அண்ணே வணக்கம்ணே !
எதை இழந்தால் எதை பெறலாம்னு ஒரு மேன்யுவலே தந்துரலாம்.இந்த மென்யுவலுக்கு அடிப்படை என்னனு கேப்பிக. கடைசி பாரா வரை படிச்சிங்கனா தெரிஞ்சுக்கலாம்.
அதை படிச்சும் புரிஞ்சுக்காத பார்ட்டிங்களுக்கு ஒரு சிறுகதைக்கான சுருக்கத்தையும் தந்திருக்கேன். ஆக்சுவலா இன்னைக்கு சூரியனுடனான பேட்டி தொடர்ந்திருக்கனும். நாம முக நூல் நண்பர்களோட பொருளுதவியோட அச்சிட்ட ஸ்ரீ அம்மன் சத நாமாவளி ( கையடக்க பதிப்பு) பிரதிகளை வேலூர் வாழ் தமிழ்மக்களுக்கு இலவசமா வினியோகிக்க களத்தில் இறங்கினமா பழைய ஞா எல்லாம் கூகுள் சர்ச் ரிசல்ட் கணக்கா கொட்டோ கொட்டுன்னு கொட்டிருச்சு.
இந்த ஞாபகங்களை பினாத்தி தொலைக்கலின்னா ராத்தூக்கம் ஃபணால் ஆயிரும். அதனாலதேன் டைவர்ட் ஆயிட்டம்.
சின்ன வயசுல பல் விளக்காம டிஃபன் தின்னதுக்கு அண்ணன் வைய ரிட்டர்ன் டிக்கெட் இல்லாம போனது. நடந்தே திரும்பினது. அப்பம் டிக்கெட்டு ரூ.1.90
அதுக்கும் சின்ன வயசுல அம்மா வழி பணக்கார சொந்தங்களோட வீட்டுக்கு போனது . நினைவு தெரிஞ்ச பிறவு சாதி சங்க பிரமுகனோட 3 நாள் கண்ணாலத்துக்கு போனது. ஏதோ ஒரு கண்ணாலத்துக்கு போயி பாக்யராஜின் மொத படத்தை பார்த்தது ( தந்தன தந்தன தாளம் வரும் .. புதிய வார்ப்புகள்? 1979 ? )
ரஜினி படம் பார்க்க சைக்கிள்ள போயி டிக்கெட் கிடைக்காம டி.ராஜேந்தர் படம் பார்த்தது. இன்னொரு பயணத்துல ஒரு ஷோ கமல் படம் , ஒரு ஷோ ரஜினி படம் பார்த்தது.. மிஸ்டர் பாரத் படத்துல மிஸ்டர்.பாரத் சினிமால காமராஜர் மாதிரி ஒரு கெட்டப்,ராஜீவ் மாதிரி ஒரு கெட்டப்,இவரோட அம்மாவுக்கு இந்திராகாந்தி மாதிரி பில்டப் எல்லாத்தயும் பார்த்ததுல ங்கொய்யால அவனா நீயின்னுட்டு கழண்டுக்கிட்டதும் வேலூர்லதேன்.
அந்த காலத்துல காங்கிரசுன்னா அப்படி ஒரு அலர்ஜி. இடையில ஒய்.எஸ்.ஆர் ங்கர பிம்பம் காங்கிரசோட அழுகலை மறைத்திருந்ததே தவிர காங்கிரசுன்னா அன்னைக்கும் இன்னைக்கு என்னைக்கும் உவ்வே தான்.
ஒரு தாட்டி நம்ம நண்பரும் -அவரோட பெரியப்பா பையனும் தங்கள் டூ வீலரை மாத்திக்கிட்டாய்ங்க. வீட்ல உள்ளவுக கடும் எதிர்ப்பு தெரிவிக்க மறுபடி மாத்த ஒரு தாட்டி டூ வீலர்ல போயிருக்கம்.( வாணியம்பாடி வரை)
1984 ல் அம்மாவுக்கு கான்சர் வந்து - சி.எம்.சிக்கு ஷட்டில் பயணங்கள் தனிக்கதை .1992 ல் அதே ரூட்டில் தினசரி 20 சிங்கிள் அடிச்சதும் உண்டு. ப்ரைவேட் பஸ்ல செக்கிங். ஆஃப்டர் ஆல் கண்டக்டரா இருந்த ரஜினியே சூப்பர் ஸ்டாராயிட்டாருன்னா செக்கிங்கா இருக்கிற நாம சூஊஊஊஊஊஊப்பர் ஸ்டார் ஆகாம போயிருவமான்னு ஒரு நப்பாசை.
2004 ல் ஒரு விக்டிமுக்காக பஞ்சாயத்து பண்ண ரெகுலர் ட்ரிப் அடிச்சது அது ஒரு கால கட்டம். 2007 ல தினத்தந்தியில நிருபரா குப்பை கொட்டின காலத்துல மாசத்துக்கு ரெண்டு தாட்டியாச்சும் வேலூர் கட்டாயம்.
