Showing posts with label சூரியனுடன் பேட்டி. Show all posts
Showing posts with label சூரியனுடன் பேட்டி. Show all posts

Tuesday, December 4, 2012

நவகிரகங்களுடன் பேட்டி: சூரியன் 3

அண்ணே வணக்கம்ணே !
மூல நூல்கள் ஒரு பக்கம் , அவா ஒரு பக்கம் , நம்மாளுங்க ஒரு பக்கம் இது போதாதுன்னு நாம வேற  கிரகங்களுக்கு ஏஜெண்டு போல -கிரகங்களுக்கு மீடியம் போல ஆன அலப்பறைல்லாம் செய்துக்கிட்டிருக்கம். அதுல ஒரு புது ட்ரென்டு தான் இந்த பேட்டி சமாசாரம். சூரியனுடனான பேட்டி இந்த பதிவிலும் தொடர்கிறது .

யத்பாவம் தத்பவதி - நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்ங்கறாய்ங்க. அதை போல சூரியனை நினைச்சு அவருடனான பேட்டிய எழுத ஆரம்பிச்சதுமே சுத்தலும் -அறிவித்தலும் நடந்துருச்சு. ( ஸ்ரீ அம்மன் சத நாமாவளியை வேலூர் சனத்துக்கு வினியோகிச்சதை சொல்றேன்)

அறிவிப்பு -விளம்பரம் - மோட்டிவேஷன் -சூப்பர் விஷன் -இதுக்கெல்லாமும் சூரியன் தான் காரகர்.

சூரியனுடனான பேட்டி இந்த பதிவிலும் தொடர்கிறது

நான்:
வணக்கம் சூரியன் சார் !

சூரியன்:
அடடே நீயா வாய்யா .. இன்னுமா உன் கேள்விகள் முடியலை.

நான்:
போங்க பாஸ்..சின்னதா ஒரு கேல்க்குலேட்டரை விழுங்கியிருந்தா உங்களால  ஜாதகங்களை எத்தனை விதத்துல பாதிக்க முடியும்னு ஒரு ஃபிகரையே கொடுத்திருப்பன்.  நானா  கணக்குல வீக்கு. கேல்க்குலேட்டரும் கைவசமில்லை.  அதனாலதேன் முக்கி முக்கி உங்களை கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டிருக்கன்.

சூரியன்:
சரி சரி கேள் ..

நான்:
பாஸ் .. ஒரு தொழிலை எடுத்துக்கிட்டா இது சனி காரகம், புத காரகம்னு ஐடென்டிஃபை பண்றோம். அந்த மாதிரி உங்களோட காரகம் கொண்ட பெண் எப்படி இருப்பான்னு சொல்லுங்களேன்

சூரியன்:
எடுத்த உடனே பொம்பள சமாசாரத்துக்கு போயிட்டியா.. உருப்பட்ட மாதிரிதான். சொல்லி தொலைக்கிறேன். என்னோட  காரகம் கொண்ட பெண்களை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம். பாசிட்டிவ் -நெகட்டிவ்.

நான்:
என்னா தலை .. உங்க காரகத்துல நெகட்டிவ் கூட இருக்கா என்ன?

சூரியன்:
போடா பொங்கி !  ஜாஜ்வல்யமா பிரகாசிக்கிற என் பாடியிலயே கரும்புள்ளிகள்ளாம் இருக்கு தெரியுமா? நான் பெட்டர் பொசிஷன்ல இருந்து லக்னத்துலயோ ,ஏழுலயோ நின்னா , லக்னத்தை பார்த்தா என்னோட காரகம் பாசிட்டிவா அமையும்.

இதுவே பிட்டர் பொசிஷன்ல இருந்து லக்னத்துலயோ ,ஏழுலயோ நின்னா , லக்னத்தை பார்த்தா என்னோட இம்பாக்ட் நெகட்டிவா அமையும்.

நான்:
அது சரி அது சரி.. மொதல்ல பாசிட்டிவ் ஃப்யூச்சர்ஸை சொல்லுங்க.

சூரியன்:
முகத்தில் ஒரு வித  சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, , கருணை. கண்டிப்பு , தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல்.

பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல்.

தேன் நிற விழிகள் , செம்பட்டை கூந்தல் ,ஒல்லியான தேகம் , அவிக குடும்பத்துக்கு கிராமாதிபத்யம் இருக்கலாம்.

ஹார்ட் ஆஃப் தி டவுன் /புதிய காலனியில் முதல் வீடு/ குக்கிராமத்துல இவிக சாதியை சேர்ந்த குடும்பம் வேறு எதுவும் இருக்காது.

இவிக மேட்டர்ல 1 என்ற எண் விளையாடும். ஒரே பெண்ணா இருக்கலாம். பவர் க்ளாஸ் அணியலாம்.

நான்:

நெகட்டிவ் ஃப்யூச்சர்ஸை சொல்லுங்க..

சூரியன்:
பாசிட்டிவ் ஃப்யூச்சர்ஸே டூ மச் ஆனா அதான் நெகட்டிவ். உதாரணத்துக்கு  பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல்ங்கற பாய்ண்டை எடுத்துக்க . பாதிக்கப்பட்டவன்   நேர் வழியில போய் பாதிக்கப்பட்டிருந்தா ஓகே. குறுக்குவழியில போய் பாதிக்கப்பட்டிருந்தா?  காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்தா பரவால்லை. கள்ள காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்தா?

நான்:
பாஸ் ! எங்கயோ போயிட்டிங்க. பாசிட்டிவுக்கும் நெகட்டிவுக்கும் இருக்கிற வித்யாசம் இவ்ளதானா?

சூரியன்:
ஆமாம் கண்ணா ..

நான்:
பாஸ் ! ஒரு ஜாதகத்துக்கு நீங்க பாவினு வைங்க. அப்ப என்னா மாதிரி பலனை தருவிங்க?

சூரியன்:

இந்த பாய்ண்டை ஏற்கெனவே டச் பண்ணியாச்சு. இருந்தாலும் உன் மரமண்டைக்கு உறைக்கிறாப்ல சொல்றேன். நான் ஒரு ஜாதகத்துக்கு பாவின்னு வை. அந்த ஜாதகம் 3 + 3  வோல்ட்  ரீசார்ஜபிள் பேட்டரி மாதிரி.

நானா அளவில்லாம கொடுக்கிறவன். 6 வோல்ட் பேட்டரிக்கு 220 வோல்ட் சார்ஜ் கொடுத்தா என்னாகும். அதுல கனெக்ட் பண்ண பல்பு ஜகஜ்ஜோதியா ஒரு செகண்ட் எரிஞ்சுட்டு பஸ்மமாயிரும்.

அதாவது நான் பாவியாக உள்ள ஜாதகனுக்கு எங்கிட்டே இருந்து வெளிப்படற சக்தியை க்ராஸ்ப் பண்ணிக்கிற கப்பாசிட்டி இருக்குமே தவிர அதை ஸ்டோர் பண்ணிக்கிற சிஸ்டமோ - சானலைஸ் பண்ணிக்கிற சக்தியோ இருக்காது.

இதனால தன்னம்பிக்கை ஆணவமா , சுறு சுறுப்பு படபடப்பா, மேற்பார்வை கார்வார் பண்றதா, கண்டிப்பு -சாடிஸமா  வெளிப்படும்.  அவன் நேரம் நல்லாருக்கிறவரை சனம் இதையெல்லாம் சகிச்சுக்கும். அவன் நேரம் கெட்டதும் போடாங்கொய்யாலன்னு மண்டையில போட்டுட்டு  விலகிரும்.

நான்:

செமை லாஜிக்கு. அப்போ நீங்க சுபனா உள்ள ஜாதகத்துக்கு எப்படியா கொத்த பலனை தருவிங்க?

சூரியன்:

தோசைய திருப்பி போடு மேன் ! நான்  சுபனாக  உள்ள ஜாதகனுக்கு எங்கிட்டே இருந்து வெளிப்படற சக்தியை க்ராஸ்ப் பண்ணிக்கிற கப்பாசிட்டியோட பவரை  ஸ்டோர் பண்ணிக்கிற சிஸ்டம் + பவரை   சானலைஸ் பண்ணிக்கிற சக்தியும் இருக்கும்.

