Showing posts with label சுக்கிரன். Show all posts
Showing posts with label சுக்கிரன். Show all posts

Tuesday, November 27, 2012

ஜோதிடர்களுக்கு ஒரு சவால் !

அண்ணே வணக்கம்ணே !
காசு பணம் -காரிய ஜெயம் ரெண்டுக்கும் என்ன வித்யாசம் . இதுல எதுக்கு கிரக பலம் தேவைன்னு இந்த பதிவுல சொல்லப்போறேன்.

இதை அப்ஜெக்ட் பண்ண  முடிஞ்ச  சோசியருங்க அப்ஜெக்ட் பண்ணலாம். (காரண காரியத்தோட) . மேலும் கடேசியில ஒரு சவாலும்  விட்டிருக்கன். இது சோசியர்களுக்கு மட்டுமானதல்ல. சோதிட பிரியர்கள் ,சோதிட மாணவர்களும் ட்ரை பண்ணலாம் . உடுங்க ஜூட்டு .

இந்த பதிவாலே எச்சுமி பாட்டிக்கு கோவம் வந்தாலும் சரி உண்மைய சொல்லிர்ரதா உத்தேசம். அதுக்கு மிந்தி அதெப்படி எச்சுமி ஒனக்கு பாட்டின்னு கேப்பிக சொல்லிர்ரன்.

நாம கலைத்தாயின் இளைய மகன் (யோவ் ! 45 வயசுக்கு இளையமகனான்னு கூவாதிங்க. நான் சொல்றது க்லைத்திறன் & சீனியாரிட்டிய பொருத்து) கலைமகள் ஆரு? பிரம்ம தேவரோட வைஃப். பிரம்மதேவன் ஆரு? லார்ட் விஷ்ணுவோட தொப்புள் கொடியிலருந்து வந்தவரு.(ஆண் கர்பம் தரிக்கிறதெல்லாம் இப்பம் சகஜமாயிருச்சு பாஸு.. ) அவரோட வைஃபுக்கு பிள்ளை நாம.  நமுக்கு  அவரோட அப்பா தாத்தா தானே. அவரோட வைஃபான எச்சுமி பாட்டி தானே.

நம்மில் நெறைய பேருக்கு காசு பணமும் - காரிய ஜெயமும் வேறன்னு உறைக்கறதே இல்லை. மொதல்ல காசு பணம் வந்துரட்டும் பிறவு காரியத்தை நடத்திக்கலாம்னு மயங்கறோம்.மேட்டர் இன்னாடான்னா காசு பணம் வேற காரிய ஜெயம் வேற.

எப்படியா கொத்த தரித்திரம் பிடிச்ச ஜாதகத்துக்கும் 365 நாளும் காசு வர்ரதுக்கு ஒரு ஒத்தையடிப்பாதையாச்சும் நிச்சயம் இருக்கு.ஆனால் நாம என்ன பண்றோம்னா நம்ம ரோட்டீனை -ஈகோவை - காப்பாத்திக்கிறதுலயே ஜாதகத்துல உள்ள கிரகபலத்தை எல்லாம் விரயமாக்கிர்ரம்.

நம்ம நண்பர் ஒருத்தரை பத்தி அப்பப்போ ரெஃபர் பண்ணிட்டு இருப்பம். ( அன்மேரீட் -செட்டியார் - ஞா வருதா). பார்ட்டிக்கு  தனுர் லக்னம்.லக்னத்துல சனி .  . சுக்கிரன் உச்சம்..லக்னத்துல சனி இருந்தா சாக்கடை ஓரம் ,லாக்கப், ஜெயிலு, தரித்திரம் எல்லாத்தையும் பார்க்கனும். சுக்கிரன் உச்சம்ங்கறதால லக்சரியா வாழனும். (கில்மா உட்பட)

மொத இன்னிங்ஸ்ல வாழ்வாங்கு வாழ்ந்தப்பயும் கடையத்தான் டெக்கரெட் பண்ணி அனல் காட்டிக்கிட்டிருந்தாரே தவிர  மாடியில் உள்ள பார்ட்டியோட ரெசிடென்ஸ் சனி காரகம் தேன். 

ரெண்டாவது இன்னிங்ஸ்ல பெட் ரூம், கிச்சன், சாமி அலமாரி வரை சுக்கிர காரகமாக்கிக்கிட்டாரு. செட்டியாருக்கு வெள்ளி தெரியும், தங்கம் தெரியும், கல்லு தெரியும், மரத்தை பத்தி தெரியாதே. கார்ப்பென்டர் அவர் வசதிக்கு என்னென்னமோ அகட விகடம்லாம் செய்துக்கிட்டிருந்தாரு. நாம கண்டுக்கிடலை (பிசி ஆச்சே) உதாரணமா ப்ளைவுட்ல சாமி அலமாரி அடிச்சு அதுக்கு பிரைமர்/பெய்ண்டு எதுவும் அடிக்காம வார்னிஷ் அடிச்சு விட்டிருக்காரு. கதவெல்லாம் கீல் உதிர்ந்து தொங்கிக்கிட்டிருக்கு.  ஹாலை டச் பண்றதுக்குள்ள கார்ப்பென்டர் டிக்கெட் போட்டுட்டாரு. ஜாமான் வாங்கினது -கார்ப்பென்டருக்கு கடனா கொடுத்தது எல்லாம் சேர்த்தா பெரிய ரூவா ரெண்டு ஆயிட்டிருந்தது .

பார்ட்டியோட ராசி மீனம் . ( மீனத்தில் சந்திரன் - தனுர் லக்னத்து அஷ்டமாதிபதி ஆரு? சந்திரன் -இவர் உச்சமான சுக்கிரனோட சேர்ந்து 4 ல் )  சுக்கிரன் = லக்சரி சந்திரன் =மரணம்.

