.சி.யாரை புரட்சி  நடிகர் ,புரட்சி தலைவர்னப்போ எல்லாம் நக்கடிச்சாய்ங்க.ஆனால் நெஜமாலுமே அவரு புர்ச்சி பண்ணி சரித்திரத்துல ஒரு இடத்தை கெட்டியா பிடிச்சுட்டாரு.

மம்மி மேட்டர்ல கூட புர்ச்சி தலைவின்னப்போ எனக்கே கடுப்பாதான் இருந்தது.அனால் நாளாவட்டத்துல அவிக நெஜமாலுமே புர்ச்சி பண்ணிட்டாய்ங்க.

அதைப்போல உங்களை உங்க அல்லக்கைங்க கேப்டன்னு கூப்ட ஆரம்பிச்சப்போ நீங்க கேப்டனில்லை.ஆனால் இப்பம் நெஜமாலுமே கேப்டனாயிட்டிங்க.

மேட்டருக்கு வரேன். மம்மி கூட கூட்டு போட்டிங்க. ஆனா எட்டியே இருந்திங்க. முட்டிக்கிச்சு. அது மம்மியோட நேச்சர்.ஒடனே ஒடைஞ்சு போகாம கட்சி ஆஃபீஸ்ல ப்ரஸ் மீட் வச்சு கேட்டிங்க பாரு கேள்வி. லியாகத் அலிகான் கூட மனப்பாடம் பண்ணியாகனும்.அப்படியா கொத்த கெத்து.

மம்மி என்னதான் ஒஸ்தி ஸ்கூல்ல படிச்சாலும் நகராட்சி பள்ளி மென்டாலிட்டி அப்படியே கீது.இன்னம் கீது. சட்டமன்றத்துல ஆஃபீஸ் ஒதுக்கறதிலருந்து இர்ரிட்டேட் பண்ணிக்கிட்டே இருந்தாய்ங்க.

உங்களை அடக்கிரலாம்.ஒடுக்கிரலாம்னு பார்த்தாய்ங்க.  நல்ல வேளையா உங்களுக்கு மகள்கள் ஆருமில்லை. சொந்த படம் எடுக்கலை. மானாவாரியா கடன் கிடன் வாங்கி தொலைக்கலை.அதனால நீங்க அடங்க மறு அத்து மீறுன்னு செயல்பட்டிங்க. வாள்க !

இன்னைய தேதிக்கு அல்லா க்ரூப்பும் உங்களை பிரிச்சு மேய காரணமான விமான நிலைய சம்பவத்துக்கு வரேன்.

மம்மி உங்க கட்சி எம்.எல்.ஏக்களை இழுத்துட்டாய்ங்க. முட்டை வைக்கிற கோழிக்கு தானே தெரியும் நோவு.ஆம்லெட் போட்டு சாப்பிடறவுகளுக்கு என்ன தெரியும்?  ஆம்லெட் திங்கறவுகளை  பார்த்து கை தட்டறவுகளுக்கு என்ன தெரியும்? உங்களுக்கு எந்தளவுக்கு கடுப்பாகியிருக்கும்னு ஒரு என்.டி.ஆர் ரசிகனா எனக்கு புரியுது.

இதை பத்தி  விமான நிலையத்துல ஆரோ ஒரு ரிப்போர்ட்டர் கேள்வி  கேட்டதுக்கு   நாயேன்னிங்களாம். சம்பளம் கொடுக்கிறிங்களானு கேட்டிங்களாம். அப்பம் ஏற்பட்ட தள்ளு முள்ளுல அவரு கீழ விழுந்துட்டாராம். இந்த ஒரு பாய்ண்டை வச்சுக்கிட்டு உங்களுக்கும் -உங்க கட்சிக்கும் நடந்த
அநியாயத்தை எல்லாரும் ப்ளர்ராக்கிட்டாய்ங்க.

நீங்க என்னமோ பஞ்சமாபாதகம் பண்ணிட்டாப்ல அலப்பறை. வழக்கு.  நீங்க அப்படி சொல்லியிருக்கலாம்,இப்படி சொல்லியிருக்கலாம்னு ஆன கல்யாணத்துக்கு மேளம் வேற . தனக்கு வந்தாதானே தெரியும் தலைவலி.

அரசியல்வாதின்னா என்ன ரோபோவா? அவனும் மன்சன் தானே ? அவனுக்கு உணர்ச்சிகள் இருக்கக்கூடாதா? நீங்க மட்டும் என்ன மொத பேச்சையேவா நாயேன்னு ஆரம்பிச்சிருப்பிங்க. நோ..

நிருபர்னா கேள்வி கேட்கலாம். கேட்கிறது அவிக உரிமைன்னு சொல்லாமா போறது தலைவர்களோட உரிமை. அதை விட்டுட்டு நை நைன்னு துரத்திக்கிட்டு வந்தா என்ன அருத்தம்?

கேப்டன் ! டோன்ட் ஒர்ரி. ஆனைக்கும் அடி சறுக்கும் . ரஜினியே ஒரு ரிப்போர்ட்டரை காரேத்தி கொல்லப்பார்த்ததெல்லாம் உண்டு. எம்.சி.யாரே கத்தி வச்சுக்கங்கன்னு லூஸ் டாக் பண்ண மேட்டர்லாம் உண்டு.  வீட்டுக்கு வீடு வாசப்படி.

உங்களுக்கு ஒரே பாய்ண்டை மட்டும் சொல்லி கழண்டுக்கறேன். இன்னைக்கு பண்பட்ட தலைவர்களா உலகம் தலை மேல வச்சு கொண்டாடற எந்த ஒரு ஹிப்பாக்கிரட்டை விடவும் - எந்த ஒரு எஸ்கேப்பிஸ்டை விடவும் நீங்க பெட்டர் தான்.

கேப்டன் உங்களுக்கு சினிமா கேமரா முன்னே மட்டும் தான் நடிக்க தெரியுது -மீடியா கேமரா முன்னே நடிக்க தெரியலின்னா உங்களால மக்களுக்கு நிச்சயமா பயன் உண்டு.

உங்களுக்கு பொறுமை இருந்தா ஜஸ்ட் 5 மேட்டரை சொல்றேன். கீப் அப் பண்ணிங்கனா நீங்கதேன் அடுத்த எம்.சியாரு.

1.மொதல்ல பாடி வெய்ட்டை குறைங்க. வயசுக்கேத்த -சூப்பர் - கேரக்டரா சூப்பர் கதைய பிடிச்சு படம் பண்ணுங்க.பண்ணிக்கிட்டே இருங்க.  உங்க கடைக்காலே சினிமா தான்.அதுல செயிச்சுட்டே இருங்க. அப்பாறம்  அரசியல் வெற்றில்லாம் ஜூஜுபி.

2.ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்துங்க. கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள்ள எம்.எல்.ஏங்க , தோத்துப்போன தொகுதிகள்ள தோற்ற வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தி மக்கள் பிரச்சினைகளை தீர்க்க  நிரந்தர ப்ராசஸ் நடக்கிறாப்ல ப்ளான் பண்ணுங்க. ஒரு திரைக்கதை போல இருக்கனும். சகட்டுமேனிக்கு தர்ணா,சிறை நிரப்பும் போராட்டல்மா வெட்டி. அட கேப்டன் கட்சிக்காரவுக கிட்டே போனா காது கொடுத்து கேட்கிறாய்ங்கப்பா. எதியாச்சும் செய்றாங்கப்பான்னு பேர் வாங்குங்க.

3.முக்கியமான மேட்டர் கட்சியையும் -குடும்பத்தையும் பிரிச்சு வைங்க.

4.இன்னும் முக்கியமான மேட்டர் கட்சிக்காரவுகளுக்கு பைசா கிடைக்க வழி பண்ணுங்க. கட்சியில உள்ள தொழிலதிபர்கள் -காண்ட் ராக்டர்களையெல்லாம் ஒருங்கிணைச்சு பப்ளிக் லிமிட்டட் கம்பெனியாக்குங்க. க்ளோபல் டெண்டர்ல எல்லாம் நம்ம கம்பேனி  பார்ட்டிசிப்பேட் பண்ணனும். ஹேண்ட் பை ஹேண்ட் குடிசைத்தொழில்களை எல்லாம் ஸ்பான்சர் பண்ணி ,ப்ரமோட் பண்ணி மார்க்கெட்டிங், ஏற்றுமதின்னு தூள் கிளப்பனும். ,கட்சி காரனுக்கு வருமானமும் வரனும் ,வேலை வாய்ப்பும் கிடைக்கனும்.

5.விமான நிலைய மேட்டர்ல சனங்க வாரி விட்டதை பார்த்து திருந்திராதிங்க. கேப்டன் கேப்டனாவே இருக்கனும். இல்லின்னா இன்னொரு கலைஞராயிருவிங்க.

பெஸ்ட் ஆஃப் லக்.

Friday, November 9, 2012

நவகிரக சொற்பொழிவு

அண்ணே வணக்கம்ணே ! நாம இலவச ஜோதிட ஆலோசனையும் வழங்கி வருவது தெரியும்ல. தனித்தனியே அனுப்பறது பெரிய ப்ராசஸ் ஆயிருச்சு. பணி அழுத்தம் ரெம்பவே படுத்துது.அதனால நிலுவையில இருந்த ஜாதகங்களையெல்லாம் ரவுண்டு கட்டி பைசல் பண்ணிட்டம்.

