Showing posts with label 2012. Show all posts
Showing posts with label 2012. Show all posts

Sunday, December 2, 2012

2012, ராகு கேது பெயர்ச்சி பலன்: கும்பம்,மீனம்

அண்ணே வணக்கம்ணே !

2012,டிசம்பர் ,23  ஆம் தேதி நடக்கவுள்ள ராகு கேது பெயர்ச்சியை ஒட்டி 12 ராசிகளுக்கும் கோசார பலன் தந்துக்கிட்டிருக்கம். இன்னைக்கு கும்ப,மீன ராசிகளுக்குண்டான பலனை பார்ப்போம்.

கும்பம்: (3-9) 
3ங்கறது தைரிய ஸ்தானம். இங்கன பாப கிரகம் அதுவும் சர்ப்ப கிரகம் வர்ரது நெல்லதுதேன். இதனால தில்லு துரையா மாறிருவிங்க. நேருக்கு நேரா மோதலின்னாலும் உள்ளடியாவது அடிச்சு எதிரியை கிறுகிறுக்க வச்சிருவிங்க. பயணத்துக்கு அஞ்சமாட்டிங்க. சகோதர வர்கத்துல உங்க கை மேல் கையா மாறும். எல்லாம் ஓகே .ஆனால் சவுண்ட் பாக்ஸ் ரிப்பேர் ஆயிர சான்ஸ் இருக்கு.சாக்கிரதை.

தெலுங்குல தைர்யே சாஹசே லக்ஷ்மீம்பாய்ங்க. அதாவது தகிரியமும்- சாகசமும் தான் மன்சனுக்கு லெச்சுமின்னு அருத்தம். தமிழ்ல கூட  துணிவே துணை , துணிந்தவனுக்கு துக்கமில்லைன்னெல்லாம் பழமொழிகள் இருக்கு.குமுதத்துல சில்க் ஸ்மிதா கத்து கொடுத்தாதான் தெலுங்கு கத்துக்க முடியுமா என்ன? அதனாலதேன் தெலுங்குக்கு தாவினேன்.

தில்லு தேவை தான். ஆனால் டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் இல்லியா. இடம் தெரியாம -ஆள் தெரியாம மோதிட்டு சொத்து,சுகத்தை எல்லாம் விட்டு ஸ்டேட் விட்டே ஓடவேண்டி கூடவரலாம் . சிலர் வெளி நாட்டுக்கே கூட போயிரலாம்.. கூடுதலா மகர ராசிக்கு சனி+ராகு என்ற உப தலைப்பில் சொன்ன பலன் நடக்க வாய்ப்பிருக்கு. (இவிகளுக்கும் சனிதான் ராசியாதிபதி)

மாற்றம் எங்கன வரும்னா சனி  மகரத்துக்கு 1/2 பாவாதிபதி. கும்பத்துக்கு 1/12 பாவங்களுக்கு அதிபதிங்கறதால இவிகளுக்கு மகர ராசியினரை போல் தனம்,வாக்கு,குடும்பம், கண்கள் விஷயத்துல பெரிய பாதிப்பு இருக்காது.

அதே நேரம் விரய பாவாதிபத்யம் பெற்ற சனியோட ராகு சேருவதால் ரகசிய செலவுகள், கனவில் பாம்பு,தேள் இத்யாதி விஷ ஜந்துக்கள், வெளியிடத்தில் சாப்பிடும் உணவால் தொல்லைகள் ,வெகு சிலருக்கு தப்பான உறவுகள்  ஏற்படவும் வாய்ப்பிருக்கு.

மீனம்: ( 2/8)

ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும்  எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம்  எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம்  துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை  வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்
கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்

கூடுதலா 11/12 பாவங்களுக்கு அதிபதியான சனியோட ராகு சேர்ரதால மூத்த சகோதர சகோதிரிகளுக்கு பாதிப்பு, கணுக்காலில்  பிரச்சினை, ரகசிய லாபங்கள் (கைக்கு வராது -வந்தாலும் வீண் விரயமா போகும்) .