போன வருசம் தீபாவளி லெச்சுமி பூஜைக்கு எச்சுமி சிலை செய்யவச்சதுல சிலை செஞ்சவரு டிக்கெட்டு போட்டுட்டாரு.(சந்திரன் அஷ்டமாதிபதிங்கற பாய்ண்டோட சனி = ப்ரேதாத்மாக்களுக்கு காரகர்)

டெக்கரட்ல விடுபட்டு போன ஹால் எப்படி இருக்கும்னா குப்பை பொறுக்கறவிகல்லாம்  ஒரு மெகா செமினாருக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துக்கிட்டு -லக்கேஜோட போனா அந்த  கோச் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். போறச்ச வரச்ச மூட்டைய நகர்த்தி வழி பண்ணிக்கிட்டு வரனும் போகனும்.

போன வருசம் செய்த எச்சுமி சிலை மூளியாகி - ஊனமுற்றோர் ஆசிரம் கணக்கா தயாராயிருச்சு. நண்பர் கோவில்ல வச்சுரலாம். ஆத்துல போட்டுரலாம்னு சொன்னாரு. நாம நமக்கு ஒரு சான்ஸ் கொடுக்க சொல்லி வாங்கிட்டு வந்து என்னென்னமோ தகிடு தத்தம்லாம் பண்ணி ஃபில் அப் தி பளாங்ஸ் எல்லாம் செய்து மறுபடி அதை சிலையாக்கி - ஆர்ட்டிஸ்டை கூட்டி வந்து பெய்ண்டிங் எல்லாம் செய்து நம்ம ஊட்லயே வச்சிருந்தம்.

தீபாவளி பூஜை ஏற்பாடு விசயமா மாடிக்கு போயிருந்தப்பத்தேன் ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்ம் மாதிரி இருந்த ஹாலை பார்த்தோம்.

என்னய்யா இது ரங்க நாதன் தெரு மாதிரி இருக்கு . எலி கிலி செத்து வச்சா தேடவே மாசம் ஆகும் போலன்னு சொன்னம்.

நம்ம வாய் முகூர்த்தம் நெஜமாலுமே ஒரு எலி செத்து வைக்க - அதை கண்டு பிடிச்சு ஒழிச்ச பிறவு  ஹால்ல ஷெல்ஃப் அடிச்சு  மூட்டைகளை அதுக்கு ஷிப்ட் பண்றதா முடிவு பண்ணோம்.

நமுக்கு தேன் ஆணியடிக்க தெரியுமே. செட்டியார் வீட்டு பின்னாடி கொஞ்சம் இடம் வேற வேக்கன்டா இருக்கு.

ஒன்னுக்கு எட்டு ரீப்பர் வாங்கிட்டு வந்து ரெண்டரைக்கு அஞ்சுல ஒரு ஷெல்ஃப் அடிச்சுட்டம்.  தாளி அதை மேலுக்கு தூக்கனுமே .கதவெல்லாம் ரெண்டரை அடி அகலம் கூட இல்லை. என்னங்கடா இதுன்னு நெடுக்க வெட்டி ஒன்னை ரெண்டாக்கிட்டம்.  மறுபடி தூக்கறோம் உச்சி இடிக்குது . மேல் அறை வரை வெட்டி எடுத்து ரெண்டு பெஞ்சாக்கிட்டம்.

ரெண்டு ஷெல்ஃப் -ரெண்டு பெஞ்சை தூக்கி ஹால்ல போட்டு மூட்டை முடிச்சையெல்லாம் சார்ட் அவுட் பண்ணி குப்பைய கழிச்சு எல்லாத்தையும் தூக்கி அடுக்கினதுல ஹாலே லைப்ரரி மாதிரி ஆயிருச்சு.

மொத்தமா என்னடா செலவுன்னு பார்த்தா ரீப்பர் ஒரு ரூ 350 நம்ம அசிஸ்டென்டுக்கு பத்தா ரூ 100 , நெடுக்க வெட்ட மிஷின் வாடகைக்கு எடுத்ததுல ரூ.50 ஆணி ,புஷ், எல் க்ளாம்ப எல்லாம் சேர்த்து ஒரு ரூ.100. ( நம்ம உழைப்பு ? ஆல் ஃப்ரீ - அப்பப்போ செட்டியார் பின்னாடி வந்து டீ  கொடுத்து ஒரு சிகரட் கொடுப்பாரு ) ஆக ரூ.600 செலவுல  ரெண்டு ஷெல்ஃப். ரெண்டு பெஞ்ச்.

செட்டியாருக்கு ஒரே குஜிலி ஆயிருச்சு. நீ இம்மாம் பெரிய வேலை காரன்னா ஒன்னை வச்சே எல்லாத்தையும் முடிச்சுருப்பனேன்னாரு.

அப்பம் நாம சொன்னம்." செட்டியார் ! .. துட்டை  மட்டும் வச்சா வேலை முடிஞ்சுரும்னு  நினைக்காதே. வேலை முடியற நேரம் வந்தா துட்டே இல்லாம கூட வேலை முடிஞ்சுரும். அந்த நேரம் வராத வரைக்கு லெச்சங்க கொட்டினாலும் வேலை  நடக்காது"

உங்க ஜோதிட திறமைக்கு ஒரு சவால் :

அதே செட்டியார் -அதே ஜாதகம் . ஒரு கட்டத்துல ரெண்டு லெச்சம் செலவழிச்சாலும் வேலைக்காகலை . அதே செட்டியார் அதே ஜாதகம் ரூ.600 செலவழிச்சதுல படக்குன்னு வேலை முடியுது. இதெப்படி சாத்தியம்? ஜொல்லுங்க பார்க்கலாம்.










Sunday, November 18, 2012

எதை இழந்தால் எதை பெறலாம்?

அண்ணே வணக்கம்ணே !
எதை இழந்தால் எதை பெறலாம்னு ஒரு மேன்யுவலே தந்துரலாம்.இந்த மென்யுவலுக்கு அடிப்படை என்னனு கேப்பிக. கடைசி பாரா வரை படிச்சிங்கனா தெரிஞ்சுக்கலாம்.