ஏறக்குறைய ஒரு  சொற்பொழிவாவே ஆயிருச்சு. இதை கேள்வி கேட்டிருந்தவுக மட்டும் கேட்கிறதை விட ஜோதிட ஆர்வம் உள்ளவர்களும்  கேட்டால் அவிகளுக்கு சில சமாசாரங்கல்லாம் க்ளியராகும்லியாங்கற நெல்ல எண்ணத்துல ஆடியோ ஃபைலா போட்டிருக்கன்.

கேள்வி கேட்டவுகளோட ப்ரைவசியை பாதுகாக்க பேர்/ஊர் எதுவும் குறிப்பிடலை.வெறுமனே அவிக பர்த் டீட்டெய்ல்ஸ் மட்டும் தந்திருக்கன்.

இலவச ஜோதிட ஆலோசனை : நவம்பர் 2012ங்கற தலைப்புல மீடியாஃபயர்ல இங்கன  வச்சிருக்கன். ஆன்லைன்ல கேட்டுட்டும் உட்டுடலாம். தேவைன்னா  டவுன் லோட் கூட பண்ணிக்கலாம். ஓகேவா ..ரைட் ரைட்!

உங்க வண்டி நெம்பரும் -அதன் பாதிப்பும்

அண்ணே வணக்கம்ணே !

முல்லா கதைகள் ரெம்ப ஃபேமஸுன்னு தெரியும். ஒரு தாட்டி முல்லாவோட ஆப்பிள் தோட்டத்துல செமை விளைச்சல். ஆனால் ரெம்ப வருத்தத்துல இருந்தாராம். நம்ம சுகுமார்ஜி போயி "ஏன் முல்லா ! ஏன் இந்த வருத்தம்.அதான் செமை  விளைச்சலாமே." .ன்னாரு. அதுக்கு முல்லா " அது வந்து சுகுமார்ஜீ .. ஆடு மாடுகளுக்கு போட அழுகின ஆப்பிள்களுக்கு என்ன பண்ணுவேன். அதான் வருத்தமா இருக்கு"ன்னாராம்.

நம்ம நிலையும் இப்படி ஆயிருக்கவேண்டியது.ஆனால்  நொந்து  நூடுல்ஸ் ஆகி - பசி பட்டினி சொறி,சிரங்குல்லாம் பார்த்து வந்த பார்ட்டிங்கறதால வர்ர வேலைகளை கவுரதையா செய்து முடிச்சுக்கிட்டிருக்கோம். இருந்தாலும் கட்டிப்போட்ட மாதிரியே இருக்கா ... உள்ளுக்குள்ள ஒரு ஏக்கம் இருக்கு..
ஒர்க் லோட் காரணமா மிந்தி போல ஆதியோடந்தமா பதிவு போட முடியலைங்கறதான் அந்த ஏக்கம் . .

சரி சரி மேட்டருக்கு வந்துர்ரன். வண்டி நெம்பருங்க எப்டில்லாம் பாதிக்கும்னு கடந்த பதிவுலயே நம்ம அனுபவத்தை சொல்லியாச்சு. இதனால டைரக்டா நெம்பர் -பலன்னுட்டு போயிரலாம். ஆனால் ஒன்னு  இந்த பலன் எந்தளவுக்கு பொருந்தியிருக்குன்னு கு.பட்சம் சதவீதமாச்சும் சொன்னாத்தேன் பரிகாரம்.இல்லின்னா அம்பேல்.

வண்டி நெம்பர்ல உள்ள இலக்கங்களை கூட்டி சிங்கிள் நெம்பராக்கிறதுக்கு மிந்தி வர்ர டபுள் டிஜிட் கூட ரெம்ப முக்கியமுங்கோ.. வெறுமனே  சிங்கிள் நெம்பரை கட்டியழுதா 9 வித பலன் தான் வரமுடியும்.ஆனால் வண்டிகளை வச்சு மாரடிக்கிறவுக லைஃப் ஜஸ்ட் 9 விதமாத்தானா இருக்கு இல்லியே..

மொதல்ல 1 ங்கற நெம்பரை எடுத்துக்குவம். இது சூரிய காரகம் கொண்ட எண். இதை பத்தி பொதுவா சில விஷயங்களை சொல்லிட்டு டபுள் டிஜிட்ஸுக்கு போயிருவம்.

இந்த 1 ங்கற எண் தனிமைப்படுத்தும். லீடர்ஷிப் குவாலிட்டீஸை தரும்.ஈகோ,அதீத தன்னம்பிக்கைய தரும். ஏழைகள் ,பலகீனர்கள் மேல் கருணை இருந்தாலும் அவிகளை கேவலமா நினைக்கிற புத்திய தரும். ரிமோட் வில்லேஜஸ்,புதுசா டெவலப் ஆகிற காலனிகள் ,மலை பிரதேசங்கள்னு சுத்த வைக்கும்.

அதிகமா கிழக்குத்திசை நோக்கியே பிரயாணிக்கலாம். ஹார்ட் ஆஃப் தி அ ஹார்ட் ஆஃப் தி டவுன்ல இருக்கலாம்.

பகல்ல பிறந்தவுகளுக்கு இந்த வண்டியை அப்பாவே வாங்கி கொடுத்திருக்கலாம். மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு,  விளம்பரம் , நாளிதழ்,திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், தொடர்பான வேலை கிடைக்கலாம்.அல்லது இவற்றை சைட் பிசினசா செய்யற வாய்ப்பு கிடைக்கலாம். சிலர்  பொது நலப்பணியிலும் ஈடுபடலாம்.

கொஞ்சம் கொஞ்சமா  ஒளிவு மறைவற்ற பேச்சு அதிகரிக்கலாம், ஆளும் ஒல்லியாகலாம்.ஒரு  கூரையில்லாத வீட்டருகே அதிகம் பார்க் செய்ய வேண்டி வரலாம். ஒற்றைத்தலைவலி, தூக்கமின்மை ஏற்படலாம்.

ஏற்கெனவே அப்பாவோட விரோதம் அ சின்ன வயசுல அப்பா டிக்கெட் போட்டுர்ரது, அ அவர் ஓட்டாண்டியாயிர்ரது, உங்களுக்கு  பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண் தொடர்பான பிரச்சினைகள் இருக்கிறதுல்லாம் இருந்தா  இந்த நெம்பர் உள்ள வண்டியை  ஓட்டினா மேலே சொன்ன பலன்ல தீய பலன் மட்டும் மானாவாரிய நடக்கும்.  விபத்துல எலும்பு முறியலாம் .மண்டை உடைஞ்சு கபால மோட்சமும் கிடைக்கலாம்.டேக் கேர்.

1 ங்கற எண் பல வகையில வரும். 19,28,37,46 இதுல ஒவ்வொரு நெம்பருக்கு ஒவ்வொரு பலன் இருக்கு.ஆனால் அண்டர் கரண்ட்ல மேற்சொன்ன பொதுப்பலனும் ஓடிக்கிட்டிருக்கும்.  மேற்படி எண்களுக்குண்டான பலனை அடுத்த பதிவுல பார்த்துட்டு 2,3,4ன்னு வரிசையா போகலாம்.

ஓகேவா ..ரைட் ரைட்..

Wednesday, November 7, 2012

உங்க வண்டி நெம்பரும் பலனும்

அண்ணே வணக்கம்ணே  !

எதை எழுத நினைச்சாலும் ஒன்னு ஏற்கெனவே எழுதிட்டாப்ல ஞா. அல்லது தொடரா ஆரம்பிச்சு பாதியில விட்டதா ஞா. நாம  தொடாத சப்ஜெக்டு எதுன்னு முக்கி ரோசிச்சதுல இந்த வண்டி சமாசாரம் ஸ்பார்க் ஆச்சு.

ஏற்கெனவே சொல்லியிருக்கன். நாம இந்த சோசிய மேட்டர்ல ஒரு சைன்டிஸ்டு மாதிரி.எதையும் ஆராய்ச்சி பண்ணி -அப்ளை செய்து -பலனை கண் கூடா பார்த்த பிறவுதேன் பிறருக்கு உபதேசிக்கிறது வழக்கம் இந்த வண்டி
வாகன மேட்டர்ல நமுக்கு ஆர்வம் வந்ததே 12 வருசத்துக்கு மிந்திதேன்.

டாக்டர் அக்பர் கவுசர் கிட்டே ட்ரான்ஸ்லேட்டரா வேலை செய்து -அங்கருந்து கழண்டுகிட்டு 407 வேன் காரவுக கிட்டே சரண் புகுந்தோம். எல்லாரும் ஓனர்ஸ் கிடையாது.அதுல ட்ரைவர்,க்ளீனர் இத்யாதியினரும் இருப்பாய்ங்க. ஜாதகம் இருக்காது , சரியான பர்த் டீட்டெய்ல்ஸ் இருக்காது.. Essantisality is the Mother of inventions ஆச்சே..

அவிக கிட்டே பக்காவா இருக்கிறது அவிக 16 மணி நேரம் மாரடிக்கிற வண்டி வாகனத்தோட நெம்பருதேன்.அதை வச்சு ஏன் பலன் சொல்லக்கூடாதுன்னு ஒரு ஸ்பார்க். ஒடனே அப்ளை பண்ண ஆரம்பிச்சோம்.