எப்பயாச்சும் இன்டிரியர் தமிழ் நாடு போயிட்டு வேலூர் திரும்பி வந்தா போதும். சொந்த ஊருக்கு வந்துட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும்.
இடையில ஒரு தடவை மட்டும் நம்ம பேப்பர் பிரிண்டிங் (மல்ட்டிகலர்) விஷயமா போய் வந்தது ஞா வருது. மத்தபடி கடந்த 3 வருடங்களா நோ வேலூர். நோ பயணம். 2011 புத்தக கண்காட்சி , 2012 பதிவர் சந்திப்பு தவிர வேற ஏதும் பயணம் பண்ணதா ஞாபகமில்லை.
ஆக்சுவலா பயணம்னாலே பயங்கர கடுப்பு. மொத காரணம் நாம செயின் ஸ்மோக்கர் .அதுவும் இங்கன புகை பிடிக்க கூடாதுன்னு போர்டை பார்த்தா உடனே பரபரக்கும். புகைக்க வாய்ப்பிருக்கும் இடத்துல நாள் கணக்கா கூட பிடிக்காம இருந்திரலாம் அதுவேற கதை. அல்லாரும் த்ரூ பஸ்ஸுக்கு தவமிருந்தா நாம பிட்டு பிட்டா பயணம் பண்றதும் உண்டு.
ஃப்ளாஷ் பேக் எல்லாம் இருக்கட்டும் போன வேலை என்னாச்சுன்னு கேப்பிக. சொல்றேன்.சிஷ்ய பிள்ளை ஒருத்தனோட பிக் ஷாப்பர்ல 2ஆயிரம் பிரதிகளோட காட்பாடியில லேண்ட் ஆனோம். சிஷ்யன் நம்ம பேப்பரை வினியோகிச்சு ட்ரெய்ன் ஆனவங்கறதால பிரச்சினை இல்லை. கோடு போட்டா ரோட்டே போட்டுருவான்.
காட்பாடி ரவுண்டானாவை பைசல் பண்ணிட்டு ஆட்டோ பிடிச்சு ........ ஷேர் ஆட்டோதேன் (ரூ.10 வாங்கிட்டான் -ஹூம் ..2009 வரை ரூ .5 தேன். எத்தீனி தபா போயிருப்பம்) புது பஸ் ஸ்டாண்டு.பஸ் ஸ்டாண்டுன்னாலே சுஜாதா சொல்ற மாதிரி வர்ஜியா வர்ஜியமில்லாம புஸ்தவங்க தொங்கனும். இங்க என்னடான்னா என்ட்ரன்ஸ்ல இருந்த கடைகளையெல்லாம் சாலை விரிவாக்கம் சாப்டாச்சு போல.விதவிதமான சனத்தை நாம அப்சர்வ் பண்ணிக்கிட்டிருக்க சிஷ்யன் புகுந்து விளையாடிக்கிட்டிருந்தான்.
ஒரு அரை லிட்டர் ஃபேன்டா அவனை சுறு சுறுப்பாக்கிருச்சு. நம்ம ஊர்ல எல்லாம் ரூ.6 க்கு ஃப்ரூட் மிக்சர் தீர்ந்தது கதை. அங்கன இருந்து பின் வழியே வந்து மறுபடி ஆட்டோ பிடிச்சு சி.எம்.சி. மார்க்கெட் போன பிற்காடு நடிகைங்க சீரியல்ல வர்ராப்ல பழைய பஸ் ஸ்டாண்டு டவுன் சர்வீஸுக்கு மட்டும்னு ஆயிட்டாப்ல இருக்கு. சொம்மா சொல்ல கூடாது .சனம் அம்முது.
இங்க மட்டும் பெரிய புஸ்தவ கடையே இருந்தது. சொந்த பணத்தோட வந்திருந்தா கடைய காலி பண்ணியிருக்கலாம்.வினியோகம் முடிஞ்ச பிறவு லாங்கு பஜார்,நேத்தாஜி மார்க்கெட் ,ஜுவெல்லரி லைன் எல்லாம் பார்த்துக்கிட்டு தேன் கிளம்பினோம்.மறுபடி புது பஸ் ஸ்டாண்டு . மறுபடி புதிய பயணிகளுக்கு வினியோகம். ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்.
ஆத்தாவுக்கு கடன் சொல்ட்டு ஆத்தா காசுல ஆழம்னு ஒரு புஸ்தவம் வாங்கினேன். அட்டையில மோடி .பக்கமெல்லாம் மோடி மயம்.படிச்சுட்டு சொல்றேன்.
போன திங்கள் கிழமை ( நவம்பர் 12 ) சத்யாங்கற நண்பரும் நானும் கார்ல புறப்பட்டோம். . (அவரோட சொந்த கார்) கிரீம்பேட்டையிலயே டயர் பஸ்ட். ஸ்டெப்னி மாத்திக்கிட்டு போனதும் தெரியலை.வந்ததும் தெரியலை.ஹோட்டலுக்கு அலைஞ்சது மட்டும் தேன் ஞா இருக்குது.
