Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts

Saturday, November 3, 2012

குருவின் மனைவி +சந்திரன்+ " ஒரு தக்ஜம்" = புதன்?

மொதல்ல ஜோதிடம் குறித்த புனைகதைகள்னு தலைப்பு வைக்கத்தான்  நினைச்சம். ஆனா வக்ர குரு புத்தியை திருப்பி விட்டுட்டாரு. அதனால தேன்  அச்சானியமா இப்படி ஒரு  தலைப்பை வச்சிருக்கம்.

தலைப்பு தேன் அச்சானியம்னா மேட்டர் அதைவிட படு கில்மா. குருவோட மனைவியை சந்திரன் கிட்னாப் பண்ணி வச்சுக்கிட்டு அஜால் குஜால் வேலையில படு பிசி. பாவம் குரு வயசான காலத்துல ஏறாத படியெல்லாம் ஏறி மனைவியை மீட்கிறாரு. அதுக்குள்ள சந்திரன் செய்த கெட்ட காரியத்தால புதன் பிறந்து தொலைச்சுட்டாரு. இது நாம இட்டு கட்டின கதை கிடையாதுங்கோ.செலாவணியில இருக்கிற கதைதேன்.

இப்படி ஆயிரம் கதை இருக்கு. இன்னம் ஒரே ஒரு கதைய மட்டும் இங்கன பார்ப்போம்.


"நீங்களும் ஜோதிடராகலாம்"னுட்டு ஒரு  இ புக் நெட்ல ஃப்ரீ ஆஃப் காஸ்ட்  கிடைக்குது அதுல தேன் இந்த  கதை வருது.

ராவணன் தன் மகன் இந்திரஜித் பிறக்கறதுக்கு மிந்தி நவகிரகங்களை கூப்டு "தபாருபா..அல்லாரும் என் மகன் ஜாதகத்துல 11 ஆமிடத்துல நிக்கனும்"னு ஆர்டர் போட்டுட்டாராம். ஒடனே பி.டி  வாத்யாரு ஆர்டர் போட்டதும் பசங்க லைன் கட்டறாப்ல அல்லாரும் 11 ல வந்து நின்னுட்டாய்ங்களாம். இதுல சனி மட்டும் "வேலை" கொடுத்து 12 க்கு வந்துட்டாராம். அதனால ராவணன் சனியோட காலை வெட்டிட்டாராம். எல்லாம் சின்னபிள்ளைத்தனமா இருக்குல்ல.

எல்லா கிரகமும் 11 ல இருக்குமான்னு ரோசிங்க. ராகு -கேதுக்கள் நிழல் கிரகங்கள் ஒருத்தருத்தருக்கொருத்தரு 180 டிகிரிஸ்ல தான் இருக்க முடியும்.ராகு 11ல இருந்தா கேது அஞ்சுல இருந்தாவனும். அல்லது கேது 11 ல இருந்தா ராகு அஞ்சுல இருந்தாவனும்.

சரி மத்த 8 கிரகங்கள் ஒரே ராசியில அதுவும் 11 ல இருக்குன்னு  ஒரு பேச்சுக்கு வச்சுக்குவம்.அந்த எட்டுல லக்னாதிபதியும் அடக்கம்.

லக்னாதிபதியோட 6,8,12 அதிபதிகள் சேர்ந்தா என்ன ஆகும்? இந்திரஜித் சத்ரு ரோக ருண உபாதைகளோட ,இலங்கை கஜானாவை காலி பண்ணிட்டு அல்பாயுசுல போயி சேர்ந்திருப்பான். பீலா விட்டாலும் அதுல ஒரு லாஜிக் இருக்கனுமோல்லியோ?

ராகு கேதுக்களை பற்றி இன்னம் மோசமான கதை இருக்கு. இவிக ராட்சஸாளாம். விஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து மேருமலையை தாங்கி  பாற்கடலை கடைய வச்சுட்டு  மோகினியா வந்து தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் சர்வ் பண்ணும் போது ராமர் கோவில்ல ரெண்டாந்தடவை சுண்டல் வாங்கறாப்ல மேற்படி ராட்சஸாள் வாங்கிட்டாளாம்.ஒருத்தரு வாய் வழியா குடிக்க கழுத்தை வெட்டிட்டாய்ங்களாம். கழுத்துக்கு மேல அலைவ்.