விரயபாவாதிபதியான சனியோட ராகு சேருவதால் ரகசிய செலவுகள், கனவில் பாம்பு,தேள் இத்யாதி விஷ ஜந்துக்கள், வெளியிடத்தில் சாப்பிடும் உணவால் தொல்லைகள் ,வெகு சிலருக்கு தப்பான உறவுகள்  ஏற்படவும் வாய்ப்பிருக்கு.சிலருக்கு ஆசனம் தொடர்பான இன்ஃபெக்சன் கூட வரலாம்.

டாக்டர் கிட்டே போனா ஸ்ட்ரெச்சர்ல  ஏறு ,குப்புற படு, முட்டி போடு ,பிரிச்சு காட்டும்பாய்ங்க. தேவையா? வாயை கட்டுங்க.


ஸ்.. அப்பாடா ராகு கேது பெயர்ச்சி பலன் முற்றும். இனி நவகிரகங்களுடன் பேட்டி தொடர்ந்து வெளிவரனும்னு ஒரு "தாட்" ரிலீஸ் பண்ணுங்க ப்ளீஸ்..

Thursday, November 29, 2012

ராகு கேது பெயர்ச்சி : துலாம் விருச்சிகம்


அண்ணே வணக்கம்ணே !
மேஷம் முதலான 12 ராசிகளுக்கும் 23/12/2012 அன்று  நடக்க விருக்கும் ராகு கேது பெயர்ச்சி பலனை .எழுத ஆரம்பிச்சோம்.

கடந்த பதிவுல சிம்மம் கன்னி ஓவர். இந்த பதிவுல துலாம் விருச்சிக ராசிகளுக்கான ராகு கேது பெயர்ச்சி பலனை  பார்ப்போம்.

6.துலா :(1-7)
லக்னங்கறது உங்க பாடி,மைண்ட், அப்சர்வேஷன்,  ஞா சக்தி,முடிவெடுக்கும் திறன், பொறுமை இப்படி பல விஷயங்களை காட்டும்.

கேது,ராகுன்னா தெரியுமில்லே . நிழல் கிரகங்கள். எனவே உங்க மைண்டை ஒரு நிழல் மறைச்சுரும்.

இந்த ரெண்டு கிரகமும் எங்கன நின்னாலும் அந்த பாவத்தோட காரகத்தை அப்படியே உறிஞ்சி எடுத்துரும். எந்த கிரகத்தோட சேர்ந்தாலும் அந்த கிரகத்தோட பலத்தை ஸ்வாஹா பண்ணிரும்.

ஆக ராகு லக்னத்துல நின்னதால  உங்க பாடி,மைண்ட், அப்சர்வேஷன்,  ஞா சக்தி,முடிவெடுக்கும் திறன் எல்லாம் கோவிந்தா.

ராகு சுதந்திர மனப்போக்கை தருவாரு. ஆனால் நம்ம சமூகம் கிழவாடிகளால, ஹிப்பாக்ரட்டுகளால வழி நடத்தப்படும் சமூகம். ஆகவே சமூகத்துக்கும் நமக்கும் ஒத்துப்போகாத நிலை வரும்.

காதலி,பொஞ்சாதில்லாம் இந்த சமூகத்தோட பிரதி நிதிகள் . இவிகளோடவும் ஒத்துப்போகாத நிலை வரலாம்.

ஜாதகத்துல 1-7 ல் ராகு கேது நிற்பதை  சர்ப்ப தோஷம்ங்கறாய்ங்க. இது ஜாதகரோட உடல் நலம் உள்ள நலத்தை பாதிக்கிறதோட  இன்டர் ஆக்சனை  பாதிக்கிற அமைப்பு. ஆரோடவும் ஒத்துப்போகாது .

பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம்  எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம்  துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை  வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்

கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்

சனி+ராகு:
மேலும் இவர் சனியோட ஜாய்ன் பண்ணிக்கிறாரு. ஏற்கெனவே சொன்னபடி ராகு கேதுக்கள் எந்த கிரகத்தோட சேர்ந்தாலும் அந்த கிரகத்தோட பலத்தை ஸ்வாஹா பண்ணிரும்.  சனி உங்களுக்கு 4-5 க்கு அதிபதி.