மொதல்ல அந்த எண் அவிக லைஃபை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணியிருக்கான்னு தெரிஞ்சுக்க வேண்டியது. அது பாசிட்டிவா நெகட்டிவா அசெஸ் பண்ணிக்க வேண்டியது. பாசிட்டிவா இருந்தா அந்த பலன் அதிகரிக்க சில டிப்ஸ். நெகடிவா இருந்தா அந்த பலன் குறைய டிப்ஸ். இப்படி ஆறேழு மாசம் நீண்ட நெடும் ஆராய்ச்சி.

அந்த காலகட்டத்துல சொந்த வாகனம்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.எப்படியோ ஊர் பிள்ளைகளை கிணத்துல தள்ளி ஆழம் பார்த்தாச்சு.

இந்த அனுபவம் நம்ம லொடக்கானி பஜாஜ் சன்னியை ஜெயிக்க உதவினது சாதனை தேன். இப்பம் ரெண்டாவதா ஒன்னை வாங்கி அதையும் ஒர்க் அவுட் பண்ணிட்டம்.

உங்க எண்ணுக்கான பலனை சொல்றதுக்கு மிந்தி உங்களுக்கு நம்பிக்கை பிறக்க இந்த அனுபவம்.( ஹி ஹி அப்டி சொன்னாத்தேன் சொந்தகதைய கேப்பிக)

வண்டி நெம்பரோட டோட்டல் 47 . 4 = ராகு ,7 =கேது இதை கூட்டினா 11 .இதையும்சிங்கிள் நெம்பராக்கினா 2. ராகுன்னா துர்கை .துர்கைக்கு வேப்பமரம் விசேஷம். நாம வேப்பமரத்து வீட்ல இருந்தப்பதேன் இதை வாங்கினோம்.

ராகு வெளி நாட்டு தொடர்புகளுக்கு முக்கிய கிரகம். இந்த வீட்ல இருக்கிறச்சதேன் நெட் கனெக்சனே வாங்கினோம். ஆன்லைன் ஜோதிட ஆலோசனை சூடு பிடிச்சுருச்சு.( ஜாதகத்துல ராகு 10 ல) .

ஜோதிடம்ங்கறது ஆன்மீகத்தின் முதல் படிங்கறது நம்ம பஞ்ச். அடுத்த படியையும் டச் பண்ண ஆரம்பிச்சோம். அதுலயும் டைரக்டா யோகம் . ( 4 ல் கேது)

பல மாசம் ஹவுஸ் ஓனர் கரண்ட் பில்லையும் நாம கட்டிக்கிட்டிருந்தம். அவருக்கு ரெண்டாவது பைபாஸ் நடந்தது வேற கதை . ( வறுமைய தர வேண்டிய 4 ல் செவ்  இப்படி பரிகாரமாயிட்டாரு. செவ்= மின்சாரம் ,செவ்= அறுவை சிகிச்சை)

லோக்கல்ல மல்ட்டி கலர் ஆட் பேஸ்ட் மேகசின் செலாவணியில இருந்தது. நாம நெம்பர் டூவா தான் இருந்தம். நெம்பர் ஒன்னாயிட்டம்.

எல்லாம் பாசிட்டிவா இருந்தா எப்படி? டோட்டல் 2 வர்ரதால - ( 2 = சந்திரன் ) வண்டி மேட்டர்ல மட்டும் பயங்கர இன்ஸ்டெபிலிட்டி, அன்சர்ட்டெனிட்டி,ஆங்சைட்டி.

தாளி எப்ப ஓடும்.எப்ப நின்னுரும்னே தெரியாது. ரெண்டேகால் நாளைக்கு ஒரு புது பிரச்சினை வரும். ரிப்பேருக்கு மட்டும் ரூ.2000 வரை செலவழிச்சுருப்பன்.

சுண்டைக்கா கால் பணம் சுமைக்கூலி முக்காப்பணம் -துடப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம்னு கமெண்ட் போட்டுராதிங்க.

இவ்ள செலவழிக்க ஒரு காரணம் இருக்கு. பக்கத்து சந்துல வில்லங்கம் காத்திருக்குன்னா இந்த சந்துலயே நின்னுரும். நாம அடிச்சு பிடிச்சு ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு பக்கத்து சந்துக்கு போனா " சாமி ! இன்னாய்யா வெத்திலையில மை போட்டு பார்க்கிறியா என்ன.. இவ்ளோ நேரம் அந்த மொக்கை பார்ட்டி உனக்காக வெய்ட்டிங். இப்பத்தான் அவன் அப்படி போனான். நீ இப்ப வரே"ம்பாய்ங்க.

ஒரு தாட்டி நிப்பாட்டி ஸ்டாண்ட் போடறச்ச ப்ரேக் ஒயர் படக். (ஓடும்போது அறுந்திருந்தா என்ன கதி?)  அரை ஸ்பூன் பெட் ரோல் இருந்தாலும் வீட்ல கொண்டு வந்து சேர்த்துரும்.

இது வந்த ராசி இன்னொரு வண்டியும் வாங்கியாச்சு (இது மகளுக்கு இதனோட நெம்பர் 19 . இந்த கதை இன்னொரு சந்தர்ப்பத்துல)

இந்த சென்டிமென்ட்ல ஸ்பானர் பிடிச்சவன்லாம் மெக்கானிக்குன்னு செமை செல்ஃப் ஷேவிங் +மொட்டை.
ஒரு நாள் திடீர்னு ஸ்பார்க் ஆச்சு. முழு நிலவுல ஒரு மீன் துள்றாப்ல ஸ்டிக்கரிங் பண்ணிட்டம் . ( 2= சந்திரன் சந்திரன் =கடல் -மீன் கடல்லதானே இருக்குது )

சீமான் மாதிரி ஒரு மெக்கானிக் மாட்ட ஒரே ஒரு 100 ரூவா செலவுல அல்ட்டிமேட் சொல்யூஷன். மாசக்கணக்கா  நோ ப்ராப்ஸ். சீதா சல்தா. ஒரு குரங்கு அந்த ஸ்டிக்கரை பிச்சுப்போட்டுருச்சு. ஷாக் அப்சர்பர்ல பிரச்சினை வந்துட்டு சீமான் கிடைக்காம் பஞ்சர் கடை பாய் ஒருத்தரை வச்சு எல்லாத்தையும் கழட்டி ஏறக்குறைய "புதுப்பேட்டை"மாதிரி குமிச்சு வச்சுட்டம்.

ஸ்ப்ரிங்கா கிடைக்கலை.காயலான் கடையில கூட தேடியாச்சு. படக்குனு ரோசனை வந்துது. ஸ்ப்ரிங்ஸை கழட்டி கேஸ் ஸ்டவ் மேல வச்சு பழுக்க காய்ச்சி ஐஸ் வாட்டர்ல போட்டுட்டு பஞ்சர் கடை பாயை ஃபிட் பண்ண சொன்னேன். பிரச்சினை ஓவரு. கையோட கையா மறுபடி ஃபுல் மூன், ஃபிஷ் ஸ்டிக்கர். இந்த எக்ஸ்பீரியன்ஸ் போதாதா உங்களுக்கு நம்பிக்கை வர்ரதுக்கு.

நாளையிலருந்து  1 ஆம் நெம்பர்ல ஆரம்பிச்சு ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? மைனஸை மைனஸ் பண்ண என்ன பண்ணலாம்ங்கறதை புட்டு புட்டு வச்சிர்ரன்.

புட்டுன்னது குட்டிங்க புஷ்பவதியாறதே ஞா வருது.. தூத்தேரிக்க .. வயசு 46.. திருந்தவே மாட்டமோ ?

Tuesday, November 6, 2012

அண்ணாவின் மரணத்துக்கு வழி வகுத்த கருணாநிதி

இந்த பதிவுக்கு  " அரசியல்: ஹிப்பாக்ரட்டுகளின் உலகம்"னு தலைப்பு வச்சாலே போதும்.ஆனால் என்ன பண்றது ? காந்தியை பத்தி படம் எடுத்தாலும் கஸ்தூரிபாவின் இரவுகள்னு தான் பேர் வச்சாகனும்.அப்பத்தேன் உலகம் அதை சீந்தும்.அதனாலதேன் இந்த வில்லங்க தலைப்பு.

பெரியார் Vs அண்ணா:
பெரியார் அண்ணா இடையிலான உறவு எப்படிப்பட்டதுன்னு இன்றைய கீச்சர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? அண்ணா "அண்ணன் (பெரியார்)  எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்"னு காத்திருந்தார்.திடீர்னு பெரியார் மணியம்மைய கண்ணாலம் கட்டிக்கறதா சொன்னதும் இர்ரிட்டேட் ஆயிட்டாரு. தனிக்கட்சி துவக்கம் -ஆட்சி பிடிப்பு எல்லாம் நடந்தாச்சு.

அண்ணா -பெரியார் மைண்ட் செட் ரெம்ப டிஃப்ரன்ட். அண்ணாவுக்கு ஆங்கில இலக்கணம் முக்கிய.பெரியாருக்கு அது இரண்டாம் பட்சம் சிக்கனம் தான் முக்கியம். ஏற்கெனவே பேசியிருக்கம்னு தந்தி கொடுக்கனும். அண்ணா தந்தி மேட்டரை விஸ்தாரமா எழுதி கொண்டு வர பெரியார் "டோல்டட்"னு எழுதிருங்கறாரு. பெரியாருக்கு சினிமான்னாலே கடுப்பு.அண்ணாவுக்கு சினிமா மேல ஈர்ப்பு . இப்படி ஆயிரம் வித்யாசங்கள். ரெண்டு பேரும் ரெண்டு துருவம்.