அதை படிச்சும் புரிஞ்சுக்காத பார்ட்டிங்களுக்கு ஒரு சிறுகதைக்கான சுருக்கத்தையும் தந்திருக்கேன். ஆக்சுவலா இன்னைக்கு சூரியனுடனான பேட்டி தொடர்ந்திருக்கனும். நாம முக நூல் நண்பர்களோட பொருளுதவியோட அச்சிட்ட ஸ்ரீ அம்மன் சத நாமாவளி ( கையடக்க பதிப்பு) பிரதிகளை வேலூர் வாழ் தமிழ்மக்களுக்கு இலவசமா வினியோகிக்க களத்தில் இறங்கினமா பழைய ஞா எல்லாம் கூகுள் சர்ச் ரிசல்ட் கணக்கா கொட்டோ கொட்டுன்னு கொட்டிருச்சு.

இந்த ஞாபகங்களை பினாத்தி தொலைக்கலின்னா ராத்தூக்கம் ஃபணால் ஆயிரும். அதனாலதேன் டைவர்ட் ஆயிட்டம்.

சின்ன வயசுல பல் விளக்காம டிஃபன் தின்னதுக்கு அண்ணன் வைய ரிட்டர்ன் டிக்கெட் இல்லாம போனது. நடந்தே திரும்பினது. அப்பம் டிக்கெட்டு ரூ.1.90

அதுக்கும் சின்ன வயசுல அம்மா வழி பணக்கார சொந்தங்களோட வீட்டுக்கு போனது . நினைவு தெரிஞ்ச பிறவு சாதி சங்க பிரமுகனோட 3 நாள் கண்ணாலத்துக்கு போனது. ஏதோ ஒரு கண்ணாலத்துக்கு போயி பாக்யராஜின் மொத படத்தை பார்த்தது ( தந்தன தந்தன தாளம் வரும் .. புதிய வார்ப்புகள்? 1979 ? )

ரஜினி படம் பார்க்க சைக்கிள்ள போயி டிக்கெட் கிடைக்காம டி.ராஜேந்தர் படம் பார்த்தது. இன்னொரு பயணத்துல ஒரு ஷோ கமல் படம் , ஒரு ஷோ ரஜினி படம் பார்த்தது.. மிஸ்டர் பாரத் படத்துல மிஸ்டர்.பாரத் சினிமால காமராஜர் மாதிரி ஒரு கெட்டப்,ராஜீவ் மாதிரி ஒரு கெட்டப்,இவரோட அம்மாவுக்கு இந்திராகாந்தி மாதிரி பில்டப் எல்லாத்தயும் பார்த்ததுல ங்கொய்யால அவனா நீயின்னுட்டு கழண்டுக்கிட்டதும் வேலூர்லதேன்.

அந்த காலத்துல காங்கிரசுன்னா அப்படி ஒரு அலர்ஜி. இடையில ஒய்.எஸ்.ஆர் ங்கர பிம்பம்  காங்கிரசோட அழுகலை மறைத்திருந்ததே தவிர காங்கிரசுன்னா அன்னைக்கும் இன்னைக்கு என்னைக்கும் உவ்வே தான்.

ஒரு தாட்டி நம்ம நண்பரும் -அவரோட பெரியப்பா பையனும் தங்கள் டூ வீலரை மாத்திக்கிட்டாய்ங்க. வீட்ல உள்ளவுக கடும் எதிர்ப்பு தெரிவிக்க மறுபடி மாத்த ஒரு தாட்டி டூ வீலர்ல போயிருக்கம்.( வாணியம்பாடி வரை)

1984 ல் அம்மாவுக்கு கான்சர் வந்து - சி.எம்.சிக்கு  ஷட்டில் பயணங்கள் தனிக்கதை .1992 ல் அதே ரூட்டில் தினசரி 20 சிங்கிள் அடிச்சதும் உண்டு. ப்ரைவேட் பஸ்ல செக்கிங். ஆஃப்டர் ஆல் கண்டக்டரா இருந்த ரஜினியே சூப்பர் ஸ்டாராயிட்டாருன்னா செக்கிங்கா இருக்கிற நாம சூஊஊஊஊஊஊப்பர்  ஸ்டார் ஆகாம போயிருவமான்னு ஒரு நப்பாசை.

2004 ல் ஒரு விக்டிமுக்காக பஞ்சாயத்து பண்ண ரெகுலர் ட்ரிப் அடிச்சது அது ஒரு கால கட்டம். 2007 ல தினத்தந்தியில நிருபரா குப்பை கொட்டின காலத்துல மாசத்துக்கு ரெண்டு தாட்டியாச்சும் வேலூர் கட்டாயம்.

எப்பயாச்சும் இன்டிரியர் தமிழ் நாடு போயிட்டு வேலூர் திரும்பி வந்தா போதும். சொந்த ஊருக்கு வந்துட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும். 

இடையில ஒரு தடவை மட்டும் நம்ம  பேப்பர் பிரிண்டிங்  (மல்ட்டிகலர்) விஷயமா  போய் வந்தது ஞா வருது. மத்தபடி கடந்த 3 வருடங்களா நோ வேலூர். நோ பயணம். 2011 புத்தக கண்காட்சி , 2012 பதிவர் சந்திப்பு தவிர வேற ஏதும் பயணம் பண்ணதா ஞாபகமில்லை.

ஆக்சுவலா பயணம்னாலே பயங்கர கடுப்பு. மொத காரணம் நாம செயின் ஸ்மோக்கர் .அதுவும் இங்கன புகை பிடிக்க கூடாதுன்னு போர்டை பார்த்தா உடனே பரபரக்கும். புகைக்க வாய்ப்பிருக்கும் இடத்துல நாள் கணக்கா கூட பிடிக்காம இருந்திரலாம் அதுவேற கதை. அல்லாரும் த்ரூ பஸ்ஸுக்கு தவமிருந்தா நாம பிட்டு பிட்டா பயணம் பண்றதும் உண்டு.