ஆகவே தாய்,வீடு,வாகனம்,கல்வி எல்லாமே நொண்டியடிக்கும். அதே போல புத்தி குழப்பம் ஏற்படும், அதிர்ஷ்டத்தை நம்பி செய்யும்  வேலைகள் ஊத்திக்கும். வாரிசுகள் விஷயத்துலயும் நாஸ்தி தான். அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பிருக்கு.

பரிகாரம்:
தாய்,வீடு,வாகனத்தை பிரிந்திருங்கள் . கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். பிள்ளைகளை பிரிந்திருங்கள் .அல்லது டிடாச்டா இருங்க. அவிக மம்மி கிட்ட கண்ட்ரோலை விட்டுருங்க. பெயர்புகழுக்கு ஆசைப்படாதிங்க. கும்பல்ல கோவிந்தா போடுங்க. அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதிங்க.திருமலை வராகஸ்வாமியை தியானம் பண்ணுங்க , துர்கையின் உருவத்தை மனதில்  நிறுத்துங்க.


8.விருச்சிகம்:(6-12)

ஆறுங்கறது சத்ரு ரோக ருணஸ்தானம் . இங்கன கேது நிக்கிறது நல்லது தான். இதனால சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண விமுக்தி (கடன் தீருதல்) ஆகிய நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

அதே நேரம் கடன் தீரனும்னா மொதல்ல கடன் ஏற்படனும் , நோய்  தீரனும்னா  மொதல்ல நோய் ஏற்படனும்ங்கற லாஜிக்கை மறக்காதிங்க.

கடந்த ஒன்னரை  வருசமா அஞ்சுல இருந்த கேது புத்திய குழப்பி -உங்க பயோ கெமிஸ்ட்ரியையே மாத்தி ரத்தத்தை கெடுத்து வச்சிருப்பாரு. அந்த மலினங்கள், ஃபாரின் மேட்டர்லாம் க்ளியர் ஆகனும்னா நோய் வந்தாகனும்.

12ங்கறது நாம செலவழிக்கிற முறையை ,தூக்கம் ,செக்ஸ் இத்யாதிய காட்டும். இங்கன ராகு இருக்கிறதால
ராகுன்னாலே நிழல்ங்கறதால மேற்படி விஷயங்கள்ள சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணவேண்டி வரலாம். ரகசியம் வெளியாகும் போது.......

தூக்கம் கெடலாம் ,வீட்டம்மாவுக்கு எங்கயோ எரிஞ்சதுன்னு வைங்க சோத்துல மண்ணு ,கில்மாவுக்கு ஆப்பு. டேக் கேர்.



பரிகாரம்:
கரிய நிற பில்லோ கவர் ,பெட் ஸ்ப்ரெட் உபயோகிக்கவும்.பெட் ரூம்ல சைனீஸ் ட்ராகன் போஸ்டர் வச்சுக்கங்க. ஒரு விதவை பெண் மலையாள பிட்டு படம் போல வலை வீசலாம் சிக்கிராதிங்க.

ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்

கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்

குறிப்பு:
இதையெல்லாம் பெட் ரூம்லயே செய்ங்க ஸ்ரேஷ்டம்.

சனி+ராகு:
ஏற்கெனவே விரயத்துல உள்ள சனியோட ராகு வந்து  ஜாய்ன் பண்ணிக்கிறாரு. ஏற்கெனவே சொன்னபடி ராகு கேதுக்கள் எந்த கிரகத்தோட சேர்ந்தாலும் அந்த கிரகத்தோட பலத்தை ஸ்வாஹா பண்ணிரும்.  சனி உங்களுக்கு 3-4- க்கு அதிபதி.

ஆகவே சகோதர வர்கத்தின் நிலை கவலைக்கு இடம் தரலாம். உங்களுக்கு சவுண்ட் பாக்ஸ்ல பிரச்சினை வரலாம். சொந்த ஊருலயே நெறய அலைஞ்சு திரிஞ்சு வேலை பார்க்கவேண்டி வரலாம். மனசுல தில்லு சாஸ்தியாகும்.  தாய்,வீடு,வாகனம்,கல்வி எல்லாமே நொண்டியடிக்கும்.