பெரியார் அண்ணா எதிர்காலத்துக்கே ஆப்படிச்ச பார்ட்டி.அண்ணா பெரியாரோட நிகழ்காலத்துக்கே ஆப்படிச்ச பார்ட்டி.ஆனா அண்ணாவின் பேச்சு ,பெரியார் கொள்கைகளை  சட்டமாக்கினது ,அனுதினம் பெரியார் பேரை மந்திரமா ஜெபிச்சது எல்லாத்தையும் பார்த்தா நமக்கு புரியும் .அரசியல்: ஹிப்பாக்ரட்டுகளின் உலகம்


அண்ணா Vs கலைஞர்:




அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் மேல ஈர்ப்பு .கலைஞருக்கு எம்.ஜி.ஆர் தான் போட்டி. சினிமா மேல கவர்ச்சி,எழுத்து,பேச்சுன்னு அண்ணாவுக்கும் கலைஞருக்கும் ஆயிரம் ஒற்றுமை இருந்தாலும் குடும்பம்ங்கற மேட்டர்ல ரெண்டு பேரும் ரெண்டு துருவம். அதுலயும் ஊழல் விஷயத்துல இந்த கருணா நிதி நெருப்பு மாதிரின்னு தாத்தா ஊத்திவிடறாரே அதுக்கு தகுதியான நபர்  அண்ணா . அவருக்கு தொண்டையில  கான்சர்னு தெரிஞ்சு  அவர்  ரெஸ்ட்ல இருந்தாகனும்னு தெரிஞ்சும் அவரை வச்சு கூட்டம் போட்டு அவர் மரணத்துக்கே கலைஞர் வழிவகுத்ததா கூட பேச்சு உண்டு. ஆனாலும் பாருங்க கலைஞருக்கு அண்ணா தான் கடவுள் .அவர் பேர் தான் மந்திரம்.


நல்ல வேளை எம்.ஜி.ஆர் ப்ரூக்ளின் மருத்துவமனையில இருந்தப்போ தாத்தா விட்ட 40 ஆண்டுகால நண்பர் அஸ்திரம் எடுபடலை.இல்லின்னா கலைஞருக்கு எம்.ஜி.ஆர் கடவுளாவும் அவர் பேர் மந்திரமாவும் மாறியிருக்கும்.

எம்.ஜி.ஆர் Vs ஜெயலலிதா:

"ஜெ" வுக்கும் எம்.ஜி ஆருக்கும் இருந்த உறவை  பத்தி  சொல்ல தி.மு க பேச்சாளர்களின் மேடை பேச்சை ஆதாரமா காட்டினா அது கயவாளித்தனம்.ஆனால் ஜெ வே குமுதத்துல ஒரு தொடர் எழுத ஆரம்பிச்சு பாதியில டீல்ல விட்டுட்டாய்ங்க.அது ஜெ வின் சொந்தக்கதைனு பிரச்சாரம் கூட நடந்தது. அவிக ரெண்டுபேருக்கும் எப்பம் சண்டை வரும் -எப்பம் கூடிக்குவாய்ங்கன்னு ஆருக்கும் தெரியாது. வாத்யாரு கடேசியா "ஜெவுக்கு கட்டம் கட்டி அவிகளோட யாரும் பேசப்படாது .அன்னந்தண்ணி புழங்கப்படாது"ன்னுல்லாம் சொன்னதா செய்திகள்.

ஆனால் ஜெவுக்கு எம்.ஜி.ஆர் கடவுள் -அவர் பெயர் தான் மந்திரம் .( நல்ல வேளையா எலீக்சன் வரும்போது மட்டும்)

சந்திரபாபு Vs என்.டி.ஆர்:


என்.டி.ஆருக்கு ஆப்படிச்சு - கட்சியை  பதவியை பறிச்சுக்கிட்டு -அவரோட மரணத்துக்கே காரணமான சந்திரபாபுவுக்கு இப்பவும் என்.டி.ஆர் தான் கடவுள் - அவர் பேர் தான் மந்திரம்.

ஒய்.எஸ்.ஆர் Vs ஜகன்:


ஒய்.எஸ்.ஆர் உயிரோட இருந்தவரை ஜகன் பெங்களூர்லயே இருக்கனும். ஹைதராபாத் பக்கம் வரப்படாது.இதுதான் ஒய்.எஸ்.ஆர் வச்ச ரூல். ஊழல்  நடக்கக்கூடாதுங்கறது எவ்ள முக்கியமோ ஊழல் நடக்கலைங்கற - நடக்க வாய்ப்பில்லைங்கற "சீன்" கூட ரெம்ப முக்கியம்.இதான் ஒய்.எஸ்.ஆர் கான்செப்ட்.

அப்பா சி.எம்மா இருக்கிற ஸ்டேட்டுக்குள்ள வரப்படாதுங்கறது ஒரு மகனை எந்தளவுக்கு கடுப்பாக்கியிருக்கும்னு நீங்களே ரோசிங்க. ஆனா இன்னைக்கு?  ஜகனுக்கு ஒய்.எஸ்.ஆர் தான் கடவுள். ஒய்.எஸ்.ஆர் பெயர்தான் மந்திரம்..

மொதத்ததுல அரசியலே ஹிப்பாக்கிரட்டுகளின் உலகமப்பா..

Monday, November 5, 2012

உங்கள் அடுத்த தலைமுறையில் எப்படிப்பட்ட ஜாதகர்கள் பிறப்பார்கள்?

அண்ணே வணக்கம்ணே !

யோகம் என்றால் சேர்க்கை என்று அருத்தம். ஆனால் யதார்த்தத்துல  யோகம்ங்கற வார்த்தை அதிர்ஷ்டங்கற அருத்தத்துல தேன் புழங்குது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புங்கோ..

அதனால யோகம்ங்கற வார்த்தைய அதிர்ஷ்டங்கற அருத்தத்துலயே இந்த பதிவுல உபயோகிக்கிறேன். யோகங்கள்னா பலதும் இருக்கு. தற்சமயத்துக்கு பஞ்ச மகா புருஷ யோகங்களை மட்டும் எடுத்துக்குவம்.

செவ்,குரு,சனி,புதன்,சுக்கிரன் ஆகிய 5 கிரகங்கள் உச்சம் அ  ஆட்சி பெறுவதையே பஞ்ச மகாபுருச யோகம்னு சொல்றாய்ங்க.

புதிய வரவுகளுக்கு ரெஃபரன்ஸ்:

செவ் ஆட்சி ,உச்சம் பெற்றால் ருசக யோகம், ,குரு ஆ/உ பெற்றால் ஹம்ச யோகம், சனி ஆ/உ பெற்றால் சச யோகம் , ,புதன் ஆ/உ பெற்றால் பத்ரயோகம் ,சுக்கிரன் ஆ/உ பெற்றால் மாலவ்ய யோகம்.

மேற்படி கிரகங்கள் உச்சம்,ஆட்சி பெற்றால் மட்டும் போதாது. இவை லக்னத்துக்கு சுபராவும் இருக்கனும். மேலும்  கோண்ம், அல்லது கேந்திரம் பெற்றிருக்கனும். கு.பட்சம் 6,8,12 தவிர மற்ற எந்த பாவத்துலயாச்சும் இருக்கனும். ஒரு வேளை இவிக லக்னாத் பாவியா இருந்தா உச்சம் , ஆட்சி  பெறுவது ஆபத்து . இதை ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னதா ஞா.

இன்னைக்கு  சொல்ல வந்த மேட்டர் என்னடான்னா எல்லா நிபந்தனைகளையும் ஃபுல் ஃபில் பண்ணி மேற்படி பஞ்ச மகாபுருச யோகங்கள் பலன் கொடுக்கிறதா இருந்தாலும் சில சைட் எஃபெக்ட்ஸ் இருக்கும்ங்கறது தேன்.

ஆங் அது எப்படின்னு பண்டிதர்கள் கிராஸ் பண்ணுவாய்ங்க. ஒரு டார்ச் லைட்டை ஆன் பண்றிங்க. எதிர்பக்கம் வெளிச்சம் விழுது. பின்பக்கம்? இருட்டு இருக்கா இல்லியா?

அட கண்ணாலத்துல வீடியோ கவரேஜ் எடுக்க ஃபோக்கஸ் லைட் யூஸ் பண்றாய்ங்க. வெளிச்சம் சூப்பருதேன்.ஆனால் அனலும் அடிக்குதில்லை. அப்படித்தேன் இதுவும்.

1.ருசக யோகம்:
கோபம் ,குரூர சுபாவம் இருக்கும். காரியம் பெருசா வீரியம் பெருசான்னா வீரியம்தேன் பெருசுனு முண்டா தட்டுவாய்ங்க. அடி தடி, கத்தி குத்துக்கெல்லாம் கூட இறங்கிருவாய்ங்க. வயசு எவ்ள தான் கூடினாலும் முதிர்ச்சிங்கறது நாட் பாசிபிள். எதிரிகள்,சகோதரர்கள் வகையில பிரச்சினைகள் இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கும். எதிர்காலத்துல ரத்தம்,எரிச்சல் தொடர்பான வியாதிகள் வரலாம்.