நான்:

தலை.. இதுல இவ்ளோ மேட்டர் கீதா.. ஒரு வேளை பாபனா இருந்து ஜாதகத்துல நீங்க கெட்டிருந்தா ?

சூரியன்:

சகட்டு மேனிக்கு மானாவாரியா  பவர் க்ராஸ்பிங்குக்காக நீட்டிக்கிட்டிருக்கிற எலக்ட் ரிக் வயரை இன்ஸுலேட் பண்ண மாதிரி ..

நான்:

ஒரு வேளை நீங்க சுபனா இருந்து ஜாதகத்துல கெட்டிருந்தா ?

சூரியன்:

ஸ்டோரிங் சிஸ்டம்  - சானலைசிங் கப்பாசிட்டி எல்லாம் இருந்தும் பவர் கேபிளோட முனைய இன்ஸுலேட் பண்ணித்தொலைச்ச மாதிரிதேன்.

நான்:

பாஸ் ! பாஸ் !  நீங்க ஒரு ஜாதகத்துல பெட்டர் பொசிஷன்ல இருந்தா அவனோட பிஹேவியர் எப்படி இருக்கும்? பிட்டர் பொசிஷன்ல இருந்தா நிலைமை என்ன?  இதான் கடேசி கேள்வி..


சூரியன்:

மொதல்ல  நீ கொஞ்சம் ரோசிச்சு வை.  நீ கெடுத்து வச்சிருக்கிற சனமும் ரோசிக்கட்டும். எதையாவது சொல்லி வைங்க. நாளைக்கு நான் பார்த்துட்டு அசலான மேட்டரை சொல்றேன்.

(தொடரும்)

Saturday, November 17, 2012

நவகிரகங்களுடன் ஒரு பேட்டி: சூரியன் 2

நான்:
வணக்கம் பாஸ் !

சூரி:
மறுபடி நீயேவா? நான் லக்னத்துல நின்னா சொந்தத்துக்கு செய்ற வேலை உருப்படாது..பிரதிபலன் கிடைக்காதுன்னு சொல்றாய்ங்களே ..ஏன்னு முந்தா  நேத்து  ஒரு கேள்வி கேட்டிருந்தே அதுக்கான பதிலை இப்ப சொல்றேன்..

நான்:
சொல்லுங்க பாஸ்.

சூரி:
கிழக்குல உதிச்சு மேற்குல மறையறேன். சிக் லீவ், இயர்ன்ட் லீவ்,காஷுவல் லீவ் ,ஃபெஸ்டிவல் லீவ் எதுவும் கிடையாது. ஒரு நாள் கூட லீவு எடுக்கிறதில்லை. கிரகண சமயத்துல கூட  நான் உதிச்சுர்ரன். அதுக்கப்பாறம் தான் ராகு வந்து என்னை மறைக்கிறாரு. ஆனால் இதுக்கெல்லாம் ஒரு பைசான்னா ஒரு பைசா கூட ரெம்யூனரேஷன் கிடையாது.

மேலும் என்னால் உங்களுக்கெல்லாம் ஒளி கிடைக்குது. வெப்பம் கிடைக்குது. சந்திரனுக்கு ஒளி கிடைக்குது. எனக்கு என்ன கிடைக்குது? பல ஆயிரம் வருசங்களா எரிஞ்சுக்கிட்டிருக்கிறதால எனக்குள்ள இருக்கிற சப்ஸ்டன்ஸ் குறைஞ்சுக்கிட்டே வருது. ஒரு நாள் இல்லை ஒரு நாள் கற்பூரம் கணக்கா "குளிர" வேண்டியதுதான்.  மேலும் என்னை விட்டு விலகி இருக்கிறவுகளுக்கு தான் லாபமே தவிர என்னை நெருங்கி வந்தா பஸ்மம்.

நேத்தே சொன்னாப்ல எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்.லக்னத்துல  நான் உள்ள ஜாதகன் அவனும் ஒரு குட்டி சூரியன் தான்.