ஃப்ளாஷ் பேக் எல்லாம் இருக்கட்டும் போன வேலை என்னாச்சுன்னு கேப்பிக. சொல்றேன்.சிஷ்ய பிள்ளை ஒருத்தனோட பிக் ஷாப்பர்ல 2ஆயிரம் பிரதிகளோட காட்பாடியில லேண்ட் ஆனோம். சிஷ்யன் நம்ம பேப்பரை வினியோகிச்சு ட்ரெய்ன் ஆனவங்கறதால பிரச்சினை இல்லை. கோடு போட்டா ரோட்டே போட்டுருவான்.

காட்பாடி ரவுண்டானாவை பைசல் பண்ணிட்டு ஆட்டோ பிடிச்சு ........ ஷேர் ஆட்டோதேன் (ரூ.10 வாங்கிட்டான் -ஹூம் ..2009 வரை ரூ .5 தேன். எத்தீனி தபா போயிருப்பம்) புது பஸ் ஸ்டாண்டு.பஸ் ஸ்டாண்டுன்னாலே சுஜாதா சொல்ற மாதிரி வர்ஜியா வர்ஜியமில்லாம புஸ்தவங்க தொங்கனும். இங்க என்னடான்னா என்ட்ரன்ஸ்ல இருந்த கடைகளையெல்லாம் சாலை விரிவாக்கம் சாப்டாச்சு போல.விதவிதமான சனத்தை நாம அப்சர்வ் பண்ணிக்கிட்டிருக்க சிஷ்யன் புகுந்து விளையாடிக்கிட்டிருந்தான்.

ஒரு அரை லிட்டர் ஃபேன்டா அவனை சுறு சுறுப்பாக்கிருச்சு. நம்ம ஊர்ல எல்லாம் ரூ.6 க்கு ஃப்ரூட் மிக்சர் தீர்ந்தது கதை. அங்கன இருந்து பின் வழியே வந்து  மறுபடி ஆட்டோ பிடிச்சு  சி.எம்.சி. மார்க்கெட் போன பிற்காடு நடிகைங்க சீரியல்ல வர்ராப்ல பழைய பஸ் ஸ்டாண்டு டவுன் சர்வீஸுக்கு மட்டும்னு ஆயிட்டாப்ல இருக்கு. சொம்மா சொல்ல கூடாது .சனம் அம்முது.

இங்க மட்டும் பெரிய புஸ்தவ கடையே இருந்தது. சொந்த பணத்தோட வந்திருந்தா கடைய காலி பண்ணியிருக்கலாம்.வினியோகம் முடிஞ்ச பிறவு லாங்கு பஜார்,நேத்தாஜி மார்க்கெட் ,ஜுவெல்லரி லைன் எல்லாம் பார்த்துக்கிட்டு தேன் கிளம்பினோம்.மறுபடி புது பஸ் ஸ்டாண்டு . மறுபடி புதிய பயணிகளுக்கு வினியோகம். ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்.

ஆத்தாவுக்கு கடன் சொல்ட்டு ஆத்தா காசுல ஆழம்னு ஒரு புஸ்தவம் வாங்கினேன். அட்டையில மோடி .பக்கமெல்லாம் மோடி மயம்.படிச்சுட்டு சொல்றேன்.

போன திங்கள் கிழமை ( நவம்பர் 12 ) சத்யாங்கற நண்பரும்  நானும்  கார்ல புறப்பட்டோம். . (அவரோட சொந்த கார்) கிரீம்பேட்டையிலயே டயர் பஸ்ட். ஸ்டெப்னி மாத்திக்கிட்டு போனதும் தெரியலை.வந்ததும் தெரியலை.ஹோட்டலுக்கு அலைஞ்சது மட்டும் தேன் ஞா இருக்குது.

வேலூர் டு காட்பாடி பார்த்துக்கிட்டே வந்து - மறுபடி வேலூர் போயி உப்பில்லாத எண்ணெய் இல்லாத ரொட்டியும் - மாசக்கடைசியில பொஞ்சாதி மூஞ்சி மாதிரி தம்தூண்டு. இதுல  படு காரமா சால்னாவும்,பட்டாணியும்  வேற  தின்னம்.   (  பஞ்சாபியாம்)

ஆனால் இன்னைக்கு   ரூ.45 க்கு பை டூ நூடுல்ஸ் (+சிக்கன்) ப்ளெசன்டா  அடிச்சுட்டு ஒரு தம் போட்டதுல ஆத்தா சவாரி பண்ற சிங்கத்தோட கர்ஜனை கேட்டது.

இன்னைக்கு போறச்சயும் வரச்சயும் ஆந்திர அரசு பேருந்து (லொட லொடன்னு சத்தம் கேட்குமே தவிர பாடி  செமை ஸ்ட்ராங்கு  விபத்தே நடந்தாலும் .சாமானியமா சாவு  நடக்காது. பொடி நடையா நடந்து போயி கவுர்மென்டு ஆஸ்பத்திரி பெட்ல படுத்துக்கலாம்.

அன்னைக்கு சல்லுன்னு ஏசி கார். தின்டிக்கு  டிக்கானா இல்லை. இன்னைக்கு ஜஸ்ட் ரூ.22.50 பைசால  ஹெவன்லி ஃபுட்.

என்ன காரணம்?  சுக்கிரன் தான் வாகன காரகன் .அதே சுக்ரன் தான் அறுசுவை உணவுக்கும் காரகன்.

சிறுகதைக்கான சுருக்கம்:

லட்சுமி காந்தன் பரம்பரை பணக்காரர். என்னென்னமோ தொழிற்சாலைகள் . தலை நகரின் வி.ஐ.பி ஏரியாக்கள் ஒவ்வொன்றிலும் கடல் மாதிரி வீடுகள்.  சொம்படித்து நூல் வெளியீட்டு விழாக்களுக்கு ஸ்பான்சர் பண்ணும்படி இன்டென்ட் போடும் எழுத்தாளர்கள் சகவாசத்தால் அவருக்கும் எழுத்தார்வம் வந்துவிட்டது.