அடுத்த தலைமுறையில செவ் தோஷமுள்ள ஜாதகர்கள் பிறப்பார்கள்.

2.ஹம்ச யோகம்:
தனக்கு ஆப்படிக்கிறான்னு தெரிஞ்சாலும் ச்சொம்மா எப்டி  சொல்லிர்ரது ஆதாரம் வேணாமாம்பாய்ங்க. ரெம்ப ரோசிப்பாய்ங்க. குட் வில் இருக்கிற அளவுக்கு வருமானம் இருக்காது. வாயு கோளாறுகள் இருக்கலாம். பயந்த சுபாவம் இருக்கும். ஆருக்கோ நல்லது செய்யப்போயி செல்ஃப் ஷேவிங் எல்லாம் சகஜம். எதிர்காலத்துல இதயம் தொடர்பான பிரச்சினைகள் கூட வரலாம்.

அடுத்த தலைமுறையில குரு பலம் இல்லாத  ஜாதகர்கள்  பிறப்பர்.

3.சச யோகம்:
படு கஞ்சர்களாக இருக்கலாம்.  கல் நெஞ்சர்களா இருக்கலாம். அடுத்தவுக பொருளை ஆட்டைய போட பார்ப்பாய்ங்க. ஓட்டை ,உடைசல், குப்பைய கூட வெளிய எறிய மாட்டாய்ங்க. வேலைக்காரவுகளை பிழிஞ்சு எடுப்பாய்ங்க. சிலர் பத்து வட்டி ,கந்து வட்டி கேஸாவும் இருக்கலாம். எதிர்காலத்தில் கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான வியாதிகள் வரலாம்.

அடுத்த தலைமுறையில்  சனி பலம் இல்லாத ஜாதகர்கள் பிறப்பர்.

4.பத்ரயோகம்:
ஆண்கள் பெண் தன்மையுடனும்,பெண்கள் ஆண் தன்மையுடனும் இருக்கலாம். ஃபேஸ் டு ஃபேஸ் ஒன்னு ரெண்டு வார்த்தையில முடியற சமாசாரத்துக்கு கூட நீட்டி முழக்கி லெட்டர் அனுப்பறது ,லீகல் நோட்டீஸ் அனுப்பறது கூட  நடக்கலாம்.கல்வி,சங்கங்கள்,  ஜோதிடம்,மருத்துவம்,வியாபாரம்னு ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத விஷயங்கள்ள இறங்கி எதுலயும் பர்ஃபெக்சன் இல்லாம போயிரலாம். எதிர்காலத்தில் தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.

அடுத்த தலைமுறையில் புத பலம் இல்லாத ஜாதகர்கள் பிறப்பர்.

5.மாலவ்ய யோகம்:
வண்டி ,வாகனங்கள், வீடு,இன்டிரியர், காஸ்மெடிக்ஸ்,கலைகள்  இத்யாதியில  அளவு கடந்த ஆர்வம் இருக்கலாம்.காதல்,திருமணம்,தாம்பத்யம் இத்யாதி சீக்கிரமே துவங்கி சீக்கிரமே அலுத்து பொயிரலாம். திரு மண வாழ்க்கை  பாதிக்கலாம்.எதிர்காலத்துல கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரலாம்.

அடுத்த தலைமுறையில் சுக்கிர பலம் இல்லாத ஜாதகர்கள் பிறப்பர்.

21,டிசம்பர் ,2012 : ஒரு ஸ்கான் பார்வை

அண்ணே வணக்கம்ணே ! 21,டிசம்பர் ,2012 அன்னைக்கு பிரளயம் வரும்ங்கறாய்ங்க. எல்லாம் ஃபணால் ஆயிருங்கறாய்ங்க. எங்க என்.டி.ஆர் மாதிரி ஒரு வேனை சைதன்ய ரதமாக்கிக்கிட்டு கு.ப ஆந்திரம்,தமிழ் நாடு மட்டுமாச்சு ஒரு டூர் அடிச்சு ஆ.இ.2000 பத்தி பிரசாரம் பண்ணனும்னு ப்ளான் பண்ணியிருந்தம்.

இப்பம் இவிக சொல்றதை பார்த்தா  எல்லாம் அம்பேல் தானா? சரி அன்னைக்கு  நாள் நட்சத்திரம்லாம் எப்படின்னு பார்ப்போம்.

கிழமை வெள்ளிக்கிழமை ; திதி: சுக்ல பட்ச அவமி (இரவு 12.46 வரை)
நட்சத்திரம்: உத்தராபாத்ரா (உத்திரட்டாதி) பகல் 9.49 வரை அதன் பிறகு ரேவதி சந்திரன் மீனத்துல
துர்முகூர்த்தம்: காலை 8.56 முதல் 9.40 மற்றும் பகல் 12.35 முதல் 1.19 வரை
வர்ஜியம்: இரவு 10.55 முதல் ,12.40 வரை

ஞா கிழமை,கிரகணம் பிடிச்சு ,அன்னைக்கு அமாவாசை ,பவுர்ணமி எதுனா கோ இன்சைட் ஆனா பூகம்பம் இத்யாதிக்கு வாய்ப்புண்டுனு ஒரு விதி இருக்கு.21,டிசம்பர் ,2012 அன்னைக்கு இது எதுவுமே கோ இன்சைட் ஆகலை.உஸ் அப்பாடா ..மினிம கியாரண்டி..

இட்ஸ் ஓகே அன்னைக்கு என்ன கிரகஸ்திதின்னு பார்ப்போம். ரிஷபத்துல  வக்ர குரு +கேது சேர்க்கை (குரு வக்ரம்ங்கறதால அஜீஸ்மென்டு) சனி துலாமில் உச்சம் (ஆயுள் காரகர்) விருச்சிகத்துல புதன்,சுக்கிரன்,ராகு.

புதனோட ராகு சேர்ந்தா யாவாரிங்க,கல்வியாளர்கள், ஆடிட்டர்,டாக்டர்களுக்கு தலைவலி. சுக்கிர ராகு சேர்க்கை பெண்களுக்கு பிரச்சினைய தரும்.  பொதுவாவே வெனிரியல் டிசீஸ் அட்டாக் ஆக வாய்ப்பு அதிகமா இருக்கும். ஹவுசிங்,ஆட்டோ மொபைல் துறைகளுக்கு நல்லதில்லை. சூரியன் தனுசுல, செவ் மகரத்தி உச்சம். சனி சூரியனை பார்க்கிறாரு. ஆட்சியாளர்களுக்கு தலைவலி.

ஒன்னும் அந்தளவுக்கு வில்லங்கமான கிரக நிலையா தோனலை. நம்ம நாட்டோட லக்னம் ரிஷபம்,ராசி கடகம். சுதந்திர இந்தியாவின் ஜாதகம் :

லக்னம் ரிஷபம். 1-7 ல ராகு கேது , ரெண்டுல செவ்( ராணுவ செலவு கழுத்தை நெறிக்க இதுவும் ஒரு காரணம்) 3ஆம் பாவத்துல சுக்கிரன் சூரியன் , சனி ,புதன்,சந்திரன், 6ல குரு,

2012-7-15 முதல் 2013-6-27 வரை சூரியதசையில சனி புக்தி .. சூரியன் 3 ல் ஓகே. சனியோட சேர்ந்து 3 ல் நின்றதுதான் கொஞ்சம் போல வவுத்தை கலக்குது.

ரிஷப லக்னத்துக்கு சனி யோக காரகன். 3 ங்கறது மாரக ஸ்தானம். இதுல சூரிய தசையில சனி புக்தி வேற நடக்குது.

சூரியன் +சனி/ராகு தொடர்பு ஏற்பட்டா ஆட்சியாளர்களுக்கு ஆப்புன்னு அருத்தம்.கோசாரத்துலயும் சனி சூரியனை பார்க்கிறாரு.

ஆக  21,டிசம்பர் ,2012 க்கு முன்னே பின்னே அரசுகள் கவிழலாம்.தலைவர்கள் சாகலாம்னு சொல்ல முடியுதே தவிர புரட்டிப்போடற அளவுக்கு பிரளயம் வரும்னெல்லாம் சொல்ல முடியலை..

நம்ம நாட்டோட ராசியான கடகத்தை வச்சுப்பார்த்தாலும் லக்னாதிபதி  சந்திரன்  பாக்யத்துல , 7/8 க்கு அதிபதியான சனி 4 ல் உச்சம் ( ஆட்சியாளர்கள் நீச சகவாசம் செய்து அதனால நாறலாம் -ஆளுங்கட்சியில உட்கட்சி பூசல் வரலாம் - தொழிலாளர்கள் பெரிய அளவுல வேலை நிறுத்தத்துல ஈடுபடலாம்.

3/12 க்கு அதிபதி 5 ல் . ஆட்சியாளர்கள் மக்களை இவிக எவ்ள அடிச்சாலும் தாங்கறாய்ங்க .ரெம்ப நல்லவுங்கனுட்டு எதுனா உபரியா பளுவை ஏத்த ,மக்கள் திரஸ்கரிச்சு ரோட்டுக்கு வரலாம். ஆட்சியாளர்களுக்கு அவப்பேர் வரலாம். 4,11 க்கு அதிபதியான சுக்கிரன் 5 ல் வருவதால் ஒரு பெண் அரசியல் வாதி (சோனியா தவிர்த்து ) லைம் லைட்டுக்கு வரலாம்.

