Tuesday, November 27, 2012

ஜோதிடர்களுக்கு ஒரு சவால் !

அண்ணே வணக்கம்ணே !
காசு பணம் -காரிய ஜெயம் ரெண்டுக்கும் என்ன வித்யாசம் . இதுல எதுக்கு கிரக பலம் தேவைன்னு இந்த பதிவுல சொல்லப்போறேன்.

இதை அப்ஜெக்ட் பண்ண  முடிஞ்ச  சோசியருங்க அப்ஜெக்ட் பண்ணலாம். (காரண காரியத்தோட) . மேலும் கடேசியில ஒரு சவாலும்  விட்டிருக்கன். இது சோசியர்களுக்கு மட்டுமானதல்ல. சோதிட பிரியர்கள் ,சோதிட மாணவர்களும் ட்ரை பண்ணலாம் . உடுங்க ஜூட்டு .

இந்த பதிவாலே எச்சுமி பாட்டிக்கு கோவம் வந்தாலும் சரி உண்மைய சொல்லிர்ரதா உத்தேசம். அதுக்கு மிந்தி அதெப்படி எச்சுமி ஒனக்கு பாட்டின்னு கேப்பிக சொல்லிர்ரன்.

நாம கலைத்தாயின் இளைய மகன் (யோவ் ! 45 வயசுக்கு இளையமகனான்னு கூவாதிங்க. நான் சொல்றது க்லைத்திறன் & சீனியாரிட்டிய பொருத்து) கலைமகள் ஆரு? பிரம்ம தேவரோட வைஃப். பிரம்மதேவன் ஆரு? லார்ட் விஷ்ணுவோட தொப்புள் கொடியிலருந்து வந்தவரு.(ஆண் கர்பம் தரிக்கிறதெல்லாம் இப்பம் சகஜமாயிருச்சு பாஸு.. ) அவரோட வைஃபுக்கு பிள்ளை நாம.  நமுக்கு  அவரோட அப்பா தாத்தா தானே. அவரோட வைஃபான எச்சுமி பாட்டி தானே.

நம்மில் நெறைய பேருக்கு காசு பணமும் - காரிய ஜெயமும் வேறன்னு உறைக்கறதே இல்லை. மொதல்ல காசு பணம் வந்துரட்டும் பிறவு காரியத்தை நடத்திக்கலாம்னு மயங்கறோம்.மேட்டர் இன்னாடான்னா காசு பணம் வேற காரிய ஜெயம் வேற.

எப்படியா கொத்த தரித்திரம் பிடிச்ச ஜாதகத்துக்கும் 365 நாளும் காசு வர்ரதுக்கு ஒரு ஒத்தையடிப்பாதையாச்சும் நிச்சயம் இருக்கு.ஆனால் நாம என்ன பண்றோம்னா நம்ம ரோட்டீனை -ஈகோவை - காப்பாத்திக்கிறதுலயே ஜாதகத்துல உள்ள கிரகபலத்தை எல்லாம் விரயமாக்கிர்ரம்.

நம்ம நண்பர் ஒருத்தரை பத்தி அப்பப்போ ரெஃபர் பண்ணிட்டு இருப்பம். ( அன்மேரீட் -செட்டியார் - ஞா வருதா). பார்ட்டிக்கு  தனுர் லக்னம்.லக்னத்துல சனி .  . சுக்கிரன் உச்சம்..லக்னத்துல சனி இருந்தா சாக்கடை ஓரம் ,லாக்கப், ஜெயிலு, தரித்திரம் எல்லாத்தையும் பார்க்கனும். சுக்கிரன் உச்சம்ங்கறதால லக்சரியா வாழனும். (கில்மா உட்பட)

மொத இன்னிங்ஸ்ல வாழ்வாங்கு வாழ்ந்தப்பயும் கடையத்தான் டெக்கரெட் பண்ணி அனல் காட்டிக்கிட்டிருந்தாரே தவிர  மாடியில் உள்ள பார்ட்டியோட ரெசிடென்ஸ் சனி காரகம் தேன். 

ரெண்டாவது இன்னிங்ஸ்ல பெட் ரூம், கிச்சன், சாமி அலமாரி வரை சுக்கிர காரகமாக்கிக்கிட்டாரு. செட்டியாருக்கு வெள்ளி தெரியும், தங்கம் தெரியும், கல்லு தெரியும், மரத்தை பத்தி தெரியாதே. கார்ப்பென்டர் அவர் வசதிக்கு என்னென்னமோ அகட விகடம்லாம் செய்துக்கிட்டிருந்தாரு. நாம கண்டுக்கிடலை (பிசி ஆச்சே) உதாரணமா ப்ளைவுட்ல சாமி அலமாரி அடிச்சு அதுக்கு பிரைமர்/பெய்ண்டு எதுவும் அடிக்காம வார்னிஷ் அடிச்சு விட்டிருக்காரு. கதவெல்லாம் கீல் உதிர்ந்து தொங்கிக்கிட்டிருக்கு.  ஹாலை டச் பண்றதுக்குள்ள கார்ப்பென்டர் டிக்கெட் போட்டுட்டாரு. ஜாமான் வாங்கினது -கார்ப்பென்டருக்கு கடனா கொடுத்தது எல்லாம் சேர்த்தா பெரிய ரூவா ரெண்டு ஆயிட்டிருந்தது .

பார்ட்டியோட ராசி மீனம் . ( மீனத்தில் சந்திரன் - தனுர் லக்னத்து அஷ்டமாதிபதி ஆரு? சந்திரன் -இவர் உச்சமான சுக்கிரனோட சேர்ந்து 4 ல் )  சுக்கிரன் = லக்சரி சந்திரன் =மரணம்.

