Saturday, November 10, 2012

நிருபரை காரேற்றி கொல்ல பார்த்த ரஜினி

அண்ணே வணக்கம்ணே !

ஒரு காலத்துல ஜரிதா,அபின் ,புட்டின்னு எப்படி எப்படியோ இருந்த ரஜினி இப்பம் ஞானி ஆயிட்டாரு. யோகி ஆயிட்டாருன்னு ஊத்தி விடறாய்ங்க.

பழைய ரஜினி ஒன்னும் ஆவியாகி வெளியேறிரலை. அதே குக்கர்ல இருக்காரு.சந்தர்ப்பம் சரியில்லை. அடங்கி கிடக்காரு.

மறுபடி ஆர்.எம்.வீரப்பனுக்கு ஒரு வாழ்வு வந்துட்டாலோ அ மோகன் பாபு ஜகன் கட்சியில சேர்ந்து மினிஸ்டர் ஆயிட்டாலோ பழைய ரஜினி வெளிய வருவாரு.

இப்பம்   நடக்கலை.அடங்கி கிடக்காரு.  ஒரு சமயம் ரஜினியோட தங்கை சென்னை வர - அவிகளோட ரஜினி கார்ல போக ஆரோ நிருபர் கிசு கிசு எழுதிட்டாராம்.அதுக்கு ரஜினி என்ன பண்ணாரு தெரீமா அந்த நிருபர் பிளாட்ஃபாரத்துல நடந்து போறச்ச .............................பதிவோட .தலைப்பை பாருங்க.

இது ரஜினியை பற்றிய பதிவல்ல. கேப்டன்.ஒன்லி கேப்டனை பற்றிய பதிவு. கேப்டனுக்கு ஒரு ஓப்பன் லெட்டர் கூட எளுதியிருக்கன்.

விசயகாந்த் படிக்கிறாரோ இல்லியோ நீங்களாச்சும் படிச்சுருங்கண்ணே.

கேப்டனை நானே பல தடவை வாரியவன் தான். விமர்சித்தவன் தான். அதே நேரம் அவரோட ப்ளஸ் என்னன்னும் சொல்ல தயங்கினதில்லை. வரன் வரன்னு பம்மாத்து பண்ற ரஜினியை விட 1000 மடங்கு பெட்டர் சாய்ஸு கேப்டன்.

இன்னைக்கு நான் அவருக்கு எழுதியிருக்கிற பகிரங்க கடிதத்தை வச்சு அவர் மேல நான் முன் வச்ச விமர்சனங்களை எல்லாம் வாபஸ் வாங்கிட்டதா அருத்தமில்லை. அதெல்லாம் ஸ்டில் அலைவ்.

அதே நேரம் ஒரு மன்சனை போட்டு இத்தீனி பேரு லந்து பண்ணா கடுப்பாயிருது. அதனாலதேன் கேப்டனுக்கு இந்த பகிரங்க கடிதம்.

கேப்டன் விஜய்காந்த் அவர்களுக்கு,

அம்மாவோட கூட்டு போட்டிங்க. இது புட்டுக்கும்னு மின்னாலயே தெரியும் போல. அதான் அந்த மகராசியோட சேர்ந்து பிரசாரம் செய்றதை கூட தவிர்த்துட்டிங்க. உங்க முன் சாக்கிரதைக்கு ஹேட்ஸ் ஆஃப்.

ரஜினியை போல ஆதி சக்தி ,சக்தி மசாலான்னு சொம்படிக்காம இருந்திங்க பாருங்க. அங்கதான் கேப்டனா நிக்கிறிங்க.

உங்களை கேப்டன்னு சொல்றதை கூட நக்கலடிக்க சனம் இருக்கு. ஒவ்வொரு வார்த்தைக்கும் -அதுவும் பெயரா  அ பேரோட சேர்ந்து   அ பேருக்கு பதிலா ஒலிக்கிற வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்.

ஒரு கொளந்தைய ராசான்னு மனசார ஒரு தாய் கூப்டு கொஞ்சிக்கிட்டிருந்தா அவன் இளையராசாவா மாறலின்னாலும் ஆ.இராசா ஆக மாட்டான்.

எம்.சி.யாரை புரட்சி  நடிகர் ,புரட்சி தலைவர்னப்போ எல்லாம் நக்கடிச்சாய்ங்க.ஆனால் நெஜமாலுமே அவரு புர்ச்சி பண்ணி சரித்திரத்துல ஒரு இடத்தை கெட்டியா பிடிச்சுட்டாரு.