புத,சுக்கிரர்களோடு ராகு சேர்வதால் அந்த பெண் ஆண் லட்சணங்களுடன் இருக்கலாம் . விதவையா இருக்கலாம். தனித்து வாழ்பவராக இருக்கலாம்.

புதன் =வியாபாரம் ; ராகு =ஊழல் , சுக்கிரன் =ஹவுசிங்,ஆட்டோ மொபைல் ,ராகு =ஊழல் எனவே இது தொடர்பான ஊழல்கள் எதாவது வெடிக்கலாம்.

ரெண்டுக்கதிபதியான சூரியன் 6ல் நிற்பதால் ஷேர்மார்க்கெட் தொபுக்கடீர் ஆகலாம். 5,10 க்கு அதிபதியான செவ் 7 ல் உச்சம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் சீனத்துடன் (எதிரி) உரசல் அதிகரிக்கலாம். பெரிய தீவிபத்து அ பூகம்பம் நடக்கலாம்.

11ல் வக்ர குரு  நல்லதில்லை.இவரோட கேது சேர்ந்ததால நாடு ஒரு நல்ல பாடத்தை படிக்க வேண்டியிருக்கும்.ஞானோதயம்?

என்னதான் முக்கி முக்கி ரோசிச்சாலும் பிரளயம்ங்கற வாசனை கூட வரலிங்கணா.. ஜோதிடன் பலனை சொல்லத்தான் முடியும்.அந்த பலனை தர்ரது ஆத்தா தானே..


Saturday, November 3, 2012

சுய தர்மத்தை கை விட்ட "அவாள்"

"பர தர்மம் எவ்வளவு உயர்ந்ததானாலும் சுதர்மமே சிறந்தது"ன்னு கீதை சொல்லுது. இங்கன தர்மம் என்ற வார்த்தைக்கு மதம்னு ஒரு பொருள் கொடுத்து இந்துத்வா வாதிகள் அலப்பறை செய்வது தனி கதை. ஆனா  கீதை சொல்ற "தர்மம்"ங்கற வார்த்தைக்கு "இயல்பு"ன்னு பொருள் கொள்ளலாம்.

வேதங்கள்,புராணங்கள்,மற்றும் இவற்றின் சாரமாய் பிரசாரம் செய்யப்படும் கீதை இத்யாதிக்கு ஹோல்சேல் உரிமை கொண்டாடும் பிராமணர்களை சு தர்மத்தை விட்டு பர தர்மத்தை கை கொள்ளும்படி செய்தது நம்ம சூப்பற ஸ்டாரு ரஜினியின்  நண்பரான மோகன் பாபு தான்.

தெலுங்கு ஹீரோ மோகன்பாபுவை பற்றி உங்களுக்கு என்ன தெரியுமோ என்னமோ? ரஜினியின் சகவாச தோஷமோ என்ன இழவோ வருசத்துக்கொருதாட்டியாச்சும் எதையாவது அச்சானியமா  பேசி /யாரையாவது சந்தித்து எப்பவும் நியூஸ்லயே இருப்பாரு. லேட்டஸ்டா "தேனிகைனா ரெடி "னு ஒரு படம் எடுத்தாரு. (மகன் விஷ்ணு தான் ஹீரோ) .

இந்த படத்துல பிராமணர்களை இழிவு படுத்தறாப்ல காட்சிகள் இருப்பதாக பிராமண சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தின .( இந்த போர்க்கொடி என்னா கலரு பாஸு?)  மோகன்பாபு வீட்டின் மீது தாக்குதல் நடந்தது. விஷ்ணுவும்,பிராமண சங்க தரப்பும் பரஸ்பரம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மனித உரிமைகள் கமிஷனில் புகார் கொடுத்துக்கிட்டாய்ங்க. புகார் கொடுக்க வந்த விஷ்ணுவின் கார் மீது செருப்பு வீச்சு -கல் வீச்சு வைபவங்கள் கூட  நடந்தாச்சு.

முகமதியர் படையெடுப்பு காலத்துலருந்தே பிராமணர்கள் தங்கள் இயல்பை இழப்பது ஆரம்பித்துவிட்டது. சர்வைவல் காரணமாக  கொஞ்சம் கொஞ்சமா வேதம் - புராணம் -ஜோதிஷம் எல்லாத்தையும் மூட்டை கட்டி "ராஜ பாஷை"யை கற்பதும் - ஆட்சியாளர்கள் அன்னியர்/சுதேசி என்ற வித்யாசம் இல்லாது அவர்களுக்கு காட்டி கொடுத்து -கூட்டி கொடுத்து வருவதை சரித்திரம் பேசுகிறது.

இவிகளோட ப்ளஸ் பாய்ண்டே என்னடான்னா "புதுமையை" கேள்வி கேட்காது ஏற்பது. எல்லா குதிரை மேலயும் காலணா கட்டி வைக்கிறது. முதல்வர்கள்,மந்திரிகள்  மாறலாம்.ஆனால் செயலாளர்கள், ஐ.ஏ.எஸ்கள் மாற மாட்டார்கள்.ஆடிட்டர்,டாக்டர்,லாயர்கள் மாற மாட்டார்கள்.

அரசியல் அதிகாரம் ஆரு கையில இருந்தாலும் அதை அனுபவிக்கிறது மட்டும் இவா தான்.இந்த ஆட்டிட்யூடால  இழந்தவன் அதிலயும் விழிப்பு கண்டவன் கண்டதையும் எழுதி ,பேசி புலம்பினாலும் இவா எதையும் கண்டுக்கிடமாட்டாய்ங்க.

இழந்தவர்கள் கூட்டத்துலயே விழிப்பு பெறாத  வர்கம் "அட என்னப்பா சொம்மா அவாளை போட்டு கிளிச்சுக்கிட்டு"ன்னு வக்காலத்து வாங்கறாப்ல இருக்கும்.

நம்மாளுங்க எப்பமோ அண்டர் கிரவுண்ட்ல கண்ணிவெடி வச்சிட்டிருப்பாய்ங்க.  நேரம் வரும் போது அதுவா வெடிச்சு வைக்கும். அல்லது சூத்திர பயலுவ வர்ஜியா வர்ஜியமில்லாம எவள் கையையாவது இழுத்து வைக்கிறதோ .. கடிக்க கூடாத வஸ்துக்களை கடிச்சு வைக்கிறதோ  நடந்தா அப்பம் நம்மாளுங்களோட லாபி வேலை செய்ய ஆரம்பிக்கும்.அடி எங்கருந்து விழுதோ தெரியாத அளவுக்கு அடி விழூம்.

அட நம்ம நித்தி -ஜெயேந்திரர் மேட்டரை எடுத்துக்கங்களேன். லாபி இருந்தா ஜெயேந்திரர் கணக்கா பம்மலாம். லாபி இல்லின்னா நித்திக்கு அடிச்சாப்ல பம்படிச்சுருவாய்ங்க.

அவ்ளதானே தவிர ஆரு என்ன கிளிச்சாலும் ரோட்டுக்கு வர்ரது - கோசம் போடறது -கல் வீச்சு -செருப்பு வீச்செல்லாம் அவிக ஸ்கூல் கிடையாது,. ரெம்ப வலிச்சுருச்சு போலன்னு என்ஜாய் பண்ணிக்கிட்டு   திருடனுக்கு தேள் கொட்டின கணக்கா அமுக்கமா -கமுக்கமா இருந்திருவாய்ங்க.

ஒரு முருகேசன் வலிக்குது வலிக்குதுன்னு கத்தினா பத்து ரஜினி காந்தை வளைச்சு போடற வேலையில பிசியா இருப்பாய்ங்களே தவிர முருகேசன் மேல புகார் கொடுக்கிறது -புகாரி ஓட்டல் பிரியாணி அனுப்பறதெல்லாம் இருக்காது நடக்காது.

இன்னொரு முக்கிய மேட்டர் அவிகளுக்குள்ள சரியான புரிதல் இருக்கு அல்லது கம்யூனிகேஷன் இருக்கு.
எதுக்கு ரெஸ்பாண்ட் ஆகனும் எதுக்கு ரெஸ்பான்ட் ஆகக்கூடாதுன்னு ஒரு விதியே இருக்கு.அதை பரிமாறிக்கிறாய்ங்க.

கமிஷ்னருக்கு புகார் கொடுத்த அம்மணிக்காகட்டும் -ஆந்திரத்துல சாலைக்கு வந்து கல்லெறி -செருப்பு வீச்சு
சம்பவத்துல ஈடுபட்டவுகளுக்காகட்டும் இந்த புரிதல் இல்லைன்னு கன்ஃபார்ம் ஆகுது.ஆல்லது "அந்த வட்டத்தோட இவிகளுக்கு " கம்யூனிகேஷன் இல்லேன்னு தெரியுது .

ஒரு கட்டத்துல ஓம்கார் ஸ்வாமிகளை நான் கிளிச்சப்போ ஆருமே கிர்க்கா மர்க்காங்கலை. வெட்டிக்கு வக்காலத்து வாங்கற சோ ராமசாமி , டோன்டு ராகவன்லாம் கூட தொடர்பு எல்லைக்கு வெளிய இருக்கிறதாதான் கணக்கு.

இதை ஏன் கன்ஃபார்மா சொல்றேன்னா ..  நாளைக்கு சொல்றேனே ..