அவன் மன்சங்கறதால அவனுக்கு இந்த பூமியில்  வாழ பிரதிபலன் தேவைப்படுது -ஆனால் கிடைக்காது, அவனை மக்கள் நெருங்கி வந்தாதான் சமூக வாழ்வு சோபிக்கும். நெருங்கி வரலின்னா தனிமையில தவிக்கனும்.

நான்:
பாஸ் ! நீங்க பேச பேச எனக்குள்ள இன்னொரு பாய்ண்டும் ஸ்பார்க் ஆகுது .சொல்லவா?

சூரியன்;
சொல்லுப்பா..

நான்:
நீங்களா உலகத்தையே தட்டி எழுப்பறவரு. மன்ச ஜன்மம்னா - கொஞ்சமாச்சும் ரிலாக்ஸேஷன் இருக்கனும். நீங்க லக்னத்துல நின்னா அவனுக்கு செரியான தூக்கம் கூட இருக்காது.  மறு நாள் ஒத்தை தலைவலி மலச்சிக்கல்,முதுகுவலின்னு அவதிப்படுவான் . இந்த கடுப்புல எல்லாரையும் கடுப்படிச்சு அல்லாத்துக்கும் விரோதமாயிருவான் ..அப்டித்தானே.

சூரியன்:
ஓரளவுக்கு லைனை பிடிச்சிருக்கே .. இன்னம் கொஞ்சம் தம் கட்டு .

நான்:
ராத்திரி நேரத்துல எல்லாமே மச மசன்னு இருக்கும். சுமாரான குட்டி கூட சூப்பர் குட்டியா தெரிவா.தூக்கத்துல அறிவாளியும் ஒன்னுதான் . முட்டாளும் ஒன்னுதான்.ஆனால் நீங்க உதிச்ச பிறவு ? எல்லாமே பளிச் ஆயிருது. லக்னத்துல நீங்க நின்னா.. அந்த ஜாதகனும் ஒரு குட்டி சூரியனா மாறி முட்டாளை முட்டாள்னும் -குரூபியை குரூபின்னும் டிக்ளேர் பண்ணுவான். எந்த முட்டாள் தன்னை முட்டாள்னு சொன்னா ஏத்துக்குவான்?   இதனால எல்லாருமா சேர்ந்து ஆப்படிச்சுருவாய்ங்க. கரீட்டா தலை?

சூரியன்:
ம்...ம்.. அடுத்த கேள்விக்கு போ..

நான்:
வந்துட்டன் துரை ! உங்களை ஆத்மகாரகன்னு சொல்றாய்ங்களே ..அது எப்டி?

சூரியன்:
என்னோட இடம் எது?

நான் :
உச்சி

சூரியன்:
மனித உடலின் உச்சி எது?

நான்:
உச்சந்தலை

சூரியன்:
ராஜயோகம் உச்சியில எந்த சக்கரம் இருக்கிறதா சொல்லுது?

நான்:
சஹஸ்ராரம்

சூரியன்:
குண்டலி சஹஸ்ராரத்தை தொட்டாத்தானே மனிதன் தான் ஆத்ம சொரூபங்கறதை அனுபவபூர்வமா தெரிஞ்சுக்கறான். அதனாலதேன் என்னை ஆத்மகாரகன்னு சொல்லியிருக்காய்ங்க.  நான் எப்படி எல்லாத்து மேலயும்  சமமா என் கிரணங்களை வீசுறனோ அப்படி  ஆத்ம சொரூபனா உள்ளவன் அபேத பாவத்தோட எல்லாரையும் சமமா பார்ப்பான்.  

மனிதன் தன்னை ஆத்ம ரூபமா உணரும் வரைக்கும் அவன் வாழ்க்கைக்கு வேறு எதுவோ மையபுள்ளியா இருக்கும். அவன் தன்னை ஆத்ம ரூபமா உணர்ந்துட்டான்னா பால் வீதிக்கு நான் எப்படி   கேந்திரமா  இருக்கேனோ அப்படி அவன் தன் வாழ்க்கைக்கு தானே கேந்திரமா மாறிர்ரான்.