போன வருசம் தீபாவளி லெச்சுமி பூஜைக்கு எச்சுமி சிலை செய்யவச்சதுல சிலை செஞ்சவரு டிக்கெட்டு போட்டுட்டாரு.(சந்திரன் அஷ்டமாதிபதிங்கற பாய்ண்டோட சனி = ப்ரேதாத்மாக்களுக்கு காரகர்)

டெக்கரட்ல விடுபட்டு போன ஹால் எப்படி இருக்கும்னா குப்பை பொறுக்கறவிகல்லாம்  ஒரு மெகா செமினாருக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துக்கிட்டு -லக்கேஜோட போனா அந்த  கோச் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். போறச்ச வரச்ச மூட்டைய நகர்த்தி வழி பண்ணிக்கிட்டு வரனும் போகனும்.

போன வருசம் செய்த எச்சுமி சிலை மூளியாகி - ஊனமுற்றோர் ஆசிரம் கணக்கா தயாராயிருச்சு. நண்பர் கோவில்ல வச்சுரலாம். ஆத்துல போட்டுரலாம்னு சொன்னாரு. நாம நமக்கு ஒரு சான்ஸ் கொடுக்க சொல்லி வாங்கிட்டு வந்து என்னென்னமோ தகிடு தத்தம்லாம் பண்ணி ஃபில் அப் தி பளாங்ஸ் எல்லாம் செய்து மறுபடி அதை சிலையாக்கி - ஆர்ட்டிஸ்டை கூட்டி வந்து பெய்ண்டிங் எல்லாம் செய்து நம்ம ஊட்லயே வச்சிருந்தம்.

தீபாவளி பூஜை ஏற்பாடு விசயமா மாடிக்கு போயிருந்தப்பத்தேன் ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்ம் மாதிரி இருந்த ஹாலை பார்த்தோம்.

என்னய்யா இது ரங்க நாதன் தெரு மாதிரி இருக்கு . எலி கிலி செத்து வச்சா தேடவே மாசம் ஆகும் போலன்னு சொன்னம்.

நம்ம வாய் முகூர்த்தம் நெஜமாலுமே ஒரு எலி செத்து வைக்க - அதை கண்டு பிடிச்சு ஒழிச்ச பிறவு  ஹால்ல ஷெல்ஃப் அடிச்சு  மூட்டைகளை அதுக்கு ஷிப்ட் பண்றதா முடிவு பண்ணோம்.

நமுக்கு தேன் ஆணியடிக்க தெரியுமே. செட்டியார் வீட்டு பின்னாடி கொஞ்சம் இடம் வேற வேக்கன்டா இருக்கு.

ஒன்னுக்கு எட்டு ரீப்பர் வாங்கிட்டு வந்து ரெண்டரைக்கு அஞ்சுல ஒரு ஷெல்ஃப் அடிச்சுட்டம்.  தாளி அதை மேலுக்கு தூக்கனுமே .கதவெல்லாம் ரெண்டரை அடி அகலம் கூட இல்லை. என்னங்கடா இதுன்னு நெடுக்க வெட்டி ஒன்னை ரெண்டாக்கிட்டம்.  மறுபடி தூக்கறோம் உச்சி இடிக்குது . மேல் அறை வரை வெட்டி எடுத்து ரெண்டு பெஞ்சாக்கிட்டம்.

ரெண்டு ஷெல்ஃப் -ரெண்டு பெஞ்சை தூக்கி ஹால்ல போட்டு மூட்டை முடிச்சையெல்லாம் சார்ட் அவுட் பண்ணி குப்பைய கழிச்சு எல்லாத்தையும் தூக்கி அடுக்கினதுல ஹாலே லைப்ரரி மாதிரி ஆயிருச்சு.

மொத்தமா என்னடா செலவுன்னு பார்த்தா ரீப்பர் ஒரு ரூ 350 நம்ம அசிஸ்டென்டுக்கு பத்தா ரூ 100 , நெடுக்க வெட்ட மிஷின் வாடகைக்கு எடுத்ததுல ரூ.50 ஆணி ,புஷ், எல் க்ளாம்ப எல்லாம் சேர்த்து ஒரு ரூ.100. ( நம்ம உழைப்பு ? ஆல் ஃப்ரீ - அப்பப்போ செட்டியார் பின்னாடி வந்து டீ  கொடுத்து ஒரு சிகரட் கொடுப்பாரு ) ஆக ரூ.600 செலவுல  ரெண்டு ஷெல்ஃப். ரெண்டு பெஞ்ச்.

செட்டியாருக்கு ஒரே குஜிலி ஆயிருச்சு. நீ இம்மாம் பெரிய வேலை காரன்னா ஒன்னை வச்சே எல்லாத்தையும் முடிச்சுருப்பனேன்னாரு.

அப்பம் நாம சொன்னம்." செட்டியார் ! .. துட்டை  மட்டும் வச்சா வேலை முடிஞ்சுரும்னு  நினைக்காதே. வேலை முடியற நேரம் வந்தா துட்டே இல்லாம கூட வேலை முடிஞ்சுரும். அந்த நேரம் வராத வரைக்கு லெச்சங்க கொட்டினாலும் வேலை  நடக்காது"

உங்க ஜோதிட திறமைக்கு ஒரு சவால் :

அதே செட்டியார் -அதே ஜாதகம் . ஒரு கட்டத்துல ரெண்டு லெச்சம் செலவழிச்சாலும் வேலைக்காகலை . அதே செட்டியார் அதே ஜாதகம் ரூ.600 செலவழிச்சதுல படக்குன்னு வேலை முடியுது. இதெப்படி சாத்தியம்? ஜொல்லுங்க பார்க்கலாம்.