குருவின் மனைவி +சந்திரன்+ " ஒரு தக்ஜம்" = புதன்?

மொதல்ல ஜோதிடம் குறித்த புனைகதைகள்னு தலைப்பு வைக்கத்தான்  நினைச்சம். ஆனா வக்ர குரு புத்தியை திருப்பி விட்டுட்டாரு. அதனால தேன்  அச்சானியமா இப்படி ஒரு  தலைப்பை வச்சிருக்கம்.

தலைப்பு தேன் அச்சானியம்னா மேட்டர் அதைவிட படு கில்மா. குருவோட மனைவியை சந்திரன் கிட்னாப் பண்ணி வச்சுக்கிட்டு அஜால் குஜால் வேலையில படு பிசி. பாவம் குரு வயசான காலத்துல ஏறாத படியெல்லாம் ஏறி மனைவியை மீட்கிறாரு. அதுக்குள்ள சந்திரன் செய்த கெட்ட காரியத்தால புதன் பிறந்து தொலைச்சுட்டாரு. இது நாம இட்டு கட்டின கதை கிடையாதுங்கோ.செலாவணியில இருக்கிற கதைதேன்.

இப்படி ஆயிரம் கதை இருக்கு. இன்னம் ஒரே ஒரு கதைய மட்டும் இங்கன பார்ப்போம்.


"நீங்களும் ஜோதிடராகலாம்"னுட்டு ஒரு  இ புக் நெட்ல ஃப்ரீ ஆஃப் காஸ்ட்  கிடைக்குது அதுல தேன் இந்த  கதை வருது.

ராவணன் தன் மகன் இந்திரஜித் பிறக்கறதுக்கு மிந்தி நவகிரகங்களை கூப்டு "தபாருபா..அல்லாரும் என் மகன் ஜாதகத்துல 11 ஆமிடத்துல நிக்கனும்"னு ஆர்டர் போட்டுட்டாராம். ஒடனே பி.டி  வாத்யாரு ஆர்டர் போட்டதும் பசங்க லைன் கட்டறாப்ல அல்லாரும் 11 ல வந்து நின்னுட்டாய்ங்களாம். இதுல சனி மட்டும் "வேலை" கொடுத்து 12 க்கு வந்துட்டாராம். அதனால ராவணன் சனியோட காலை வெட்டிட்டாராம். எல்லாம் சின்னபிள்ளைத்தனமா இருக்குல்ல.

எல்லா கிரகமும் 11 ல இருக்குமான்னு ரோசிங்க. ராகு -கேதுக்கள் நிழல் கிரகங்கள் ஒருத்தருத்தருக்கொருத்தரு 180 டிகிரிஸ்ல தான் இருக்க முடியும்.ராகு 11ல இருந்தா கேது அஞ்சுல இருந்தாவனும். அல்லது கேது 11 ல இருந்தா ராகு அஞ்சுல இருந்தாவனும்.

சரி மத்த 8 கிரகங்கள் ஒரே ராசியில அதுவும் 11 ல இருக்குன்னு  ஒரு பேச்சுக்கு வச்சுக்குவம்.அந்த எட்டுல லக்னாதிபதியும் அடக்கம்.

லக்னாதிபதியோட 6,8,12 அதிபதிகள் சேர்ந்தா என்ன ஆகும்? இந்திரஜித் சத்ரு ரோக ருண உபாதைகளோட ,இலங்கை கஜானாவை காலி பண்ணிட்டு அல்பாயுசுல போயி சேர்ந்திருப்பான். பீலா விட்டாலும் அதுல ஒரு லாஜிக் இருக்கனுமோல்லியோ?

ராகு கேதுக்களை பற்றி இன்னம் மோசமான கதை இருக்கு. இவிக ராட்சஸாளாம். விஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து மேருமலையை தாங்கி  பாற்கடலை கடைய வச்சுட்டு  மோகினியா வந்து தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் சர்வ் பண்ணும் போது ராமர் கோவில்ல ரெண்டாந்தடவை சுண்டல் வாங்கறாப்ல மேற்படி ராட்சஸாள் வாங்கிட்டாளாம்.ஒருத்தரு வாய் வழியா குடிக்க கழுத்தை வெட்டிட்டாய்ங்களாம். கழுத்துக்கு மேல அலைவ்.

இன்னொருத்தர் "புறக்கடை"வழியா உள்ளாற ஏத்திட்டாராம். அதனால இடுப்புக்கு கீழே அலைவ்.  கேட்கவே மு.கூ தனமா ..மன்னிக்கனும் கூ.மு  தனமா இல்லை?  ஆனால் இப்படிப்பட்ட கதைகள் இன்னம் செலாவணியில இருக்கத்தான் செய்யுது.

இதெல்லாம் ஒரு பக்கம்னா ஸ்ரீ ராமர் ஜாதகம்னு ஒன்னை போட்டு கடுப்பேத்தறாய்ங்க. விட்டா பர்த் சர்ட்டிஃபிக்கேட்டே கொடுத்துருவாய்ங்க போல. சரி ஒழியட்டும் அப்படி ஒரு ஆதர்ச புருசனோட ஜாதகம்னு ஒன்னை ரிலீஸ் பண்றதுக்கு மிந்தி அந்த ஜாதகத்துல உள்ள கிரகஸ்திதிகளை ஒரு க்ளான்ஸாச்சும் பார்க்கனுமில்லியா?

அதை பார்த்தா உருப்படாத ஜாதகம்னு தோனுதே தவிர ராமனோட வீட்டு வேலைக்காரன் ஜாதகமா இருக்குமோங்கற சந்தேகம் கூட வரமாட்டேங்குது.

ஆக ஜோதிடம் குறித்த புனைகதைகளை நம்பாதிங்க. ஜோதிடம் வேறு -ஜோதிடம் தொடர்பான கதைகள் வேறு.  அலார்ட்டாயிக்கோங்க.



Thursday, November 1, 2012

அலிகளின் தேசம்

அண்ணே வணக்கம்ணே !
முக நூல்ங்கறதே வேஸ்ட் ஆஃப் டைம்ங்கற ஃபீலிங் வெளியாட்களுக்கு மட்டுமில்லை. முக நூலை பாவிப்பவர்களுக்கும் இருக்கு.

முக நூலும் ஒரு உலகம் தேன். வெளி உலகத்துல என்னெல்லாம் இருக்கோ அதெல்லாமே முக நூல்லயும் இருக்கு. ஆப்ஷன் ஈஸ் அவர்ஸ்.

நமுக்கு எது தேவையோ அதுவரைக்கும் பாவிச்சுட்டு அம்பேல் ஆயிரவேண்டியதுதேன். நிற்க. சமீப காலத்துல எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாம 9 வருசம் குப்பை கொட்டியாச்சு.ஒய்.எஸ்.ஆர் ஆட்சி காலம் ஓவர். இப்பம் உள்ள கிரண் ரோசய்யாவை நெல்லவராக்கறதே லட்சியம்னு செயல்பட்டுக்கிட்டிருக்காரு.

இப்பம் கூட நாம கீர் அப் பண்ணலின்னா தாளி 3 ஆமிடம் கியாரண்டின்னுட்டு ஒவ்வொரு பிரிவு மக்களையும் கவர திட்டம் போட்டு ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்காரு. எதையும் சனம் நம்பறதாயில்லை. போதாக்குறைக்கு தன் ஆட்சிய தானே கியாபகப்படுத்தி காபரா படுத்திக்கிட்டு வேற இருக்காரு.

ஆமா இங்கன சந்திரபாபு ஏன் வந்தாரு? ஆங் .. இந்திய ஜனத்தொகையில 50 சதம் யூத்தாம். அதனால இந்தியாவுக்கு செமர்த்தியான எதிர்காலம் இருக்காம். அப்படீன்னு பாபு சொன்னாருங்கோ..

நம்ம பரசுராம் சார் முக நூல்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தாரு. அதை படிச்சதுலருந்து ரெம்ப டர்ராயிட்டன். இந்த 45  வயசுக்கே சனத்து  மேல நம்பிக்கை நசிஞ்சு போச்சுங்கறது வேற கதை.

எங்கெங்கு காணினும் சக்தியடான்னு  பாரதியார் பாடினாரு.ஆனால் இன்னைக்கு எங்கெங்கு காணினும் சகதியடான்னு தேன் பாடத்தோனுது. எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்குன்னு புலம்ப வேண்டியதா இருக்கு.

மவனுங்க கியாஸ் சிலிண்டர் மேட்டர்ல கூட அல்ப்பம்ங்க போல விளையாடியிருக்கானுவ. அட உடல் ஊனமுற்றவுகளுக்கு ட்ரை சைக்கிள் தந்தோம்னு பொய்க்கணக்கு எளுதியிருக்கானுவ. பெரிய மனிதர்கள் தான் அப்படின்னா சின்ன மனிதர்கள் அதுக்கு மேல.

ரேஷன் கார்டுல போலி.  கியாஸ் கனெக்சன்ல போலி. வீட்டுமனை? ஊஹூம்.. ஒருத்தனுக்கும் சுயமரியாதையே கிடையாது. சரி ஓழியட்டும் பரசுராம் சார் முக நூல்ல என்னத்தை ஷேர் பண்ணிட்டாரு..மேட்டருங்க வாங்கங்கறிங்க. அப்படித்தானே..வந்தே உட்டேன்.