மூடு வந்தா  எதையாவது எழுத மட்டும்  நகரின் நாலு மூலையில் கெஸ்ட் ஹவுஸ் வச்சிருக்காரு. அவரிடம் குவிந்திருந்த பைசா  பெரிய எழுத்தாளர்ங்கற சர்ட்டிஃபிகேட்டை பெரிய பெரிய எழுத்தாளர்களிடமிருந்தே கிடைக்க செய்து விட்டது.  எல்லா பரிசுகளும் பெற்று அலுத்து இன்னைக்கு பரிசு வழங்கும் கமிட்டிகளில் இருக்கிறார்.

தங்கப்பேனாவால் தான் எழுதுவார். எத்தனையோ "சேர்க்கைகள்" இருந்தாலும் ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும்  மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கான பள்ளியில் வேலை செய்யும் - திமிர் பிடித்த கவிதாயினி ரசிகா மீது மட்டும் ல.காந்தனுக்கு தீராத மையல்.

மேற்படி தொண்டு  நிறுவனம் அணு உலை எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட மானில அரசு கிடுக்கிப்பிடி  போட
மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் ரோட்டுக்கு வரும் நிலை.

ரசிகா ல.காந்தன் உதவியை நாட -அவர் ரசிகாவின் உதவியை (?) நாட குவிட் ப்ரோக்கோ அடிப்படையில் ரசிகா புதிய சேர்க்கையாக ஒரு கெஸ்ட் ஹவுசில் ஸ்திரவாசம்.

ல.காந்தன்  படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு அகில உலக புகழ் பெற  திட்டமிடுகிறார். யாரோ   நாமகனை அறிமுகப்படுத்த அவனை மொழிபெயர்ப்பு வேலைக்கு அமர்த்துகிறார்.  நாமகனின்  அசலான பெயரை சொன்னால் வம்பு வரும். எனவே அம்பேல். மொத்தத்துல கிராமத்துல இருந்து வந்தவன்.  நினைத்த போது வெளிவரும் சிற்றிதழ்களின் நாயகன்.  அவன் மனைவி  கார்த்திகாவின் குளோனிங் கணக்கா இருப்பாள்.

நாமகன்,கார்த்திகா அவுட் ஹவுசில் இருக்க, ரசிகா கெஸ்ட் ஹவுசில் இருக்க , லட்சுமி காந்தன் முதல் பார்வையிலேயே  உலகப்புகழ் லட்சியத்தை ஒத்தி வைத்துவிட்டு - கார்த்திகா குறித்த கட்டில் கனவுகளில் மிதக்கிறார்.

இதன் முடிவு என்ன ? அந்த முடிவுக்கு ஜோதிட ரீதியிலான காரணங்கள் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்




.

Thursday, September 22, 2011

ஜோதிட ஆடியோ பாடம்: சுக்கிரன் (7 To 12)


அண்ணே வணக்கம்ணே ! ஆடியோ ஜோதிட பால பாடத்துல இன்னைக்கு சுக்கிரன் 7 முதல் 12 ஆம் பாவங்களில் நின்னா என்ன பலன்னு சொல்லியிருக்கேன். வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க. உங்க கருத்துக்களை தெரிவிக்கலாம். ,சந்தேகங்களை கேட்கலாம்.

Tuesday, September 20, 2011

சுக்கிரன்னா கில்மா மட்டும் தானா?


அண்ணே வணக்கம்ணே!http://www.blogger.com/img/blank.gif
இன்னைக்கு ஆடியோ ஜோதிட பால பாடத்துல சுக்கிரன் துவாதசபாவங்கள்ள நின்ன பலனை விவரிச்சிருக்கேன்.

கையோட கையா ஒரு விஷயத்தை ஞா படுத்த விரும்பறேன். மார்ச் 6 ,2011 ஆம் தேதி "விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்"னு ஒரு பதிவை போட்டிருந்தோம்.

அதுல 2011 செப் 27 க்குள்ள இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்னு சொல்லியிருந்தோம் .

தனித்தெலுங்கானா போராட்டம் காரணமா இது நெஜமாயிரும்போல இருக்கு. இன்னைலருந்து ஆந்திராவுல 6 மணி நேரம் பவர் கட்டாம்.

என்ன பதிவுக்கு போயிரலாமா? வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

Wednesday, February 16, 2011

சுக்கிர(ல) பலமும் பலான யோகமும்

முதல்ல தலைப்பு தர்ர தவறான அர்த்தத்தை நிவர்த்திக்க வேண்டியது என் கடமை. பலான யோகத்தை தர்ரது ஜஸ்ட் சுக்கிரன் மட்டும்னு நினைச்சுரதிங்க. மத்த 8 கிரகங்களோட பலமும் இதுக்கு தேவைப்படுது.

உதாரணமா சந்திரன் மனோகாரகன் என்பதால் சந்திரபலமும் தேவை. சனி நரம்புகளுக்கு காரகன் என்பதால் சனி பலமும் தேவை. இப்படி கில்மா மேட்டர்ல மத்த 8 கிரகங்களோட பலத்துக்கான அவசியத்தை தொடர்பதிவாவே போட்டாச்சு. ( நீங்க ஊருக்கு புதுசுன்னா பழைய பதிவுகளை தேடிப்படிங்க)

அடுத்து பலான யோகம்னா கண்டவளையெல்லாம் கட்டிலுக்கு கொண்டு வந்துர்ர யோகம்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. ஆக்சுவலா இப்படி காஞ்சான், அலைஞ்சான் ஜாதகத்துல பார்த்திங்கனா சுக்கிரன் கெட்டு குட்டிச்சுவரா போயிருப்பார். க்ளியர் !

உணவுக்கு ருசியை தர்ரது பசி. பெண்ணுக்கு அழகு தர்ரது உங்க ஆண்மை. சுக்கிரன் சுப பலமா இருந்தா "ஐம்பதிலும் ஆசைவரும்" புருசன் பொஞ்சாதி உடம்புல பூரிப்பு வரும். முகத்துல திருப்தி, ஆனந்தம்னு கலந்து கட்டியா ஒரு தெய்வீக களை வரும்.

