Tuesday, November 6, 2012

அண்ணாவின் மரணத்துக்கு வழி வகுத்த கருணாநிதி

இந்த பதிவுக்கு  " அரசியல்: ஹிப்பாக்ரட்டுகளின் உலகம்"னு தலைப்பு வச்சாலே போதும்.ஆனால் என்ன பண்றது ? காந்தியை பத்தி படம் எடுத்தாலும் கஸ்தூரிபாவின் இரவுகள்னு தான் பேர் வச்சாகனும்.அப்பத்தேன் உலகம் அதை சீந்தும்.அதனாலதேன் இந்த வில்லங்க தலைப்பு.

பெரியார் Vs அண்ணா:
பெரியார் அண்ணா இடையிலான உறவு எப்படிப்பட்டதுன்னு இன்றைய கீச்சர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? அண்ணா "அண்ணன் (பெரியார்)  எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்"னு காத்திருந்தார்.திடீர்னு பெரியார் மணியம்மைய கண்ணாலம் கட்டிக்கறதா சொன்னதும் இர்ரிட்டேட் ஆயிட்டாரு. தனிக்கட்சி துவக்கம் -ஆட்சி பிடிப்பு எல்லாம் நடந்தாச்சு.

அண்ணா -பெரியார் மைண்ட் செட் ரெம்ப டிஃப்ரன்ட். அண்ணாவுக்கு ஆங்கில இலக்கணம் முக்கிய.பெரியாருக்கு அது இரண்டாம் பட்சம் சிக்கனம் தான் முக்கியம். ஏற்கெனவே பேசியிருக்கம்னு தந்தி கொடுக்கனும். அண்ணா தந்தி மேட்டரை விஸ்தாரமா எழுதி கொண்டு வர பெரியார் "டோல்டட்"னு எழுதிருங்கறாரு. பெரியாருக்கு சினிமான்னாலே கடுப்பு.அண்ணாவுக்கு சினிமா மேல ஈர்ப்பு . இப்படி ஆயிரம் வித்யாசங்கள். ரெண்டு பேரும் ரெண்டு துருவம்.

பெரியார் அண்ணா எதிர்காலத்துக்கே ஆப்படிச்ச பார்ட்டி.அண்ணா பெரியாரோட நிகழ்காலத்துக்கே ஆப்படிச்ச பார்ட்டி.ஆனா அண்ணாவின் பேச்சு ,பெரியார் கொள்கைகளை  சட்டமாக்கினது ,அனுதினம் பெரியார் பேரை மந்திரமா ஜெபிச்சது எல்லாத்தையும் பார்த்தா நமக்கு புரியும் .அரசியல்: ஹிப்பாக்ரட்டுகளின் உலகம்


அண்ணா Vs கலைஞர்:




அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் மேல ஈர்ப்பு .கலைஞருக்கு எம்.ஜி.ஆர் தான் போட்டி. சினிமா மேல கவர்ச்சி,எழுத்து,பேச்சுன்னு அண்ணாவுக்கும் கலைஞருக்கும் ஆயிரம் ஒற்றுமை இருந்தாலும் குடும்பம்ங்கற மேட்டர்ல ரெண்டு பேரும் ரெண்டு துருவம். அதுலயும் ஊழல் விஷயத்துல இந்த கருணா நிதி நெருப்பு மாதிரின்னு தாத்தா ஊத்திவிடறாரே அதுக்கு தகுதியான நபர்  அண்ணா . அவருக்கு தொண்டையில  கான்சர்னு தெரிஞ்சு  அவர்  ரெஸ்ட்ல இருந்தாகனும்னு தெரிஞ்சும் அவரை வச்சு கூட்டம் போட்டு அவர் மரணத்துக்கே கலைஞர் வழிவகுத்ததா கூட பேச்சு உண்டு. ஆனாலும் பாருங்க கலைஞருக்கு அண்ணா தான் கடவுள் .அவர் பேர் தான் மந்திரம்.


நல்ல வேளை எம்.ஜி.ஆர் ப்ரூக்ளின் மருத்துவமனையில இருந்தப்போ தாத்தா விட்ட 40 ஆண்டுகால நண்பர் அஸ்திரம் எடுபடலை.இல்லின்னா கலைஞருக்கு எம்.ஜி.ஆர் கடவுளாவும் அவர் பேர் மந்திரமாவும் மாறியிருக்கும்.

எம்.ஜி.ஆர் Vs ஜெயலலிதா:

"ஜெ" வுக்கும் எம்.ஜி ஆருக்கும் இருந்த உறவை  பத்தி  சொல்ல தி.மு க பேச்சாளர்களின் மேடை பேச்சை ஆதாரமா காட்டினா அது கயவாளித்தனம்.ஆனால் ஜெ வே குமுதத்துல ஒரு தொடர் எழுத ஆரம்பிச்சு பாதியில டீல்ல விட்டுட்டாய்ங்க.அது ஜெ வின் சொந்தக்கதைனு பிரச்சாரம் கூட நடந்தது. அவிக ரெண்டுபேருக்கும் எப்பம் சண்டை வரும் -எப்பம் கூடிக்குவாய்ங்கன்னு ஆருக்கும் தெரியாது. வாத்யாரு கடேசியா "ஜெவுக்கு கட்டம் கட்டி அவிகளோட யாரும் பேசப்படாது .அன்னந்தண்ணி புழங்கப்படாது"ன்னுல்லாம் சொன்னதா செய்திகள்.

ஆனால் ஜெவுக்கு எம்.ஜி.ஆர் கடவுள் -அவர் பெயர் தான் மந்திரம் .( நல்ல வேளையா எலீக்சன் வரும்போது மட்டும்)

சந்திரபாபு Vs என்.டி.ஆர்:


என்.டி.ஆருக்கு ஆப்படிச்சு - கட்சியை  பதவியை பறிச்சுக்கிட்டு -அவரோட மரணத்துக்கே காரணமான சந்திரபாபுவுக்கு இப்பவும் என்.டி.ஆர் தான் கடவுள் - அவர் பேர் தான் மந்திரம்.

ஒய்.எஸ்.ஆர் Vs ஜகன்:


ஒய்.எஸ்.ஆர் உயிரோட இருந்தவரை ஜகன் பெங்களூர்லயே இருக்கனும். ஹைதராபாத் பக்கம் வரப்படாது.இதுதான் ஒய்.எஸ்.ஆர் வச்ச ரூல். ஊழல்  நடக்கக்கூடாதுங்கறது எவ்ள முக்கியமோ ஊழல் நடக்கலைங்கற - நடக்க வாய்ப்பில்லைங்கற "சீன்" கூட ரெம்ப முக்கியம்.இதான் ஒய்.எஸ்.ஆர் கான்செப்ட்.

அப்பா சி.எம்மா இருக்கிற ஸ்டேட்டுக்குள்ள வரப்படாதுங்கறது ஒரு மகனை எந்தளவுக்கு கடுப்பாக்கியிருக்கும்னு நீங்களே ரோசிங்க. ஆனா இன்னைக்கு?  ஜகனுக்கு ஒய்.எஸ்.ஆர் தான் கடவுள். ஒய்.எஸ்.ஆர் பெயர்தான் மந்திரம்..

மொதத்ததுல அரசியலே ஹிப்பாக்கிரட்டுகளின் உலகமப்பா..