பரிகாரம்:
சகோதரர்கள் விஷயத்துல உதவுங்க. நெல்லது. அதுக்குன்னு ஜாய்ன்ட் ,ஷ்யூரிட்டில்லாம் தராதிங்க. கொடுக்கல் வாங்கல் வச்சுக்காதிங்க. காதுல கண்டதையும் போடாதிங்க. தாய்,வீடு,வாகனத்தை பிரிந்திருங்கள் . கல்வியில் அதிக கவனம் செலுத்தவும்.



Monday, November 5, 2012

21,டிசம்பர் ,2012 : ஒரு ஸ்கான் பார்வை

அண்ணே வணக்கம்ணே ! 21,டிசம்பர் ,2012 அன்னைக்கு பிரளயம் வரும்ங்கறாய்ங்க. எல்லாம் ஃபணால் ஆயிருங்கறாய்ங்க. எங்க என்.டி.ஆர் மாதிரி ஒரு வேனை சைதன்ய ரதமாக்கிக்கிட்டு கு.ப ஆந்திரம்,தமிழ் நாடு மட்டுமாச்சு ஒரு டூர் அடிச்சு ஆ.இ.2000 பத்தி பிரசாரம் பண்ணனும்னு ப்ளான் பண்ணியிருந்தம்.

இப்பம் இவிக சொல்றதை பார்த்தா  எல்லாம் அம்பேல் தானா? சரி அன்னைக்கு  நாள் நட்சத்திரம்லாம் எப்படின்னு பார்ப்போம்.

கிழமை வெள்ளிக்கிழமை ; திதி: சுக்ல பட்ச அவமி (இரவு 12.46 வரை)
நட்சத்திரம்: உத்தராபாத்ரா (உத்திரட்டாதி) பகல் 9.49 வரை அதன் பிறகு ரேவதி சந்திரன் மீனத்துல
துர்முகூர்த்தம்: காலை 8.56 முதல் 9.40 மற்றும் பகல் 12.35 முதல் 1.19 வரை
வர்ஜியம்: இரவு 10.55 முதல் ,12.40 வரை

ஞா கிழமை,கிரகணம் பிடிச்சு ,அன்னைக்கு அமாவாசை ,பவுர்ணமி எதுனா கோ இன்சைட் ஆனா பூகம்பம் இத்யாதிக்கு வாய்ப்புண்டுனு ஒரு விதி இருக்கு.21,டிசம்பர் ,2012 அன்னைக்கு இது எதுவுமே கோ இன்சைட் ஆகலை.உஸ் அப்பாடா ..மினிம கியாரண்டி..

இட்ஸ் ஓகே அன்னைக்கு என்ன கிரகஸ்திதின்னு பார்ப்போம். ரிஷபத்துல  வக்ர குரு +கேது சேர்க்கை (குரு வக்ரம்ங்கறதால அஜீஸ்மென்டு) சனி துலாமில் உச்சம் (ஆயுள் காரகர்) விருச்சிகத்துல புதன்,சுக்கிரன்,ராகு.

புதனோட ராகு சேர்ந்தா யாவாரிங்க,கல்வியாளர்கள், ஆடிட்டர்,டாக்டர்களுக்கு தலைவலி. சுக்கிர ராகு சேர்க்கை பெண்களுக்கு பிரச்சினைய தரும்.  பொதுவாவே வெனிரியல் டிசீஸ் அட்டாக் ஆக வாய்ப்பு அதிகமா இருக்கும். ஹவுசிங்,ஆட்டோ மொபைல் துறைகளுக்கு நல்லதில்லை. சூரியன் தனுசுல, செவ் மகரத்தி உச்சம். சனி சூரியனை பார்க்கிறாரு. ஆட்சியாளர்களுக்கு தலைவலி.

