Showing posts with label சந்திரன். Show all posts
Showing posts with label சந்திரன். Show all posts

Tuesday, December 11, 2012

நவகிரகங்களுடன் பேட்டி: சந்திரன்

அண்ணே வணக்கம்ணே !

நீங்க நம்ம கிட்டே என்ன எதிர்ப்பார்க்கிறிங்க? நமக்கு புவ்வாவுக்கு வழி பண்றது எது ? எல்லாமே நெல்லா தெரியும்.

ஆனாலும் இன்னைக்கு நாம ரசினி காந்தை கேட்டாப்ல  நாளைக்கு நம்மை ஒரு பார்ட்டி கேள்வி கேட்டுரக்கூடாதேங்கற பயத்துல - அட கேட்டாலும் சால்ஜாப்பு சொல்லிக்கலாம்னு வைங்க. இந்த மனசாட்சி மனசாட்சின்னு ஒன்னு இருக்கே . இது பொஞ்சாதியை விட மோசம்.

ஒரு டிடிஹெச் ஐ வச்சு பொஞ்சாதி வாயை அடைச்சுரலாம்.ஆனால் இந்த மனசாட்சி? ஊஹூம்.. நாம தூங்கப்போறதே விடியல்லதேன்.அப்பமும் தூங்க விடமாட்டேங்குதுண்ணே.

அதனாலதேன்  அப்பப்போ ட்ராக் மாறி ரஜினி,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றியெல்லாம் எழுத வேண்டியதா இருக்கு.

அதே சமயம் நாம ஏதோ சனங்க மேல அக்கறையோட இதெல்லாம் பண்றோம்னு நினைச்சா அதுவும் தப்பு. ஆத்தாளுக்கும் நமக்கும் ஒரு அக்ரிமென்ட் "ஆத்தா .. நீ என்னை பார்த்துக்க - நான் இவிக மேட்டரை பைசல் பண்றேன்"

அடுத்து இம்மாம் அறிவையும் சுய நலத்துக்கு பயன்படுத்தினம்னு வைங்க கருமம் தேன் வந்து சேரும் . போன சன்மத்துல என்னா கருமம் பண்ணமோ இந்த சன்மத்துல 14 வருச வனவாசம் மாட்டிக்கிச்சு. ஊர் வேலை செய்தம்னு வைங்களேன் கருமம் தொலையும்.

அவ்ளதானே தவிர சனங்க மேல நமுக்கு அக்கறைல்லாம் கிடையவே கிடையாது. அதுவும் தன்னை தனக்கு மேல உள்ளவன் சுரண்ட சுரண்ட -  தனக்கு கீழே உள்ளவனை தான் சுரண்டற சனம்னா நமுக்கு எந்தவித சாஃப்ட் கார்னரும் கிடையாது.

மொக்கை ஓவராயிருச்சுல்ல . இதோ  மெயின் ட்ராக்குக்கு வந்துட்டன். நவகிரகங்களுடன் பேட்டி இந்த பதிவில்  தொடருது. சூரியன் ஓவர். இன்னைக்கு சந்திரன். சந்திரன்னு அடிச்சதுமே கவிதை பொங்குது.

சந்திரனோ நீ மந்திரனோ
மந்திரமே போல்
எம் மனம் மாற்றும் மாயாவி

எண்ணம் போல் மனம் என்றார் சான்றோர்
மனம் ஒரு குரங்கென்றார் ஆன்றோர்

எண்ணம் ஒரு விதையானால்
மனம் அதை ஏற்கும் நிலமாமே

நின் பலம் பொருத்தே மனம்
மனதின் வலு பொருத்தே கிளை விடும்  எண்ணம்

எண்ணங்கள் விரிந்திடில் மனம் அது  மாறும்
அதற்கும் தேவை நின் பலம்.

மனம் ஒரு குரங்கென்றார்.
எம் மனமாளும் மன்னவன் நீ ..