இன்னொருத்தர் "புறக்கடை"வழியா உள்ளாற ஏத்திட்டாராம். அதனால இடுப்புக்கு கீழே அலைவ்.  கேட்கவே மு.கூ தனமா ..மன்னிக்கனும் கூ.மு  தனமா இல்லை?  ஆனால் இப்படிப்பட்ட கதைகள் இன்னம் செலாவணியில இருக்கத்தான் செய்யுது.

இதெல்லாம் ஒரு பக்கம்னா ஸ்ரீ ராமர் ஜாதகம்னு ஒன்னை போட்டு கடுப்பேத்தறாய்ங்க. விட்டா பர்த் சர்ட்டிஃபிக்கேட்டே கொடுத்துருவாய்ங்க போல. சரி ஒழியட்டும் அப்படி ஒரு ஆதர்ச புருசனோட ஜாதகம்னு ஒன்னை ரிலீஸ் பண்றதுக்கு மிந்தி அந்த ஜாதகத்துல உள்ள கிரகஸ்திதிகளை ஒரு க்ளான்ஸாச்சும் பார்க்கனுமில்லியா?

அதை பார்த்தா உருப்படாத ஜாதகம்னு தோனுதே தவிர ராமனோட வீட்டு வேலைக்காரன் ஜாதகமா இருக்குமோங்கற சந்தேகம் கூட வரமாட்டேங்குது.

ஆக ஜோதிடம் குறித்த புனைகதைகளை நம்பாதிங்க. ஜோதிடம் வேறு -ஜோதிடம் தொடர்பான கதைகள் வேறு.  அலார்ட்டாயிக்கோங்க.



Wednesday, September 14, 2011

குரு : A டு Z 360 டிகிரி பார்வை


அண்ணே வணக்கம்ணே,
குரு என்னவோ தான் இருக்கும் இடத்துலருந்து 5,7,9 பார்வையைத்தான் கொண்டிருக்காரு.(இதுல 7 ஆம் பார்வை சொத்தையாம்)
அதுக்குன்னு நாம அவரை முழுசா பார்க்கலின்னா எப்படி அதனாலதேன் 360 டிகிரி பார்வைன்னு சொல்லியிருக்கேன்.

வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேளுங்க. மக்கள் கருத்து என்னவோ டெக்ஸ்டுக்கு தான் ஆனால் பெண்டிங்ல உள்ள ஜாதகங்கள் காரணமா ஆடியோ தொடர்ரேன்.

கூடிய சீக்கிரம் டெக்ஸ்டு.. உடுங்க ஜூட்டு

Monday, September 12, 2011

ஜோதிட பால பாடம் : குரு A டு Z பலன்


அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு துவாதசபாவங்களில் குரு நின்றால் ஏற்படக்கூடிய பலனை ஒரு புதிய கோணத்துல சொல்லியிருக்கன். நாளைக்கு ரொட்டீனாவும் பார்ப்போம்.

வழக்கம்போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்கி கேட்டுருங்க.சோனியா காந்திக்கு யோசனை கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன் .ஆனால் ஆரும் கண்டுக்கிடலை (ஐ மீன் ஐடியா கொடுக்கலை - திருந்தாத ஜென்மம்னு முடிவு பண்ணிட்டிங்கனு நினைக்கிறேன். )

Thursday, August 11, 2011

சம்பவாமி யுகே யுகே!



பதிவர் :கிருஷ்ணா ( X  தனி காட்டு ராஜா )
 

நாம் வாழ்வதற்கு கடவுள் தேவையா என்றால் உண்மையில் நாம் வாழ நாம் தான் தேவை.

இப்போது இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும் போது  எனக்கு "ஒன்னுக்கு " :) வருகிறது. கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்கிறார்கள்...இந்த சமாசாரம் கடவுளுக்கு தெரியுமா ??  :)
   
இந்த பூமி  தன்னை தானே வெகு வேகமாக சுற்றி கொள்கிறது..ஆனால் நாம் யாரும் விழ வில்லை..அதுவும் ஆகாய வெட்ட வெளியில்...