காளிதாசர் வரி வசூலை பத்தி ராசாவுக்கு இன்னா சொன்னாரு தெரீமா " வண்டு பூவுல தேன் எடுக்கிற மாதிரி இருக்கனும்"னாராம். விந்து ஊறின பின்பு இயற்கையா ஏற்படும் உந்துதல் உடலுறவுல முடிஞ்சா சுபம். மேட்டர் வேற மாதிரி போச்சுனு வைங்க ( செயற்கை உந்துதல்/ ஈகோ/ காரணமா கோதாவுல இறங்கறது) ஆடத்தெரியாதவ கூடம் கோணல்ன மாதிரி "கோ ஆப்பரேசனே இல்லிங்க" - " அவளுக்கு இதுல ஆர்வமே இல்லிங்க"ன்னு குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிக்கிறது. பொஞ்சாதிய தவிர ஊர்ல கீரவ எல்லாம் உலக அழகியா தெரியறதுனு ஆரம்பிக்கும். அதனாலதான் சொல்றேன். ஆராச்சும் " அலை பாய்ஞ்சா" அங்கே மேட்டர் சரியில்லைனு அர்த்தம்.

விந்துவை சுக்கிலம்னு சொல்றாய்ங்க. (இந்த பெயர் பொருத்தம் ஆக்சிடென்டலுனு நினைக்கிறிங்களா?).


9 கிரகங்கள்ள செக்ஸுக்கு பொறுப்பா இருக்கிற கிரகம் சுக்கிரன். இன உறுப்பு, அதன் வேலைத்திறன், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு, லூப்ரிகேஷன் எல்லாத்துக்கும் இவர் தான் இன் சார்ஜுங்கற மேட்டரை எல்லாம் கடந்த பதிவுலயே சொல்லியாச்சு. ஞா இருக்கில்லை.

ஜோசியத்தை பத்தி ஓரளவு தெரிஞ்சவுக , ஏன் சில மேதைகள் கூட ஒரு கிரகம் பெட்டரான இடத்துல உட்கார்ந்துட்டா போதும் அது தொடர்பான மேட்டர்ல எல்லாம் ஜாதகர் விளையாடுவாருனு நினைச்சுர்ராய்ங்க. இது தவறு.

என் ஜாதகத்துல ஜன்ம லக்னமான கடகத்துலயே குரு உச்சம். குருன்னா கோல்ட். சாதாரண லாஜிக் படி பார்த்தா என் கிட்டே கிலோ கிலோவா கோல்டிருக்கனும். ஆனா யதார்த்தம் அப்படியில்லை. ஏன்? குரு என் ஜாதகத்துல உச்சமா இருக்கிறதால குரு தொடர்பான தாதுக்கள் நம்ம பாடில பல்க்கா இருக்கோ என்னமோ? கோல்ட் மேல எனக்கு பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் கிடையாது. அது அப்பப்போ வரும். போகும் கண்டுக்கறதில்லை. ஆனா அது வந்துக்கிட்டே தான் இருக்கு. போயிட்டே தான் இருக்கு.

இதையே சுக்கிரனுக்கு பொருத்திப்பாருங்க. உங்க ஜாதகத்துல சுக்கிரன் நெஜம்மாவே நல்ல பலத்தோட இருக்காருனு வைங்க. உங்களுக்கு செக்ஸ் மேலயோ, ஆப்போசிட் செக்ஸ் மேலயோ (எதிர்பாலினர்?) பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் இருக்காது. ஆனா அது உங்களை தேடிவரும். வந்தா வரவில் வைப்பிங்க.போனா செலவில் வைப்பிங்க. ஆனா அதை பத்தி ரோசிக்க மாட்டிங்க.

செக்ஸ் மட்டுமில்லை,பணம் மட்டுமில்லை எதை பத்தி வேணம்னாலு சரி நீங்க அதை பத்தி ரோசிக்கிற வரை அது உங்ககிட்டே வராது. ஹவ் லாங் யுவார் ஹேவிங் மணி அட் யுவர் மைண்ட் யு கெனாட் கெட் மணி இன்டு யுவர் பாக்கெட்.

எதுவரை உங்க மைண்ட்ல பணம் இருக்கோ அதுவரை உங்க பாக்கெட்டுக்கு பணம் வராது. இதையே உடைச்சி சொன்னா எதுவரை உங்க மைண்ட்ல செக்ஸ் இருக்கோ அது வரை அது உங்க அவெய்லபிலிட்டிக்கு வராது.

சுக்கிரன் உங்க ஜாதகத்துல உங்களுக்கு சாதகமா இருக்காரா இல்லையானு தெரிஞ்சிக்க சின்ன ட்ரிக் இருக்கு. இந்த பதிவை படிக்கிற வரை செக்ஸ் எனக்கு கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்வியே உங்க மைண்ட்ல இருந்திருக்காது, வந்திருக்காது. விதி வழியே மதி.

ஆக சுக்கிரன் யாரோட ஜாதகத்துல வீக்காயிருக்காரோ அவிகதான் அலைஞ்சு பறை (இசைக்கருவிங்கோ) சாத்துவாய்ங்க. இவிகளுக்கும் கிடைக்கும். எப்படி கிடைக்கும்? நேரம் கெட்ட நேரத்துல, இடம்,பொருள், ஏவல், கால ,தேச,வர்த்தமாங்கள் தவறி கிடைக்கும். பொருந்தா காதல்,கள்ளக்காதல், ஒரு தலை காதல் , சுய இன்பம், ஹோமோ, குத புணர்ச்சி இதெல்லாமே சுக்கிரன் வாரி வழங்க கூடிய தீயபலன்கள்ள
சிலதுதான்.

இதுக்கு காரணம் என்னன்னா.. இவிக மைண்ட் வேணம்னா பெற்றோர்,ஆசிரியர்,சமுதாயம் இத்யாதியினர் காரணமா கரப்ட் ஆகி இயற்கையோட, இயற்கையில் ஒரு பாகமான கிரகங்களோட தொடர்பை இழந்திருக்கலாம். ஆனால் இவிக உடல் ? இது பூமியின் குழந்தை. பூமி சூரியனின் குழந்தை. அதனால இவிக உடலே இவிக ஜாதகத்தை சொல்லிரும். ( கால புருஷ தத்துவம் - உங்க லக்னம் தலை - எட்டாமிடம் தான் மர்மஸ்தானம் - விரயஸ்தானம்தான் கால்)

நிறைகுடம் தளும்பாதுனு கேள்விப்பட்டிருப்பிங்க.இந்த மேட்டர்லயும் அதே ரூல் தேன்.