ஒரு  நாளில் சாரம் மாறி -அதற்குள்
இரு சோடி பாதம் மாறி

எம் மனதை மாற்றி மாற்றி
அதற்கே குரங்கெனும் பெயர் தந்தாய்.

இதே ரேஞ்சுல நாற்பது பக்கம் அடிச்சுரலாம் போல ஊற்று பொங்குது. கவிதை பிறப்பது மனதில் . சந்திரன் தான் மனோகாரனாச்சே.

இருந்தாலும்  இந்த சேதி அல்லாரையும் ரீச் ஆவுறதுக்காவ நம்ம நடைக்கே திரும்பிர்ரன்.

சந்திரன் பெண் கிரகம் என்பதை மனதில் வைக்கவும். ஆனால் நாம பாட்டுக்கு கலாய்க்க மாதர் சங்கம் காரவுக எதுனா புகார் பண்ணிட்டா வம்பு.அதனால சந்திரனை ஆணாகவே ட்ரீட் பண்ணி இன்டர்வ்யூவை முடிச்சுர உத்தேசம்.

நான்:
குட் மார்னிங் தாத்தா !
 சந்திரன்:
மானுடனே.. நாங்க அமுதம் சீப்பி குடிக்கிறவுக. சீப்பா தாத்தாங்கறே..

நான்:
கொஞ்சம் பொறுமையா இருந்தா உறவு முறையை விளக்கமா சொல்றேன்.

சந்திரன்:
சொல்லித்தொலை

நான்:
தாத்தா.. லெச்சுமிக்கு பிரம்ம தேவர் மகன் முறை. விஷ்ணுவோட ஹிப்லருந்து தான் பிரம்மா வந்தாராம்ல.  நான் கலைமகளோட மவன். கலைமகளுக்கு மாமி லெச்சுமி.  மம்மிக்கு மாமியார் எனக்கு பாட்டி முறை. . லெச்சுமிக்கு நீ எல்டர் ப்ரதர். அப்ப நீங்க  தாத்தா  இல்லாம வேற என்னவாம்?

சந்திரன்:
அடங்கொய்யால .. 45 வருச குப்பைய மண்டையில சேர்த்து வச்சிருக்கிற நீ யூத்து .  ரெண்டே கால் நாளைக்கு ஒரு தடவை ஓ.எஸ் ஐ அப்கிரேட் பண்ணி - 14 நாளைக்கு ஒரு தடவை  ஹார்ட் டிஸ்கை ஃபார்மட் அடிச்சுக்கிற  நான் கிழவாடி .ஒனக்கு தாத்தாவா?

நான்:
ஹார்ட் டிஸ்கு ஒன்னுதானே தாத்தா ..

சந்திரன்:
த பாரு . உன் வழிக்கே வந்துர்ரன் .அப்பன் மவனுக்கு இடையில வேணம்னா ஈகோ ப்ராப்ளம் இருக்கலாம். தாத்தா பேரனுக்கு இடையில ஃப்ரெண்ட்ஷிப் தான் இருக்கும். என்னை ஃப்ரெண்டா ட்ரீட் பண்ணி பேசறாப்ல இருந்தா பேட்டி இல்லின்னா சர்தான் போடீ..

நான்:
தாத்.. சாரி.. ஃப்ரெண்ட் !  .. இதுக்கே கோவிச்சுக்கிட்டா எப்டி.. பேட்டி நிச்சயம் தேவை. கேள்விகளளை கேட்கட்டுமா?

சந்திரன்:
கேள்.ஆனால் ஒரு நிபந்தனை பதில்  நாளைக்குத்தேன்.

நான்:
என்னைக்கோ எப்படியோ  பதில் தருவிங்கல்ல.. கேட்டுர்ரன்

1.கடலுக்கும் உங்களுக்கும் என்ன லிங்க்?