அது போதாது என்று பூமி வேறு சூரியனை சுற்றி வருகிறது...இது போதாது என்று சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் அனைத்தும் சூரிய மண்டலம் முழுதும் கலாக்ஸ்சியை  சுற்றி வருகிறது...
ஆனால் நாம் ஒரு கட்டிங் உள்ளே விட்டால் மட்டும் தான் பூமி சுற்றுவதை உணர முடிகிறது.


இந்த படைப்பு எவ்வளவு அற்புதமாக செயல் படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் என்ன வேண்டும்...

ஆனால் நமக்கோ இது அதிசயமாக அற்புதமாக  தோண வில்லை .
எவனோ ஒரு டோப்பா தலையன் மோதிரம் வரவைத்தான் என்பது அதிசயமாக தெரிகிறது .அந்த மனிதனை கடவுளாக நினைத்து ஒரு கூட்டம் வழிப்பாடு செய்கிறது.

உண்மையில் படைப்பு எங்கே வேலை செய்கிறது...டோப்பா தலையிடம் மட்டுமா??

படைப்பு எல்லா இடங்களிலும் ...எல்லா உயிர்களிலும் ..எல்லா நேரங்களிலும் நீக்கமற நிறைந்து....வேலை செய்கிறது...  
இருப்பது படைப்பு  மட்டுமே....

பூமி சூரியனிடம் இருந்து  பிறந்தது..படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்றது.படிப்படியாக அழிந்தும் போய் விடும்.

இந்த படைப்பின் இயல்பே சுயம்பு நிலை .இங்கே தனிப்பட்ட கடவுள்  என்று யாரும் இல்லை.அனைத்தும் அதற்கு யுரிய இயல்பின் அடிப்படையில் நடக்கும்.

கடவுளின் மகன்...கடவுளின் வைப்பாட்டி மகன் என்று யாருக்கும் இங்கே உரிமை இல்லை.உண்மையில் கடவுளுக்கும் (படைப்புக்கும் ) இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...சில கூட்டம் அவ்வாறு உளறி கொள்கிறது.

யாராக இருப்பினும்  அவனவன் செயலுக்கு யுரிய பலனை அவன் தான் அனுபவிக்க வேண்டும்.   


முதன் முதலில்  பாரத தேசத்தில் ஒரு காட்டுவாசி படைப்பின் உண்மை தன்மையை சுயம்பு நிலையை தான் சுயம்புவாய் இருப்பதை உணர்ந்தான்.அவனை தான் சிவன் என்று சொன்னார்கள்.

காலபோக்கில் தமிழ் சினிமா ஹீரோவை போல சிவனை வைத்து நெறைய  உப கதைகள் வெளி வந்தன.உண்மையில் சிவனுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.
  சுயம்பு நிலையில் நாம் உணர்வது ஒன்றே ஓன்று தான்..இங்கே இருப்பது படைப்பு மட்டும்..கடவுள் மட்டுமே..

இந்த சுயம்பு நிலையை யார் வேண்டுமானாலும் உணரலாம்..அது நமது உரிமை..நம் வீட்டுக்குள் நாம் சென்று உறங்குவது  போல...யாரும் அதை தடுக்க முடியாது..

நம் அனைவருக்கும் தற்சமயம் பைத்தியம் தலைக்கு மேல் ஏறி விட்டதால் ...நம் வீட்டுக்கு போகாமல் ...தெருவில் சுற்றி கொண்டு உள்ளோம்...தெருவில் அம்மணமாக திரியும்  நம்மை போன்ற சில பைத்தியங்களை கடவுள் என்றும் கடவுளின் மைந்தன் என்றும் நினைத்து  கொள்கிறோம் .
  

 இன்னும் முற்றி போன சில பைத்தியங்கள் தாங்கள் மட்டும் ஆசிர்வதிக்க பட்டவர்கள் என்று தெருவுக்கு தெரு மைக் வைத்து  கூவுகிரார்கள்.

படைப்பின் தன்மையை சிவனாலும் or  அல்லாவாலும் வேறு எந்த கொம்பானாலும்   மாற்ற முடியாது.அது வெறும் சுயம்பு...அந்த சுயம்பு நிலையை உணர்ந்து    நாமும் அதில் கரைந்து படைப்பாகவே (கடவுள் தன்மையாக ) மாறி விடலாம்.
இதன் பெயர் தான் ஜீவன் முக்தி.