மத்த கிரகங்கள் தான் என்னை நெருங்குவதும் விலகுவதுமா இருக்குமே தவிர நான் மட்டும் என் நிலையில நிலையா இருப்பேன்.

நான்:
பாஸ்.. ஆத்ம ரூபமா உணர்ந்த பிறகு மனிதன் அடையக்கூடிய நிலையை ஜஸ்ட் தன் ஈகோ காரணமா கூட அடையறானே..

சூரியன்:
ஈகோங்கறது பிரமை. பிரமை எப்பயாச்சும் உடைஞ்சுரும்.

நான்:
ஆக ஈகோவுக்கும் நீங்கதேன்.ஆத்மாவுக்கும் நீங்கதேன். அதெப்படி பாஸு? ரெண்டு நிலையையும் நீங்களே தர்ரதா சொல்றிங்க. எப்போ எந்த நிலையை தர்ரிங்க?

சூரியன்:
நான் ஜாதகத்துல முழு பலம் பெற்றிருந்தா ஆத்ம காரகனா வேலை செய்றேன். அரைகுறையா பலம் பெற்றிருந்தா தன்னம்பிக்கைய தரேன். பலம் இழந்திருந்தா ஈகோவை தரேன்.

நான்:
சூப்பர் தலைவா..இந்த வித்யாசத்தை மண்டைக்கு ஏத்தவே 24 மணி நேரம் பிடிக்கும் போல. இன்று போய் நாளை வரேன்..

சூரியன்:

அப்படியே ஆகட்டும் வா.





Thursday, November 15, 2012

நவகிரகங்களுடன் ஒரு பேட்டி

நான்:
வணக்கம்  சூரியன் சார் !

சூரியன்:
வணக்கம். கேள்விகளை எழுதி கொடுத்துருங்களேன்.. பதிலை ஃபேக்ஸ் பண்ண சொல்றேன்

நான்:
பாஸ் ! நீங்க ஒன்னை சொல்ல  நான் ஒன்னை எழுதி சொதப்பிருவன்னு பயப்படறிங்க போல.. உங்களுக்கு அந்த கவலையே வேணாம். ஏன்னா நம்ம மைண்ட் ப்ளாங்கா இருக்கு.

சூரியன்:
இல்லைப்பா.. நான் தான் செல்ஃப் - ஈகோவுக்கெல்லாம் காரகன். நீ இவ்ள கிட்டே வந்திருக்க.  என் ஸ்டேட்மென்டை  உன் ஈகோவும் செல்ஃபும்  நிச்சயம் கர்ரப்ட் ஆக்கிரும்.

நான்:
தலை ! உங்களுக்கு அந்த கவலையே வேணாம்.  நம்ம அடிப்படை கொள்கை மனிதம். அதுக்கு விரோதமா எதுனா இருந்தா அதை அவுட் ஆஃப் ஃபோக்கஸ்ல வச்சு எக்சிபிட் பண்ணுவமே தவிர மத்தபடி எந்த மேனிப்புலேஷனும் இருக்காது.

சூரியன்:
சரிப்பா.. உன் கேள்விகளை கேளு

நான்:
பிரம்மங்காருவோட வாழ்க்கை வரலாறை என்.,டி.ஆர் சினிமாவா எடுத்தாரு.அதுல தீண்டாமைய கண்டிச்சு பிரம்மங்காரு பாடறாப்ல ஒரு பாட்டு வரும்.அந்த பாட்டுல  "ஜகதின வெலிகே சூர்ய சந்த்ருலு நீ கூடான வெலகனன்டாரா"ன்னுட்டு ஒரு வரி வரும். ( இந்த உலகில் ஒளிரும் சூரிய சந்திரர்கள் உங்க சேரில ஒளிர மாட்டாங்கிறாய்ங்களா)

ஆக பாரபட்சமில்லாம எல்லா உயிர்கள், பொருட்கள் மேலயும் உங்க கதிர்கள் விழுது இல்லியா. அப்பாறம் ஏன் மக்கள் உங்க காரகங்களை சமமா அனுபவிக்க முடியாம போயிருது?