இந்தியாவின் மக்கள் தொகை: 110 கோடி:

பாரதி முப்பது கோடி முகமுடையாள்னு எளுதினாரு. அப்போ 60 கோடி கைகள் இருந்திருக்கு. இப்பம்? 110X2 =220 கைகள். ஆனால் இந்த கைகள்ள எத்தீனி "உழைக்கும் கை ..உருவாக்கும் கை"ன்னு பார்த்தா வாழ்க்கையே வெறுத்து போகுது.

மொதல்ல குவான்டிட்டிய குறைக்கனும். அப்பத்தேன் குவாலிட்டி அதிகரிக்கும்.சினிமாக்காரன்ல எவனுக்கெல்லாம் ரெப்புட்டேஷன் இருக்கோ -ஃபாலோயிங் இருக்கோ அவன் கிட்டே வருமான வரியை வசூலிக்கிறதை நிப்பாட்டிட்டு கு.க பிரச்சாரத்துக்கு உபயோகிக்கனும்.குடும்ப நலத்துறைக்கு கு.க பிரச்சார மேட்டருக்கு ஒதுக்கற பணத்தை எல்லாம் மடை மாற்றி ஒரு ஸ்பெசல் ட்ரைவ் கண்டக்ட் பண்ணனும்.

வாராந்தர கு.க பிரச்சாரம்+  கேம்புகளுக்கு கு.பட்சம் ரஜினி,கமலாச்சும் வரனும்.அதிக பட்சம் வடிவேலு. ஒரு குழந்தை பிறந்து 25 வயசு வரை அரசுமானியத்தை எல்லாம் எக்ஸாஸ்ட் பண்ணி உருப்படாம போனா அரசுக்கு என்ன நஷ்டமோ அந்த தொகையை கு.க செய்துக்கற  நபருக்கு கொடுத்து ஒழிச்சுரலாம் நஷ்டமே இல்லை.

அரசாங்கம் தன் வெட்டி வேலைகளை எல்லாம் நிப்பாட்டிட்டு ஆந்திராவுல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடியில அணைகள் கட்ட ஆரம்பிச்சதை போல நதிகளை இணைக்கும் பணியை போர்க்கால அடிப்படையில துவக்கிரனும்.

மானாவாரியா கெட்ட காரியம் செய்து - சகட்டு மேனிக்கு பெத்துப்போடற மக்கள் வாழும் நாட்டை பற்றிய ப்திவுக்கு   அலிகளின் தேசம்னு தலைப்பு வச்சிருக்கியே ராசான்னு கேப்பிக சொல்றேன்.

வாழறதே உருவாக்கத்தேன். இதுல வாரிசுகளை உருவாக்கிறது ரெம்ப சப்பை மேட்டரு. உண்மையிலயே உருவாக்கனும்னா  உழைக்கனும்.உழைக்கும் நிலையில் இல்லாத மக்கள் நிறைந்த தேசத்தை அலிகளின் தேசம்னுதேன் சொல்லோனம்.


9 கோடி ஓய்வு பெற்றவர்கள் :
இவிகள்ள ரெண்டு கேட்டகிரி.ஒன்னு சரியான வாழ்க்கைய வாழ்ந்து பாசிட்டிவ் வைப்ரேஷன்ஸை ஸ்ப்ரெட் பண்ணியபடி ஆதர்சமா வாழ்ந்துக்கிட்டிருக்கிறவுங்க .ரெண்டாவது .. தங்களோட செக்யூரிட்டிக்கு பென்ஷன் இருக்குன்னு சாடிஸ்டா மாறிப்போனவுக. இதுல மொத கேட்டகிரிய கொண்டு  ரெண்டாவது கேட்டகிரிக்கு உரிய கவுன்சிலிங் கொடுத்து தேச புனர் நிர்மாணத்துக்கு இந்த ரெண்டு கேட்டகிரியையும் நதிகளை இணைக்கும் பணியில் உபயோகிச்சுக்கனும்.

30 கோடி மாநில அரசு பணியாளர்கள்:
என்னைக்கேட்டா சோலார் ,காற்றிலிருந்து மின்சாரம் இத்யாதி மூலம் பவர் கட்டை இல்லாம பண்ணீட்டு அரசு நிர்வாகத்தை கணிணி மயமாக்கிரனும்.  இ கவர்னென்ஸ் கொண்டு வந்து   குறைஞ்ச பட்சம் 50 சதவீதம் ஊழியர்களை நதிகளை இணைக்கும் பணியில் உபயோகிச்சுக்கனும்.

17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்:

இதுலயும் பாதி வெட்டி. 50 சதவீதம் ஊழியர்களை நதிகளை இணைக்கும் பணியில் உபயோகிச்சுக்கனும்.

1 கோடி IT ஆளுங்க:
நதி நீர் இணைப்புக்கு தேவைப்படும் காசு பணத்துக்கு மத்திய அரசு பாண்டுகள் வெளியிடலாம்.  இவிக வெளி நாட்ல இருந்தாலும் சரி ,உள் நாட்ல இருந்தாலும் சரி  இவிகளோட வருமானத்துல 50 சதவீதத்தை  மேற்படி பாண்ட்ஸ்ல இன்வெஸ்ட் பண்ணியே ஆகனும்னு சட்டம் கொண்டு வரலாம்.

இந்தியாவில் இருக்கிறவுகளை கணிணிமயம் மற்றும் இ கவர்னென்ஸுக்கு உபயோகிச்சுக்கலாம்.

25 கோடி பள்ளில படிப்பவர்கள்:
படிப்புன்னா இன்னைக்கும் மனப்பாடம்ங்கற நினைப்புத்தான் இருக்கு. தகவல் தொழில் நுட்ப புரட்சிக்கு பிறகு மனப்பாடம்ங்கறதே தேவையில்லாத மேட்டர் ஆயிருச்சு. மாணவர்களை ஜஸ்ட் ஒரு ரூ.15+10 (ரைட்டிங் சார்ஜுங்ணா) மதிப்புள்ள சி.டியா மாத்தி மார்க்கெட்ல விட்டுர்ர டுபாகூர் வேலையெல்லாம் இனி கூடாது.

முதல்வர் தனிப்பிரிவுக்கு நாம அனுப்பிய யோசனைகளில்  சோலார் பவர் மேட்டரை சுட்டு அறிக்கையா வெளி வந்த  கதை தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதுலருந்து ரெண்டு யோசனைகளை இங்கே தந்தே ஆகனும்.


//பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் டைம் ஷேர் முறையில் வேலை செய்யவேண்டும். வேலை நேரமல்லாத நேரத்தில் தனியார் அங்குள்ள இன்ஃப்ரா ஸ்ட் ரக்சரை வாடகை செலுத்தி பயன் படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். (அதிக பட்ச காஷன் டெப்பாசிட்/ பேங்க் கியாரண்டி வசூலித்துக்கொண்டு)

8.அதற்கு முன்பாக பள்ளிகள்/கல்லூரிகளின்   அமைப்பை பொருத்து காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை போதிய சூரிய வெளிச்சம், காற்று வரும்படி ஆல்ட்டர் செய்யவேண்டும். ஷாபிங்க் காம்ப்ளெக்ஸ், மரம் நடுதல் , காற்றாலை அமைத்தல், சோலார் பவர் யூனிட் ஸ்தாபித்தல் இத்யாதி மார்கங்கள் மூலம் கூடுதல் வருவாய்க்கு வழி செய்யவேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் தளம் (ஸ்டேர்) அமைக்கலாம். அது ஆடும் பல்லாயிருந்தால் இடித்து தள்ளி புதிய கட்டிடமே கட்டலாம். BOT முறையில் ( Build-Operate-Transfer) புதிய கட்டிடம் கட்டுவதாயின் அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் ஏற்பாடு செய்யலாம். இந்த ஒப்பந்தம் டைம் பவுண்டடாக இருக்கவேண்டும். காலம் தவறினால் (புயல் மழை தவிர்த்து இதர காரணங்களால் ஒப்பந்த காரரின் சொத்து ஜப்தி செய்யப்படவேண்டும்)//

மேற்படி ப்ராசஸ்ல பெற்றோர் சங்கம் மட்டுமல்லாது மாணவர்களும் டைரக்டா இன்டராக்ட் ஆகறதுக்கு வழி செய்யனும்.

ஒன் டு ஃபைவ் க்ளாஸஸ் கட் பண்ணா நாறீரும்.அதனால அப்பர் ப்ரைமரி ஸ்டடீஸ்லருந்து - இஞ்சினீரிங் இத்யாதி வரை எல்லாம் பள்ளி,கல்லூரி,பல்கலை கழகத்தையும் மூடித்தொலைச்சுட்டு மேற்படி ப்ராசஸை முழு வீச்சில் துவக்கலாம். இடைக்காலத்தில் உலக அளவில் உள்ள க்ல்வியாளர்களை வரவழைச்சு புதிய பாடதிட்டங்களை,போதனா முறைகளை  வகுக்கலாம்.

பையன் படிப்பை முடிச்சு வெளிய வர்ரச்ச சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருக்கனும்.வாழ்க்கை மேக்கப் இல்லாத நடிகை முகம் மாதிரி பயமுறுத்திரப்படாது.

இன்னம் 4 கேட்டகிரி வெற்று மனிதர்கள் இருக்காய்ங்க.அவிகளை என்ன பண்றதுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

டேட்டா உபயம்: முக நூலில் பரசுராம்