யாரோட ஜாதகத்துல சுக்கிரன் சுபபலமா இருக்காரோ அவிக உடல்ல எல்லாமே அளவா இருக்கும். பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவா இருக்கும். ஆனால் யாரோட ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருக்காரோ அவிக உடல்ல எதுவுமே அளவா இருக்காது. பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவுக்கதிகமா இருக்கும்.

ஒரு பால் பாத்திரத்தில வழிய வழிய பாலை ஊத்தி ஸ்டவ் மேல வச்சா ( ஸ்டவ்வை கொளுத்திதான்) அது கொதிக்க ரெம்ப தாமதாமகும். ஆனால் ஒரே ஒரு பாலாடை பாலை ஊத்தி காய வைச்ச உடனே கொதிச்சு உடனே காந்தி ,கருவாடா போயிரும்.

இவிக பழக்க வழக்கங்களை வச்சும் சுக்கிரன் சுபபலமா இருக்காரா , பலவீனமா இருக்காரானு தெரிஞ்சிக்கிடலாம். சுக்கிரன்னா வெறுமனே செக்ஸுக்கு மட்டும் அதிபதி இல்லே.

அவர் லக்சரி, ஃபேன்சி, ஃபேன்டசி,காஸ்மெடிக்ஸ், டூர், ட்ராவல், நொறுக்கு தீனி விருந்து , பார்ட்டி, கெட் டு கெதர், வீடு,வாகனம்,தூக்கம் எல்லாத்துக்கும் அதிபதியா இருக்கார். சுக்கிரன் சுபபலமா இருக்கிற பார்ட்டிங்களுக்கு இது மேல எல்லாம் பெரிசா ஆர்வமிருக்காது. ஆனால் இதெல்லாம் தேடிவரும். தேடிவந்தாலும் அதை அளவாதான் ஏத்துப்பாய்ங்க.ஏன்னா மேற்சொன்ன எல்லாமே உங்க செக்ஸ் பவரை குறைக்கக்கூடிய மேட்டருங்க தான். இவிக உடலே இதை எல்லாம் ப்ரொட்டெஸ்ட் பண்ணும். ( என்னமோப்பா சோஃபால உட்கார்ரதை விட வெறும் நாற்காலில உட்கார்ந்தாதான் வசதியா இருக்குனு பேசுவாங்க)

யார் ஜாதகத்துல சுக்கிரன் பலவீனமா இருக்காரோ அவிக உடல் கொய்ட் ஆப்போசிட்டா ரியாக்ட் ஆகும். மேற்சொன்ன லக்சரி முதலாக வாகனம் தூக்கம் வரை எல்லாத்தையும் அளவுக்கதிகமா கேட்கும் அனுபவிக்கும். அப்பத்தானே பேட்டரி வீக்காயிரும். அதெப்படி வீக்காயிரும்னு கேட்கறிங்க அப்படித்தானே.. சின்ன உதாரணம் :

வாகனம்,பயணங்களோட எஃபெக்ட்:

மனித உடலோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி இதுல விதையில் உள்ள உயிரணுக்கள் உயிர் வாழ முடியாதுனு தான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளியில் படைச்சிருக்கு. நீங்க எதிர்பாலினரை கவரனும்னு நினைச்சா நிறைய நேரம்
அல்ட்ரா மாடர்னா பேண்ட் சட்டைல இருக்கனும். பேண்ட் அணியனும்னா அண்டர்வேர் அணியனும். கண்டவளை கண்ட நேரத்துல பிக் அப் பண்ணனும்னா டூ வீலர்ல மணிக்கணக்கா பயணிக்கனும். இதனால விதைக்கு கிடைக்க வேண்டிய கூல் எஃபெக்ட் கிடைக்காம உயிரணுக்களோட அசையும் திறன் குறைஞ்சுரலாம், கவுண்ட் குறைஞ்சிரலாம். இதுவல்லாம மலச்சிக்கல்ல துவங்கி, பைல்ஸ் வரை அனேக வியாதிகள் வந்து ந்நா ...........றிப்போகலாம்.

நொறுக்கு தீனியோட எஃபெக்ட்:
குழந்தை ஆசனப்பருவத்தை தாண்டி இன உறுப்பை தீண்டி விளையாடற ஸ்டேஜ்ல பெற்றோர் கண்டிப்பால அது மறுபடி ஆசனப்பருவத்துக்கே போகுது. டீன் ஏஜ்ல இதுக்கு வாய்ப்பு குறைஞ்சி போகுது . அதனால டீன் ஏஜன் ஆசனத்தோட ஆரம்பமான வாய் மேல கான்சன்ட்ரேட் பண்றான். வீண் பேச்சு, நொறுக்கு தீனி, சிக்லைட் மெல்றது, பான்,பீடா,பான் பராக் எல்லாத்துக்கும் இதுவு கூட ஒரு காரணம்.

பசியிருந்தா தான் சாப்பாட்டை தின்ன முடியும். நொறுக்கு தீனி அப்படி கிடையாது. பசியே இல்லைன்னாலும் திங்கலாம். ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்.
உடலிலான இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யும் போது , ஜீரண மண்டலம் வேலை செய்யாது. ஜீரண மண்டலம் வேலை செய்யும் போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது. நொறுக்கு தீனி அதிகரிக்க அதிகரிக்க ஜீரண மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் ( ஒரு ஸ்டேஜ் வரை) அதிகரிக்கும். இனப்பெருக்க மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் எல்லாமே படிப்படியா குறைஞ்சுரும்.

இப்படி ஒவ்வொரு பாயிண்டுக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்குது பாஸு.

