Thursday, November 1, 2012

பிரபல கதாநாயகன் வீட்டின் மேல் பிராமண சங்கத்தினர் தாக்குதல்

அண்ணே வணக்கம்ணே ! தெலுங்கு சினிமா உலக பிரமுகர் மோகன் பாபுவின் வீட்டின் மீது ஆந்திர பிராமண சங்கத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். மோகன் பாபுவின் மகன்  விஷ்ணு இவர் கதா நாயகராக நடித்து ,தயாரித்து வெளியிட்ட "தேனிகைனா ரெடி" ( எதுக்கும் தயார்) படத்தில் பிராமணர்கள் இழிவு படுத்தியுள்ளதாக பிராமண சங்கத்தினர் குற்றம் சாட்டி மோகன் பாபு  வீட்டின் மீது  தாக்குதல் நடத்தினர்.

பிராமண சங்கத்தினர் கண்ணாடிகளை உடைத்து வெறியாட்டம் போட்டனர். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் தடிகளுடன் வெளி வந்து பிராமண சங்கத்தினரை விரட்டி அடித்தனர்.

இந்நிலையில் மோகன் பாபு தரப்பினரும் -பிராமண சங்கத்தரப்பினரும் பரஸ்பரம் மனித உரிமைகள் கமிஷனிடம் புகார் அளித்துள்ளர்.

நிருபர்களிடம் பேசிய விஷ்ணு "சினிமாக்காரர்கள் என்றால் இளப்பமா? இன்னொரு தடவை தாக்குதல் சம்பவம் நடந்தால் நகரத்தி நடமாட முடியாது என்று எச்சரித்தார்"

"கேமரா மேன் கங்கதோ ராம்பாபு " படத்தில் தெலுங்கானா போராட்டம் இழிவு படுத்தப்பட்டதாக அதன் கதா நாயகன் பவன் கல்யாண் ,மற்றும் இயக்குனர் அலுவலகம் தாக்கப்பட்டது தெரிந்திருக்கலாம்.