வேலூர் டு காட்பாடி பார்த்துக்கிட்டே வந்து - மறுபடி வேலூர் போயி உப்பில்லாத எண்ணெய் இல்லாத ரொட்டியும் - மாசக்கடைசியில பொஞ்சாதி மூஞ்சி மாதிரி தம்தூண்டு. இதுல படு காரமா சால்னாவும்,பட்டாணியும் வேற தின்னம். ( பஞ்சாபியாம்)
ஆனால் இன்னைக்கு ரூ.45 க்கு பை டூ நூடுல்ஸ் (+சிக்கன்) ப்ளெசன்டா அடிச்சுட்டு ஒரு தம் போட்டதுல ஆத்தா சவாரி பண்ற சிங்கத்தோட கர்ஜனை கேட்டது.
இன்னைக்கு போறச்சயும் வரச்சயும் ஆந்திர அரசு பேருந்து (லொட லொடன்னு சத்தம் கேட்குமே தவிர பாடி செமை ஸ்ட்ராங்கு விபத்தே நடந்தாலும் .சாமானியமா சாவு நடக்காது. பொடி நடையா நடந்து போயி கவுர்மென்டு ஆஸ்பத்திரி பெட்ல படுத்துக்கலாம்.
அன்னைக்கு சல்லுன்னு ஏசி கார். தின்டிக்கு டிக்கானா இல்லை. இன்னைக்கு ஜஸ்ட் ரூ.22.50 பைசால ஹெவன்லி ஃபுட்.
என்ன காரணம்? சுக்கிரன் தான் வாகன காரகன் .அதே சுக்ரன் தான் அறுசுவை உணவுக்கும் காரகன்.
சிறுகதைக்கான சுருக்கம்:
லட்சுமி காந்தன் பரம்பரை பணக்காரர். என்னென்னமோ தொழிற்சாலைகள் . தலை நகரின் வி.ஐ.பி ஏரியாக்கள் ஒவ்வொன்றிலும் கடல் மாதிரி வீடுகள். சொம்படித்து நூல் வெளியீட்டு விழாக்களுக்கு ஸ்பான்சர் பண்ணும்படி இன்டென்ட் போடும் எழுத்தாளர்கள் சகவாசத்தால் அவருக்கும் எழுத்தார்வம் வந்துவிட்டது.
மூடு வந்தா எதையாவது எழுத மட்டும் நகரின் நாலு மூலையில் கெஸ்ட் ஹவுஸ் வச்சிருக்காரு. அவரிடம் குவிந்திருந்த பைசா பெரிய எழுத்தாளர்ங்கற சர்ட்டிஃபிகேட்டை பெரிய பெரிய எழுத்தாளர்களிடமிருந்தே கிடைக்க செய்து விட்டது. எல்லா பரிசுகளும் பெற்று அலுத்து இன்னைக்கு பரிசு வழங்கும் கமிட்டிகளில் இருக்கிறார்.
தங்கப்பேனாவால் தான் எழுதுவார். எத்தனையோ "சேர்க்கைகள்" இருந்தாலும் ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கான பள்ளியில் வேலை செய்யும் - திமிர் பிடித்த கவிதாயினி ரசிகா மீது மட்டும் ல.காந்தனுக்கு தீராத மையல்.
மேற்படி தொண்டு நிறுவனம் அணு உலை எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட மானில அரசு கிடுக்கிப்பிடி போட
மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் ரோட்டுக்கு வரும் நிலை.
ரசிகா ல.காந்தன் உதவியை நாட -அவர் ரசிகாவின் உதவியை (?) நாட குவிட் ப்ரோக்கோ அடிப்படையில் ரசிகா புதிய சேர்க்கையாக ஒரு கெஸ்ட் ஹவுசில் ஸ்திரவாசம்.
ல.காந்தன் படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு அகில உலக புகழ் பெற திட்டமிடுகிறார். யாரோ நாமகனை அறிமுகப்படுத்த அவனை மொழிபெயர்ப்பு வேலைக்கு அமர்த்துகிறார். நாமகனின் அசலான பெயரை சொன்னால் வம்பு வரும். எனவே அம்பேல். மொத்தத்துல கிராமத்துல இருந்து வந்தவன். நினைத்த போது வெளிவரும் சிற்றிதழ்களின் நாயகன். அவன் மனைவி கார்த்திகாவின் குளோனிங் கணக்கா இருப்பாள்.
நாமகன்,கார்த்திகா அவுட் ஹவுசில் இருக்க, ரசிகா கெஸ்ட் ஹவுசில் இருக்க , லட்சுமி காந்தன் முதல் பார்வையிலேயே உலகப்புகழ் லட்சியத்தை ஒத்தி வைத்துவிட்டு - கார்த்திகா குறித்த கட்டில் கனவுகளில் மிதக்கிறார்.
இதன் முடிவு என்ன ? அந்த முடிவுக்கு ஜோதிட ரீதியிலான காரணங்கள் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்
.