மம்மி மேட்டர்ல கூட புர்ச்சி தலைவின்னப்போ எனக்கே கடுப்பாதான் இருந்தது.அனால் நாளாவட்டத்துல அவிக நெஜமாலுமே புர்ச்சி பண்ணிட்டாய்ங்க.

அதைப்போல உங்களை உங்க அல்லக்கைங்க கேப்டன்னு கூப்ட ஆரம்பிச்சப்போ நீங்க கேப்டனில்லை.ஆனால் இப்பம் நெஜமாலுமே கேப்டனாயிட்டிங்க.

மேட்டருக்கு வரேன். மம்மி கூட கூட்டு போட்டிங்க. ஆனா எட்டியே இருந்திங்க. முட்டிக்கிச்சு. அது மம்மியோட நேச்சர்.ஒடனே ஒடைஞ்சு போகாம கட்சி ஆஃபீஸ்ல ப்ரஸ் மீட் வச்சு கேட்டிங்க பாரு கேள்வி. லியாகத் அலிகான் கூட மனப்பாடம் பண்ணியாகனும்.அப்படியா கொத்த கெத்து.

மம்மி என்னதான் ஒஸ்தி ஸ்கூல்ல படிச்சாலும் நகராட்சி பள்ளி மென்டாலிட்டி அப்படியே கீது.இன்னம் கீது. சட்டமன்றத்துல ஆஃபீஸ் ஒதுக்கறதிலருந்து இர்ரிட்டேட் பண்ணிக்கிட்டே இருந்தாய்ங்க.

உங்களை அடக்கிரலாம்.ஒடுக்கிரலாம்னு பார்த்தாய்ங்க.  நல்ல வேளையா உங்களுக்கு மகள்கள் ஆருமில்லை. சொந்த படம் எடுக்கலை. மானாவாரியா கடன் கிடன் வாங்கி தொலைக்கலை.அதனால நீங்க அடங்க மறு அத்து மீறுன்னு செயல்பட்டிங்க. வாள்க !

இன்னைய தேதிக்கு அல்லா க்ரூப்பும் உங்களை பிரிச்சு மேய காரணமான விமான நிலைய சம்பவத்துக்கு வரேன்.

மம்மி உங்க கட்சி எம்.எல்.ஏக்களை இழுத்துட்டாய்ங்க. முட்டை வைக்கிற கோழிக்கு தானே தெரியும் நோவு.ஆம்லெட் போட்டு சாப்பிடறவுகளுக்கு என்ன தெரியும்?  ஆம்லெட் திங்கறவுகளை  பார்த்து கை தட்டறவுகளுக்கு என்ன தெரியும்? உங்களுக்கு எந்தளவுக்கு கடுப்பாகியிருக்கும்னு ஒரு என்.டி.ஆர் ரசிகனா எனக்கு புரியுது.

இதை பத்தி  விமான நிலையத்துல ஆரோ ஒரு ரிப்போர்ட்டர் கேள்வி  கேட்டதுக்கு   நாயேன்னிங்களாம். சம்பளம் கொடுக்கிறிங்களானு கேட்டிங்களாம். அப்பம் ஏற்பட்ட தள்ளு முள்ளுல அவரு கீழ விழுந்துட்டாராம். இந்த ஒரு பாய்ண்டை வச்சுக்கிட்டு உங்களுக்கும் -உங்க கட்சிக்கும் நடந்த
அநியாயத்தை எல்லாரும் ப்ளர்ராக்கிட்டாய்ங்க.

நீங்க என்னமோ பஞ்சமாபாதகம் பண்ணிட்டாப்ல அலப்பறை. வழக்கு.  நீங்க அப்படி சொல்லியிருக்கலாம்,இப்படி சொல்லியிருக்கலாம்னு ஆன கல்யாணத்துக்கு மேளம் வேற . தனக்கு வந்தாதானே தெரியும் தலைவலி.

அரசியல்வாதின்னா என்ன ரோபோவா? அவனும் மன்சன் தானே ? அவனுக்கு உணர்ச்சிகள் இருக்கக்கூடாதா? நீங்க மட்டும் என்ன மொத பேச்சையேவா நாயேன்னு ஆரம்பிச்சிருப்பிங்க. நோ..