2.ஹ்யூமன் பாடியில உள்ள நுரையீரலுக்கும் உங்களுக்கும் இருக்கிற கனெக்சனுக்கு அடிப்படை என்ன?

3.உங்களுக்கு மனோகாரகன்னு ஏன் பேர் வந்தது?

4.பப்ளிக் சப்போர்ட்டுக்கு உங்க பலம் தேவைங்கறாய்ங்களே  அது ஏன்?

5.சந்தையிலருந்து - மேரேஜ் ஹால் வரை ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள இடங்களுக்கு நீங்கதேன் இன்சார்ஜாம்? இதுல உள்ள லாஜிக் என்ன?

6.உங்களுக்கு எந்த கிரகமும் பகையில்லைங்கறாய்ங்களே அது இன்னா கணக்கு?

7.பிரமுகர்களின் மனைவிகளுக்கு நீங்க தான் அதிபதியாம் இதுக்கு என்ன காரணம்?
8. தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுக்கெல்லாம் உங்க பலம் அத்யாவசியம்ங்கறாய்ங்க. இதன் பின்னான தர்க்கம் என்ன?
9.மனம் , நுரையீரல், சிறு நீரகம் இந்த மூன்றுக்கும்  உங்களூக்கும் இடையிலான தொடர்பு என்ன?
10.காதல்ல உங்க ரோல் என்ன?
11. சஞ்சலத்துக்கு நீங்கதேன் காரகமாம். சஞ்சலத்தால நன்மையா தீமையா?
12. படகு, கப்பல்,கடல்  பயணம் இதுக்கும் உங்களுக்கும் என்ன லிங்கு?
13.அழுகும் பொருட்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
14.சந்திர பலம் உள்ளவன் எப்படி இருப்பான்?
15.இல்லாதவன் எப்படி இருப்பான்?
16.சந்திர காரகம் கொண்ட பெண் எப்படி இருப்பாள்?

குறிப்பு:
கேள்வி நான் மட்டும் கேட்கனம்னு  இல்லை. நீங்களும் கேட்கலாம். அடிச்சு விடுங்க.

எச்சரிக்கை:
அண்ணே ..நம்ம லோக்கல் ஆட் மேகசின் சார்பில் டெய்லி காலண்டர் போடப்போறோம். அதுவும் 1+1 .கமர்ஷியல் ஒன்னு ,பொலிட்டிக்கல் ஒன்னு. இது இல்லாம காண்ட் ராக்ட்  அடிப்படையில யாவாரிங்களுக்கு தனியே போட்டு தரப்போறோம். முன்னது இரண்டும்  நேரடி இலவச வினியோகம்.பின்னதை பார்ட்டிக்கு கொடுத்துர அவிக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துருவாய்ங்க./
இந்த டீட்டெய்ல் எல்லாம் தந்தது  டிசம்பர் 15 வரை இப்படி அரைகுறை பதிவா தான் வரும்னு சொல்லத்தேன். உடுங்க ஜூட்டு.கடமை அழைக்குது..

Saturday, November 3, 2012

குருவின் மனைவி +சந்திரன்+ " ஒரு தக்ஜம்" = புதன்?

மொதல்ல ஜோதிடம் குறித்த புனைகதைகள்னு தலைப்பு வைக்கத்தான்  நினைச்சம். ஆனா வக்ர குரு புத்தியை திருப்பி விட்டுட்டாரு. அதனால தேன்  அச்சானியமா இப்படி ஒரு  தலைப்பை வச்சிருக்கம்.

தலைப்பு தேன் அச்சானியம்னா மேட்டர் அதைவிட படு கில்மா. குருவோட மனைவியை சந்திரன் கிட்னாப் பண்ணி வச்சுக்கிட்டு அஜால் குஜால் வேலையில படு பிசி. பாவம் குரு வயசான காலத்துல ஏறாத படியெல்லாம் ஏறி மனைவியை மீட்கிறாரு. அதுக்குள்ள சந்திரன் செய்த கெட்ட காரியத்தால புதன் பிறந்து தொலைச்சுட்டாரு. இது நாம இட்டு கட்டின கதை கிடையாதுங்கோ.செலாவணியில இருக்கிற கதைதேன்.

