Saturday, November 17, 2012

நவகிரகங்களுடன் ஒரு பேட்டி: சூரியன் 2

நான்:
வணக்கம் பாஸ் !

சூரி:
மறுபடி நீயேவா? நான் லக்னத்துல நின்னா சொந்தத்துக்கு செய்ற வேலை உருப்படாது..பிரதிபலன் கிடைக்காதுன்னு சொல்றாய்ங்களே ..ஏன்னு முந்தா  நேத்து  ஒரு கேள்வி கேட்டிருந்தே அதுக்கான பதிலை இப்ப சொல்றேன்..

நான்:
சொல்லுங்க பாஸ்.

சூரி:
கிழக்குல உதிச்சு மேற்குல மறையறேன். சிக் லீவ், இயர்ன்ட் லீவ்,காஷுவல் லீவ் ,ஃபெஸ்டிவல் லீவ் எதுவும் கிடையாது. ஒரு நாள் கூட லீவு எடுக்கிறதில்லை. கிரகண சமயத்துல கூட  நான் உதிச்சுர்ரன். அதுக்கப்பாறம் தான் ராகு வந்து என்னை மறைக்கிறாரு. ஆனால் இதுக்கெல்லாம் ஒரு பைசான்னா ஒரு பைசா கூட ரெம்யூனரேஷன் கிடையாது.

மேலும் என்னால் உங்களுக்கெல்லாம் ஒளி கிடைக்குது. வெப்பம் கிடைக்குது. சந்திரனுக்கு ஒளி கிடைக்குது. எனக்கு என்ன கிடைக்குது? பல ஆயிரம் வருசங்களா எரிஞ்சுக்கிட்டிருக்கிறதால எனக்குள்ள இருக்கிற சப்ஸ்டன்ஸ் குறைஞ்சுக்கிட்டே வருது. ஒரு நாள் இல்லை ஒரு நாள் கற்பூரம் கணக்கா "குளிர" வேண்டியதுதான்.  மேலும் என்னை விட்டு விலகி இருக்கிறவுகளுக்கு தான் லாபமே தவிர என்னை நெருங்கி வந்தா பஸ்மம்.

நேத்தே சொன்னாப்ல எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்.லக்னத்துல  நான் உள்ள ஜாதகன் அவனும் ஒரு குட்டி சூரியன் தான்.

அவன் மன்சங்கறதால அவனுக்கு இந்த பூமியில்  வாழ பிரதிபலன் தேவைப்படுது -ஆனால் கிடைக்காது, அவனை மக்கள் நெருங்கி வந்தாதான் சமூக வாழ்வு சோபிக்கும். நெருங்கி வரலின்னா தனிமையில தவிக்கனும்.

நான்:
பாஸ் ! நீங்க பேச பேச எனக்குள்ள இன்னொரு பாய்ண்டும் ஸ்பார்க் ஆகுது .சொல்லவா?

சூரியன்;
சொல்லுப்பா..

நான்:
நீங்களா உலகத்தையே தட்டி எழுப்பறவரு. மன்ச ஜன்மம்னா - கொஞ்சமாச்சும் ரிலாக்ஸேஷன் இருக்கனும். நீங்க லக்னத்துல நின்னா அவனுக்கு செரியான தூக்கம் கூட இருக்காது.  மறு நாள் ஒத்தை தலைவலி மலச்சிக்கல்,முதுகுவலின்னு அவதிப்படுவான் . இந்த கடுப்புல எல்லாரையும் கடுப்படிச்சு அல்லாத்துக்கும் விரோதமாயிருவான் ..அப்டித்தானே.

சூரியன்:
ஓரளவுக்கு லைனை பிடிச்சிருக்கே .. இன்னம் கொஞ்சம் தம் கட்டு .