ஒன்னும் அந்தளவுக்கு வில்லங்கமான கிரக நிலையா தோனலை. நம்ம நாட்டோட லக்னம் ரிஷபம்,ராசி கடகம். சுதந்திர இந்தியாவின் ஜாதகம் :

லக்னம் ரிஷபம். 1-7 ல ராகு கேது , ரெண்டுல செவ்( ராணுவ செலவு கழுத்தை நெறிக்க இதுவும் ஒரு காரணம்) 3ஆம் பாவத்துல சுக்கிரன் சூரியன் , சனி ,புதன்,சந்திரன், 6ல குரு,

2012-7-15 முதல் 2013-6-27 வரை சூரியதசையில சனி புக்தி .. சூரியன் 3 ல் ஓகே. சனியோட சேர்ந்து 3 ல் நின்றதுதான் கொஞ்சம் போல வவுத்தை கலக்குது.

ரிஷப லக்னத்துக்கு சனி யோக காரகன். 3 ங்கறது மாரக ஸ்தானம். இதுல சூரிய தசையில சனி புக்தி வேற நடக்குது.

சூரியன் +சனி/ராகு தொடர்பு ஏற்பட்டா ஆட்சியாளர்களுக்கு ஆப்புன்னு அருத்தம்.கோசாரத்துலயும் சனி சூரியனை பார்க்கிறாரு.

ஆக  21,டிசம்பர் ,2012 க்கு முன்னே பின்னே அரசுகள் கவிழலாம்.தலைவர்கள் சாகலாம்னு சொல்ல முடியுதே தவிர புரட்டிப்போடற அளவுக்கு பிரளயம் வரும்னெல்லாம் சொல்ல முடியலை..

நம்ம நாட்டோட ராசியான கடகத்தை வச்சுப்பார்த்தாலும் லக்னாதிபதி  சந்திரன்  பாக்யத்துல , 7/8 க்கு அதிபதியான சனி 4 ல் உச்சம் ( ஆட்சியாளர்கள் நீச சகவாசம் செய்து அதனால நாறலாம் -ஆளுங்கட்சியில உட்கட்சி பூசல் வரலாம் - தொழிலாளர்கள் பெரிய அளவுல வேலை நிறுத்தத்துல ஈடுபடலாம்.

3/12 க்கு அதிபதி 5 ல் . ஆட்சியாளர்கள் மக்களை இவிக எவ்ள அடிச்சாலும் தாங்கறாய்ங்க .ரெம்ப நல்லவுங்கனுட்டு எதுனா உபரியா பளுவை ஏத்த ,மக்கள் திரஸ்கரிச்சு ரோட்டுக்கு வரலாம். ஆட்சியாளர்களுக்கு அவப்பேர் வரலாம். 4,11 க்கு அதிபதியான சுக்கிரன் 5 ல் வருவதால் ஒரு பெண் அரசியல் வாதி (சோனியா தவிர்த்து ) லைம் லைட்டுக்கு வரலாம்.

புத,சுக்கிரர்களோடு ராகு சேர்வதால் அந்த பெண் ஆண் லட்சணங்களுடன் இருக்கலாம் . விதவையா இருக்கலாம். தனித்து வாழ்பவராக இருக்கலாம்.

புதன் =வியாபாரம் ; ராகு =ஊழல் , சுக்கிரன் =ஹவுசிங்,ஆட்டோ மொபைல் ,ராகு =ஊழல் எனவே இது தொடர்பான ஊழல்கள் எதாவது வெடிக்கலாம்.

ரெண்டுக்கதிபதியான சூரியன் 6ல் நிற்பதால் ஷேர்மார்க்கெட் தொபுக்கடீர் ஆகலாம். 5,10 க்கு அதிபதியான செவ் 7 ல் உச்சம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் சீனத்துடன் (எதிரி) உரசல் அதிகரிக்கலாம். பெரிய தீவிபத்து அ பூகம்பம் நடக்கலாம்.

11ல் வக்ர குரு  நல்லதில்லை.இவரோட கேது சேர்ந்ததால நாடு ஒரு நல்ல பாடத்தை படிக்க வேண்டியிருக்கும்.ஞானோதயம்?

என்னதான் முக்கி முக்கி ரோசிச்சாலும் பிரளயம்ங்கற வாசனை கூட வரலிங்கணா.. ஜோதிடன் பலனை சொல்லத்தான் முடியும்.அந்த பலனை தர்ரது ஆத்தா தானே..