சுக்கிரன் வீக்கா இருக்கிற ஜாதகர்களுக்கு அடிக்கடி தங்கள் ஆண்மைல சந்தேகம் வந்துரும் . உடனே அதை சோதிக்க களத்துல இறங்கிருவாய்ங்க. ( சில சமயம் ஆசிரியர்கள் மாணவிகள் மேல, தாத்தாக்கள் குழந்தைகள் மேல சோதிக்கறச்ச தந்தில செய்தியாயிர்ராய்ங்க).

மேலும் இவிக விந்து நீர்த்திருக்கும். நீர்த்த விந்து அடிக்கடி புரள ஆரம்பிக்கும். வெளியேற துடிக்கும். சீக்கிரம் ஸ்கலிதமாயிரும். இதனால் ஒன்ஸ் மோர். பல்வேறு காரணங்களால எண்ணிக்கை அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உடலுறவின் ஆழம் -காலம் குறையும். ஆழம் குறைஞ்சா செக்ஸால கிடைக்க வேண்டிய மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல ரீசெட் பட்டனை அழுத்தின எஃபெக்ட் ,ரிலாக்சேஷன் எதுவுமே பெரிசா கிடைக்காது.

இதுவரை ஜாதகம் இல்லாமயே, உங்க செக்ஸ் மற்றும் இதர பழக்க வழக்கங்களைக்கொண்டே உங்க ஜாதகத்துல சுக்கிரன வீக்கா ஸ்ட்ராங்கானு தெரிஞ்சிக்க சில வழிமுறைகளை சொன்னேன். இதுவே போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா?

வேண்டு கோள்:

நிறையப்பேரு "இதென்னங்க கண்டதுலயும் கில்மாவ கலந்து டீக்கடை பெஞ்சு மாதிரி ஒரு எழுத்து நடை"னு கேட்கிறாய்ங்க ( அதை விட நிறைய பேரு தூள் மா ..சூப்பர்மாங்கறாய்ங்க அது வேற கதை).

ஜோசியம்னா அது வயசாளிங்க சப்ஜெக்டுனு ஒரு இமேஜ் இருக்கு. அது தப்பு. வயசாளிங்க விஷயத்துல ஜோசியம் பார்க்கிறதுன்னா அது ஏற்கக்குறைய போஸ்ட் மார்ட்டம் பண்ற மாதிரி. ஆனால் "பசங்க" மேட்டர்ல டாய்க்னசிஸ் மாதிரி. ரெம்பவே யூஸ் ஃபுல். அதனால இளந்தாரிகளை இழுத்துப்போடத்தேன் இந்த சாக்லெட் பூச்சு.

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க? கமெண்ட் ப்ளீஸ்!

Tuesday, February 15, 2011

சுக்கிரனும் கில்மாவும்

ஜோதிஷத்துல கில்மான்னாலே சுக்கிரன் தான். இன உறுப்பு, அதிலான சுரப்பு, விறைப்பு,புடைப்பு செயல்பாடு எல்லாத்துக்கும் இவர் தான் காரகர். வழக்கமா ஒவ்வொரு கிரகத்தோட காரகத்வம் என்னனு சொல்லி அதுக்கும் கில்மாவுக்கு என்ன சம்பந்தம்னு சொல்லி விலாவாரியா பதிவெழுதறது வழக்கம். இதே ரூட்ல நாளைக்கு இன்னொரு பதிவு போட்டா போச்சு காசா பணமா?

இன்னைக்கு ஜாதகத்துல அ கோசாரத்துல சுக்கிரன் யாருக்கு எங்கே யாரோட இருந்தா என்ன பலன்னு பார்ப்போம்.

ஜாதகம் உள்ளவுக அதை பக்கத்துல வச்சிக்கிட்டு படிங்க. லக்னம் முதல் வீடு. எண்ணும்போது க்ளாக் வைஸ் எண்ணுங்க. லக்னத்தோட சேர்த்து எண்ணுங்க.

ஜாதகம் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. டேட் ஆஃப் பர்த் இருந்தா ஆன்லைன்லயே ஃப்ரீயா ஜாதகம் போட்டுக்க நிறைய வெப்சைட்ஸ் இருக்கு. போட்டு வச்சுக்கிட்டு இந்த பதிவை படிங்க.

http:www.astroloka .com

http:www.freehoro .com

http:www.scientificastrology.com

டேட் ஆஃப் பர்த் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. இன்னைக்கு ( நீங்க படிக்கிற தினத்துக்கு) என்ன தேதின்னு பார்த்து மேற்சொன்ன வெப்சைட்ஸ்ல காலை 6 மணி நேரத்துக்கு ஜாதகம் போட்டு பக்கத்துல வச்சிட்டு படிங்க. இதை தற்கால கிரக நிலை, கோசாரம்னு சொல்வாய்ங்க. இதனோட இம்பாக்ட் டெம்ப்ரரி.ஆனா ஆராய்ச்சிக்கு உதவும். உடனடி லாட்டரி மாதிரி ரிசல்ட் தெரியும்.

இதை எல்லாம் அனலைஸ் பண்ண எந்த ராசிக்கு யார் அதிபதின்னு தெரிஞ்சிக்கிடனும். அப்பத்தேன் எந்த ராசிக்கு அதிபதி எங்கன இருக்காருனு பார்க்க உதவியா இருக்கும்.

லெஃப்ட் டாப்ல உள்ள ராசி மீனம் இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மேஷம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி ரிஷபம் இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி மிதுனம் இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி கடகம் இதுக்கு அதிபதி சந்திரன் அடுத்த ராசி சிம்மம் இதுக்கு அதிபதி சூரியன் அடுத்த ராசி கன்னி இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி துலா இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி விருச்சிகம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி தனுசு இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மகரம் இதுக்கு அதிபதி சனி அடுத்த ராசி கும்பம் இதுக்கும் அதிபதி சனிதான்.

இப்ப சுக்கிரனோட பல்வேறு நிலைகளை ,அது தரக்கூடிய பலனை நம்ம புதுசைட்ல பார்ப்போம்.அதுக்கு இங்கன அழுத்துங்க