இப்படி ஆயிரம் கதை இருக்கு. இன்னம் ஒரே ஒரு கதைய மட்டும் இங்கன பார்ப்போம்.


"நீங்களும் ஜோதிடராகலாம்"னுட்டு ஒரு  இ புக் நெட்ல ஃப்ரீ ஆஃப் காஸ்ட்  கிடைக்குது அதுல தேன் இந்த  கதை வருது.

ராவணன் தன் மகன் இந்திரஜித் பிறக்கறதுக்கு மிந்தி நவகிரகங்களை கூப்டு "தபாருபா..அல்லாரும் என் மகன் ஜாதகத்துல 11 ஆமிடத்துல நிக்கனும்"னு ஆர்டர் போட்டுட்டாராம். ஒடனே பி.டி  வாத்யாரு ஆர்டர் போட்டதும் பசங்க லைன் கட்டறாப்ல அல்லாரும் 11 ல வந்து நின்னுட்டாய்ங்களாம். இதுல சனி மட்டும் "வேலை" கொடுத்து 12 க்கு வந்துட்டாராம். அதனால ராவணன் சனியோட காலை வெட்டிட்டாராம். எல்லாம் சின்னபிள்ளைத்தனமா இருக்குல்ல.

எல்லா கிரகமும் 11 ல இருக்குமான்னு ரோசிங்க. ராகு -கேதுக்கள் நிழல் கிரகங்கள் ஒருத்தருத்தருக்கொருத்தரு 180 டிகிரிஸ்ல தான் இருக்க முடியும்.ராகு 11ல இருந்தா கேது அஞ்சுல இருந்தாவனும். அல்லது கேது 11 ல இருந்தா ராகு அஞ்சுல இருந்தாவனும்.

சரி மத்த 8 கிரகங்கள் ஒரே ராசியில அதுவும் 11 ல இருக்குன்னு  ஒரு பேச்சுக்கு வச்சுக்குவம்.அந்த எட்டுல லக்னாதிபதியும் அடக்கம்.

லக்னாதிபதியோட 6,8,12 அதிபதிகள் சேர்ந்தா என்ன ஆகும்? இந்திரஜித் சத்ரு ரோக ருண உபாதைகளோட ,இலங்கை கஜானாவை காலி பண்ணிட்டு அல்பாயுசுல போயி சேர்ந்திருப்பான். பீலா விட்டாலும் அதுல ஒரு லாஜிக் இருக்கனுமோல்லியோ?

ராகு கேதுக்களை பற்றி இன்னம் மோசமான கதை இருக்கு. இவிக ராட்சஸாளாம். விஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து மேருமலையை தாங்கி  பாற்கடலை கடைய வச்சுட்டு  மோகினியா வந்து தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் சர்வ் பண்ணும் போது ராமர் கோவில்ல ரெண்டாந்தடவை சுண்டல் வாங்கறாப்ல மேற்படி ராட்சஸாள் வாங்கிட்டாளாம்.ஒருத்தரு வாய் வழியா குடிக்க கழுத்தை வெட்டிட்டாய்ங்களாம். கழுத்துக்கு மேல அலைவ்.

இன்னொருத்தர் "புறக்கடை"வழியா உள்ளாற ஏத்திட்டாராம். அதனால இடுப்புக்கு கீழே அலைவ்.  கேட்கவே மு.கூ தனமா ..மன்னிக்கனும் கூ.மு  தனமா இல்லை?  ஆனால் இப்படிப்பட்ட கதைகள் இன்னம் செலாவணியில இருக்கத்தான் செய்யுது.