அவ்வாறு ஜீவன் முக்தி பெற்ற பலரில் சிலர் தான் ரமணர் ,ராம கிருஷ்ணர்,ஓஷோ போன்றோர்.இவர்கள் வாழும் போது எந்த அற்புதத்தையும் நிகழ்த்த வில்லை.
வெறுமனே  ஜீவன் முக்தனாய் வாழ்ந்தார்கள்.இவர்கள் உடலும் சாதாரண குப்பன் சுப்பன் உடல் போல  நோய் வாய் பட்டுதான்  இருந்தது.இறந்தது.ஆனால் உள் நிலையில் கடவுள் தன்மை நிலையில் வாழ்ந்தார்கள் 
நம் அனைவருக்கும் ஜீவன் முக்தனாய் வாழும்  வாய்ப்பு உள்ளது.
சம்பவாமி யுகே யுகே!


 



 

Saturday, March 26, 2011

குரு+குண்டலி :3 « Anubavajothidam.com

அண்ணே வணக்கம்ணே !
உங்கள் ஆன்மீக குரு என்ற பதிவை ஆரம்பிச்சு பாதியில விட்டு இடையில ராசிச்சக்கரம் வெர்சஸ் பிறவிச்சக்கரம்னு ஒரு பதிவை போட்டு தொலைச்சேன். இது போதாதுன்னு இன்னைக்கு குண்டலி விழித்தால்னு ஒரு பதிவு வேற.

மேலும் தொடர்ந்து படிக்க

Wednesday, March 23, 2011

உங்கள் குருவும் - முற்பிறவி ரகசியங்களும்

 நம்ம ஜாதகப்படி நமக்கு குருவா வரக்கூடியவர் யாரா இருக்கக்கூடும்னு முன் கூட்டியே தெரிஞ்சுவச்சுக்கிட்டா எவ்ளோ நல்லாருக்கும். பாடாவதி பத்திரிக்கைகள்ள ஸ்பான்சர்ட் ஃபீச்சர்ஸை பார்த்து விளம்பரங்களை பார்த்து கல்கி கிட்டே போய் போதை ஊசி, நித்யானந்தா கிட்டே போய் "பலான ஆராய்ச்சி"க்கு உதவினு அல்லாடாம அசால்ட்டா ஆன்மீக கடல்ல குதிச்சுரலாமே.

நேத்து மரணம் என் ஆசான்ங்கற பதிவுல இந்த டீட்டெயிலை நாளைக்கு தரேனு சொல்லியிருந்தேன். அதுக்காகத்தேன் இந்த பதிவு.Read More

Tuesday, March 22, 2011

மரணம் என் ஆசான்


ஜாதகசக்கரத்துல ஒன்பதாவது இடம் அப்பவை மட்டுமில்லை. குருவை கூட காட்டுது. ஐ மீன் எப்படி ஃபிகரை கரெக்ட் பண்றதுனு கத்துக்கொடுத்த குருவை இல்லிங்கண்ணா. குருவை ஆசான் என்றும் சொல்றோம். ஆசான் என்ற இந்தி  வார்த்தைக்கு  ஈசினு அர்த்தம். கடினமான மேட்டரை எளிமையாக்கி தர்ரவுகளை ஆசான் என்று சொல்வது பொருத்தம் தானே. Read More

Friday, February 11, 2011

குரு பலமும் கில்மாவும்


குரு பலமும் கில்மாவும்
சீ சீ அபிஷ்டு ! அபிஷ்டு ! குருகிரகத்தோட காரகம் என்ன? புராணம்,இதிஹாசம், குரு, குரு உபதேசம், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள்னு ஜோதிஷம் சொல்லுது. அப்படியா கொத்த குருவை போயி கில்மாவோட சேர்க்குதே இந்த ஞான சூனியம்னுட்டு "அவாள்" சீறி எழலாம்.