சூரியன்:
மழைத்துளி எல்லா இடத்துலயும் விழுது.ஆனால் வாய் திறந்து கிடக்கிற சிப்பியில விழுந்தப்ப தானே முத்தா மாறுது.

நான்:
அது சரி..உங்க கதிரொளி என்ரிச் ஆகாட்டி போகுது. நெகட்டிவ் ரிசல்ட் ஏன் கொடுக்குது?

சூரியன்:
கண்ணா .. மொட்டை மாடியில சின்டெக்ஸ் டேங்க் வைக்கிறிங்க இல்லை. அதை கவிழ்த்து போட்டா என்ன ஆகும்? அப்போ சிரபுஞ்சி கணக்கா அடை மழை பொழிந்தாலும் டேங்கு ரொம்புமா?

நான்:
ரொம்பாட்டி போகுதுங்ணா.. நெகட்டிவ் ரிசல்ட்டு ஏன் வருது? இதான் நம்ம கேள்வி.

சூரியன்:
காந்தியும் -அவரோட நண்பர் ஒருத்தருமா ரெண்டு பேர் அரிச்சந்திரா நாடகம் பார்க்க போனாய்ங்க. காந்தி உண்மையையே பேசனுங்கற மெசேஜை ஆக்செப்ட் பண்ணி இன்ஸ்பைர் ஆயிட்டாரு. காந்தியோட நண்பர் "ஆத்திர அவசரத்துக்கு பொஞ்சாதியை அடகு வைக்கலாம்"ங்கற மெசேஜை ரிசீவ் பண்ணிக்கிட்டாரு.

நாடகம் ஒன்னுதான். கிராஸ்ப் பண்ணிக்கிட்டது ரெண்டுவித மெசேஜ். அட என் ஒளியையே எடுத்துக்கயேன். சோலார் பானல் மேல விழுந்தா சோலார் பவர் .  இதுவே கோல்ட் ஸ்டோரேஜ்ல வைக்கவேண்டிய மெடிசின் மேல விழுந்தா?

நான்:
பல்பு இப்பம் எரியுது..அடுத்த கேள்வி..உங்க ஒளியில விட்டமின்ஸ் இருக்குங்கறாய்ங்க. சுண்ணாம்பு சக்திங்கறாய்ங்க ( கால்ஷியம்) . எங்க விஞ்ஞானிகளும் இதை கன்ஃபர்ம் பண்ணியிருக்காய்ங்க.இது ஓகே.

நீங்க ஜாதகத்துல நெல்ல பொசிஷன்ல இருந்தா தலைமை குணங்கள் வரும்ங்கறாய்ங்க.. அதெப்படி சாத்தியமாகுது?

சூரியன்:
எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட். நான் நெல்ல பொசிஷன்ல இருந்தா அந்த ஜாதகன் நானா மாறிர்ரான். நான் ஆரு? கிரகக்கூட்டத்தின் தலைவன். அதனால அவனுக்கும் தலைமை குணங்கள் வருது.

நான்:
போங்க பாஸ் .. நீங்க சொம்மா லாஜிக் சொல்ட்டு கழண்டுக்கலாம்னு பார்க்கிறிங்க. நான் கேட்கிறது ப்ராசஸ், தலைமைகுணங்கள் ஜாதகன்ல வர்ரதுக்குண்டான ப்ராசஸ் எப்படி ஆரம்பிக்குது?

சூரியன்:
கொய்யால உன் லக்னத்துல நின்னாலும் நின்னேன். இப்டி நோண்டி நுங்கெடுக்கிறியே.. நாளைக்கு வா பேசிக்கலாம்

நான்:
லக்னத்துல சூரியன் நின்னா சொந்தத்துக்கு செய்ற வேலை எதுவும் உருப்படாதுன்னு ஒரு பலன் சொல்றாய்ங்களே.. இது எப்படி ஒர்க் அவுட் ஆகுது?

சூரியன்:
ஸ்.. என்னை ரெம்ப சூடேத்தறே.. நாளைக்கு சொல்றேன்..

நான்:
ஓகே பாஸ்..   உங்க சூட்டுல காதுல லேசா புகை வராப்ல இருக்கு.  அப்டியே ஆகட்டும் .சீ யு டுமாரோ..