இதெல்லாம் ஒரு பக்கம்னா ஸ்ரீ ராமர் ஜாதகம்னு ஒன்னை போட்டு கடுப்பேத்தறாய்ங்க. விட்டா பர்த் சர்ட்டிஃபிக்கேட்டே கொடுத்துருவாய்ங்க போல. சரி ஒழியட்டும் அப்படி ஒரு ஆதர்ச புருசனோட ஜாதகம்னு ஒன்னை ரிலீஸ் பண்றதுக்கு மிந்தி அந்த ஜாதகத்துல உள்ள கிரகஸ்திதிகளை ஒரு க்ளான்ஸாச்சும் பார்க்கனுமில்லியா?

அதை பார்த்தா உருப்படாத ஜாதகம்னு தோனுதே தவிர ராமனோட வீட்டு வேலைக்காரன் ஜாதகமா இருக்குமோங்கற சந்தேகம் கூட வரமாட்டேங்குது.

ஆக ஜோதிடம் குறித்த புனைகதைகளை நம்பாதிங்க. ஜோதிடம் வேறு -ஜோதிடம் தொடர்பான கதைகள் வேறு.  அலார்ட்டாயிக்கோங்க.



Monday, March 7, 2011

உயிரையும் பறிக்கும் சந்திராஷ்டமம்


உங்க ராசிக்கு சந்திரன் எட்டுல சஞ்சரிக்கிற ரெண்டே கால் நாளைத்தான் சந்திராஷ்டமம்னு சொல்றாய்ங்க. சந்திரன் எட்டில் (அஷ்டமம்) இருத்தலே சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம்னா எல்லாருக்குமே உள்ளூற டர்ருதேன். ஒரு சிலருக்கு பல்பு வாங்கிய அனுபவமும் இருக்கலாம்.
என்ன ஏதுன்னு தெரியாட்டாலும் "அட விடுப்பா இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம்"னு கழண்டுக்கறவுக நெம்பர் சாஸ்தியாயிருச்சு.
அவிக பயப்படறதுலயும் லாஜிக் இருக்கு. சந்திரன் மனோகாரகன். இவர் நல்ல இடத்துல இருந்தா கையில கால் காசு இல்லின்னாலு மனசுல ஒரு மிதப்பு இருக்கும். இவரே அஷ்டமத்துக்கு போயிட்டா ?
சூசைட் டெண்டன்சி உள்ளவன் தற்கொலையே கூட பண்ணிக்கிடலாம். தண்ணீர் டாங்கர்ல அடிபட்டு சாகலாம். ( சந்திரன் -ஜல காரகன்) . ஏற்கெனவே நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை உள்ளவுகளுக்கு இந்த தினங்கள்ள மேல கீழே ஆயிரலாம்.
அட ஒரு போர் போட்டு தண்ணி வரலின்னா வட்டம் தானே. குழாயடி சண்டையில எத்தனை பேருக்கு மண்டை உடைஞ்சிருக்கு -கொலை நடந்திருக்கு.
இப்படியா கொத்த சந்திரன் 8 லருந்தா மட்டும் தான் ஆபத்தா? ஆறுல இருக்கலாமா? ( சந்திரன் ஆறுல இருக்கறச்ச தமிழ் சினிமா ஹீரோ மாதிரி மனசாட்சி கிட்டேல்லாம் பேசவேண்டி வந்துரும் )
12ல இருந்தா பரவால்லையா? 7ல இருந்தா பரவால்லியா? பத்துல இருந்தா பரவால்லியா?
சந்திரனோட முக்கிய காரகங்கள் :இன்ஸ்டெபிலிட்டி, அன் செர்ட்டினிட்டி, எதிர்பாரா தன்மை, நகர்வு, தண்ணீர், மனம் ,நுரையீரல்,சிறு நீரகம். சந்திரன் மரணத்தை காட்டும் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் போது இவை பாதிக்கப்பட்டால் என்ன கதி?
பதிவை தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க