வெய்ட் அண்ட் சீ ! மொதல்ல குருவோட கதையா சொல்லப்படற கில்மா மேட்டரை பார்ப்போம். குருவோட மனைவிய சந்திரன் தள்ளிட்டு போயிர்ரான். அஜால் குஜால் வேலையெல்லாம் முடிஞ்சு புதனும் பிறந்துர்ரானாம். அப்பவும் குரு கண்ட வாசலை ஏறி மிதிச்சு கெஞ்சி கூத்தாடி மனைவியை "மீட்டுர்ராரு"

ஆக குருவும் ஜொள்ளு பார்ட்டியா தான் இருக்கனும். அட மனுசன்ல இருக்கிறது ஒரே பவருப்பா.அது மேல் நோக்கி பாய்ஞ்சா யோகிக் பவர், கீழ் நோக்கி வடிஞ்சா செக்ஸ் பவர் .

நித்யானந்தா மாதிரி பார்ட்டியெல்லாம் லிஃப்ட்ல போறச்ச அறுந்து விழுந்த கேஸு.

காமி கானி வாடு மோக்ஷ காமி காலேடு.ஆழமான உடலுறவுக்கு பிறகு மனசுல ஒரு வித அமைதி, நன்றி உணர்வு பரவும் - அந்த நன்றி உணர்வு பக்தி உணர்வை கிளப்பும். அதுக்குத்தான் செக்ஸ் எஜுகேஷனுக்கான டெமோ போல கோவில் கோபுரத்துல பலான சிலைகளை வச்சாய்ங்க.


ஆழமான தியானம் அ மனம் குவிந்த ஜெபம், பூஜைக்கு பிறகு ஆட்டோமேட்டிக்கா உடம்புல ஒரு மதமதப்பு வரும். இதெல்லாம் தெய்வீகத்துக்கும் - காமத்துக்கும் உள்ள தொடர்பை காட்டுது. விஸ்வாமித்திரர் இழுத்துக்கட்டிக்கிட்டு ( கோவணத்தை சொன்னேன்) தபஸ் பண்ணாரு .ஆனால் மேனகை வந்ததும் என்னாச்சு? மேனோக்கி பாஞ்ச சக்தி கீழ் நோக்கி வடிஞ்சுருச்சு ( ஊர்த்வமுகம் -அதோமுகம்)

குருவோட காரகத்வத்தை பாருங்கம்: (குருவே சொல்றாரு)

//நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, //

தங்கமிருந்தா கண்ணாலம் நடக்கும். பெண் வீட்டுக்காரன் பத்து சவரன் போட்டா இவிக ரெண்டாச்சும் போடனும்ல.. பைனான்ஸ் இல்லைன்னா தாளி பெண் பார்க்க கூட போக முடியாது. மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள்ள இன்டராக்ட் ஆனா "அடடா.. சார் இன்னம் அன்மேரிடா.. என் ஃப்ரெண்டு மகள் ஒருத்தி டிகிரி முடிச்சுட்டு.." வகையறா தகவல் வெள்ளம் கொட்டும்.

//நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்),//

உங்க ஜாதகத்துல குரு நல்ல இடத்துல இருந்தாதான் பிள்ளைப்பேறுல்லாம் கிடைக்கும். அந்த யோகம் இருந்தாதான் கில்மாவுக்கு லைன் க்ளியராகும். (கண்ணாலமாகியும் வாரிசு கிட்டாதவுக இருக்காய்ங்க. இல்லேங்கலை. அதுக்கு இன்னபிற கிரகங்கள்,பாவங்களோட நிலை காரணமா இருக்கலாம். நான் சொல்ல வர்ரது ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட்)


குருபலத்துக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்பு? சொல்றேன். குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. இந்த ரெண்டு பார்ட்டும் ஒழுங்கா வேலை செய்தாலே ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல தூள் கிளப்பலாம்.

பாடில ரெண்டு விங் இருக்கு. டைஜசன் விங் - பலான விங் ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. அதனாலதான் கரப்பான் பூச்சி மொதல்ல அஜால் குஜால்னுட்டு அப்பாறம் தான் உணவு தேடவே போகுதாம்.அதனாலதான் அதுக்கு ஆவிசி ( ஆயுள்) சாஸ்தினு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.