நான்:
ராத்திரி நேரத்துல எல்லாமே மச மசன்னு இருக்கும். சுமாரான குட்டி கூட சூப்பர் குட்டியா தெரிவா.தூக்கத்துல அறிவாளியும் ஒன்னுதான் . முட்டாளும் ஒன்னுதான்.ஆனால் நீங்க உதிச்ச பிறவு ? எல்லாமே பளிச் ஆயிருது. லக்னத்துல நீங்க நின்னா.. அந்த ஜாதகனும் ஒரு குட்டி சூரியனா மாறி முட்டாளை முட்டாள்னும் -குரூபியை குரூபின்னும் டிக்ளேர் பண்ணுவான். எந்த முட்டாள் தன்னை முட்டாள்னு சொன்னா ஏத்துக்குவான்?   இதனால எல்லாருமா சேர்ந்து ஆப்படிச்சுருவாய்ங்க. கரீட்டா தலை?

சூரியன்:
ம்...ம்.. அடுத்த கேள்விக்கு போ..

நான்:
வந்துட்டன் துரை ! உங்களை ஆத்மகாரகன்னு சொல்றாய்ங்களே ..அது எப்டி?

சூரியன்:
என்னோட இடம் எது?

நான் :
உச்சி

சூரியன்:
மனித உடலின் உச்சி எது?

நான்:
உச்சந்தலை

சூரியன்:
ராஜயோகம் உச்சியில எந்த சக்கரம் இருக்கிறதா சொல்லுது?

நான்:
சஹஸ்ராரம்

சூரியன்:
குண்டலி சஹஸ்ராரத்தை தொட்டாத்தானே மனிதன் தான் ஆத்ம சொரூபங்கறதை அனுபவபூர்வமா தெரிஞ்சுக்கறான். அதனாலதேன் என்னை ஆத்மகாரகன்னு சொல்லியிருக்காய்ங்க.  நான் எப்படி எல்லாத்து மேலயும்  சமமா என் கிரணங்களை வீசுறனோ அப்படி  ஆத்ம சொரூபனா உள்ளவன் அபேத பாவத்தோட எல்லாரையும் சமமா பார்ப்பான்.  

மனிதன் தன்னை ஆத்ம ரூபமா உணரும் வரைக்கும் அவன் வாழ்க்கைக்கு வேறு எதுவோ மையபுள்ளியா இருக்கும். அவன் தன்னை ஆத்ம ரூபமா உணர்ந்துட்டான்னா பால் வீதிக்கு நான் எப்படி   கேந்திரமா  இருக்கேனோ அப்படி அவன் தன் வாழ்க்கைக்கு தானே கேந்திரமா மாறிர்ரான்.

மத்த கிரகங்கள் தான் என்னை நெருங்குவதும் விலகுவதுமா இருக்குமே தவிர நான் மட்டும் என் நிலையில நிலையா இருப்பேன்.

நான்:
பாஸ்.. ஆத்ம ரூபமா உணர்ந்த பிறகு மனிதன் அடையக்கூடிய நிலையை ஜஸ்ட் தன் ஈகோ காரணமா கூட அடையறானே..

சூரியன்:
ஈகோங்கறது பிரமை. பிரமை எப்பயாச்சும் உடைஞ்சுரும்.

நான்:
ஆக ஈகோவுக்கும் நீங்கதேன்.ஆத்மாவுக்கும் நீங்கதேன். அதெப்படி பாஸு? ரெண்டு நிலையையும் நீங்களே தர்ரதா சொல்றிங்க. எப்போ எந்த நிலையை தர்ரிங்க?

சூரியன்:
நான் ஜாதகத்துல முழு பலம் பெற்றிருந்தா ஆத்ம காரகனா வேலை செய்றேன். அரைகுறையா பலம் பெற்றிருந்தா தன்னம்பிக்கைய தரேன். பலம் இழந்திருந்தா ஈகோவை தரேன்.

நான்:
சூப்பர் தலைவா..இந்த வித்யாசத்தை மண்டைக்கு ஏத்தவே 24 மணி நேரம் பிடிக்கும் போல. இன்று போய் நாளை வரேன்..

சூரியன்:

அப்படியே ஆகட்டும் வா.