நிருபர்னா கேள்வி கேட்கலாம். கேட்கிறது அவிக உரிமைன்னு சொல்லாமா போறது தலைவர்களோட உரிமை. அதை விட்டுட்டு நை நைன்னு துரத்திக்கிட்டு வந்தா என்ன அருத்தம்?

கேப்டன் ! டோன்ட் ஒர்ரி. ஆனைக்கும் அடி சறுக்கும் . ரஜினியே ஒரு ரிப்போர்ட்டரை காரேத்தி கொல்லப்பார்த்ததெல்லாம் உண்டு. எம்.சி.யாரே கத்தி வச்சுக்கங்கன்னு லூஸ் டாக் பண்ண மேட்டர்லாம் உண்டு.  வீட்டுக்கு வீடு வாசப்படி.

உங்களுக்கு ஒரே பாய்ண்டை மட்டும் சொல்லி கழண்டுக்கறேன். இன்னைக்கு பண்பட்ட தலைவர்களா உலகம் தலை மேல வச்சு கொண்டாடற எந்த ஒரு ஹிப்பாக்கிரட்டை விடவும் - எந்த ஒரு எஸ்கேப்பிஸ்டை விடவும் நீங்க பெட்டர் தான்.

கேப்டன் உங்களுக்கு சினிமா கேமரா முன்னே மட்டும் தான் நடிக்க தெரியுது -மீடியா கேமரா முன்னே நடிக்க தெரியலின்னா உங்களால மக்களுக்கு நிச்சயமா பயன் உண்டு.

உங்களுக்கு பொறுமை இருந்தா ஜஸ்ட் 5 மேட்டரை சொல்றேன். கீப் அப் பண்ணிங்கனா நீங்கதேன் அடுத்த எம்.சியாரு.

1.மொதல்ல பாடி வெய்ட்டை குறைங்க. வயசுக்கேத்த -சூப்பர் - கேரக்டரா சூப்பர் கதைய பிடிச்சு படம் பண்ணுங்க.பண்ணிக்கிட்டே இருங்க.  உங்க கடைக்காலே சினிமா தான்.அதுல செயிச்சுட்டே இருங்க. அப்பாறம்  அரசியல் வெற்றில்லாம் ஜூஜுபி.

2.ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்துங்க. கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள்ள எம்.எல்.ஏங்க , தோத்துப்போன தொகுதிகள்ள தோற்ற வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தி மக்கள் பிரச்சினைகளை தீர்க்க  நிரந்தர ப்ராசஸ் நடக்கிறாப்ல ப்ளான் பண்ணுங்க. ஒரு திரைக்கதை போல இருக்கனும். சகட்டுமேனிக்கு தர்ணா,சிறை நிரப்பும் போராட்டல்மா வெட்டி. அட கேப்டன் கட்சிக்காரவுக கிட்டே போனா காது கொடுத்து கேட்கிறாய்ங்கப்பா. எதியாச்சும் செய்றாங்கப்பான்னு பேர் வாங்குங்க.

3.முக்கியமான மேட்டர் கட்சியையும் -குடும்பத்தையும் பிரிச்சு வைங்க.

4.இன்னும் முக்கியமான மேட்டர் கட்சிக்காரவுகளுக்கு பைசா கிடைக்க வழி பண்ணுங்க. கட்சியில உள்ள தொழிலதிபர்கள் -காண்ட் ராக்டர்களையெல்லாம் ஒருங்கிணைச்சு பப்ளிக் லிமிட்டட் கம்பெனியாக்குங்க. க்ளோபல் டெண்டர்ல எல்லாம் நம்ம கம்பேனி  பார்ட்டிசிப்பேட் பண்ணனும். ஹேண்ட் பை ஹேண்ட் குடிசைத்தொழில்களை எல்லாம் ஸ்பான்சர் பண்ணி ,ப்ரமோட் பண்ணி மார்க்கெட்டிங், ஏற்றுமதின்னு தூள் கிளப்பனும். ,கட்சி காரனுக்கு வருமானமும் வரனும் ,வேலை வாய்ப்பும் கிடைக்கனும்.

5.விமான நிலைய மேட்டர்ல சனங்க வாரி விட்டதை பார்த்து திருந்திராதிங்க. கேப்டன் கேப்டனாவே இருக்கனும். இல்லின்னா இன்னொரு கலைஞராயிருவிங்க.

பெஸ்ட் ஆஃப் லக்.