ஆரோக்கியமான உடல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வரும்.அந்த எண்ணங்களை செயல்படுத்தற உந்துதலும் வரும். ஸ்தூல நிலை வேறயா ( ஏழ்மை - பசி -பட்டினி ) இருந்தாலும் உற்சாகமா சந்தோஷமா இருப்பிக. சந்தோஷம் சகம் பலம்.

அந்த சந்தோஷம் உங்களை உந்தித்தள்ள நீங்க "முன்னேற்ற பாதையில மனசு வச்சு" ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சுருவிங்க.

ஞாபகசக்தி,ஆட்சி மொழி மேல கமாண்ட் , நிர்வாகம், அரசு, அரசு தரும் வீட்டு வசதி, முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் குரு நல்லா இருந்தாதான் சாத்தியம், இந்த குண நலன், திறமைகள் எல்லாம் இருந்தா முன்னேர்ரதா கஷ்டம். ஒடனே எவனாச்சும் சவுண்ட் பார்ட்டி பையனுக்கு நல்ல டேலன்ட் இருக்கு -எதிர்காலம் இருக்குனு கெஸ் பண்ணி பொண்ணை கட்டி வச்சு வீட்டோட மாப்பிள்ளையாக்கிருவான்.


சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தத்தான் பார்ப்பான்.துக்கத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் துக்கப்படுத்தத்தான் பார்ப்பான். சந்தோஷமா உள்ள நீங்க நாலு பேருக்கு நல்லதை செய்யப்போவிக. குரு ஆட்சி உச்சம்னு உட்கார்ந்திருந்தா அரசியல் வாழ்வும் கியாரண்டி. ( ஒன்னுக்கு ரெண்டா வச்சிக்கலாமில்லை - சொம்மா தமாசு வாத்யாரே)

குருன்னா டூ குட்.( Too good/ do good) . திணை விதித்தவன் திணையறுப்பான். வினை விதைத்தவன்? ( ஆருப்பா அது அரசியல் வாதியாவாங்கறது ..சைலன்ஸ் ப்ளீஸ்)


குருங்கறது பிராமண கிரகம். குருவோட பலத்தை பொருத்து உங்கள்ள பிராமண லட்சணங்கள் டெவலப் ஆக ஆரம்பிக்கும். ஐ மீன் ஒழுங்கா படிக்கிறது - ஜீன்ஸ் -மொபைல் -ஐபாட் எல்லாம் சோறு போடாது - லவ் - பப் -பீருனு போனா படிப்பு டைவர்ட் ஆயிரும்ங்கற எண்ணம் - எவன் தங்கையையோ எவனோ இழுத்தா -ஸ் அப்பாடா என் தங்கை ஹங்கேரில இருக்கானு பெருமூச்சு விடறதுமாதிரி லட்சணங்கள் வந்துரும். அப்பாறம் வெற்றிக்கு என்ன குறை. காலாகாலத்துல கண்ணாலம்- கில்மாவோ கில்மாதான்.


ஒரு ஜாதகத்துல குரு எவ்ள முக்கியமோ சுக்கிரன் கூட அவ்ள முக்கியம். ரெண்டு பேரும் பேலன்ஸ்டா இருக்கனும். சுக்கிர பலத்தை விட குரு பலம் கூடிப்போச்சுன்னா பலான மேட்டர்ல ஆர்வம் குறைஞ்சுரும். குரு பலத்தை விட சுக்கிர பலம் கூடிப்போச்சுன்னா பலான மேட்டர்ல ஆர்வம் அதிகரிச்சுரும்.

ஆனா ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா குருபலம் உள்ளவுக சுக்கிரனோட லைன்லயும் ( அதாங்க காதல் - கருமாந்திரம்) சுக்கிரபலம் உள்ளவுக பூஜை புனஸ்காரம்னும் போவாய்ங்க. கரீட்டா ஒரு ஸ்டேஜ்ல தங்களோட சுய ரூபத்தை வெளிப்படுத்துவாய்ங்க. சுக்கிரனை பத்தி நிறைய பேசனும். அவரோட பேட்டைக்கு போறச்ச பேசிப்போம்.

( படத்தில் இருக்கும் நடிகர் என்.டி.ஆர் - பிரம்ம ரிஷி விஸ்வாமித்ரா பட ஸ்டில் இது)